Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 22 2

Advertisement

Admin

Admin
Member
நாச்சியின் பேச்சுக்களில் தில்லை அழவே ஆரம்பித்து விட,

“கிழவி பேசாம இரு, என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். சும்மா எங்கம்மாவை பேசற வேலை எல்லாம் வெச்சிக்காத, உனக்கு பேசணுமா உன்னோட பசங்களை பேசு!” என்று அவனும் கத்த, அதன் பிறகே சற்று அடங்கினார்

ஆனாலும் மனம் ஆறவில்லை. எப்படி இருப்பான், நல்ல ஆரோக்யமான இளைஞன், இப்படி உடல் இளைத்து இருக்க முகமும் பொலிவில்லாமல் ஏதோ நோய்வாய் பட்டவன் போல இருக்க, மனம் பதைத்து விட்டது அவனை கண்டதும்.

இத்தனை பேச்சிற்கும் சுவாமிநாதன் ஒன்றும் பேசவில்லை, அண்ணன் பேசாததால் தம்பியும் பேசவில்லை.

ஊருக்கு முன் பேசும் சுவாமிநாதன் இதில் மட்டும் எதுவுமே பேசுவதில்லை.

ராஜராஜன் குளித்து பூஜைக்கு என்று கிளம்பிவிட, நாச்சி பின் மக்கள் இருவரையும் பார்த்து பேசினார். “என்னடா பையன் இப்படி இளைச்சு இருக்கான், நீங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்க” என்றார் காட்டமாக.

“யார் என்ன பண்றா உன் பேரனை? அந்த புள்ள கோச்சிட்டு போய் உட்கார்ந்துகிச்சு, ஒன்னு அவ வரணும் இல்லை, இவன் போய் கூட்டிட்டு வரணும். நாங்க ஒன்னும் போறவனை வேண்டாம்னு சொல்லலையே” என சுவாமிநாதன் பேச,

“நீ வேண்டாம்னு சொல்லலை, ஆனா போய் கூட்டிட்டு வான்னு சொன்னியா, இதோ உங்க மத்த பையன், பொண்ணுன்னா, இப்படி தான் விட்டிருப்பீங்களா?”

“அப்போ ராஜராஜனை விட்டுட்டோமா?” என்று சுவாமிநாதனும் சண்டைக்கு கிளம்ப,

“ராஜராஜனை விடலை, அங்கையை விட்டுட்டீங்கடா. ஆனா அவ இருந்துக்குவா பொறந்ததுல இருந்து அவங்கப்பா ஊருக்கு போக வர பார்க்கறா, அதனால இப்போ புருஷன் கூட இல்லாதப்போவும் அவளால இருக்க முடியுது. ஆனா உன் பையன் இருக்க மாட்டான்டா, தப்பு பண்றீங்க”

“நாங்க இதுல செய்யறதுக்கு ஒன்னுமில்லை” என்று அவர் பேச,

“அப்போ பழசு எதுவும் நீங்க மறக்கலை, என் பேத்தின்னு தானே இப்படி?”

“பாரும்மா , நாங்க போகச் சொல்லலை, அப்போ நாங்க கூப்பிட முடியாது. இதுல உங்க பொண்ணு வேற சொல்லிட்டு போறா என்னவோ நாங்க அவங்க பொண்ணை நல்லா பார்த்துக்கலைன்னு”

“டேய் சாமி, இதுல நான் சொல்றதுக்கும் ஒன்னுமில்லை, நீங்க செய்யறது எல்லாமே நம்ம பையனை தான் பாதிக்கும். ஆனா ஒன்னு சொல்லிக்கறேன், என் பொண்ணை இல்லை மாப்பிள்ளையை வெளில விட்டுக் குடுத்தீங்க மரியாதை குடுக்காம, நான் இந்த வீட்டை விட்டு தனியா போயிடுவேன், என் கடைசி காலத்துல என்னை தனியா இருக்க விட்டுடாதீங்க” என்றவரின் குரலில் அசைக்க முடியாத உறுதி இருந்தது.

“ஏன்? நாங்க என்ன புள்ளையை கட்டிக் குடுத்திருக்கோமா தளைஞ்சு போக, பையனை பெத்திருக்கோம்” என்று மீசையை முறுக்க,

“நான் உங்க சம்மந்தியை சொல்லலை, என் பொண்ணை சொன்னேன். நீங்க அவளை சம்மந்தியா பார்க்கலாம். ஆனா அவ எனக்கு பொண்ணு தான். ஏன்டா டேய் நம்ம பையனை பாருங்கடான்னு சொன்னா நீங்க இன்னும் பழசையே பேசிட்டு இருக்கீங்க. பட்டா கூட உனக்கும் உன் தம்பிக்கும் புத்தி வராதுடா. இந்த வீட்டு பொண்ணுடா ராஜி, அவ மனசு கஷ்டப் பட்டா, நம்ம கஷ்டம் தீராதுடா பார்த்து நடந்துக்கங்க” என்று நொடித்தவர் அவரும் சிவனை பார்க்க கிளம்பிவிட்டார்.

ராஜராஜன் வெகுவாய் எதிர்பார்த்தது மண்டல பூஜை நிறைவு நாள். அன்று எப்படியும் அங்கை வருவாள் என்று நினைத்திருக்க அவள் வரவில்லை. ஊருக்கு வந்திருந்தாள், ஆனால் கோவிலுக்கு வரவில்லை.

அன்பழகனும் வரவில்லை. அவர் பணி நிமித்தம் காஷ்மீர் சென்று விட, ராஜலக்ஷ்மி மட்டுமே வந்தார். உடன் மனோ, கரிஷ்மா, விகாஸ், அவர்களுடன் ரதி.

ஸ்ருஷ்டி வரவில்லை. அத்தைக்கு துணையாய் வீட்டில் அந்த மூன்று வயது வாண்டு இருக்க, இதோ ரதி இவர்களுடன்.

மனோவின் தோளில் நல்ல உறக்கத்தில்.

கோவிலில் ராஜலக்ஷ்மி அமைதியாய் நிற்க, நாச்சி சுவாமிநாதனை பார்த்த பார்வையில், அவர் போய் ராஜலக்ஷ்மியை “வாம்மா” என்றார்.

அதன் பின் தமிழ்செல்வன் செல்ல, அதன் பின் ரயில் பெட்டியாய் நீண்டன அத்தனை உறவுகளும்.

ஆம்! எல்லோரும் வந்திருந்தனர். மற்ற இரு ஆண்மக்கள் அவர்களின் குடும்பத்துடன், பெண் மக்கள் அவர்களின் குடும்பத்துடன்.

இல்லாதது என்று பார்த்தால் அங்கையும் அன்பழகனும் மட்டுமே!

ராஜலக்ஷ்மியின் கண்கள் ராஜராஜனை தான் தேடியது. அவருமே பிரச்சனைக்கு பின் ராஜராஜனை பார்க்கவும் இல்லை அவனிடம் பேசவுமில்லை.

ஒரு ஓரமாய் ராஜராஜன் நின்றிருக்க, அவனின் பார்வை முழுவதும் மனோ கையில் இருந்த மகளிடம் தான்.

மனோவும் ராஜராஜனை தான் தேடி நின்றான்.

இருவர் கண்ணிலும் ராஜராஜன் பட, ராஜி அவனை பார்த்து அதிர்ந்து நின்று விட, மனோ அவனை நோக்கி வந்தான்.

அவனின் முன் வந்து நின்றவன், “உங்க மகளை கையில வாங்குவீங்களா மாட்டீங்களா? என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க?” என்று சற்று அதட்டலாகவே கேட்டான்.

அதையெல்லாம் உணரும் நிலையிலேயே இல்லை ராஜராஜன், “தூங்கிட்டு இருக்கா, கை மாத்துனா எழுந்துக்குவா, பாதில எழுந்தா ரொம்ப அழுவா? அப்புறம் சமாளிக்க முடியாது. அவங்கம்மா வரணும்” என்று நீண்ட விளக்கம் கொடுக்க,

“நான் பூஜைக்கு நிக்கணும் தானே, நீங்க வாங்கிக்கங்க” என்றான் தணிவாகவே.

ஒரு பயத்தோடே வாங்கினான், அழுது விடுவாளோ என்று. கை மாறியதும் சிணுங்கினாள் தான். ஆனால் அப்பாவின் அணைப்பை உணர்ந்தாளோ என்னவோ? கையை அவன் கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டு, வசதியாய் அப்பாவின் கழுத்தின் கீழ் முகத்தை புதைத்து கொள்ள, மகளை அவனின் ஷர்ட் பட்டன் உறுத்துமோ என்று மெதுவாய் முதல் இரண்டு பட்டன்களை விடுவித்து, காலரை பின் தள்ளி விட்டவன், கழுத்தை நன்றாக பின் சாய்த்து வைத்துக் கொண்டான்.

எல்லோரும் பூஜைக்கு உள்ளே போக, “நான் இங்க கொஞ்ச நேரம் இருக்கேன்” என்று வெளியில் நின்று விட்டான்.

அதற்குள் ராஜலக்ஷ்மி மகளை அழைத்தவர், “ராஜனுக்கு உடம்பு சரியில்லை போல, பார்க்கவே என்னவோ போல இருக்கான். எனக்கு மனசுக்கு என்னவோ பண்ணது” என்று சொல்லியிருந்தார்.

அதன் பின் அவளின் கால்கள் அவளின் பேச்சை கேட்கவேயில்லை. அதன் பாட்டிற்கு கோவிலை நோக்கி நடை கட்டியது.

ஸ்ருஷ்டியும் அவளும் நடந்து கோவிலை அடைந்தனர். சற்று தூரம் தான், பாதி அவளை தூக்கி கொண்டு, பாதி நடக்க வைத்து என்று கோவிலை அடைந்தனர்.

உள்ளே நுழைந்ததுமே அவள் கண்டது, அங்கிருந்த கோவில் தூணில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்த ராஜராஜன் தான். இன்னும் ரதி அவன் மீது உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவன் அமர்ந்திருந்த பாவம் மனதை ஏதோ செய்ய, அதிலும் தோற்றம், ஆள் ஏதோ மருத்தவமனையில் ஒரு பதினைந்து நாள் படுக்கையில் இருந்து எழுந்து வந்தவனது போல இருக்க, மனதே ஆறவில்லை.

அவன் அருகில் சென்று ஸ்ருஷ்டியை இறக்கி விட, “மாமா” என்ற அவளின் குரலில் கண் திறந்தான். ஆனால் குரல் அவனை அடையுமுன்னேயே அவளின் வாசம் அடைந்திருந்தது. கண்கள் திறக்க நினைத்தவனை ஸ்ருஷ்டியின் குரல் கண் திறக்க செய்திருந்தது.

அங்கையை பார்த்ததும் கண்களில் ஒரு பரவசம். நல்ல சிகப்பு நிற சல்வாரில் இருந்தாள். அவளின் நிறம் அதற்கு போட்டியோ என்னும்படி மாறி இருந்தது.

இங்கே அதிக வேலையினால் உடல் இளைத்து கறுத்து இருக்க , ஒன்றரை மாத ஒய்வு , அம்மாவின் கை உணவு , குளிர் பிரதேச இருப்பு அவளை பளபளப்பாய் மாற்றி இருந்தது.

அப்படி ஒரு ஆகர்ஷிக்கும் அழகோடு இருக்க, மகளை கைகளில் அள்ளி இருக்க, அவளை கண்களில் அள்ளி இருந்தான்.

“உடம்பு சரியில்லையா?” என்றாள் தவிப்போடு.

“இல்லையே, நல்லா இருக்கேனே” என்றான் இலகுவாகவே.

“அப்புறம் ஏன் இப்படி இருக்கீங்க”

“எப்படி?”

“ம்ம், பஞ்சத்துல அடிபட்ட பரதேசி மாதிரி” என்று மனதில் பட்டதை அப்படியே சொல்ல,

“ஹேய், என்ன சண்டை பிடிக்க வந்தியா?” என்றான்.

“ஏன் இப்படி இருக்கீங்க ஏதாவது உடம்புக்கு பண்ணுதா?” என்றாள் கண்களில் கலவரத்தை தேக்கி.

“ஒண்ணும் பண்ணலை, நல்லா இருக்கேன். நேரத்துக்கு சாப்பிடலை, அதான் கொஞ்சம் இளைச்சிட்டேன் போல, சாப்பிட்டா சரியாகிடும்” என்று அவளை தேற்றுவதற்காக சொல்ல,

அது அங்கையை தணிப்பதற்கு பதில் உசுப்பி விட்டது. அப்படி ஒரு கோபம் அங்கைக்கு பொங்கிவிட “ஏன் நான் இல்லைன்னா ஒழுங்கா சாப்பிட மாட்டியா நீ? என்னை கல்யாணம் பண்ணும் முன்ன என்ன சாப்பிடாமயா இருந்த, ஹெல்த் முக்கியம்னு தெரியாதா?”

“இப்போ மட்டும் நான் என்ன செத்தா போயிட்டேன், இப்படி உடம்பை கெடுத்து வெச்சிருக்க” என்று வார்த்தையை விட்டாள்.

கோவில் உள் சாவு அது இதென்று பேச,

“அங்கை” என்று அவன் கத்திய கத்தல் உள்ளே சந்நிதானதிற்கே கேட்க, “என்னவோ?” என்று வந்து எட்டி பார்த்தனர். அப்போது தான் பூஜைக்கு ஏற்பாடு ஆகிக் கொண்டிருந்தது.

அவன் கத்திய கத்தலில் ரதிக்கு விழிப்பு வந்து விட்டது.

பின்பு அமைதியாவே “வேலை அதிகம், அதுல நேரம் தப்பி போய்டுது சாப்பிட முடியாம” என்று ராஜராஜன் அங்கைக்கு விளக்கம் கொடுக்க, அதற்கும் கோபம் அதிகமாகியது.

“என்ன பண்றாங்க உங்கப்பாவும் பெரியப்பாவும், உன் தலையில எல்லா வேலையையும் கட்டிட்டு அவங்க சொகுசா இருக்காங்களா? நான் இல்லைன்னா வேலையை பகிர்ந்துக்க மாட்டாங்களா. எப்பவும் போலவே இருப்பாங்களா?” என அவள் கத்த

“அச்சோ, அவர்கள் காதில் விழுந்து விட்டால் என்ன செய்வது? இருக்கும் பிரச்சனைய போதும்” என்று நினைத்த ராஜராஜன்,

“பேசாம போடி, ஏதாவது பேசின தொலைச்சிருவேன்” என்று ஆவேசமாய் பேச,

வந்தவர்களின் காதில் அது மட்டும் தான் விழ,

“நான் கேட்பேன் அவங்களை” என்று அவள் நிற்க,

“அறைஞ்சேன்னா பாரு, போடி முதல்ல” என்று அவன் கை ஒங்க,

இதெல்லாம் பார்த்திருந்த ரதி “வீல்” என்று கத்த,

பார்த்திருந்த அத்தனை பேருக்குமே என்னடா இது என்று ஆகிப் போனது.

அவளோ கண்களில் அப்படி ஒரு சீற்றம் கொண்டு வந்திருந்தவள், “அடிச்சிருவியா நீ அடி பார்க்கலாம்” என்று அடிக்குரலில் அவனுக்கு மட்டும் கேட்குமாறு வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

அதற்குள் சுவாமிநாதன் “ராஜா என்ன பண்ற?” என்று சத்தமாக அதட்டினார்.

அவர்கள் குடும்பம் மட்டுமில்லை, அங்கே ஊர் மக்களும் தானே இருந்தனர்.

எல்லோரும் பார்த்து நிற்க, கை இறக்கியவன், “போடி, உனக்கு என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ” என்று விட்டான்.

கோபம் கொப்பளித்து நின்ற போதும், ராஜனின் இந்த பாவனை அவளை பேச விடவில்லை. அவன் கோபத்தை காண்பித்திருந்தால் நிச்சயம் அவனை விட எகிறியிறுப்பாள். இப்படி நிராசையாய் பேசுபவனிடம் என்ன செய்ய?

ரதியும் அழுகையில் கத்து கத்தென்று கத்தினாள்.

“அழக்கூடாது பட்டு” என்று மகளை அவள் கையில் வாங்க அது அப்படியே அழுகையை நிறுத்தி தேம்பியது.

ராஜராஜன் மகளையே பார்த்திருந்தான். அந்த ஏக்கப் பார்வையில் ராஜராஜனிடம் தானாய் மகளை கொடுத்தாள்.

மகளை கையில் வாங்கியவன் “நீ கிளம்பு” என்றவன் அவளின் வண்டி சாவியை நீட்டினான்.

இது எப்படி என்பது போல அவள் பார்க்க,

“நீ இல்லை, அதனால் உன் வண்டியோட சுத்திட்டு இருக்கேன்” என்று சொன்னவன் சாவியை கொடுக்க,

அவள் அசையாமல் நின்றாள். “ப்ளீஸ், பிரச்சனை வேண்டாம், உன்னால இங்க அமைதியா இருக்க முடியும்னா இரு, இல்லை முடியாதுன்னா கிளம்பிடு. எல்லோர் முன்னமும் எப்பவும் சண்டை போடறோம். எனக்கு கேவலமா இருக்கு, எல்லோர் முன்னமும் காட்சி பொருள் ஆகவேண்டாம்” என்றான் ஆழ்ந்த குரலில்.

பத்தி சொல்லாமல் சாவியை வாங்கிக் கொண்டு அவள் நடக்க, ஸ்ருஷ்டியும் பின்னே போகப் போக,

“நீ இரு பேபி” என்று அவளை கையில் பிடித்துக் கொண்டவன்,

“விகாஸ்” என்று மனோவின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவனை அழைக்க, ஒரே குரலில் ஓடி வந்திருந்தான்.

“நீ அத்தையோட போ” என, உடனே அத்தையிடம் ஓடியிருந்தான்.

எதுவும் நடக்காதது போல அவன் சிவனின் சந்நிதியை நோக்கி நடக்க, மொத்த வீடும் அவனை பார்க்க, அங்கிருந்த வேறு சிலரும் அவனை பார்க்க,

மனோ தங்கையை அடிக்க ராஜராஜன் கை ஓங்கியதால் அவனை முறைத்து பார்க்க,

எல்லாம் உணர்ந்தாலும் எதையும் அவன் கண்டு கொள்ளவில்லை, “என் கடன் பணி செய்வதே” என்பது போல சிவனை நோக்கி அவன் நடக்க, ரதி இப்போது அவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.


ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
Last edited:
:love::love::love:

ஆடு பகை குட்டி உறவு மாதிரி இல்ல இருக்குது ;););) பொண்ணு தான் அப்பாவின் மனசை மாத்தணும் போல......
இன்னுமாடா உன் கோபம் போகலை....... அம்மா சொன்னதும் தேடிவந்தாளேனு சந்தோசப்படாமல் திரும்பவும் எல்லோருக்கும் காட்சிப்பொருளாகிட்டீங்க........

அவ இல்லைனு அவ வண்டில சுத்துறியா :D:D:D
அந்த வாசம் வண்டியில் இருக்குதோ :p:p:p
இப்போ எங்கே போக சொல்லி வண்டி குடுத்த???

விகாஸ் ஸ்ருஷ்டி குட்டிங்க ரெண்டும் ராஜராஜனோட செல்லங்கள் :love::love::love:
எள்ளுன்னா எண்ணெய் தான்........

ஒருவழியா அம்மாவின் முயற்சியில் அண்ணன் ராஜலட்சுமியை வாம்மா சொல்லிட்டார்........
வீட்டுக்கும் கூப்பிடுவாரா???

நாங்க என்ன புள்ளையை கட்டி குடுத்திருக்கோமா தளைஞ்சி போக :mad:
அப்போ பொண்ணை கட்டிக்குடுத்தால் தான் தளைஞ்சி போகணுமா???
பையனுக்கு கட்டுற பொண்ணுக்கு???
தங்கை பெண்ணுக்கே இந்த கதி........ அப்போ அடுத்த வீட்டு பொண்ணுக்கு???

என் கடன் பணி செய்து கிடப்பதே.......
யாருக்குப்பா???
 
Last edited:
:love: :love: :love:

நாச்சியார் சரியான கேள்வி கேட்டார்
இ‌ந்த சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் என்ன ஜென்மங்களோ...

ராஜராஜா உனக்கு பொண்டாட்டியயும் சமாளிக்க தெரியல..
பொண்ணயும் சமாளிக்க தெரியல...

மறுபடியும் சண்டயா ...
இதுக்குதான் அங்கை நீ Dehradun ல இருந்து வந்தியா???

நீ இல்லை, அதனால் உன் வண்டியோட சுத்திட்டு இருக்கேன்..

அடடா ராஜராஜன் நீ இல்லாம எவ்வளவு feel பண்ணி இருக்கான்..
 
Last edited:
ஓ மை கடவுளே..
Precap படிச்சிட்டு சந்தோச தருணம் எதிர்பார்த்தா... ?‍♀️

ஏன் இப்படி.. நான் இல்லாமல் ஏங்கிட்டீங்களா ன்னு ஆசையா கேக்க வேண்டியதை இப்படி அலறி கேக்குறாளே... ?
 
Last edited:
மகளுக்கே மரியாதை அம்மா மிரட்டினால்
தான் தருகிறார்கள். இதில் மருமகளை வீட்டிற்கு வர சொல்லுவார்களா.ராஜராஜனுக்கு தான் தெரிய வேண்டும் மனைவி தான் முக்கியம். மற்றவர்கள் எல்லாமே அவளுக்கு பின்னே தான் என்பது.??
 
Last edited:
IMG-20191204-WA0068.jpg


மாமா குடும்பம் அளவுக்கு நிதானம்
வேண்டாம் ராசாத்தி, கொஞ்சமே கொஞ்சம் நிதானம் இருக்கலாம்....

கோயில் பூஜை அப்போ வேலையா இருந்த, சீர் கொடுத்ததும் தெரியவில்லை கொடுக்குறதும் தெரியலை..
கண்டிப்பா தெரியும் 45நாள்ல திரும்ப பூஜை வருது அதுக்கு திரும்ப அம்மா வரணும்னு..

மரியாதையையே கொடுக்க வச்சவனுக்கு... சீர் கொடுக்காததை சொல்லியிருந்தா
சிறப்பா செஞ்சிருப்பான்ல..
வீட்டுக்கே அத்தைய வரவச்சிருப்பான்ல..
 
Last edited:
Top