Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 3௦

Advertisement

அருமையான கதை, ராஜராஜன் உறவுகளை அனைத்து செல்லும் யதார்த்தமான கிராமத்து மனிதன், அன்பழகனின் ராயர் குடும்பத்து பாசம்,அங்கை ராஜராஜனின் குடும்பத்தாருடன் இணைந்து போவது என்று கதையை படிப்பதற்கு அவ்வளவு அருமையாக இருந்தது.
 
அத்தியாயம் முப்பது:


மரபு வேலி 3௦ - ஆடியோ புக் - கேட்டு மகிழுங்கள் - CLICK HERE

அதற்குள் விகாஸ் வந்தவன், “அத்தை எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கணுமாம். மாமா உங்களை கூப்பிட்டாங்க” என்றான்.

நடக்க ஆரம்பித்தவள் “மாமா, நீங்களும் வாங்க” என்று கௌரிஷங்கரையும் நந்தகுமாரையும் அழைத்தாள். அவர்கள் எப்படியோ அங்கை அவர்களிடம் வித்தியாசம் பாராட்டவில்லை.

அவர்கள் தயங்க “அவரை தனியா சம்பளம் குடுக்க விட்டோம், ஒரு வருஷமானாலும் நம்மளால அந்த கணக்கை நேர் பண்ண முடியாது. குடுத்வங்களுக்கே சம்பளம் குடுத்துட்டே இருப்பார், குடுக்காதவங்களுக்கு குடுக்க மாட்டார், வாங்க” என்று இருவரையும் கூட அழைத்துக் கொண்டாள்.

ஆம்! எப்படி அவளின் கணவன் உறவுகளை அரவணைத்து செல்கிறானோ அதை அவளும் பழகிக் கொண்டாள்.

அங்கே சென்றதும் கௌரிஷங்கர், அங்கை சொன்னதை வைத்து கிண்டலடிக்க, ராஜராஜன் அங்கையை பார்த்த போது அவளும் குறும்பாய் அவனை பார்த்திருக்க,

“மைக் குடுக்கட்டுமா?” என்றான் நக்கலாய்.

“எதுக்கு மைக்கு? அதுதான் எல்லோருக்கும் தெரியுமே!” என்று அவள் அதற்கும் கிண்டல் செய்ய,

“அடிங்க” என்று அவன் அடிக்க வருவது போல பாவனை செய்ய,

அங்கே வேலை செய்த அத்தனை பேரும் சிரிக்க, அந்த இடமே அவ்வளவு கலகலப்பாய் இருந்தது.

இன்னும் அவர்களுள் வார்த்தையாடல்கள், வழக்காடல்கள் என்று எல்லாம் அப்படியே தான் இருக்கின்றன, சண்டைகள் தூள் பறக்கின்றன. ஆனாலும் ஒரு உன்னதமான வாழ்க்கை தான் அவர்களது.

இரவு படுக்கையில் விகாஸ், ஸ்ருஷ்டி, ரதி இருக்க, ஒரு பக்கம் ராஜராஜன் இன்னொரு பக்கம் அங்கையர்க்கண்ணி படுத்திருந்தனர்.
எட்டி கணவனை பார்த்தவள் “எனக்கு தூக்கம் வரலை” என்று சைகையால் சொல்ல,

“ஷ், பேசாம படு, சும்மா என்னை உசுப்பேத்த கூடாது” என்ற பார்வை பார்த்தான்.

“இவங்க தூங்கின பிறகு நான் அங்க வர்றேன்” என்று சைகை காண்பிக்க,

“ஒழுங்கா அங்கயே படு” என்று மிரட்டி படுக்க வைத்தான்.

இதையேல்லாம் பாராமல் பார்த்திருந்த விகாஸ், “அத்தை நீங்க மாமா பக்கத்துல படுக்கணுமா?” என்று கேட்டான்.

“இல்லை, இல்லை” என்று அசடு வழிந்தவளுக்கு, “என்ன சொல்ல?” என்று தெரியவில்லை.

“அத்தை, இந்த பக்கம் படுப்பாங்க, நான் அந்த பக்கம் படுப்பேன். அதான் இடம் மாத்த கேட்கறாங்க” என்று நம்பும்படியாய் ராஜராஜன் சொல்ல..

“ஓகே, மாமா மாத்திக்கங்க” என்று அவன் சொல்ல..

ஒரு இட மாற்று படலம், “பேசாம படு அங்கை” என்று மிரட்டி படுக்க வைத்து அவனும் உறங்கி விட்டான்.

நடு இரவில் அவன் மேல் ஏதோ பாரமாய் உணர்ந்தான், அது அங்கை என்று புரிய, கண்விழித்து குழந்தைகளை பார்க்க எல்லோரும் உறக்கத்தில்.

“தூங்கறாங்க” என்று அங்கை சொல்ல,

“உனக்கு ஏன் தூக்கம் வரலை”

“தெரியலை” என்றவள் அப்படியே படுத்திருக்க,

“என்ன விஷயம் சொல்லுடா?”

“இன்னைக்கு நாளே முடிஞ்சு போச்சு”

“அதுக்கு”

“இன்னைக்கு நம்ம கல்யாண நாள்”

“அம்மாடி” என்று இறுக அணைத்துக் கொண்டான்.

“உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா”

“இருந்தது, கூடவே அப்பா சொன்னாங்க, இன்னைக்கு தாத்தா இறந்த நாள்ன்னு. அப்போ இன்னைக்கு தானே நம்ம கல்யாண நாள், தாத்தா இறந்த நாள்ன்றதால நான் காலையில சொல்லலை. பின்ன யாரும் சொல்லலை. அவங்க அவங்க வேலையை பார்த்தாங்க, விட்டுட்டேன்”

“அது திதி பார்ப்பாங்க பாட்டி, நாள் பார்க்க மாட்டாங்க, அப்படி பார்த்தா அவரோட திதி அடுத்த வாரம் தான் வருது. அதனால் இன்னைக்கு நம்ம கல்யாண நாள் மட்டும் தான்”

“உங்களுக்கு ஞாபகமே இல்லை”

“பிறந்த நாள், கல்யாண நாள், எல்லாம் சிறப்பா என்ன? வாழற நாள் எல்லாம் சிறப்பு தான்!”

“அப்படியா வாழற நாள் எல்லாம் நீங்க எனக்கு கிஃப்ட் குடுக்கறீங்களா என்ன?”

“என்னையே உனக்கு குடுத்துட்டேன், அப்புறம் எதுக்கு கிஃப்ட்”

“ம்ம், பெரிய மொக்க கி ஃப்ட் இது, இது எனக்கு வேண்டாம்”

“கிஃப்ட் எல்லாம் குடுத்தா குடுத்தது தான், வேண்டாம்னு எல்லாம் சொல்லக் கூடாது. நீ என்ன வாங்கின எனக்கு”

“வாங்கினேன், ஆனா குடுக்க மாட்டேன்”

“ஏண்டி?”

“நீ குடுக்கலை, அதனால நானும் குடுக்கலை” என்று சண்டையை ஆரம்பிக்க,

“அங்கை காலையில அஞ்சு மணிக்கு நான் தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்ச போகணும்”

“ஒரு ஆள் போட வேண்டியது தானே”

“ஏன் நான் என்ன வெட்டி முறிக்கரேன்”

“போடா, நீ என்னத்தையோ முறி” என்று அவள் சலித்துக் கொள்ள,

“தூங்கலாம் அங்கை” என்றான் கெஞ்சுதலாய்.

இவன் மாற மாட்டான் என்று நினைத்தவள் பதில் சொல்லாமல் கண்களை மூட அடுத்த சில நிமிடங்களில் சீரான மூச்சு அவனிடம்.
உறங்கிவிட்டான் என்று புரிய, அவளும் உறங்க முற்பட்டு வெற்றியும் கண்டாள்.

விடியலில் ராஜராஜன் மேல் அங்கை, அவளின் மேல் ஒரு பக்கம் ரதி உறங்க, இன்னொரு பக்கம் அவளை அணைத்து ஸ்ருஷ்டி உறங்கினாள்.

ராஜராஜனின் அழகான வேலியை விட்டு வெளியே வராத கன்னி அவனின் அங்கையற்கண்ணி.

ராஜராஜனுக்கு அதிகாலையில் விழிப்பு வந்து விட்டது.
இன்று நேராய் படுத்திருந்ததால் மெதுவாக தன் மீது இருந்த ஸ்ருஷ்டியையும் ரதியையும் மெல்ல விலக்கினான்.

பின்பு அங்கையை விலக்க, அவளின் அணைப்பு இறுகியது. “அங்கை நான் போகணும் என்னை விடு”

எரிச்சல் ஆனவள் “இனிமே இங்கே வராத, காட்டுல மரத்தை பிடிச்சிட்டு தூங்கு” என்றாள் கடுப்பாக.

“என்கிட்டே சண்டை போடாத, உன் தூக்கம் போயிடும்” என்றான்.
கப்பென்று கண்களை மூடிக் கொண்டாள். சிரித்தவாறு எழுந்து அந்த நேரத்திலும் குளித்து தான் தோட்டத்திற்கு வந்தான்.

வந்து பார்த்தால் அன்பழகன் அங்கே நின்றிருந்தார்.

“நீங்க என்ன பண்றீங்க இங்க மாமா?” என்று ராஜராஜன் கேட்க,

“பார்த்துட்டு இருக்கேன், என் அய்யாவோட நான் தான் காலையில தண்ணி பாய்ச்ச வருவேன், சில வருஷமா எவ்வளவு காஞ்சு போய் இருந்தது. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு”

“உங்க அய்யாவோட தான் வருவீங்களா? என்னோட வரமாட்டீங்களா? இங்க இருக்குற வரை வாங்க” என்று ராஜராஜன் சொல்ல,

“அதை நீங்க சொல்லணுமா என்ன? நேத்தே முடிவு பண்ணிட்டேன். என் அய்யா அப்புறம் என்னை கேட்பார், ஏன்டா நீ என் வீட்டோட இருக்கணும் தானே உன் பொண்ணை என் பேரனுக்கு நீ கட்டிக் குடுக்கறேன்னு சொன்ன, நானும் ஒத்துக்கிடேன். நீ இந்த வேலையை கூட செய்ய மாட்டியான்னு கேட்பார். நான் என்னைக்கும் இந்த வீட்டுக்கு வேலைக்காரன் தான்” என்றார் புன்னகையுடன்.

பின் “என்னோட கடைசி காலத்துல நான் இங்க வந்து இருக்கணும்னு தான் என் ஆசை” என்றார்.

“பக்கத்துல ஒரு நிலம் வருது, பாசனமுள்ள இடம், வாங்கிப் போடலாமா” என்றான்.

“என்ன இது?” என்று அவனை கடிந்தவர், “நான் இங்க என் ராயர் அய்யாவோட நிலத்துல வேலை செய்யணும் அதை சொன்னேன். நான் விவசாயம் பண்ணனும்னு சொல்லலை” என்றார் உணர்ச்சிகரமாக.
இப்படி ஆட்களை பார்ப்பது அபூர்வம் தானே!

அவரை பார்த்து புன்னகைத்து “நீங்க தான் கல்யாணத்துக்கு கேட்டீங்களா?” என்று கேட்டான்.

“ம்ம்” என்றவர், “இது தான் நான் வளர்ந்த இடம். என்னை உயிரோட வெச்சிருந்த இடம். என் ராஜியை எனக்கு குடுத்த இடம், என் பொண்ணு இங்க இருக்கணும்னு எனக்கு ஆசை. ராயர் இல்லைன்னா நான் இல்லை”

“நான் சின்ன வயசுல...” என்று ஆரம்பித்து அவருக்கும் ராயருக்குமான உறவை நிகழ்வை பேச ஆரம்பித்தார்.

“நான் காஷ்மீர் பார்டர்ல இருந்தாலும், என் உயிர் அங்க இருக்கும். ஆனா என் உணர்வு இங்க தான் இருக்கும். இங்க தான் என்னோட வேர் இருக்கு, என்னோட மரபு இருக்கு. அங்கை இங்க பொருந்த மாட்டளோ, தப்பு பண்ணிட்டமோன்னு நினைச்சேன். பொருந்திட்டா” என்றவர் அவனை தோளோடு அணைத்து “தேங்க்ஸ்” என்றார்.

“இதை இவர் எத்தனை தரம் தாண்டா சொல்வார், நாம என்ன இவர் பொண்ணை அவ்வளவு நல்லாவா பார்த்துக்கறோம், இல்லையே!” என்று மனதிற்குள் அங்கையர்கண்ணியை நினைத்தபடி அமைதியாய் நின்றான் ராஜராஜன்.

பின் மெதுவாய் “எனக்காக அவ நிறைய விட்டுக் கொடுக்கறா. அட்ஜஸ்ட் செஞ்சுக்கறா, ட்ரெஸ் எல்லாம் கூட எனக்கு பிடிக்காதுன்னு மாத்திக்கிட்டா, ரொம்ப புத்திசாலி. நீங்க இன்னும் கூட அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்திருக்கலாம். என்கிட்டே சிக்க வெச்சிட்டீங்க” என்றான் சலுகையாய்.

“என்ன விட்டுக் குடுக்கறா? என்ன அட்ஜஸ்ட் பண்றா? அதெல்லாம் இல்லை. இது தான் நாம, நம்ம இயல்புல இருந்து சில சமயம் மாறிடறோம். என் பொண்ணு இந்த இயல்போட இருக்கான்றது, எனக்கு பெருமை”

“உறவுகளை அரவணைச்சு இருக்கா, இது வேலின்னு நினைச்சா வேலி, இது தான் நம்மன்னு நினைச்சா நம்ம” என்ற விளக்கம் கொடுக்க,
இருவர் முகத்திலும் புன்னகை.

“ராயரோட பேரன்னு தான், உங்களுக்கு பொண்ணு கொடுத்தேன். ஆனா ஏதோ ஒரு வகையில உங்களுக்கு குடுக்கலாம்னு எனக்கு தோணினது இல்லைன்னா குடுத்திருப்பேனா. உங்ககிட்ட தான் அவ சிக்கணும்னு இருந்திருந்தா நான் சிக்க வைக்கலைன்னாலும் சிக்கியிருப்பா” என்று அன்பழகன் சொல்ல,

ராஜராஜன் முகத்தில் விரிந்த புன்னகை!

காற்றும் அதை ஆமோதிப்பது போல அவர்களின் உடலை பாந்தமாய் உரச, கதிரவன் உதிக்க, விடியல் மிக அழகாய் இருந்தது.

மரபு வேலி
( நிறைவுற்றது )










ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
super novel.mam
 
மல்லி style ஹீரோயின்ஸ் எத்தனை பேர் வந்தாலும் நமக்கு ஏன் சலிக்க மாட்டேங்குது...
ஒவ்வொருவரும் ஒரு ரகம்..
ஆனா மன உறுதியில் ஒரே விதம்..
அருமையான கதை மல்லி..
ராஜன் அங்கை வித்தியாசமான இணை..

Is it
 
ஹாய் மல்லி,
அழகான கதை. அருமையான முடிவு.
கட்டி இழுக்கும் எழுத்து. இப்போ வசீகரிக்கும் வாய்ஸ் ம் கூட....

உங்கள் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள் மல்லி.
 
hiii galz....

semma story marabu velli........malli as usual pinnitanga....enakku epi by epi padikka elamm ippo porumai illai romba kuranjithu...so full story mudinjathum padichen....as always malli captured our heart with her writting...simply superb...?...but ennada sandai sandai nu iruke nu feel panna but semma romance koduthu balance pannitanga....well written...
 
Top