ஜெய் ஸ்ரீ ராம்
அத்தியாயம் -30
கணவனிடம் அடிவாங்கி வீட்டை விட்டு போகிறேன் என்று சொன்னவள், இவளா என்று மற்றவர்கள் வியக்கும் வண்ணம்,படு உற்சாகமாக,சற்று தட புடலாகவே சமைத்து கொண்டிருந்தாள் சிவண்யா.
இதோ வேணி கூட உதவுகிறேன் என்று அங்கே தான் நின்றிருந்தார். சர்வா ஒரு பேமிலி பேக் ஐஸ்கிரீமோடு மகனிடம் மன்னிப்பு யாசித்திருக்க,
ஈசனும் பெரிய மனிதனாக தந்தையை மண்ணித்திருந்தான்.இதோ அவன் டேபிளில் அமர்ந்து உண்டுகொண்டிருக்க "எனக்கு கொஞ்சம்டா,"என்று எதுவுமே நடக்காதது போல .சதா கெஞ்சி கொண்டிருந்தான்.
பின்னே "உங்க அம்மா என்னைக்கு படுக்கையில் விழுந்தாளோ அன்னைல இருந்து அவள் படிப்பை கூட பார்க்காமல். நமக்கு வேலை செஞ்சா,ஒரு பதினைஞ்சி நாள் அவள் கூட பொறந்த அக்கா கல்யாணத்துல,சந்தோசமா அப்படி இப்படி ஓடி ஆடி திரிஞ்சதை உங்களால் தாங்கிக்க முடியலை.எப்பவும் உங்களுக்கே சேவகம் பன்னிட்டு இருக்கனுமா" என்று சங்கர் கேட்டிருக்க,
அப்போது தான் இரண்டாவது மகவின் வரவை உறுதி செய்து விட்டு வந்திருந்த சர்வாவிற்கு நறுக்கென மண்டையில் கொட்டு வாங்கியது போலிருந்தது.
"அவளோட உழைப்பை வாங்கிட்டு அவளையே கரிச்சி கொட்டின உங்க அம்மாக்கு எப்போ இருந்து பாப்பா மேல பாசம் பொத்துகிட்டு வந்துச்சாம்."
"கல்யாணமே வேண்டாம்னு,அழுத பிள்ளையை சமாதானம் சொல்லி கல்யாணம் பண்ணி வச்சவன் நான், தனியா போய்டுங்கன்னு சொல்லியும்,நீங்க இல்லாமல்,நாங்க மட்டும் தனியா இருந்தால் அது குடும்பமே இல்லைன்னு சொல்லிட்டு."
"மூஞ்சி கொடுத்து பேசாதா உனக்கும்,உங்க அம்மாவுக்கும் சேவகம் பண்ணதுக்கு,நீ வேலைக்காரி சொல்லுவியா,சுயநலவாதிடா நீ" என்றுசதாவின் முதுகுகில் நாலு கொடுத்திருக்க,
சதாவிற்கும்,வேணிக்கும் இது புது செய்தி அல்லாவா,சதா எந்த எதிர் வினையும் ஆற்றாமல் அமைதியாக வாங்கி கொண்டான்.
"அவள் கோபத்துல ஏதோ செஞ்சாள், நீ அறைஞ்சிடுவியா" என்று சர்வாவையும் திட்டி கொண்டிருக்க.அதற்குள் வாயிலில் டெலிவரி பையன் பெல் அடிக்க, சிவாவும் மேலிருந்து இறங்கி கொண்டிருந்தாள்.
சர்வா வேகமாய் சென்று பணம் கொடுத்து வாங்கி வந்தவன் டேபிளில் வைக்க,சிவா அனைவருக்கும் தட்டு எடுத்து வைத்தாள்.
"புருசனுக்கு ஏன் சாப்பாடு போடலைன்னு கேட்டதுக்கே தாலியை கழட்டி வீசிருக்கா,உன் அண்ணன் பொண்ணு.இத்தனை நடந்த பிறகும் எல்லாத்துக்கும் சேர்த்து ஆர்டர் போட்ருக்கா,இப்போவது வித்தியாசம் புரியுதா,"என்ற கணவரின் காட்டமான கேள்விக்கு ஆம் என்று வேணி தலையசைக்க
"என்ன புரியுது"அவர் எரிச்சலாய் கேட்க ,
"நேரம் இருந்துருந்தா நிச்சயமா சமைச்சிருப்பா,எனக்கு மாத்திரை போடணும் அதான் வெளில வாங்கியிருக்கா,"பாவமாய்அவர் சொல்ல..... சங்கர் தலையில் அடித்து கொண்டு உண்ண சென்று விட்டார்.
சதா வேலைக்கு விடுமுறை சொல்லியிருந்தவன்.உண்டு முடித்ததும்.அண்ணன் மகனிடம். "வாடா உனக்கு தம்பி பாப்பா வர போகுதுள்ள.அதை செலிபிரேட் பண்ணுவோம்" என்று அவனையும் பள்ளி செல்ல விடாமல். வெளியில் அழைத்து கொண்டு போய்விட்டான்.
இங்கு சங்கர் பெண்ணை அழைத்து அருகே அமர்த்தியவர்.யாரு உன்னை என்ன பேசினாலும் எங்கிட்ட சொல்லணுமுன்னு சொல்லிருக்கேன்ல,அவங்க பேசுனா நீ இப்படி பண்ணலாமா,"அவர் கண்டிக்கும் தொணியில் கேட்கவும்.
விழி சுருக்கி சிவா கணவனை பாவமாக பார்க்க.
"ஏதோ அந்த நேரம் ஒரு கோவத்துல பண்ணிட்டாப்பா,இனி அப்படிலாம் பண்ண மாட்டாள்"என்று அவன் சொன்ன தோரணையில் பண்ண கூடாது என்ற செய்தியும் சேர்ந்தே இருக்க...அதை புரிந்து கொண்டவளும்.
இருவரையும் பார்த்து மகனை போலவே காதில் வைத்து சாரி சொல்ல,"போடா,நல்லா ரெஸ்ட் எடு,சாயங்காலம் ஹாஸ்பிடல் போயிட்டு வாங்க," சங்கர் அவளை அனுப்பி விட,
மீண்டும் சமையலறை சென்றவளை, "வாடி" என்று சர்வா தான் வம்படியாக அழைத்து சென்றவன்.அவர்களின் படுக்கையில் அமர்ந்து .சிவாவை அவனின் நெஞ்சில் வாகாய் சாய்த்து கொள்ள,அவளோ திமிறி விலகியவள்.
"என்னை ஸ்ஸ் ,பேசக்கூடாது சொன்னிங்க,அடிச்சீங்க போங்க"அவள் முகம் திருப்ப,
"சரி......... ஸாரி.. தப்பு தான்...வணி ப்ளீஸ் டி ,எதுவும் பேசாத,"என்று மீண்டும் இழுத்து தன்னில் சாய்த்திருந்தவன்.விழிகள் கலங்கி, குரல் கர கரக்க....
"அப்படியே இரு,எனக்கு ...எனக்கு உன்னை விட்டு ரொம்ப தூரமா போனது போல இருக்குடி"என்று நெடு நாள் மனதில் இருப்பதை சொல்லி விட,
அந்த நொடி,உடல் அதிர,அவன் மார்பில் இருந்து விலுக்கென நிமிர்ந்தவள்.கணவனின் விழியோடு விழி கலக்கவிட்டு, தன் உடலின் மொத்த பாரத்தையும் அவனில் போட்டு தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்திருந்தவள்,ஆவேசமாய் முத்த மழை பொழிய,சர்வா மேலும் மேலும் தனக்குள் நெருக்கி கொண்டான்.
ஒரு கட்டத்தில் மூச்சு வாங்கி பெண் விலக,போதவில்லை கடங்காரனுக்கு,கொடுக்க தோன்றவில்லை,பெற்றுக்கொள்ள தோன்றியது .கேட்டான் வெட்கமின்றி "வட்டிகாரம்மா இன்னும் வேணுண்டி,"என்று
அவளும் கொடுத்து களைத்து,"முடிலைங்க" என்று பாவமாய் சொல்லி
"ஏன்? ஏன்? அப்படி சொல்றிங்க,ஒன்றை மாசம் தாங்க, தனி தனியா இருக்கோம்." என்றபடி அவள் பரிதாபமாய் கேட்க ,இன்று சர்வேஸ்வரன் மனம் திறக்கும் எண்ணத்தில் இருந்தான் போலும்.
"இல்லைடி,நான் என்னைக்கு அமெரிக்கா போனேனோ அப்போல இருந்தே அப்படி தான் இருந்துச்சு.எனக்கு தெரியுது. ஈசனால என்கிட்ட உன்னால பேசமுடியலைன்னு ஆனால்,உன்னை விட்டு தனியா இருக்க முடியலை."
"சரி கூட கூட்டிட்டு போகலாம்னு வந்தால்,பார்கவி கல்யாணம் முடியாமல் வரம்கேட்டேன்கிற,எனக்கு..... நீ .....என்னை தள்ளி வைக்குறன்னு தோணுச்சு,"அவன் ஏக்கமாய் சொல்ல
"ஏங்க,தள்ளிலாம் வைக்கலிங்க," அவள் பதட்டமாய் சொல்ல வர,"ம்ம்ச் அம்மாக்கு முடிலைன்னு அம்மாவை பாத்துக்க நின்னேன்னு அம்மா இப்போ தான் சொன்னாங்கடி,,"என்றவன்.
அழுந்த தலையை கோதி,குறுக்கும் நெடுக்கும் நடந்து அவளை பயம் கொள்ள வைத்து "இங்க வந்த பிறகும். என்னைக்காவது ஆசையா எங்கிட்ட வந்துருக்கியா,நானா கூப்பிடனும்.அப்படி வந்தாலும்,கொஞ்சநேரத்துல உன்னோட பையன் கிட்ட ஓடி போய்டுற" அவன் குற்றம் சாற்ற,
சிவன்யா இரண்டு கைகளாலும் வாயை பொத்தி,பாவமாய் கணவனை ஏறிட்டவள்,"உங்களுக்கு மனசாட்சியே இல்லைல,ஒரு நாளைக்கு ஒரு முறைன்னா பரவாயில்ல,ஏதோ புது பொண்டாட்டி மாதிரி, ரெண்டு மூணு டைம்தூங்க விடாமல். எழுப்பினால் என்ன பண்ணுவாங்களாம்."
"அப்படியே ஈசன் கூட தூங்க போனால் மட்டும் விடுற மாதிரி பேசுறீங்க,எத்தனை நாள் பாதி தூக்கத்துலயே தூக்கிட்டு வந்திருப்பிங்க," என்று உதடு சுளித்து சொல்ல சர்வாவிடம் மந்திர புன்னகை.......
இவன் இப்படி சொல்லவும்.திடீரென மன உளைச்சலாகிவிட,"ஏங்க நா .....ன் உங்களை சந்தோசமா வச்சுக்கலையா,"அவள் தடுமாற்றமாய் கேட்க,
"லூசு"என்று அவளின் தலையில் கொட்டியவன்."அதெல்லாம் சந்தோசமா தாண்டி இருக்கேன்.என்னமோ!எனக்கு உன்கூட எவ்ளோ நேரம் இருந்தாலும் போதமாட்டீங்குது."
"என் ப்ரண்ட்ஸ் பொண்டாட்டிங்க எல்லாம்,எங்க இருக்க,என்ன பண்ற ,எப்போ வருவன்னு, எப்படி நச்சரிப்பாங்க தெரியுமா,என்னைக்கும் நீ அப்படி இருந்தது இல்லை,"
"நான் வருஷ கணக்கா தனியா இருந்த பொழுதும் ஒருநொடி கூட என்னை சந்தேகப்பட்டது இல்லை.நிறைவா தாண்டி என் வாழ்க்கை போச்சு.ஆனால் உன் அக்கா விஷயத்தை, ஏன்? எங்கிட்ட சொல்லல,எனக்கு எவ்ளோ கோவம் தெரியுமா"இப்போதும் அவன் கோவமாய் கேட்க
"அதுங்க நான் மனசுக்கு பிடிச்சவங்களோட மனநிறைவான வாழ்க்கை வாழுறப்போ என் அக்காவும் அப்படி வாழணும்னு ஆசை.ருத்ரா மாமாவை அவளுக்கு பிடிக்கும் ஆனால் மாமாங்களுக்காக அதை சொல்லவே இல்ல"
"அதனால, எப்போ அவள் கல்யாண விஷயம் பேசுறாங்களோ!தைரியமா நான் பேசிடனும்னு, வருஷக்கணக்கா மனசுல உருப்போட்டு வச்சிருந்தேன்.உண்மை தான் உங்க கிட்ட சொல்லிருக்கலாம்.தப்பு தான்....என்னமோ அந்த நேரம். நான் ஒரு நிலைல இல்லை."
"கவனம் எல்லாம் அக்கா கல்யாணம் மட்டும்னு வச்சிருந்துட்டேன்.சாரிங்க" கசங்கிய முகத்தோடு அவள் சொல்ல,அவனுக்கு தாங்குமா என்ன,
"விடுடி" என்றவன். "ஆனாலும் நான் சாப்பிட்டனா, இல்லையான்னு கூட கவனிக்கலை தானே" என்று குறை சொல்ல.....
"ஹோ! அதுக்கு தான் இப்படி மூஞ்சி தூக்கி வச்சிட்டு இருந்திங்களாக்கும்,"என்று நொடிக்கும் பாவனையோடு சொன்னவள்.
"அன்னைக்கு நைட். பாரு.... மாமா என்னை தப்பா நினைச்சிட்டாங்கன்னு புலம்புறா, ஈசன் வேற தூக்கத்துக்கு சிணுங்குறான்,நீங்க போனே பேசிட்டு இருக்கீங்க,"
"சஞ்சய் சொல்றான்,இருடா உங்க அம்மா அப்பாவை சைட்டடிச்சி முடிச்சிட்டு வந்து தூங்க வைப்பாங்கன்னு,அதுக்கு சதா அண்ணாவும்,சரணும் சிரிக்கிறாங்க,அதான் சுகுணா அத்தையை போட சொன்னேன்.நீங்க சின்ன பிள்ளையா கோச்சிக்கிட்டு சாப்பிடாமல் வருவீங்களா" என்றதும்.
"போடி ,காலைல சாப்பிட சொல்லவே இல்லை." அவன் ஊடலாய் சொல்ல, போலியாய் முறைத்தவள்."நம்ம வீட்ல தீடீர்னு பங்க்சன்.உங்களை கூட்டு போய் எல்லாம் வாங்க நான் நினச்சா,நீங்க பாட்டுக்கு கார் எடுத்துட்டு போயிட்டீங்க,உங்க தம்பி வண்டியெடுத்துட்டு போயாச்சு."
"இந்த ஊருல சஞ்சய்க்கு எதுவும் தெரியாது ,நான் ஒருத்தி எத்தனை பண்ணுவேன்,உங்க பொண்டாட்டி நல்ல புடவை கட்டி,நகை போட்டால் மட்டும் உங்களுக்கு கவுரவம் வந்துடாது."
"உங்க வீட்டுக்கு வந்தவங்களுக்கு,மனசையும்,வயிறையும் நிறைச்சு அனுப்பனும்."அவள் சொல்ல,"நான் வேற மாதிரி நினைச்சிட்டேன்டி" என்று அவளின் தலையோடு தலை முட்டி சொன்னவன்.
"நீ எப்பவும் என்னை ரொம்ப ஸ்பெசலாவே கவனிசிட்டியா, நீ கவனிக்கலைன்னதும் லோன்லியா ஆகிருச்சு."என்றவனுக்கு அடுத்த குற்ற சாட்டை சொல்லவே வாய் வரவில்லை.
அவள் சொன்னாள் .......... "அண்ணைக்கு நான் சாப்பிடவே இல்லைங்க,சாப்ட்ருந்தா உங்க நியாபகம் வந்திருக்கும்.எப்பவும் எத்தனை பிள்ளை வந்தாலும் நீங்க எனக்கு ஸ்பெஷல் தான்.உங்களுக்கும் அப்படி தான்னு எனக்கு தெரியும்,"
"உங்க பொண்டாட்டிகிட்ட பணம் கேட்க உங்களுக்கு என்ன கவுரவ குறைச்சல்.அப்படி நான் நெனச்சா எப்படி உங்களோட சம்பாத்தியத்துல வாழுவேன்."அவள் முகம் சுணங்கி பேச,
"ஹே,வணி...நீ எப்படிடி அப்படி நினைக்கலாம்.என்னோட எல்லாம் ,ஏன் நானே உன்னுடையவன் தானே!நான் சம்பாதிக்கணுமுன்னு நினைச்சதே! உன்னை நல்லா வச்சிக்கதானேடி,நீ ஏதோ பிளான் வச்சிருக்கேன்னு சொல்லவும், தான் யோசிச்சேன்." அவன் பரிதவிப்பாய் சொல்ல,
"உங்களுக்கு எப்படியோ! அப்படி தான் எனக்கும்.உங்களை தாண்டி தான் யாரா இருந்தாலும் புரியுதா," அவள் அழுத்தமாய் கேட்க ,"ம்ம்ம்" என்று தலையாட்டி இருந்தான்.
"சரி அடுத்ததுக்கு வருவோம்,ருத்ரா மாமா சொன்னதுக்காக இல்லை. பார்கவிக்காக தான் உங்க பணத்தை செலவு பண்ணி நிச்சயம் பண்ணீங்கன்னு ,எனக்கு நல்லாவே தெரியும்.அதே நேரம் நகை,டிரஸ் வாங்க எல்லாம் பணம் கொடுத்துருக்கீங்க"
"என்ன வாங்குனேன் ,எவ்வளவு செலவு பண்ணேன்னு சொல்ல வேண்டாமா, போன் பண்ணா அதை பத்தி பேசாத சொல்றிங்க ,கல்யாண வீட்ல அத்தனை பேர் நடுவுல உட்கார்ந்துட்டு வேற என்ன பேசுவேன் நான்."
"பாருவுக்கும்,சரணுக்கும் போட்டியா,என்னையும் குசு குசுன்னு பேச சொல்றிங்களா அப்படி பேசுனா மட்டும் பதில் சொல்லிடுவீங்களா,சரி எனக்கு தான் வரலையே நீங்களாவது பேசலாம் இல்லை."
"எப்பவும் ஒட்டிகிட்டே இருக்கணும்.கொஞ்சம் அப்படி இப்படின்னு நகர்ந்தாலே உங்க பையன் ஊரை கூட்டுறான்,சரி நேர்ல பேசிப்போம்னு அமைதியா இருந்தேன்,அப்பவும் சமையல் கார அக்காகிட்ட சாப்பிட்டீங்களா இல்லையான்னு கேட்டுட்டு தான் இருந்தேன்."
"சஞ்சய் ஒருத்தனே பத்திரிகை வைக்க போறான்,மத்த வேலை அத்தனை இருக்கு பெரியவங்க ரெண்டு பேரும்,எவ்ளோ செய்வாங்க,இது எல்லாம் ஆள் வச்சி செய்யறது இல்லை.வீட்டாளுங்க தான் செய்யணும்.அதை எல்லாம் புரிஞ்சிக்காமல் ஆடி அசைஞ்சி முன்னாடி நாள் சாயங்காலம் வந்துட்டு போனை ஓடைக்கிறீங்க,"
"பையனை சமாளிக்க முடியாமல் கொண்டு வந்து கொடுத்தால்,விளக்கி வைக்கிறேன் சொல்றிங்க, உங்க ரெண்டு பேரையும் விளக்கி வச்சிட்டு, நான் எங்கே போக" அவனின் சட்டையை பிடித்து அவள் உலுக்க,
அவன் பக்கம் இருந்து பார்க்கும் பொழுது நியமாக தெரிந்தது எல்லாம் இப்போது அநியாயமாக தெரிய,பதிலே இல்லை அவனிடம்............
"எல்லார் முன்னாடியும் வச்சு சண்டை போடவேண்டம்னு அமைதியா வந்தா, ஸ்ஸ் சொல்றிங்க," என்று சலுகையாய் சிணுங்க,
"அது வணி அம்மாகிட்ட நீ நல்லா பேசமாட்டீங்குறன்னு அம்மா ரொம்ப பீல் பண்ணிட்டாங்கடி, அதுல ஒரு மாதிரி ஆகிருச்சு,"அவன் இழுவையாய் சொல்ல
"ஏங்க? நீங்க வேற...நீங்க தண்ணி மாதிரி செலவு பண்ண பணத்துக்கு, எங்கே என்னை திட்ட போறாங்களோன்னு, நானே பயந்து போய் கிடந்தேன். அப்புறம் எங்கே பேசுறதாம்," பயந்தபடி சொல்லியவள்.
"ருத்ரா மாமாட்ட உங்களை கேட்காமல் சொத்து கேட்டது தப்புன்னு நீங்க நினைக்கலாம்,உங்க பொண்டாட்டியா மட்டும் இருந்திருந்த்தால்,உங்ககிட்ட சொல்லாமல் அங்க கேட்டது தப்பு தான்,"
"ஆனால் நான் மணி,சரஸ்வதியோட பொண்ணா தான் அங்கே பேசினேன்.எங்களுக்கு இவ்ளோ செஞ்ச எங்க மாமாங்களுக்கு எங்களால் முடிஞ்சதை செய்யணுமுன்னு, நானும் பாருவும் அடிக்கடி பேசிப்போம்.என்ன அந்த நேரம் கேட்க நினைக்கலை,"
"மாமா கேட்க சொன்னாங்க,கேட்டுட்டேன்....ருத்ரா மாமா, அக்காவை கல்யாணம் பண்ணலைனாலும்,நிச்சயமா கேட்டிருப்போம்.எங்க மாமாங்க வேண்டாம் சொன்னாலும். அவங்க கிட்ட கொடுத்திருப்போம்."என்றவள்.
"ஏங்க எனக்காக ஒன்னு பண்ணுவிங்களா,"அவள் ஆசையாய் கேட்க,
"இத்தனை வருஷம் கழிச்சு இப்போ தான் கேட்க தோணுச்சா,கேளுடி என்ன வேணும்.அவன் ஆர்ப்பரிக்க
"நான் கேக்க, நீங்க எங்க விடுறிங்க,தேவைக்கு அதிகமாவே எல்லாம் செஞ்சா நான் என்ன கேட்பேன்" என்றவள்.
"உங்களால நம்ம சொத்து முழுசையும் வாங்க முடியுமா,முடிஞ்சா வாங்கிடுங்களேன்.மாமாங்க அந்த ஊருல பழையபடி இருக்கணும்.தாத்தா பாட்டி பேர் நிலைச்சு நிற்கணும்."அவள் கண்களில் கனவோடு சொல்ல......
"கொஞ்சம் கஷ்டம் தான், ஆனால் நிச்சயமா வாங்கிடலாம்டி," அவன் நம்பிக்கையாய் சொல்ல,சிவண்யா முகத்தில் மத்தாப்பு புன்னகையோடு, அவனை இருக அணைத்து படுத்து கொள்ள,சர்வவின் மனம் நிறைந்திருந்தது.......
அவளின் காதல்,அவனை விட்டு எங்கேயும் செல்லவில்லை .குடும்ப பொறுப்பு பிள்ளைகள் என கடமை வரிசை கட்டி நிற்க, அதற்கு தானே முன்னுரிமை,கணவன் மனைவி என்றாலும், என்னேரமும் கொஞ்சிக்கொண்டும். உரசிக்கொண்டும் சுத்தமுடியாதே .
அவர்களுக்குள் எத்தனை புரிதல்,காதல்,சகிப்புத்தன்மை,விட்டுக்கொடுக்கும் குணம் இருந்தாலும், அவ்வப்பொழுது சிறு சிறு சண்டைகள்,மனஸ்தாபங்கள் எழ தான் செய்யும்,
அனைத்தையும் கடந்து வந்து மகிழ்ச்சியாய் வாழ்வது தானே இந்த பந்தத்தின் மகிமையே. என்ற நிதர்சனம் புரிந்திருக்க,
இனி எதுவாக இருந்த்தாலும்.அவளிடம் மனம் விட்டு பேசி ,அவளையும் பேச விட்டு கேட்க வேண்டும் என்ற முடிவோடு,மனைவியின் இருப்பை அனுபவித்தபடி,கண் மூடி இருந்தான்.சர்வேஸ்வரன்.
சில மணிநேரம் கழித்து வந்த மகன் இருவரையும் கலைத்து விட்டிருக்க,அவனை உறங்க வைத்து விட்டு, சிவண்யா மதியத்திற்கு என்னவென்று பார்ப்பதற்கு வெளியில் வரவும்.அவளின் கை பிடித்தவன்.
"இனி அம்மா உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. அம்மா கிட்ட நல்லா பேசுடி." அவன் வேண்டுகோளாக கேட்க,கணவனிடம் ராசியாகி விட்ட மகிழ்ச்சியோடு,பிள்ளை வரவும் சேர்ந்து கொள்ள ,நல்ல மனநிலையில் புத்துணர்ச்சியாக இருந்தாள் சிவண்யா.
அவளின் பழைய புன்னகை முகம் மீண்டிருந்தது ."அத்தைகிட்ட மட்டும் இல்லை சதா அண்ணா கிட்டயும் பேசுறேன்." என்று சொல்லி வந்தவள் .சமையலறை வர பாப்பு என்று வால் பிடித்து வந்தான் சதா ,
"சொல்லுங்கண்ணா" அவள் உற்சாகமாய் கேட்க,அவளின் வலது கையை எடுத்து தனது இருக்கரங்களுக்குள் பொத்தி வைத்து கொண்டவன்."சாரி பாப்பு,ஏதோ ஒரு கோவம்,வீம்பு உன்னை தள்ளி வச்சி என்னென்னமோ பேசிட்டேன்.வேணுமுன்னா அடிசிக்கோயேன்." என்று அவளின் கரத்தை,இழுத்து தனது கன்னத்தில் அறைய முனைய,
"ம்ம்ச் அண்ணா விடுங்க,நானும் சாரி, நீங்க பேசலைனாலும் நானா வந்து பேசிருக்கணும்,எங்கே நான் வந்து பேசி,அத்தை மாதிரி ஏதும் ஹார்ஷா சொல்லிடு வீங்களோன்ற பயத்துல, பேசாம விட்டுடேன்."அவளும் சோகமாய் சொல்ல
"சரி விடு போனது போகட்டும்.இன்னைல இருந்து புதுசா தொடங்குறோம்.எந்த பிரச்னை வந்தாலும். அப்போ அப்போ பேசி தீர்த்துக்குறோம். ஓகே" என்றவன்,
"இந்தா" என்று பெரிய ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டை அவள் கைகளில் திணிக்க
"ஹை அண்ணானா அண்ணா தான்."என்று ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சியோடு சொன்னவள்.அதிலிருந்து இரண்டை எடுத்து சதா வாயில் ஒன்றும்,தன் வாயில் ஒன்றும் போட்டு கொண்டு,அங்கே இருந்த கணவனை, மிதப்பாய் பார்த்து உதடு சுளித்து சமையலறை செல்ல,
'போடி போ ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடுற வாயை கடிச்சி வைக்கிறேன்............தங்கம், வைரம்,காஸ்டலியான ட்ரஸ்ன்னு எவ்ளோ வாங்கி கொடுத்துருப்பேன். அப்போல்லாம் இந்த எக்ஸ்சிபிரஸனை காணோம்.நூறு ரூபாய் மிட்டாய் பாக்கெட்டை பார்த்ததும். வாயை பிளக்குறா குட்டச்சி,'என்று உள்ளுக்குள் செல்லமாய் சிலிர்த்து கொண்டான்.சர்வேஸ்வரன்.
அனைவரும் வெகு நாட்கள் கழித்து தங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால்.அசைவம் வாங்கி வர செய்து வேணி சமைத்து கொண்டிருக்க.அவரிடம் சென்று கரண்டியை வாங்கிய சிவா
"அத்தை உங்களுக்கு தான் முடியறதில்லைல. நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் செய்றேன்." என்று உரிமையாய் சொல்ல,கண்களில் கண்ணீரோடு மன்னிப்பு யாசிக்கும் குரலில்,"குட்டி" என்று கை பிடித்து கொண்டார் வேணி,
அனைத்தும் முடிந்து மீன் பொறித்து கொண்டிருந்த வேளையில் எழுந்து வந்த மகன்,ஐஸ்கிரீமோடு அமர்ந்திருக்க அவனிடம் சதா கெஞ்சியபடி இருந்தவன்.அவன் கொடுக்கவில்லை என்றதும்.
பொரித்து வைத்திருந்த மீன் துண்டை காட்டி,"வெரி டேஸ்டி ,யம்மி உனக்கு கொடுப்பேனா" என்பது போல வெறுப்பேற்றி உண்டு கொண்டிருக்க,
"எனக்கு எங்கம்மா ஊட்டிவிடுவாங்க,அவங்க ஊட்டுனா ரொம்ப ரொம்ப யம்மியா இருக்கும்." ஈசன் பெருமையாய் சொல்ல............
"டேய் நீ இப்போ வந்தவன்.உங்கம்மா உனக்கு முன்னாடியே எனக்கு ஊட்டிவிட்ருக்கா,"சதா கெத்தாய் சொல்ல,
"சித்தா பொய் சொல்ற ,அம்மா எனக்கு மட்டும் தான் ஊட்டுவாங்க,"ஈசன் வாதாட,
"யார் நான் பொய்ச்சொல்றேனா,வாடா கேட்போம்" என்று சிவாவிடம் கூட்டி வந்தவன்.
"பாப்பு இவன் வர்ரதுக்கு முன்னாடி, நீ எனக்கு ஊட்டி விடுவதானே,நான் தானே பர்ஸ்ட்" என்க,சமையலில் கவனம் வைத்திருந்தவள்.மகனை கவனிக்காமல் ஆமா என்று விட,
மகன் "நோ நோ நான் தான் பர்ஸ்ட்" என்றவன் ,அழுகவே ஆரம்பித்து விட்டான்.சிவாவின் சமாதானம் அங்கே எடுபடவில்லை.கடைசியில் சர்வா" நான் இதுவரைக்கும் யாருக்குமே ஊட்டலை.ஈசனுக்கு தான் பர்ஸ்ட்."என்று சொல்லி ஊட்டிவிட,
'அட பிராடு,எனக்கு எத்தனை தரம் ஊட்டியிருக்க' என்று அதிர்ந்த சிவாவும். மகன் சமாதானம் ஆனால் சரி என்று அமைதியாயிருக்க,
"பார்த்திங்களா சித்தா நான் தான் பர்ஸ்ட்."என்ற ஈசனும் தனது குருவி வாய் திறந்து தகப்பனை ஊட்ட சொல்ல,
சர்வாவும் கதை பேசி ஊட்டியிருந்தான்.இரவும் ஈசன் அவன் அறைக்கு செல்லாமல் தாய் தந்தைக்கு நடுவில்,படுத்து கதை கேட்டபடி உறங்கியிருந்தான்.
வருவாள் ..............
எபிலாக் மட்டும் இருக்கு,முடிஞ்ச வரை சீக்கிரம் கொடுத்துட்றேன்.லைக்ஸ் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்..
ஏதும் விட்டு போயிருந்தா கமெண்ட் பண்ணுங்க விளக்கம் சொல்லிடறேன்,கதையின் போக்கு பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையோடு ..... நான் ...............