Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா‌ - 3

Advertisement

Viswadevi

Active member
Member
Thanks for your lovely comments ? and support friends ♥️.
1745

அத்தியாயம் - 3

வழக்கமாக நந்தன் வீடு திரும்பும் நேரமான ஒன்பது மணி தாண்டியும், இன்னும் வராமல் இருப்பதோடு, எந்த தகவலும் கொடுக்காமல் இருக்க… ஜானகி பதற்றத்தோடு இருந்தாள்.

ஜானகியைப் பார்த்த அவளது மூத்த மருமகள் யாமினி, " அத்தை… நீங்க இப்படி உள்ளேயும், வெளியேயும் ஏன் நடந்துட்டே இருக்கிறீங்க… உங்களுக்கு முடியாமல் போகப் போகிறது...நந்து வந்தால், நான் பரிமாறுறேன். நீங்க போய் படுங்க."

"இல்லடா… எப்படியும் எனக்கு தூக்கம் வராது... நானே பாத்துக்கிறேன். கிருஷ்ணா சாப்பிட்டு தானே வருவான்.நீ போய் படு… நானும் இதோ, கதை புக் தான் படிக்க போகிறேன்." என ஜானகி கூற…

கதைப் படிக்கப் போகிறேன் எனவும்,யாமினியும் "சரி "என தலையாட்டி விட்டு படுக்கச் சென்று விட்டாள். அத்தை கதைப் படிக்க ஆரம்பித்து விட்டார் என்றால் அதிலே மூழ்கிப் போயிடுவார், என்பதை அறிந்தவளாயிற்றே, சிரித்துக் கொண்டே தனது அறைக்குள் சென்றாள்.

அதற்குப் பிறகு ரொம்ப நேரம் தாமதமாக்காமல், நந்தன் களைப்புடன் வந்தான்.

"ஏன் டா நந்தா இவ்வளவு லேட்? ஃபோனும் வேற பண்ணலை" என வினவ

அப்போது தான்,தூங்காமல் அங்கிருந்த தன் தாயைப் பார்த்தவன், டென்ஷனாக, " ஏன் மா, போய் படுக்க வேண்டியது தானே... ஏன் இன்னும் தூங்காமல் உட்கார்ந்து இருக்க?"

"டேய் நந்து நான் என்ன கேட்டேன் ‌நீ என்ன சொல்லுற… கேட்கிற எந்த கேள்விக்கும் பதில் சொல்லிடாத… உனக்கு சாப்பாடு எடுத்து வைக்க தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்."

"நானே எடுத்துப் போட்டு சாப்பிட மாட்டேனா? ரெண்டு மாசமா, நீ தான் என்னை கவனிச்சுக் கிட்டப் பாரு…" என்றவன் தாயின் கையில் உள்ள புத்தகத்தைப் பார்த்தான்.

" அதானேப் பார்த்தேன். உனக்கு கதைப் படிக்கணும். அதுவும் உன்னோட ஃபேவரைட் எழுத்தாளர் ரமணிசந்திரன் கதைப் படிச்சால் உலகத்தையே மறந்துடுவ… ரூம்ல படிச்சா அப்பா திட்டுவாரு, என்று இங்கு உட்கார்ந்து படிச்சிட்டு, எனக்காக உட்கார்ந்து இருக்கேன் என்று சொல்றீயாமா? " என்று தாயை கிண்டலடித்துக் கொண்டே வாஷ்பேஷனில் முகம் கழுவிக் கொண்டு வந்தவன், சோஃபாவில் அமர்ந்து இருந்த ஜானகியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

"டேய் ஓவரா பேசாத… நான் உனக்கு சோறு போட்டு வளர்க்காமல், உன் பொண்டாட்டி தான் வளர்த்தாளா… இந்த
இரண்டு மாசமா தான் அவ செய்யட்டும் என்று நான் பேசாமல் அமைதியாகப் போய் படுத்தேன். ஒழுங்கா எதுவும் பேசாமல் வந்து சாப்பிடு… " என்று கோபமாக பேசியவளின் கைகள், அதற்கு மாறாக அவனது தலையை மென்மையாக வருடியது.

"அம்மா...அவளப் பத்தி பேசாதீங்க டென்ஷன் ஆகிடுவேன்."

"ஏன்டா அவக் குழந்தைடா… அவக் கிட்ட ஏன் கோபப்படுற…"

"என்னது… உங்க மருமகள் குழந்தையா? அவ என்ன வேலை செய்து இருக்கா தெரியுமா? நெக்ஸ்ட் வீக் அவளுக்கு பர்த்டேவாம்,அதுக்கு பர்ச்சேஸ் பண்றதுக்கு நம்ம கடைக்கு வரல… வேற மாலுக்கு போயிருக்கா... இதுல வேற அரவிந்த் கிட்ட நான் நல்ல கடையில வாங்கணும் என்று நினைக்கிறேன். உனக்கு என்ன செலவு பண்ண மனசு இல்லையா என்று சண்டை போட்டுக் கூட்டிட்டு போயிருக்கா …

அவனும்,இன்னைக்கு கடைய பாத்துக்கோங்க மாப்பிள்ளை. என் தங்கச்சியோட பர்த்டே ஷாப்பிங், நல்ல கடையில பண்ணப் போறோம் என்று, என்னப் பார்த்து கிண்டல் அடிச்சிட்டு போயிருக்கான்."

" டேய்... எப்பவும் நம்ம கடையில தான் வாங்குவா… அது நம்ம கடை மட்டும் இல்லை, அவளோட அப்பாவோட கடையும் தான்... இன்னைக்கு வேற இடத்துல போய் வாங்குறானா ஏதாவது ரீசன் இருக்கும் .நீ மட்டும் என்னனு தெரியாம கோபப்படாத, கொஞ்சம் கோபத்தைக் குறைச்சுக்கடா…"

"நீங்க எதுவா இருந்தாலும், உங்க மருமகளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க... நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு தப்பா தான் தெரியும். சரி விடுங்க எஸ்.எஸ் சில்க் போய் கணக்கு பார்த்து விட்டு வந்தது எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. அதான் லேட். டென்ஷனாக இருந்ததுல ஃபோன் பண்ண மறந்துட்டேன் சாரி மா…

சரி மா தூக்கம் வருது.எனக்கு டிபன் வைங்க‌. சாப்பிட்டு படுக்கப் போறேன்."

"சரிடா இதையே நினைச்சிட்டு அவக் கிட்ட சண்டை போடக் கூடாது." என மகனுக்கு அட்வைஸ் பண்ணிக் கொண்டே சாப்பாடு எடுத்து வைக்க…

அவனோ, ஒன்றும் கூறாமல் சாப்பிடுவதிலே கவனம் செலுத்தினான்.

"என்னடா… நான் பேசிட்டே இருக்கிறேன். நீ ஒன்றும் சொல்லாமல்
இருக்கிற…"

" சரி விடுமா… என ஜானகியின் பேச்சை நிறுத்த…"

" டேய் நந்து… ஹரிணியிடம் ஃபோன் பேசுறியா? இல்லையா?"

"என்ன மா… உனக்கே இது டூ மச்சா தெரியலையா? நேற்று தானே போனா…"

"அடேய், ஏன்டா இப்படி இருக்கிற... இந்த காலத்து பிள்ளைங்க எப்படி இருக்காங்க… காலைல ஒரு தடவை… மதியம் ஒரு தடவை… அப்புறம் இரவு என்று ஃபோன்லேயே குடும்பம் நடத்துறாங்க… நீ என்னவென்றால் இப்படி இருக்கிற… ஃபோன் பண்ணுடா… அப்புறம் என் மருமகள் வந்து என்ன? இப்படி பையனை வளத்து வச்சிருக்கீங்க? என்று சண்டைக்கு வரப்போறா…"

ஜானகி பேசியதற்கு ஒன்றும் பதில் கூறாமல் சாப்பிட்டு முடித்ததும், கை கழுவிட்டு, "மா… குட்நைட்."என்றுக் கூறி விட்டு படி ஏறினான்.

"டேய் நந்து என்னடா எதுவும் சொல்லலாம் போற…"

"ஃபோன் எல்லாம் பேசமாட்டேன்… நேர்ல பார்க்கும் போது பேசிக்கலாம். இதைப் பத்தி யோசிக்காமல் படுமா… மீதி கதையை நாளைக்கு படிக்கலாம்.தூங்கு மா…"

தன்னை எதுவும் பேச விடாமல், படபடவென பேசிவிட்டு செல்லும் மகனின் முதுகை முறைக்கத் தான் முடிந்தது, ஜானகியால்… இவனை என்ன தான் செய்வது… நாளைக்கு முதல் வேலையாக, வாகினிக் கிட்ட பேசணும். அவ சொன்னால் என்று, அவளுக்காக என்றுப் பார்த்து ஹரிணி வாழ்க்கையில் விளையாடி விட்டோமோ… இவனுக்கு உண்மையிலே அவளைப் பிடிக்கவில்லையா… கடவுளே! என் குழந்தைகளோட வாழ்க்கை நல்லா இருக்கணும், என்று கடவுளுக்கு ஒரு அவசர கோரிக்கையை வைத்து விட்டு உறங்க சென்றாள் ஜானகி.

டயர்டா இருக்கு தூங்கப் போகிறேன் என்ற நந்தன் தூங்காமல் பால்கனியில் சென்று வானத்தில் உள்ள நட்சந்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நட்சத்திரங்களைப் பார்க்கும் போதெல்லாம் அவளது கன்னத்தில் அன்று ஜொலித்தது தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இப்போதெல்லாம் அவளை அப்படிப் பார்ப்பதில்லை.

அங்கிருந்த சந்தனமுல்லை கொடியிலிருந்து வந்த சுகந்தம் காற்றிலே மிதந்து, வந்து அவனை, அவளின் இனிய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.

'நந்தன் மேற்படிப்பை முடித்து விட்டு, வெளிநாட்டில் இருந்து அப்போது தான் இந்தியா திரும்பினான். கடைக்கும் அவ்வப்போது வந்து சென்றுக் கொண்டிருந்தான். தந்தையின் சொல்லிற்கிணங்க, பிசினஸ் விஷயமாக அந்த வீட்டிற்கு சென்றான்.

அந்த வீட்டிற்குள் நுழைந்தவன் அந்த பரந்து விரிந்த தோட்டத்தைப்‌, பார்த்தவன், ரசித்துக் கொண்டே நடந்ததான். உள்ளே சென்று கொண்டிருந்த போது போன் வரவும், பேசிக் கொண்டே வீட்டிற்குள் நுழையாமல் தோட்டத்தில் நின்றுப் பேசிக் கொண்டிருந்தான்.

வீட்டின் இடதுபுறம் சந்தன முல்லைக் கொடி படர்ந்து இருந்தது. அதன் சுகந்தத்தை சுவாசித்துக் கொண்டே ஃபோன் பேசியவன், அந்தப்பகுதிக்கு சென்றான்.

அங்கோ, முல்லை கொடியில் உள்ள பூக்களை உயர ஸ்டூலில் ஏறி பறித்துக் கொண்டிருந்த, அவள் திடீரென்று இவன் குரலைக் கேட்கவும், பதறி திரும்பியவள், தடுமாற…
அப்பொழுது தான் ஃபோன் பேசி முடித்தவன், அவளை கவனித்து, கீழே விழாமல், அவளை இரு கைகளில் தாங்கினான். அவள் கையில் பறித்து வைத்திருந்த பூக்கள் அனைத்தும் அவர்கள் இருவரின் மேலே விழுந்தது.

கையில் இருந்த அவளோ, அந்நிய ஆடவனின் அணைப்பில் இருப்பதை சங்கடமாக உணர்ந்தாள்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், அவன் யார் என தெரிந்துக் கொண்டாள்.

அதுவரை இருந்த சங்கடம் மறைந்து முகத்தில் நாணம் வந்து ஒட்டிக் கொண்டது.அவள் அணிந்திருந்த பிங்க் நிற ஆடைக்கு ஏற்ப, அவளது கன்னங்கள் ஜொலித்தது.

முன் மாலைப் பொழுதில் அவனுக்கு, அவளது முகத்தில் நட்சத்திரங்கள் ஜொலிப்பது போல் தெரிந்தது. முதன் முதலாக ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை உணர்ந்த அவன், திகைத்து நிற்க…

அவளோ, அவனை வெட்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்க...அவர்கள் இருவரையும் உள்ளே இருந்து வந்த குரல் அசைத்தது.

"டேய் குட்டிமா ...என்ன பண்ணிட்டு இருக்க… " என்ற சத்தத்தில் நந்தன் அவசரமாக அவளை கீழே இறக்க... அவளோ, "இதோ வரேன் மா." என்றவள், நந்தனைப் பார்த்து, " தேங்க்ஸ் நந்தன் சார்" என…

"ஹேய், உனக்கு என்னைத் தெரியுமா?"

"அப்போ, உங்களுக்கு என்ன தெரியாதா?" என்றவள், நந்தனை முறைத்துக் கொண்டே
உள்ளே ஓட...

அவள் உள்ளே ஓடியதைப் பார்த்தவன், "ஹேய் சின்ட்ரெல்லா, பை "என...

"என்னது சின்ட்ரெல்லாவா!" என்று ஓடிக் கொண்டிருந்தவள், நின்றுக் கேட்டாள்.

"ஆமாம், பிங் நிற இளவரசி, இனிமே நீ எனக்கு சின்ட்ரெல்லாதான்"

"ஓஹோ… உள்ள வரவில்லையா ?"என வினவ…

"இல்லை, அப்புறமா, வரேன் என்று அங்கிளிடம் சொல்லிடு…"

சரி என தலையாட்டியவள், தனது ஏமாற்றத்தை மனதிற்குள் மறைத்துக் கொண்டாள்.

இப்ப இருக்கும் மன நிலையில் அங்கிளிடம், பேச முடியாது என்பதால்,உள்ளே செல்லாமல் வந்த வேலையை விட்டு, விட்டு மீண்டும் வெளியே சென்று தனது காரில் ஏறி வீட்டுக்கு சென்று விட்டான்.

அதற்குப் பிறகு அவரது தந்தையிடம் சொன்ன வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று வாங்கிய திட்டு எல்லாம் வேற கதை… அவரு திட்டத் திட்ட இவனோ மந்திரித்து விட்ட கோழி என தலையாட்டிக் கொண்டே இருந்தான்.அதற்கும் இரண்டு திட்டு வாங்கினான். அதற்கு பிறகு ஜானகி வந்து தான் இவனை காப்பாற்றினார்.'

இப்பொழுது நினைத்துப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. ஆனால்,அவளின் முகத்தில் ஏற்பட்ட ஜொலிப்பை, இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. அதற்கு தானும் ஓரு காரணம் என்பதால், உள்ளுக்குள் மருகிக் கொண்டிருக்கின்றான்.

இதெல்லாம் தனது செல்ல தங்கைக்காகத்தான் செய்தேன்,என பெருமூச்சு விட்டவன். அவளது மகிழ்ச்சி, அவனுக்கு அவ்வளவு முக்கியம். தன் அண்ணன் திருமணம் முடிந்து, அவள் பட்ட கஷ்டங்களை, தன் திருமணத்தால், அவளுக்கு கொடுக்கக்கூடாது‍, என்று சில முடிவுகள் எடுத்தான். அதனால் அவளது இதய தேவதைப் படும் துன்பங்களை கண்டும், என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறான்.

கடவுள் தான் துணை புரிய வேண்டும் என்று, அவனும் கடவுளிடம் மனதார வேண்டிக் கொண்டு, படுத்து உறங்க முயன்றான்.

இரண்டு பேர், இவளுக்காக செய்தேன், இவளுக்காக செய்தேன் என்று, இவள் தலையை உருட்டுவதை அறியாமல், தன்னை சுற்றி உள்ள எதைப் பற்றியும் அறியாமல், நிம்மதியாக ஆழ்ந்த நித்திரையில் அமைதியான முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்தாள் வாகினி.

தன் தாயும், தன் அண்ணணும் மனதிற்குள் நினைத்ததை, இவளிடம் ஒரு நாள் தெரிவிக்கும் போது, அந்த அமைதியான முகம், எப்படி காளி அவதாரம் எடுக்கும் என்பதை பார்க்கத் தான் போகிறார்கள்.

தொடரும்…..
 
Top