Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா‌ - 5

Advertisement

Viswadevi

Active member
Member
Hi friends thanks for your lovely comments ❤️ and support ❣️

1836


அத்தியாயம் - 5
ஜானகி, ஆர்வமாக மருமகள் எடுத்து வந்திருந்த துணிமணிகளை, நந்தனிடம் காண்பித்துக் கொண்டிருந்தாள்.

"எப்படிப்பா இருக்கு மருமக எடுத்து வந்தது…" என வினவ…

"உங்க மருமக எடுத்து வந்ததை நீங்க தான் மெச்சிக்கணும்… " என்றவன் அந்த கோட்சூட்டை ஒரு கையால் எடுத்து சோஃபாவில் போட்டான்.
" நான் எல்லாம் பிராண்டட் ஷர்ட்ஸ் தான் யூஸ் பண்ணுவேன். இதெல்லாம் உங்க மருமகள் எங்க வாங்கினாளோ, எங்க விலைக் குறைவாகக் கிடைக்குமோ, அங்க வாங்கியிருப்பாள், இல்லையென்றால் நம்ம கடைக்கு வந்துருக்க மாட்டாளா." என…

"புரியாம பேசாத டா… அவ முதல் முறையாக நம்ம எல்லோருக்கும் வாங்குவதால் வேற இடத்தில் வாங்கியிருக்கிறாள். அதுவும் இல்லாமல் எதையும் பார்க்காமல், எதுவும் சொல்லக் கூடாது" என ஜானகி கண்டிப்புடன் கூறும் போதே வெளியே வந்த ஹரிணி, ஒரு நிமிடம் சிலையென சமைந்தவள்‍, பிறகு கலங்கும் கண்களை சமாளித்துக் கொண்டு, நந்தனைப் பார்த்து முறைத்தாள்.

ஜானகியிடம் திரும்பி, "அத்தை… நான் கிளம்புறேன். மாமாவிடம் சொல்லிடுங்கத்தை… நாளைக்கு எல்லோரும் நேரத்தோடு வந்திடுங்க." என்றவள், நந்தனை சட்டை செய்யாமல் வேகமாக வெளியேறினாள்…

நந்தனோ, தலையில் கைவைத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்துக் கொண்டான்.

"டேய் நந்தா… என்ன பேசுறோம் என்று பார்த்துப் பேச மாட்டியா?. பாருடா மருமகள் கோவித்துக் கொண்டு தனியா போறா… போய் அவளை முதல்ல கூப்பிடு நடந்து வேற போறா…" என.

"ஐயோ அம்மா… உங்க மருமக கோபமா தான் போறா… ஆனால் படு விவரம் … என் கார் கீயை எடுத்துட்டு தான் போறா…_

"அப்பாடா… பாவம் பிள்ளை நடந்துப் போறாளே என்று நினைச்சேன். பரவாயில்லை கார்ல தான் போறாளா… சரி விடு"என ஜானகிப் பேச்சை முடிக்க…

நந்தனோ ஜானகியைப் பார்த்து முறைத்தான்.

"ஏன்டா தம்பி என்னைப் பார்த்து இப்படி முறைக்கிற…"

"அம்மா… உங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல... அடுத்த தெருவில் உள்ள வீட்டுக்கு நடந்து போனா என்ன? உங்க மருமகளோட, உடம்பு குறைந்து போய்டுமா…"

" டேய் நீ ரொம்ப பேசுற… ஆசையா உன்னைப் பார்ப்பதற்காக இருந்தப் பிள்ளையை இப்படி அழ வச்சிட்டு பேசுவதைப் பாரு… போடா அங்கிட்டு, முதலில் அந்த வாகினி எழுந்து வரட்டும், அப்புறம் உன்னை கவனிச்சிக்குறேன். அந்தக் குட்டி கழுதை சொன்னால், என்று ஹரிணியை போய் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் பாரு, சரி தான் அவளோட தோழி அண்ணியாக வரணும் ஆசைப்படுறாளே… ஆன்ட்டி, ஆன்ட்டி என்று என்னையே சுத்தி வருவாளே... கல்யாணம் பண்ணி வெச்சா சந்தோசமா இருப்பா... எந்த பிரச்சினையும் வராது என்று நினைத்தேன். என்னைய சொல்லணும், எப்ப பாரு அவளை அழ வைக்கிறதே, உன் வேலையாப் போச்சு. கல்யாணத்திற்கு முன்பு எப்படி சிட்டுக்குருவி மாதிரி சுத்திக்கிட்டு இருப்பா… இப்ப என்னவென்றால் அந்த துள்ளல் எல்லாம் அடங்கி அமைதியாக இருக்கிறா… அதற்கு எல்லாம் நீ தான் காரணம்… ஆனால் உன்னை மட்டும் காரணம் சொல்லக் கூடாது. எல்லாம் அந்த வாகினியை சொல்லணும்." என்று தன் மகன்,மகள் இருவரையும் மருமகளுக்காக திட்டிக் கொண்டிருந்தார்.

வாகினியோ, தன் தாய் திட்டும் போதே எழுந்து விட்டாள். இருந்தாலும் ஓரமாக நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருந்தாள். தன்னால் தான் ஹரிணி கஷ்டப்படுகிறாளோ, என இப்பொழுது அவளுக்கு தோன்றியது … ஹரிணியின் மனம் தெரிந்து தான் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தாள். தன் அண்ணனக்கும் அவளைப் பிடிக்கும் அது நன்கு தெரிந்ததால் தான் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாள்.

ஆனால் கல்யாணத்திற்கு பிறகு அதில் பலத்த சந்தேகம் தான் வந்தது. ஹரிணியின் உற்சாகம் குறைந்து விட்டதோடு மட்டும் இல்லாமல், அண்ணன் எல்லோருக்கும் முன்பும் ஹரிணியை அவ்வப்போது மட்டம் தட்டுவதும், கிண்டல் செய்வதுமாக இருப்பதைப் பார்த்து அவளுக்கு பெரிய யோசனை… அதனால், அம்மா திட்டும் போது குறுக்கிடாமல் அமைதியாக இருந்தாள். சரி அண்ணன் என்ன தான் சொல்கிறார் என்று பார்ப்போம் என்று அமைதியாக இருக்க...

"என்ன மா… உன் மனசுல நினைச்சுகிட்டு இருக்க… எதுக்கு இதுல வாகினியை இழுக்குற… ஏற்கனவே உன் பெரிய மருமகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு, வாகினிய அழ வச்ச, இப்போது உன் சின்ன மருமகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு, வந்து என் தங்கச்சியை மறுபடியும் அழ வச்சீங்கன்னா பாருங்க…

எனக்கு மட்டும் உங்க மருமகளை அழ வைக்க வேண்டும் என்று ஆசையா... நம்ம கடைக்கு உரிமையா வராத கோபம் தான்…"

"டேய் கண்ணா… இன்றைக்கு நடந்ததை மட்டும் சொல்லவில்லை. எப்போதும் அவளை எல்லோருக்கும் முன்பும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருக்கிற… வாகினி சொன்னா என்று உங்க இருவருக்கும் கல்யாணம் செய்து வைத்தேன். அது தப்போ என யோசிக்க வைக்கிற…" என…

ஜானகி கூறியதைக் கேட்டு அதிர்ந்த நந்தன், " இது நம்ம வாகினிக்காக" என்று ஏதோ சொல்ல வர…

அதுவரை அமைதியாக நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள், விறுவிறுவென தன் அண்ணன் மற்றும் அன்னை முன் வந்தாள். "என்னது எனக்காக இரண்டு பேரும் பார்த்தீர்களா?" எனக் கேட்டு இருவரையும் உறுத்து விழித்தாள்.

அவளது ருத்ர தாண்டவத்தைப் பார்த்து வாயடைத்து நின்றனர்.

" உங்க இரண்டு பேருக்கும் அறிவு இருக்கா ?" என…

" என்னடா அம்மாவையும், அண்ணாவையும் இப்படி மரியாதை இல்லாமல் பேசலாமா?"என ஜானகி வினவ…

இருவருக்கும் முன்பு வந்து நின்றவள், இடுப்பில் கை வைத்து இருவரையும் முறைத்துக் கொண்டு என்னது, "எனக்காக ரெண்டு பேரும் பார்த்தீங்களா… அப்படி என்றால் நான் என்ன செல்ஃபீஷ்ஷா‌, எனக்காக ஹரிணியை அண்ணனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க … அவளுக்கு துளி விருப்பம் இல்லை என்றாலும் நான் இந்த ஏற்பாடு செய்வேனா… அந்த நம்பிக்கை உங்களுக்கு இல்லையா?. ஹரிணிக்கு அண்ணனை ரொம்ப புடிக்கும். இதோ‍,நிக்கிறானே உன் பையன் அவனுக்கும் அவளை ரொம்ப பிடிக்கும். அதனால தான் இரண்டு பேருக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்யலாம் என்று உங்கக் கிட்ட சொன்னேன் மா." என்றவள் மீண்டும் தொடர்ந்தாள்.

" ஆமாம், அம்மா சொன்னாங்க என்றால் ஒரு லாஜிக் இருக்கு... எனக்காக பார்த்தேன் நீ ஏன் சொன்னே ணா… " என தன் அண்ணனிடம் வினவினாள்.

"அது வந்துடா… ஏற்கனவே யாமினிக் கூடவும் நல்லா தானே பழகிட்டு இருந்த… கல்யாணத்துக்கு பிறகு அம்மாவும்‍, அப்பாவும் அவளைப் புகழ்ந்தால், நீ வருத்தமா அழுதுகிட்டு இருந்ததை பார்த்தேன். அப்புறம் யாமினியோட சண்டைக்கு போய்கிட்டு இருந்த அதனால தான்… ஹரிணியை கொஞ்சம் கிண்டல் பண்ணினேன். சின்னப்புள்ள மாதிரி இருக்க, அப்படி இருக்காதே அப்படின்னு எல்லாருக்கும் முன்பு சொன்னேன். அவளிடம் அடிக்கடி உன்னை பார்த்து அந்த மாதிரி இரு, என்று சொன்னேன். அப்போ தான் நீ அவளோட எப்பவும் போல பழகுவ… உங்க இரண்டு பேருடைய நட்பும் உடையாது‌. நான் அவளிடம் சண்டை போட்டாள். நீ அவளுக்கு சப்போர்ட்டா இருப்ப என்று நினைத்தேன்." என சின்ன குரலில் கூற…


" லூசா நீ… உனக்கு ஈசியா உன் காதல் நிறைவேறிடுச்சு … உன் காதலுக்காக, உன்னை முதலில் சுத்தவிட்டு இருக்கணும். நீ எதையும் வாய் திறந்து கேட்க மாட்டே... அதுக்காக உன் ஆசையை நிறைவேத்த, நான் முயற்சி செய்து கல்யாணத்தை நடத்தினேன். அதற்காக ஹரிணியை, நீ என்ன வேண்டும் என்றாலும் சொல்லுவியா… உன்னால் எங்க நட்பே தொலையப் பார்த்துச்சு… நான் தான் அவளை இறுக்கிப் பிடிச்சிட்டு இருக்கேன். எனக்கும், அண்ணிக்கும் என்ன பிரச்சனை என்று உங்க யாருக்குமே புரியலை. அண்ணியோட, என்னை கம்பேர் பண்ணது தான் எனக்கு பிடிக்கல… எங்க எல்லாருக்குமே அப்படித் தான் அடுத்தவங்களோட கம்பேர் பண்ணா பிடிக்காது. எங்களோட நிறை குறைகள் சொன்னால் ஏத்துக்குவோம். அதுவே அடுத்தவங்களோட கம்பேர் செய்தால் பிடிக்காது. அதனால தான் எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்தது. இருந்தாலும் நாங்க அதுக்கப்புறம் புரிஞ்சுகிட்டு பேசலையா… இது தெரியாமல், இப்ப நீயும் அதே தப்பு தானே செஞ்சிருக்க… என்ன வெச்சு ஹரிணியை கம்பேர் செய்து மட்டம் தட்டி இருக்கிற... அப்புறம் எப்படி ஃப்ரீயா இருப்ப அவ… கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி துடிப்பா இருப்பா… இப்போ, குழப்பத்திலே இருக்கிறா...

முதலில் அவளை லவ் பண்ணியே, அதை அவக் கிட்ட சொன்னீயா அண்ணா?"

"இல்லை "என மௌனமாக தலையாட்டினான்.

" அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு முன்னாடி பால்கனியில் இருந்து அவளை சைட் அடிப்பியே அதையாவது சொன்னீயா?"

மீண்டும், " இல்லை" என்று மௌனமாக தலையாட்டினான்.

" கல்யாணம் ஆனதுக்கு பிறகாவது அவளை பிடிக்கும் என்றாவது சொன்னியா?" என வினவ…

அதற்கும் ,"இல்லை " என தலையாட்டினான்.

"அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டா... பேசாமல் சன்னியாசம் வாங்கிட்டு எங்கேயாவது போக வேண்டியது தானே... "

"என்னடா குட்டி... அண்ணனை இப்படி பேசுற... "

"அண்ணன் என்பதால் தான் இவ்ளோ மரியாதையுடன் நான் பேசுறேன். இதுவே என் ஃப்ரெண்ட் வேற எவனாவது கல்யாணம் பண்ணி இப்படி டார்ச்சர் பண்ணினா, நான் சும்மா இருந்திருக்க மாட்டேன். ஹரிணி வீட்டிலேயும் அப்பாவிற்காக பார்த்துக் கொண்டு தான் அமைதியாக இருந்திருப்பார்கள். இல்லையென்றால் ஹரிணியோட அண்ணன் சும்மா இருக்க மாட்டார் தெரியுமா? ஹரிணி என்றால் அவ்வளவு உயிர் அரவிந்துக்கு, இப்படி அவ டல்லா இருக்கிறதுக்கு, சண்டைக்கு முதல் ஆளா வந்து இருப்பார்" என மேலும் மேலும் பொரிய…

நந்தனோ மனதிற்குள், 'என்னது அரவிந்த் சண்டைக்கு வருவானா? அவன் தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம். அரவிந்த் நீ ரொம்ப…. நல்லவன்டா... என் வாழ்க்கையில் நல்லா விளையாடிட்டு இருக்க மச்சான். இருடா உனக்கு இருக்கு.' என திட்டிக் கொண்டிருந்தான்.

தங்கையை சமாளிக்க முடியாமல் தாயை பரிதாபமாக பார்க்க...

மங்கையோ அது வரை கோபமாக இருந்ததவள், தன் மகனின் முகத்தை பார்த்து, "சரி விடு வாகினி…" என்றுக் கூறி நந்தனை காப்பாற்றினாள்.

அது வரை மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த யாமினியும், 'என்ன… நம்ம கொழுந்தனாருக்கு காதலா‌! 'என ஆச்சரியப் பட்டுக் கொண்டிருந்தாள்.

தொடரும்….
 
Top