Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா‌ - 7

Advertisement

Viswadevi

Active member
Member
Hi friends... Thanks for your lovely comments ? and support ❣️

1876

அத்தியாயம் - 7

இரவு உணவு அமைதியாக கழிந்தது. வாகினியும் யோசனையுடனே உணவருந்த, அவ்வில்லம் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது.

முதல் ஆளாக உணவு அருந்திய நந்தன்
வாகினியைத் தனியாக மொட்டை மாடிக்கு அழைத்து வந்து "அப்புறம் சொல்லு யாரு அந்த பாவப்பட்ட ஜீவன்." என.

நந்தனைப் பார்த்து முறைத்த வாகினி, "முதல்ல நீ சொல்லு… உனக்கும் பெரியண்ணிக்கும் என்ன பிரச்சனை? இவ்வளவு க்ளோஸா இருந்தவர்கள், இன்றைக்கு ஒழுங்கா பேசவே மாட்டேன்றீங்க… அதுவும் இல்லாமல் நீ தான் இந்த மேரேஜ் பண்ணி வச்சிருக்க… அப்புறம் ஏன் இங்க வந்த பிறகு அண்ணியோட உனக்கு சண்டை வந்தது." என வினவ…

"அது…" என நந்தன் தயங்க…

"நான் வேண்டும் என்றால் கீழே போய் விடவா? நான் இருப்பது தான் உன் சின்ன அண்ணனுக்கு பிரச்சனை போல…"என்று நந்தனை ஒரப் பார்வைப் பார்த்துக் கூற…

"ப்ச் நீ ஒன்னும் கீழே போக வேண்டாம் யாமு…" என

அவன் யாமு எனக் கூறவும், யாமினியின்
முகம் மலர்ந்தது. இருவரும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தனர்.

அப்போது தான் நந்தன் வெளிநாட்டிலிருந்து வந்து இருந்தான். வந்தவன் வழக்கம் போல தாத்தா, பாட்டி வீட்டிற்கு செல்ல…

அங்கு அவர்கள், இருவரும் நந்தனை செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தனர். அவனுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து ஊட்டி விட, எப்போதும் இவன் வந்தால் உடனே வந்து விடும் யாமினி, இவனோடு மல்லுக் கட்டுவாள்‌. எனக்கு ஊட்டி விடுங்க பாட்டி என போட்டி போடுவாள். இன்றோ அவளைக் காணவில்லை.

"அவள் வருகிறாளா?" எனப் பார்த்துக் கொண்டே இருந்த நந்தன், அவள் வரவில்லை எனவும், தன் தாத்தா, பாட்டியிடம், "எங்க யாமினியை காணோம்?" என வினவ‌…

"அது தெரியலப்பா, கொஞ்ச நாளாவே, அவ சரியாவே இல்லை‌. ஒழுங்கா பேசுறது கிடையாது. எப்ப பாரு ஏதாவது யோசிச்சிட்டே இருக்கா… என்ன என்று கேட்டாலும், ஒன்னும் சொல்ல மாட்டேங்குறா… அவ, அவங்க வீட்டிலே தான் இருக்கிறா...நீ போய் பாரு பா…" என அவன் பாட்டிக் கூற…

"சரி பாட்டி … நான் பார்த்துக் கொள்கிறேன்." என்றவன், தன் அத்தை வீட்டுக்கு வாங்கிய கிஃப்ட், சாக்லேட் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சென்றான்.

"யாமினி" என்று கத்திக் கொண்டு செல்ல, அவளைக் காணவில்லை. அங்கு, அவனது அத்தை மட்டுமே இருக்க…
அவரிடம் சென்றவன், " எப்படி இருக்கீங்க அத்தை… மாமா எங்க? நல்லா இருக்கிறாரா? யாமு எங்கத்தை ஆளைக் காணோம்." எனப் படபடவென பேச…

"கொஞ்சம் பொறுமையா கேளுடா ராசா... நான் சொல்றேன். நான் நல்லா இருக்கேன் . உங்க மாமா வயலுக்கு போயிருக்காரு, அவருக்கென்ன நல்லாத்தான் இருக்காரு… யாமினி தான் சரி இல்ல... அந்த ரூம்ல தான் இருக்கா… அவ செய்றது எதுவும் சரி கிடையாது. கிடைச்ச வேலைக்காவது ஒழுங்கா போனாளா, அதுவும் இல்லை. எனக்கு விருப்பம் இல்ல அப்படின்னு சொல்லிட்டா. அவங்க அப்பாவும் மக சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு இருக்காரு. நீ போய் பாரு, அந்த ரூம்ல தான் அடைந்து கிடக்கிறா. நான் உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்."

"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அத்தை. இப்ப தான் சாப்பிட்டேன். நான் போய் யாமுவைப் பார்த்திட்டு வரேன்." என்றவன் கட்டுக் கட்டாக இருந்த அந்த வீட்டில், சற்று உள்ளடங்கி இருந்த யாமினியின் அறைக்குச் சென்று கதவை தட்டினான். பதிலே வரவில்லை எனவும் மெல்ல கதவைத் திறந்து உள்ளே சென்றான். யாமினியோ,அவன் வந்ததைக் கூட உணராமல் அழுதுக் கொண்டிருந்தாள்.

மெல்ல அவள் அருகில் சென்று, "யாமு" என அழைக்க…

அப்பொழுது தான் அவனைக் கவனித்த யாழினி வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"என்ன யாமு உனக்கு பிரச்சனை?"

"என்ன பிரச்சினை? ஒன்றுமில்லையே…ஆமாம் நீ எப்ப வந்த?" என யாழினிக் கேட்க‌…

அவன் கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்தான்.

"ஏய் நீ அமைதியா இருக்கறத பார்த்தால் நான் கேட்ட எதுவும் வாங்கி வரலையா? நான் அப்புறம் உன் கிட்ட பேசவே மாட்டேன் நந்து." என யாமினி பேச்சை மாற்றினாள்...

அவன் அசையாது அப்படியே இருக்க, "சரிடா," என்றவள்,வெளியே எட்டிப் பார்த்து விட்டு, " ஆனால் இப்ப முடியாது. அப்புறமா சொல்றேன்…"என…

"சரி அப்ப நம்ம தோட்டத்துக்கு போகலாம் வா‌‌… முதலில் நீ கேட்ட மேக்கப் ஐட்டம், சாக்லேட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் வந்துப் பாரு." என்று வெளியே அழைத்து வந்தவன் அவன் வாங்கி வந்தவற்றை அவளிடம் கொடுத்தான்.

பிறகு தனது அத்தையை அழைத்தவன்,"அத்தை … நானும் யாமுவும் தோட்டத்திற்கு போகிறோம். தாத்தா, பாட்டிக்கிட்ட சொல்லிடுங்க… மாமாவை நாளைக்கு வந்து பார்க்கிறேன்." என…

"சரி ராசா... பாத்து பத்திரமா போயிட்டு வாங்க…" என்றவள் தனது மகளை பார்க்க… அவளோ சாக்லேட்டுகளை எடுத்து தின்னு கொண்டு இருந்தாள். அதை பார்த்தவர் அவள் தலையில் குட்டி, " உனக்காக என் அண்ணன் மகன் எவ்வளவு நேரமா காத்திருக்கான். போயிட்டு வந்து சாப்பிடு…" என்று அதையெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி வைத்தார்.
தன் தாயை முறைத்துக் கொண்டே நந்தனுடன் தோட்டத்திற்கு சென்றாள் யாமினி.

தோட்டத்திற்குச் சென்றவர்கள் சற்று நேரம் அமைதியாக இருக்க, யாமினி தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள். "என்ன நந்து… ஒன்னும் பேச மாட்டேங்கிற." என…

அவளைத் திரும்பி பார்த்த நந்தனோ, " நீ தான் சொல்லணும். நான் வருவேன் என்று நேற்றே கால் பண்ணி சொல்லிட்டேன். எப்பவும் நான் வருவது தெரிந்தால் எனக்காக பாட்டி வீட்டிலேயே காத்திருப்ப… இப்போ என்னவென்றால் நான் வந்த பிறகும் வரவில்லை. சரி தான் என்று நானே உன்னை தேடி வந்துப் பார்த்தால், நீ அழுது கொண்டிருக்கற... காரணம் கேட்டால் ஒன்றும் சொல்ல மாட்டேங்குற… உனக்கு என்ன பிரச்சினை…சொல்லு யாமு…"

நந்தன் இவ்வளவு பேசியும் யாமினி ஒன்றும் கூறாமல் அமைதியாக இருக்க...

"சரி விடு... உனக்கு பிடிக்கலைன்னா எதுவும் சொல்ல வேண்டாம். சரி வா நாம போகலாம் என முறுக்கிக் கொண்டு கிளம்ப… "

" நந்து சாரி டா… கோபப்படாதே நான் எல்லாம் சொல்லுறேன்.அது வந்து, வந்து "என இழுக்க…

"யாமு நான் உன் நண்பன் தானே. என் கிட்ட சொல்ல என்ன தயக்கம். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சொல்லு நான் பாத்துக்குறேன்." என…

"அது, வந்து நந்து போன வாரம் மாமாவும், மாமியும் வந்தாங்க."என யாமினி ஏதோ சொல்ல வர…

அதற்குள் நந்தன் குறுக்கிட்டு," என்ன அம்மா, அப்பா வந்தாங்களா?உன்னை எதுவும் சொன்னாங்களா? இல்லையே உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்களே… நீ தான் அவங்க செல்ல மருமகளாச்சே." என அவனே கேள்விக் கேட்டு அவனே பதிலும் சொல்ல…

அவனை முறைத்த யாமினி,"என்னை சொல்ல விடு நந்து."

"சரி சொல்லு" என்ற நந்தன் அமைதியாக இருக்க..‌.

யாமினி மீண்டும் தொடர்ந்தாள், "கிருஷ்ணாவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு, பொண்ணு பார்த்திட்டு இருக்கோம் என்று தாத்தா, பாட்டியிடம் சொல்லிட்டு இருந்தாங்க." என மெல்லிய குரலில் கூறினாள்.

"ஆமாம், அவனுக்கு வயசாகுது கல்யாணம் பண்ண வேண்டாமா? அதற்குப் பிறகு தானே ஐயாவுக்கு பண்ணுவாங்க." என தன் காலரைத் தூக்கி விட்டு கண் சிமிட்டினான்‌.

" கண்கள் கலங்க…நான் கிருஷ்ணாவை விரும்புகிறேன் "என்று ஒரு வழியாக போட்டு உடைத்தாள்.

கடகடவென்று சிரித்தத நந்தன், " லூசு... இதை நீயே உங்க மாமாக்கிட்டே சொல்ல வேண்டியது தானே…"

" உனக்கு மாமாவைப் பற்றி தெரியாதா? அவருக்கு பொதுவாக காதல் திருமணம் பிடிக்காது. அப்புறம் எப்படி நான் போய் கிருஷ்ணாவைப் பிடிக்கும் என்று சொல்லுவேன்."

"சரி விடு… தாத்தா, பாட்டி மூலம் காயை நகர்த்துவோம்‌. இதுக்கு போய் இவ்வளவு அழுகையா? சரி வா அப்படியே தோட்டத்தை சுற்றிப் பார்த்திட்டு போகலாம்." அந்த மாந்தோப்பை சுற்றினார்கள்‌.

அந்த தோப்பு இவர்களுக்காக, அவங்க தாத்தா வாங்கியது. இங்கு வந்தால் இவர்கள் இருவரும் முக்கால் வாசி நேரம், இந்த தோப்பில் தான் வாசம் செய்வார்கள். இவர்களுடைய சிறு வயது நினைவுச் சின்னம். இருவரும் எப்போ பார்த்தாலும், திருட்டுத்தனமாக மரம் ஏறி மாங்காய் பறிக்கிறார்களே, என்று அவர்கள் தாத்தா இந்த மாந்தோப்பை வாங்கியிருந்தார். அதற்குப் பிறகும் நந்தன் அடுத்தத் தோப்பில் உள்ள மாங்காவைத் தான் திருடுவான்."திருட்டு மாங்காவுக்கு ருசி அதிகம்" என்று இவளிடம் கூறுவான். அதெல்லாம் வேற லெவல் அட்டகாசம். அது நினைத்து சிரித்துக்கொண்டு, மாங்காய் பறித்து சாப்பிட்டு விட்டு இருவரும் வீட்டிற்குச் சென்றனர்.

தாத்தாவிடம்,"கிருஷ்ணாவுக்கு பொண்ணு பார்க்கிறீங்களா தாத்தா?"

",ஆமாம் பா… ஆனால் ஒன்றும் அமையவில்லை. அது தான் ஒரே கவலையா இருக்கு…"

"ஏன் தாத்தா...நம்ம யாமுவைப் பார்த்தா என்ன?"

தாத்தாவும், பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, " உங்க அத்தைக் கூட கேட்டா… நான் தான் உனக்கு யாமினியைப் பார்ப்போம்.அவனுக்கு வெளியே பார்க்கலாம். என்று நினைத்தேன்."

" ஐய்யோ! தாத்தா… நாங்க ரெண்டு பேரும் நல்ல ப்ரண்ட்ஸ். எனக்கு அவ தோழி மட்டும் தான். அவளை எல்லாம் என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் அந்த மாதிரி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அவளும் அப்படித் தான். நீங்க அண்ணனுக்கே பாருங்க." என்று முடிக்க…

" நல்ல வேலை கிருஷ்ணாவோட கல்யாணம் முடியவும் சொல்லாமல், இப்பவே சொன்னீயே, இல்லன்னா உங்க அத்தைய சமாளிக்க முடியாது. என் பொண்ணை அண்ணன் வீட்டில் தான் கட்டுவேன் என்று சொல்லிட்டு இருக்கா. நாம கும்பிடும் சாமி தான் காப்பாத்தியிருக்கு…" என்றப் பாட்டி அதற்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்தார்.

திருமணமும் கோலாகலமாக நடந்தது.' இருவரும் நடந்து முடிந்தவற்றைக் கூற…

"இன்ட்ரெஸ்டிங்…" என வாகினி வியக்க…

கிருஷ்ணனோ ஒன்றும் கூறாமல் புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். 'இதெல்லாம் பலமுறை யாமினி சொல்லக் கேட்டிருக்கிறான். அவனுடைய சொல்லப்படாத காதலையும், அவளிடம் சொல்லியிருக்கிறான்‌. அவள் அவனுக்கு எப்போதும் பிரியமான அத்தை மகள். அவளே மனைவியாக வந்ததில் அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. அவனுக்கு வெளியே பெண் பார்க்கும் போதே, யாமினியை மனதில் வைத்து ஒவ்வொரு வரனையும், ஏதாவது காரணம் சொல்லி போய் பார்க்காமலே தடுத்தான். தனது தம்பி வரவும் அவன் மூலம் யாமினியைத் திருமணம் செய்ய நினைத்திருக்க… நந்தனே ஏற்பாடு செய்யவும் ரொம்ப மகிழ்ச்சியில் திளைத்திருந்தான்.' அதை நினைத்துக் கொண்டே நகர்ந்து விட்டான்.

"சரிணா… கல்யாணம் வரைக்கும் ஓகே‌… அப்புறம் எப்படி உங்கள் இருவருக்கும் இடையில் சண்டை வந்தது." என வாகினி வினவ‌…

" அதுக்கு பிறகும் எங்க இருவருக்கும் இடையில் எந்த சண்டையும் இல்லை. வேலைக்கு போக மாட்டேன் என்று சொன்னதும் மட்டும் கொஞ்சம் வருத்தம். கிருஷ்ணாவும், விடுடா அவ விருப்பம் போல செய்யட்டும் என்று விட்டான். அப்புறம் அவ, அம்மாவோட சேர்ந்து வீட்டைப் பார்த்துக்க ஆரம்பிச்சா… தன்னோட திறமையை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தினாள். தினம் ஒரு பதார்த்தமாக, நம்ம பாட்டியின் கைவண்ணத்தை வெளிப்படுத்த...
அப்பாவும் சும்மா இராமல்,தனது தாயின் கைவண்ணம் அப்படியே உனக்கு இருக்குமா என்று அவ்வப்போது பாராட்டியவர், அதோடு உன்னையும் திட்டினார். " என நந்தன் கூற...

எல்லோரும் அப்ப நடந்ததை நினைத்து பார்த்தனர்.

"பாரு வாகினி, என் மருமகள் எப்படி நன்றாக சமைக்கிறாள். அவளைப் பார்த்து கத்துக்கோ." என்று ஒரு நாள் இரவு சாப்பிடும் போது சதாசிவம் கூற…

அழுதுக் கொண்டே பாதி சாப்பாட்டில் எழுந்தவள், சதாசிவம் கூப்பிடக் கூப்பிட தனது அறைக்குச் சென்று விட்டாள்.

கிருஷ்ணன், நந்தன், என ஆள்மாற்றி, ஆள் அவளது அறைக்குச் சென்று சாப்பிடக் கூப்பிட…

"வேண்டாம் பசிக்கவில்லை." என்று பிடிவாதமாக் கூறினாள்.

வழக்கம் போல அதை பெரிதாக நினைக்கவில்லை. சதாசிவமும், ஜானகியும்…. ஆனால் வாகினியோ அதை பெரிதாக எடுத்துக் கொண்டவள் கத்தியை வைத்து தற்கொலைக்கு முயன்றாள். இந்த விஷயத்தை நந்தன் கூற அவ்விடமே அமைதியாக இருந்தது.



தொடரும்…..
 
Top