Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா‌ - 8

Advertisement

Viswadevi

Active member
Member
Hi friends thanks for your lovely comments ? and support ❣️

1883

அத்தியாயம் - 8
"என்னது… தற்கொலைக்கு முயற்சி செய்தாளா?" என்று யாமினி அதிர்ந்து வாகினியைப் பார்க்க…
அதுவரை ஓரமாக நின்று வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தத கிருஷ்ணனும் ஓடி வந்து, " என்ன குட்டிமா? இதெல்லாம்…" என.

வாகினியோ, தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டாள். அவள் ஒன்றும் கூறாமல் இருக்கவே, நந்தனிடம் என்னவென்று விசாரிக்க…

" அது தான் முதல் தடவை, வாகினி சண்டை போட்டு விட்டு சாப்பிடமால் ரூம்ல போய் கதவை சாத்திக்கிட்டால்ல, அன்று இரவு நான் தண்ணீர் பாட்டிலை, மறந்து கீழேயே வச்சிட்டேன். சரி எடுத்துட்டு போவோம் என்று கீழே வந்தால், இவப் பூனை மாதிரி லைட்டே போடாமல் வந்தவ, நேரா டைனிங் டேபிளுக்கு வந்து கத்தியை எடுத்துக் கிட்டு அவ ரூமுக்கு போறா. அப்படியே ஒரு நிமிடம் நான் ஆடிப் போய்விட்டேன். அப்புறம் கத்தியை கையில் இருந்து பிடுங்கி, இனிமேல் தற்கொலைக்கு முயற்சி செய்யக் கூடாது என்று சமாதானம் செய்து சத்தியம் வாங்கிக் கொண்டு, பிறகு அவளை சாப்பிடவும் வைத்து படுக்க வைத்து விட்டு தான் வந்தேன். எனக்கு அன்று சிவராத்திரி. தூக்கம் வராமல் கீழே அவளுக்கு காவல் இருந்தேன்.

அதற்குப் பிறகு தான், வாகினி தனிமையை உணருகிறாள் போல, அவளுக்கு சப்போர்ட்டா இருக்கணும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.

அதான் உன் கூட சண்டை போட்டுக் கொண்டு இருந்தேன். எப்படியும் நீ என்னை புரிந்து கொள்வ என்று தெரியும். அதான் நீயும், வாகினியும் சண்டை போடும் போது, இடையில் நுழைந்தேன்." என்றுக் கூற…

அதுவரை தலையில் கை வைத்துக் கீழே அமர்ந்து இருந்தவள்," லூசா அண்ணா நீ…" என்றுக் கத்தினாள்.

எல்லோரும் அவளைப் பார்க்க, கீழே அமர்ந்திருந்தவள் மீண்டும் எழுந்து நந்தன் அருகே வந்து, " தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் ஒன்றும் கோழைக் கிடையாது. அது உங்களுக்கெல்லாம் தெரியாதா?"

" சரி.‌.‌. அப்புறம் நான் வந்த போது கையில் வைத்திருந்த கத்தியை, ஏன் பின்னாடி மறைச்ச அதை சொல்லு." என நந்தன் வினவ…

"அது வந்துண்ணா... அன்னைக்கு கோவத்துல பாதி சாப்பிட்டில் எழுந்துப் போயிட்டேன்‌‌. படுத்தா, தூக்கம் வரவில்லை. ரொம்ப பசித்தது. சரி தான் என்று வந்துப் பார்த்தா டேபிளில் ரெண்டு ஆப்பிள் இருந்துச்சு... எடுத்துட்டு வந்தேன். ஆப்பிள் எடுத்துட்டு வந்தவள், கத்தியை எடுக்க மறந்துட்டேன். அப்புறம் திரும்ப போய் கத்தி எடுக்கும் போது தான், நீ வந்தது. கத்தியை பார்த்து என்னவென்று விசாரித்தது. ஆப்பிள் சாப்பிட என்று சொன்னா நம்ம கெத்து என்னாகுறது. அதனால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். லூசு மாதிரி நீ என்னென்னவோ உளறுன, நானும் சரி தான் என்று நீ சொல்வதற்கெல்லாம் தலையாட்டி விட்டுட்டு, விட்டால் போதும் என்று வந்து படுத்துட்டேன். கடைசியா மறுநாள் தான் நானே அந்த ஆப்பிளை சாப்பிட்டேன்." என.

என்னவோ, அந்த ஆப்பிள் சாப்பிடுவது தான் முக்கியம் என்பதைப் போல பேசிய வாகினியைப் பார்த்து, நந்தன் ஞே என்று விழிக்க… எல்லோரும் விழுந்து விழுந்து நகைத்தனர்.

அவளைப் பார்த்து, " அன்னைக்கே சொல்ல வேண்டியது தானே குட்டிமா... உன்னாலே எங்க ரெண்டு பேரோட நட்பே, முறிந்து இருக்கும் தெரியுமா?"

" போ அண்ணா… நீயே ஏதோ யோசிச்சி முட்டாள்தனமா செய்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியுமா? அண்ணியை சப்போர்ட் பண்ணி பேசுறதுக்கு ஒன்னும் நான் கோபப்படலை. அவங்களோட கம்பேர் பண்றதுக்கு தான் நான் கோபப்பட்டேன்
அது தெரியாம நீ பாட்டுக்கு தலையை கொடுத்து, ஏடாகூடமாக ஏதோ பண்ணிட்டு என்னைய குறைச் சொல்லுற …" என்ற வாகினியை ஒன்றும் கூற முடியாமல், அவளை முறைத்தவன் யாமினியிடம்,
"சாரி யாமினி" என அவள் அருகே சென்று மன்னிப்பு கேட்க…

" அவளோ, கைகளை தட்டி விட்டு போடா… உன் கூட நான் பேசவே மாட்டேன்." என்று கண்ணீர் விட…

"யாமு நம்முடைய நட்பு எத்தனை வருஷ நட்பு… நீ புரிஞ்சுக்குவ என்று தானே நான் பேசாமல் இருந்தேன். உன் மீது தவறில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். எங்கே நான் உனக்கு சப்போர்ட் செய்தால், எங்கே வாகினி மறுபடியும் தற்கொலைக்கு முயற்சி செய்வாளோ, என்று ஒரு பயம் அது தான் டா. அன்றைக்கே வாகினி சொல்லியிருந்தா உனக்கு இவ்வளவு மன உளைச்சல் இருந்திருக்காது. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி யாமு."

" உன் சாரியை எல்லாம் குப்பையில் தூக்கிப் போடு. அது எனக்கு தேவையில்லை." என யாமினி முறுக்கிக் கொள்ள…

" நான் என்ன செய்தால் உன் கோபமெல்லாம் போகும்?" என்று நந்தன் வினவ…

"அப்படி வா வழிக்கு… என்ன ஒரு நாள் ஃபுல்லா வெளியே கூட்டிட்டு போகணும். நான் என்னக் கேட்டாலும் வாங்கித் தரணும். அதான் உனக்கு நான் கொடுக்கும் பனிஷ்மெண்ட்… " என

அதுவரை கலவரத்தோடு இவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்த எல்லாருடைய முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

" சரி தான் எங்க கதை முடிந்து விட்டது. இப்போ உன்னோட விஷயம் என்னவென்று சொல்லு?. யாரை லவ் பண்ற? " என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்ட யாமினி, வாகினி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், அவளை கேலி செய்து பாட ஆரம்பித்தாள்.

"மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி." என்றவள் வாகினியின் முகத்தை நிமிர்த்த…

அவளோ வெட்கத்துடன் , "அண்ணி" என்று அவள் தோளிலே முகத்தைப் புதைத்துக் கொண்டாள். ஆண்கள் இருவரும் புன்னகையுடன் தன் தங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"இப்படி வெட்கப்பட்டு, சொல்லாமலே எங்களை ஏமாற்றலாம் என்றுப் பார்க்கிறீயா? இப்ப சொல்லப் போறீயா? இல்லையா?" என யாமினி வினவ…

"அது" என தயங்கியவள், "சொல்லுடா பார்த்துக் கொள்ளலாம்." என்று நந்தனும், யாகினியும் ஊக்கம் கொடுக்க…

"அது நம்ம ஹரிணியோட அண்ணன் அரவிந்த் தான்‌." என்றுக் கூற…

இது தெரிந்தது தான் என்பதுப் போல கிருஷ்ணன் இருக்க…

நந்தனோ, அதிர்ச்சியில் உறைந்து நின்றான். யாமினியோ, " ஹேய் சூப்பர்." என ஆர்ப்பரிக்க…

நந்தனின் அமைதியைப் பார்த்து, " என்ன அண்ணா? ஒன்றும் கூறாமல் அமைதியாக இருக்க?" என வாகினி வினவ‌‌…

"அவன் தான் உன் லவ்வரா?" என்றவன், மனதிற்குள்ளோ,'அடேய் மச்சான், உன் காதலுக்காக, உன் தங்கச்சி வாழ்க்கையிலே பெரிய குழப்பத்தை உண்டு பண்ணிட்டியே, அப்பவே நினைச்சேன் என்னடா இவன், அவனுடைய தங்கையை விட்டுட்டு, என் தங்கைக்காக இவ்வளவு யோசிக்கிறானே, என்று… இப்பவல்லவா தெரியுது உண்மைக் காரணம்… மச்சான் எது செய்தாலும் நம்ம நல்லதுக்கு தான் என்று நீ சொன்னதெல்லாம் செய்தேனே… தூரோகி… நல்லா வருவடா நீ…' என்றவன் வேறு ஒன்றும் கூறாமல் இருக்க…

வாகினியோ, அவன் கேட்ட கேள்விக்கு பதிலாக, "ஆமாம் " என்று வெட்கத்துடன் தலையாட்டினாள்.

ஓஹோ என்றவன்," எத்தனை நாளா இந்த விஷயம் நடக்குது ?"என்று வினவ…

"காலேஜ் செகன்ட் இயரிலிருந்து அண்ணா."

"என்னது மூணு வருஷமாவா?" என்றவன் மீண்டும், "நான் இதுக்கு ஒருகாலும் ஒத்துக்கொள்ள மாட்டேன்."என.

அவனது பதிலில் மற்ற மூவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அண்ணா... என்னன்னா… இப்படி சொல்றீங்க? அவரு உங்க மச்சான் இல்லையா? நீங்களே அவருக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்றால், யார் அவருக்கு சப்போர்ட் பண்ணுவா ... உங்களுக்கு, அவர் மேல் அப்படி என்ன கோபம். நீங்க தான் எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கனும்னுணா. "

"அதுக்கு நான் ஒருகாலும் சம்மதிக்க மாட்டேன். அவனுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க வைப்பதற்கு பதிலாக பாழுங்கெணத்துலக் கூட உன்னை தள்ளி விடுவேன்."

"அண்ணா… நீங்க இப்படி கோபப்படும் அளவு அவரு என்ன செய்தார்?"

"அது… அதெல்லாம் சொல்ல முடியாது."

அதுவரை கெஞ்சிக் கொண்டிருந்த வாகினி, "அண்ணா உனக்கு அவரோட தயவு தேவை. மச்சான் தயவு இல்லாமல் மலைக் கூட ஏற முடியாது. நீ வேற இன்னைக்கு ஹரிணியோட பர்த்டேக்கு சர்ப்ரைஸா அங்கிள் வீட்டுக்குப் போகணும்னு சொன்னியே? எப்படி போகப் போற… அரவிந்த் தானே ஹெல்ப் பண்ணுறேன் என்று சொன்னாரு."என.

' அடப்பாவி… இதைக் கூட என் தங்கச்சிக் கிட்ட சொல்லியிருக்கியா. இன்றைக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு யாருக்கும் தெரியாமல் ஹரிணியின் வீட்டுக்கு சென்று, கேக் கட் பண்ண பிளான். நந்தன் ஆர்டர் பண்ணிய கேக்கை அர்விந்த் வாங்கி வருவதாக சொல்லி விட்டான். இவன் ரகசியமாக செல்ல வேண்டும் என்று நினைத்திருக்க, இவன் இப்படி வாகினியிடம் போட்டுக் கொடுத்து விட்டானே… துரோகி…' என மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், வெளியே வாகனியிடமோ, " இனிமே அவனைக் கூப்பிட மாட்டேன் போதுமா... எனக்கு அவன் தயவு தேவை இல்லை. என் அத்தை கிட்ட நான் ஒரு கால் பண்ணா போதும், சுவர் ஏறிக் குதிக்கணும் என்று அவசியமே இல்லை. அவங்களே கேட்ட திறந்து விடுவாங்க…" என…

நந்தன் பேசியதைக் கேட்ட வாகினியின் கண்கள் கலங்கியது.

தன் தங்கை அழுவதை சகிக்க முடியாமல், கிருஷ்ணன் உதவிக்கு வந்தான்‌. "ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை ? சொல்லு நந்து. இங்கப் பாரு வாகினி எப்படி அழறா…"

"அது அண்ணா…" என்றவன் நடந்தவற்றைக் கூறலானான்.'நான் நம்ப வீட்டில் நடந்த பிரச்சனை அனைத்தையும் மறுவீட்டிற்கு சென்ற போது அரவிந்திடம் கூறினேன். அதற்கு அவன் எல்லோருக்கும் முன்பு வாகினியை உயர்த்தி பேசி, ஹரிணியை மட்டம் தட்டினால், அம்மாவும், வாகினியும் சப்போர்ட்டா இருப்பாங்க… ஹரிணிக்கும், வாகினிக்கும் சண்டை வராது, என்று ஐடியா தந்தான்.' எனக் கூற…

" அதனால தான், ஹரிணி முதல் முதலாக செஞ்ச கேசரியை, சாப்பிட்டுட்டு நல்லாவே இல்லை. வாகினி கிட்ட கத்துக்கோ… " என்று சொன்னேன். "அப்புறம் நேரத்தோட எந்திரிச்சு சுறுசுறுப்பாக இரு… வாகினி மாதிரி டைம் கீப்அப் பண்ணு…" என்று சொல்லுவேன்… "பாவம் அவ கண்கள் கலங்க அந்த இடத்தை விட்டு போயிடுவா… "

அதைக் கேட்ட கிருஷ்ணனும், யாமினியும் அட லூசே என்பதுப் போல பார்த்தனர். வாகினியோ ஒரு படி மேலே போய், " நீ ஒரு லூசு… அவன் ஒரு லூசு… ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்ச வேலைக்காக, நான் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ கூடாதா. முதலில் ஒன்னு தெரிஞ்சுக்கோ, எனக்கு கேசரி சொய்ய சொல்லிக் கொடுத்ததே அவ தான்… நீ அன்னைக்கு சொல்லும் போது, என்னை தான் கேலி செய்யுற நினைச்சேன் சுத்தம்…அப்புறம் இதெல்லாம் நீங்க இரண்டு பேரும் சேர்ந்து செஞ்ச வேலைதான் என்று ஹரிணிக்குத் தெரியுமா?" என.


"இல்லை"என தலையாட்டினான் நந்தன்.

"ஓஹோ… இங்க பாருணா… நாளைக்கு பர்த்டே பார்ட்டியில நீயா எங்க இரண்டு பேரோட கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கிற… இல்லை என்றால் ஹரிணியிடம் எல்லாவற்றையும் கூறிவிடுவேன். இப்போ உன் மச்சான் தயவால் மலையேறிறீயோ, இல்லை உன் மாமியார் தயவால் வீட்டுக் கதவைத் திறந்து போறீயோ உன் பாடு... நாளைக்கு என்னோட மேட்டர் ஞாபகம் இருக்கட்டும். குட்நைட் அண்ணா." என்றவள் உற்சாகமாக கீழே இறங்கினாள். கிருஷ்ணனும், யாமினியும் நந்தனையும் பரிதாபமாக பார்த்துக் கொண்டே கீழே இறங்கினார்கள். நந்தனோ, 'டேய் அரவிந்தா… நாளைக்கு உனக்கு இருக்குடா… இந்த சில்வண்டு எல்லாம் என்னை மிரட்டிட்டு போகுது.' என மனதிற்குள் புலம்பியவன், எப்போது மணி பன்னிரண்டு ஆகும் என காத்திருந்தான் தன் இதய தேவதையை காண்பதற்காக…

தொடரும்….
 
மிகவும் அருமையான பதிவு,
விஸ்வதேவி டியர்

ஹா ஹா ஹா
நந்தன் அய்யய்யோ பாவம்
பாரீன்லேயெல்லாம் போய் இவன் படிச்சு என்ன பிரயோஜனம்?
இவ்வளவு கூமுட்டையா ஏமாந்திருக்கிருக்கிறானே
ஹா ஹா ஹா
அவன் தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணாமல் அரவிந்தனே லவ்வருக்குத்தானே பார்த்திருக்கிறான்
நீ மட்டும் ஏண்டா உன் மனைவியை விட்டுக் கொடுத்து பேசினாய், நந்தா?
இன்னும் ஹரிணியிடம் வேறு இருக்கிறதா?
ஹா ஹா ஹா
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
விஸ்வதேவி டியர்

ஹா ஹா ஹா
நந்தன் அய்யய்யோ பாவம்
பாரீன்லேயெல்லாம் போய் இவன் படிச்சு என்ன பிரயோஜனம்?
இவ்வளவு கூமுட்டையா ஏமாந்திருக்கிருக்கிறானே
ஹா ஹா ஹா
அவன் தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணாமல் அரவிந்தனே லவ்வருக்குத்தானே பார்த்திருக்கிறான்
நீ மட்டும் ஏண்டா உன் மனைவியை விட்டுக் கொடுத்து பேசினாய், நந்தா?
இன்னும் ஹரிணியிடம் வேறு இருக்கிறதா?
ஹா ஹா ஹா
Thanks Banu ma... ஆமாம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌...???
 
Top