Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா‌ - 9

Advertisement

Viswadevi

Active member
Member
Hi friends thanks for your lovely comments ? and support ❣

1900

அத்தியாயம் - 9
ஆமாம் நந்தனின் இதய தேவதை, சிண்ட்ரெல்லா எல்லாம் ஹரிணி தான்…

உடனே இருவரும் காதலர்கள் என்று என்ன வேண்டாம். அவன் வெளிநாட்டிலிருந்து வந்து கடைப் பொறுப்பேற்றவுடன், கடை விஷயமாக சாந்தகுமாரைப் பார்க்க போகும் போது தான் முதல் முறையாக ஹரிணியை சந்தித்தான்.

அவருடைய வீட்டிற்குச் சென்ற போது தான் சந்தன முல்லைப் பறிப்பதற்காக உயர ஸ்டூலிருந்து கீழே விழ இருந்தவளை பிடிக்க... அவளோ, அவன் இதயத்தில் விழுந்தாள் தேவதையாக... பார்த்தவுடன் கூட ஒன்றும் தெரியவில்லை‌. ஆனால் அவளின் விழிகளில் இருந்த ஆர்வம் தான் அவனை யோசிக்க வைத்தது. பேரைக் கேட்டால் அவள் கூறவில்லையே. அதனால் தான் சிண்ட்ரெல்லா என்று அழைத்தான்.

அதற்குப் பிறகு கூட அவளுடன் பேசியதில்லை. ஏனோ அவளது நினைவுகள் மட்டும் அவனைச் சுற்றி கொண்டு இருந்தது. நினைவுகள் மட்டுமா, அவளை கையில் ஏந்திய போது, அவளோடு சேர்த்து ஏந்திய சந்தனமுல்லையின் சுகந்தமும் அல்லவா அவனைச் சுற்றுகிறது. அவள் நினைவுக்காகவே, பால்கனியில் அந்த கொடியை வைத்தான்.

ஒருநாள் எதேச்சையாக பால்கனியில் பார்க்க… அங்கு அவர்களின் வீட்டின் முன்பகுதியில் அப்பொழுது தான் தூங்கி எழுந்து வந்த ஹரிணி,அவளுடைய அண்ணனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது. பேப்பர் படிப்பதற்காக இருவரும் சண்டை போட்டுக் கொண்டு அவர்கள் அடிக்கும் லூட்டியை கண்டவன், பிறகு தினமும் அவளைப் பார்ப்பதை தனது வழக்கமாக மாற்றிக் கொண்டான்.

அவர்களின் திருமணம் நடக்கும் வரை, அவனின் இதய தேவதையின் தரிசனத்தை பார்த்து விட்டே கீழே இறங்குவான். இவர்கள் திருமணம் முடியவும், அருகிலே இதய தேவதை இருக்க‌… அவன் ஏன் பால்கனிக்கு செல்லப் போறான்.

ஆடிமாதத்திற்கு தனது சிண்ட்ரெல்லா, அம்மா வீட்டிற்கு செல்லவும், மீண்டும் வெறுமை சூழ பால்கனியை தஞ்சமடைய, இவர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன் வழமையை மாற்றி இருந்தாள் ஹரிணி. அவளைக் காணாமல் பல நாட்கள் தவித்திருக்க... இதோ, இந்த இருளிலும் பால்கனியில் இருந்து அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அரவிந்தை இனி நம்பக் கூடாது என்று முடிவெடுத்தான். ஆம் அவன் தனது காதலை அவளிடம் கூறுவதற்கு முன்பே, வீட்டில் அவளோடு கல்யாணம் பேச்சை எடுக்க, சரி தான் கல்யாணத்திற்கு பிறகு காதலை அவளிடம் கூற வேண்டும் என்று நினைத்திருக்க…

ஆனால் அரவிந்தன் வந்து குழப்பி விட்டான். அரவிந்தன் ஹரிணியின் சகோதரன் மட்டும் அல்ல… கிருஷ்ணனின் தோழனும் கூட... கிருஷ்ணன் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை பற்றி அறிந்தவன்,மீண்டும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் தன் தங்கை வாழ்க்கையும் பாதிக்கும்,தனது காதலியும் வருத்தப்படுவாள் என்று யோசித்து இந்த ஐடியாவை கொடுத்தான். பழைய நினைவுகளில் ஆழ்ந்து இருந்த நந்தன் மணி பதினொன்று ஆனவுடன் கீழே இறங்கி வந்தான். ஹரிணி வீட்டிற்கு செல்ல வேண்டும்.

' ஆமாம் பெரிய சஸ்பென்ஸ். யாருக்கும் தெரியாமல் சென்று விட்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். அம்மா, அப்பாவை தவிர மற்ற குடும்ப உறுப்பினர் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று நினைத்து தன் அம்மாவிற்கும், ஹரிணி வீட்டுக்குச் செல்கிறேன் என்று மெசேஜ் செய்து விட்டு கிளம்பினான்.'


இன்று ஹரிணியோட டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டும் என முடிவெடுத்திருந்தான். நடந்த எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டும் என நினைத்திருக்க... அதற்கு அங்கு அரவிந்தன் விட வேண்டும் அல்லவா…

தூங்கும் அத்தையை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று நினைத்து அரவிந்தனுக்கு கால் செய்து கதவை திறக்க சொன்னான். நடந்த அனைத்தையும் அரவிந்தனிடம் வாகினி கூறியிருக்க… அவன், " மாப்பிள்ளை" என்று சமாதானப்படுத்த முயன்றான்.

"டேய் மச்சான்… நான் உன் மேல கோவமா இருக்கேன். ஒழுங்கா ஓடிப் போய்விடு."

"அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது மாப்ள... நீ எனக்கு மாப்பிள்ளை... நான் உனக்கு மாப்பிள்ளை ஆகப் போறேன். நம்ம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு. எல்லாத்தையும் எனக்காக மன்னிச்சிடு." என்று பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளேயிருந்து மங்கை வெளியே வந்தார்.

"வாங்க மாப்பிள்ளை…" என்று வரவேற்க…

"சாரி அத்தை… உங்களை தொந்தரவு பண்ணிட்டேனா?" என்றுக் கூறி ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தினான்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மாப்பிள… நாங்க எப்பவும் ஹரிணி பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக முழித்து தான் இருப்போம். சரி நீங்க என்ன குடிக்கிறீங்க... பால் எதுவும் எடுத்திட்டு வரவா?" என…

"இல்ல அத்தை எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க போங்க அத்தை." என்று அனுப்பி வைத்தவன், அரவிந்தை முறைத்துக் கொண்டே, அவனது உதவியுடன் அந்த அறையை டெக்கரேஷன் செய்தான்‌.

மணி பன்னிரண்டு ஆவதற்கு, ஐந்து நிமிடம் இருக்கும் போது, விளக்குகளை அனைத்து விட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார்கள்‌.

அவளை எழுப்ப சென்ற அரவிந்தனை தடுத்து தானே எழுப்புவதாகக் கூறி அவளது அறைக்கு சென்ற நந்தன் கதவை தட்ட…

வழக்கம் போல தனது அண்ணன், மற்றும் பெற்றோர் தான் வந்து எழுப்புவதாக நினைத்த ஹரிணி, தூக்க கலக்கத்தோடு வந்து கதவைத் திறந்தவள். "என்ன பா… இப்போ தானே படுத்தேன், அதுக்குள்ள மணி ஆயிடுச்சா…" என செல்லம் கொஞ்சிக் கொண்டே கண்களை திறந்தாள்.

அங்கோ கைகளை பின்னால் கட்டியவாறு, அவளை ஸ்டைலாகப் பார்த்துக் கொண்டிருந்தான் நந்தன்.

ஹரிணியோ, தான் காண்பது கனவா? இல்லை நனவா? என்று கண்களை நன்கு தேய்த்து பார்த்தாள்.

அவள் செய்கையைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, தான் கொண்டு வந்த பொக்கேவை நீட்டி, "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் பிங்கி சிண்ட்ரெல்லா." என …

அவளோ அந்த சிண்ட்ரல்லா என்ற வார்த்தையை கேட்டவுடன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அவனை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தவள், அடுத்த நொடி வேகமாக நந்தனைக் கட்டி பிடித்துக் கொண்டாள்.

நந்தனோ திக்குமுக்காடிப் போனான். ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டவன், மெல்ல அவளை அறைக்குள் அழைத்துச் சென்று, கையிலிருந்த பொக்கேவை கட்டிலில் போட்டவன். மெல்ல அவளை சமாதானம் படுத்தினான்‌‌.

அவளோ, எதற்கும் அடங்காமல் அழுதுகொண்டே, " இதை சொல்வதற்கு உங்களுக்கு இவ்வளவு நாளாச்சா நந்தா?" என வினவினாள்.

"சாரி… சாரி… சாரி டியர். எல்லாம் என் தப்பு தான். ஐயம் ரியலி சாரி டா. முதலில் அழுகையை நிறுத்துடா... " எனக் கெஞ்ச‌…

அவனது கெஞ்சல் எதற்கும் அவள் செவி சாய்க்கவில்லை.

இது சரிவராது என்று நினைத்த நந்தன்," மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி, அவளது தேனூறும் இதழில், தன் இதழைப் பொறுத்தினான்‌.

அவனது இதழ் யுத்தத்தில், இருவரும் தங்களை மறந்து இருக்க, சரியாக அரவிந்தனுக்கு மூக்கு வியர்த்திருக்கும் போல… உடனே நந்தனுக்கு ஃபோன் செய்து, அவர்களை இடையூறு செய்ய…

ஒரு கையால் ஹரிணியை தன் தோளில் சாய்த்தவன், மறுகையால் தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து ஃபோனில் யார் என்று எரிச்சல் பட்டுக் கொண்டே பார்க்க, அழைத்ததோ அரவிந்த். தலையில் அடித்துக் கொண்டே காலை ஆன் செய்தவன், ஒட்டு மொத்த கடுப்பை எல்லாம் குரலில் தேக்கி, " என்ன அரவிந்த்" என கேட்க…

அவனது குரலில் உள்ள கடுப்பை உணர்ந்த அரவிந்தோ, ' நல்ல நேரத்தில் தொந்தரவு பண்ணிட்டேன் போல, பயபுள்ள ரொம்ப கடுப்பாக இருக்கிறார்.' என மனதிற்குள் கிண்டலாக எண்ணியவன், வெளியேவோ பவ்யமாக, " மாப்பிள்ளை அம்மா , அப்பா எல்லோரும் வெயிட் பண்றாங்க… ஹரிணியை அழைச்சிட்டு வரீங்களா…" என.

மனதிற்குள் அவனைத் திட்டிக் கொண்டு, " இதோ வர்றோம்." என்றுக் கூறி ஃபோனை வைத்தவன், ஹரிணியின் கண்களைப் துடைத்து, "ஹரிமா...எல்லோரும் நமக்காக காத்திருக்கிறார்கள்‌. உன் கிட்ட நிறைய பேசணும் ஆனால் இப்போ இல்லை. அப்புறமா பேசிக் கொள்ளலாம். இப்போ போகலாமா…" என…

" ம் " என்னறவள் முகமெல்லாம் சிவந்து வெட்கத்துடன் வந்தாள்.

அவளது முகத்தைப் பார்த்து மங்கையும், சாந்தக்குமாரும் பூரித்து போயினர்.

தயாராக இருந்த கேக்கை ஹரிணி கட் பண்ணி,வழக்கம் போல தன் தந்தைக்கு ஊட்டப் போக…

" பாப்பா முதல்ல மாப்பிள்ளைக்கு ஊட்டு."என்று சாந்தகுமார் சொல்லவும், உதட்டை கடித்தவாறு அவனிடம் கண்களால் மன்னிப்பு கேட்டவாறு நந்தனுக்கு ஊட்டினாள்.

நந்தன் தன்னுடைய பரிசாக அழகிய வைர பிரேஸ்லெட், இரண்டு இதயங்கள் இணைந்து இருக்க அதன் நடுவே பொடிக் கற்களால் இருவரது முதல்எழுத்துகளும் பிண்ணி பிணைந்து இருந்தது. அதை அவள் கைகளில் லாவகமாக மாட்டியவன், நன்றாக இருக்கிறதா? என புருவத்தை உயர்த்தி வினவினான்.

கண்களால் பிரமாதம் என்றவள்,' ப்ராடு இந்த கிஃப்ட் ஏற்கனவே ஆர்டர் பண்ணி வைத்து விட்டு, இன்று மாலை என்னை எப்படி வம்பு இழுத்தான்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

பிறகு ஒரு வழியாக எல்லோரும் வாழ்த்துக் கூறி பரிசுகள் வழங்கினர்.

மங்கை எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துக் கொண்டிருக்க‌…

சாந்தகுமாரோ, அவர்களின் பார்வையை புரிந்து கொண்டு," ஏன் இந்த நேரத்தில் வீட்டுக்குச் செல்கிறீர்கள் மாப்பிள்ளை.இங்கேயே இருங்கள் ." என்றுக் கூற…

நந்தனோ, ஹரிணியைப் பார்த்தான்‌.

"என்ன ஹரிணி பார்த்துக் கிட்டே இருக்கிற, மாப்பிள்ளையை உன்னோட அறைக்கு அழைச்சிட்டு போ…" என சாந்தகுமார் கூற…

ஹரிணியோ, உற்சாகத்துடன் நந்தனை தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.

தலையில் கைவைத்த மங்கையோ, 'இந்த மனுஷனுக்கு அறிவே கிடையாது ஆடி மாசம் என்று தானே ஹரிணியை அழைச்சிட்டு வந்து வச்சிருக்கோம். அது புரியாமல் மாப்பிள்ளையை இங்கேயே தங்க சொல்லியிருக்காரு இந்த விவஸ்தை கெட்ட மனுஷன் .' என தனக்குள் நொந்து கொண்டவள், அரவிந்தின் காதை கடிக்க…

அரவிந்தோ, "நான் பார்த்துக் கொள்கிறேன் மா…" என்றவன், ஹரிணியின் பின்னேயே சென்று‍, "ஹரிணி… எனக்கு தூக்கம் வரவில்லை‌. நான் மாப்பிள்ளையோடு கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கேன். உனக்கு தூக்கம் வந்தால் நீ தூங்கு." என.

ஹரிணியோ, நந்தனிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைத்திருக்க, அரவிந்த் கூறியதை கேட்டவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதை மறைத்துக்கொண்டு, "எனக்கு தூக்கம் வரவில்லை அண்ணா." என.

"ஓ… அப்படியென்றால் ஒன்று செய்யலாம் குட்டிமா… நாம் கார்ட்ஸ் விளையாண்டு ரொம்ப நாளாயிற்று… மூன்று பேரும் சேர்ந்து ரம்மி‌ விளையாடுவோம் என்றவன் அங்கிருந்த கஃபோர்டிலிருந்து கார்ட்ஸை எடுத்து வந்தான்.

ஹரிணியும், நந்தனும் தலையில் கைவைத்துக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்துக் கொண்டு அரவிந்தை கொலை வெறியோடு பார்த்தனர்.

தொடரும்….
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
விஸ்வதேவி டியர்

ஹா ஹா ஹா
ஐயோ பாவம் நந்தன்
அரவிந்தை வைச்சு மாமியார்க்காரி கேட் போட்டுட்டாளே
நல்லவேளை சுவர் ஏறிக் குதிக்கவில்லை
மச்சினன் கதவைத் திறந்து விட்டுட்டான்
ஆனால் ஹரிணி நந்தனிடம்தானே பேச ஆசைப்பட்டாள்
அரவிந்திடம் நிறைய பேச வேண்டும்ன்னு நினைத்திருந்தாள்ன்னு தப்பா இருக்கே
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
விஸ்வதேவி டியர்

ஹா ஹா ஹா
ஐயோ பாவம் நந்தன்
அரவிந்தை வைச்சு மாமியார்க்காரி கேட் போட்டுட்டாளே
நல்லவேளை சுவர் ஏறிக் குதிக்கவில்லை
மச்சினன் கதவைத் திறந்து விட்டுட்டான்
ஆனால் ஹரிணி நந்தனிடம்தானே பேச ஆசைப்பட்டாள்
அரவிந்திடம் நிறைய பேச வேண்டும்ன்னு நினைத்திருந்தாள்ன்னு தப்பா இருக்கே
Thanks Banu ma. Typing mistake. Change pannuren????
 
Top