Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 14

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 14

காரில் செல்லும் போது யமுனாவிடம் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை அவள் ஒருத்தி இருப்பதையே கருதாத தேவ் அவனின் தந்தை க்கு கால் செய்தான் "அப்பா நான் சென்னையில் இருந்து டெல்லிக்கு வரேன் யமுனாவும் கூட வரா அம்மாவிடம் சொல்லிடுங்க" என்றான். "இவன் குடும்பமே இந்த கேவலமான கல்யாணத்துக்கு கூட்டா" என்று மனதில் நினைத்தாள் யமுனா.

அடையார் எல்பி சாலையை நெருங்கும் போது இங்க அ2பி இருக்கு சாப்பிடுறியா என்று கேட்டான்." வேண்டாம்" என்றாள் ஒற்றை வார்த்தையாக." இங்க பாரு ஏர்ப்போர்ட்ல மெக்டி கெஃப்சி மாதிரி ஃபுட்ஸ் தான் கிடைக்கும் சிக்ஸ்க்கு பிளைட் டின்னர் குடுக்க எட்டு ஆகும் அதுவரைக்கும் உன்னோட உண்ணாவிரதம் கன்டினியூ பண்ண போறியா சும்மா தேவை இல்லாம சீன் கிரியேட் பண்ணாத. வேணும்னா சொல்லு நிறுத்த சொல்ற உன்கிட்ட வந்து என்னால கெஞ்சிட்டு இருக்க முடியாது" என்றான் தீர்மானமாக.

" வேண்டாம்" என்றாள் அழுத்தமாக. இவன இந்த கல்யாணத்தை பிடிக்கலனு இன்டேரெக்டா சொல்றதுக்கு ஒரு நாள் பட்டினி கிடந்தால் செத்து போக மாட்ட யமுனா சாப்பிடாத என்று தன் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

ஏர்ப்போர்ட் வந்தவுடன் செக் இன்ஸ் பாஸ் வாங்கிய உடன் அனொன்ஸ்மென்ட்டிற்காக அமர்ந்திருந்தனர் தேவ் உட்கார்ந்த பின் வேறு ஒரு லைனில் அமர்ந்தாள் யமுனா. தேவ் வும் அவளை கண்டுகொள்ளவில்லை. வாட்ஸ்அப்பில் யமுனா விற்கு மெசேஜ் அனுப்பலாம் என்று திவ்யா நினைத்தாள் ஆனால் யமுனா அவளை எல்லா அப்ளிகேஷன் லயும் பிளாக் செய்து வைத்திருந்தாள்." யமுனா நீ என்ன எப்போ மன்னிக்க போற" என்று குமுறி அழுதாள்.

பிளைட் ஏறிய பின்னர் தேவ் ரெஸ்ட் ரூம் சென்ற சமயத்தில் யாரோ ஒரு பெண் ஓரமாக உட்கார்ந்திருந்தாள் அவளுக்கு வயது இருபத்தி ஐந்தை ஒட்டி இருக்கும் தேவ் வின் பக்கத்தில் உட்கார விருப்பம் இல்லாதவள் "ஷேல் வி சேன்ஜ் சீட்ஸ் ஐ அம் நாட் யூசுடு டூ வின்டோ சையிட்" என்றாள். தேவ் வின் பக்கத்தில் உட்கார கூடாது என்று திட்டமிட்டே அப்படி கூறினாள். அந்த பெண் மழங்க மழங்க விழித்து கொண்டிருந்தாள். "இவள் பேசுறதுக்குள்ள டெல்லியே வந்துரும்போல" என்று மனதில் கடுப்பாகிக் கொண்டிருக்கும் போதே" எக்ஸ்க்யூஸ் மீ ஐ வில் டீல் இட்" என்று அந்த பெண்ணிடம் சொன்ன தேவ் யமுனாவின் பக்கம் திரும்பி அவளை முறைத்தான்."இல்லை பரவாயில்லை நான் இங்கேயே உட்கார்ந்திக்குறேன்" என்று தேவ் எதும் திட்டிவிடக்கூடாது என்ற பயத்தில் போலியாக தூங்குகிறது மாதிரி நடித்தாள்.

தேவ் அவளை கண்டுக்காமல் தன்னுடைய போட் ஹியர்ஃபோன்ஸை எடுத்து போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். சாப்பாடு வரும் நேரம் வந்த உடனே " உன் நடிப்பு போதும் யமுனா சாப்பாடு வருது எனக்கு மயக்கமே வர மாதிரி இருக்கு மயங்கி விழுந்தாலும் இவன் நம்மள வெச்சி செஞ்சிருவான் அதனால சாப்பாட்டை சாப்பிடு" என்று நினைத்தவள் தூங்கி எழுந்திருக்கும் மாதிரி நடித்தாள். சாப்பிட்டு முடித்து விட்ட பின் அமைதியாக வானத்தை வெறித்தாள். இவன் கூட பத்து நிமிஷம் இருக்கருதே பத்து வருஷம் மாதிரி இருக்கு என்று மனதில் புலம்பியவள் அவனை தொடாமல் உட்கார்ந்து இருப்பதில் கவனமாக இருந்தாள்.

பிளைட் நியூ டெல்லி வந்த பின்னர் தங்களுடைய பேக்கேஜ் கிடைத்து வெளியே வர மணி ஒன்பதரை ஆனது. பின் தன் டிரைவருக்கு கால் செய்த தேவ் "அன்குஷ் டிபார்சர் நம்பர் மூன்றுக்கு வா என்று ஹிந்தியில் பேசினான்." ஐய்யயோ நமக்கு ஹிந்தி வேற தெரியாதே இதைப் பற்றி நம்ம யோசிக்கவே இல்லையே" என்று நினைத்தவளை " ஏறு" என்றான் ஒற்றை வார்த்தையில்.

இரவில் வண்ண விளக்குகளைக் கொண்டு நியூ டெல்லி பார்க்கவே அழகாக இருந்தது ஆனால் அதை ரசிக்க தான் யமுனா விற்கு மனசு இல்லை. ஏர்ப்போர்ட்டிலிருந்து இருபது நிமிஷம் பயணித்தவர்களின் கார் லுட்டேன்ஸ் பங்களோ ஸ்ஸோன்(Lutyens Bungalow Zone) னில் நின்றது.பெரிய தொழில்அதிபர்கள் திரைத்துறையில் இருப்பவர்கள் என்று பலர் வசிக்கும் பாஷ் ஏரியா தான் இது. தேவ் வின் குடும்பம் இங்கு குடிபெயர்ந்து ஆறு வருஷம் ஆகிறது என்ன தான் ஜெயக்குமார் பெரிய செல்வந்தராக இருந்தாலும் அதை அடுத்த படிக்கு கொண்டு சென்றது சத்யதேவ் தான் ஹாஸ்பிடலிலும் சரி இன்ஸ்டிடியூஷனாலும் சரி ஐடி கம்பெனி என்றாலும் சரி தேவ் அனைத்தையும் புதிப்பித்தான் சென்ற ஆண்டு இந்தியாவிலேயே பெஸ்ட் பிசினஸ் இன்னோவேட்டர் என்று அவார்ட்டை வாங்கினான்.

கார் நின்ற இடத்தைப் பார்த்த யமுனா ஆச்சயரியப்பட்டாள் .ஆச்சயரியப்பட்டாள் என்பதை விட அதிர்ந்தாள் என்று கூட கூறலாம். அந்த இரவிலும் மேலே பொறுத்தப்பட்டிருந்த பல வித வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் தேவ் வின் பங்களாவைக் கண்டாள் சுற்றி தோட்டம் ஆள் அரவம் இல்லாத இடம் பார்க்க அழகாக இருந்தாலும் யமுனா விற்கு ஏதோ சிங்கத்தின் குகைக்குள் செல்வதைப் போல இருந்தது.

அந்த பெரிய பிரம்மாண்ட கேட்டை செக்யூரிட்டி திறந்து விட்ட பின் உள்ளே நுழைந்த அந்த ஜாக்குவார் கார் வீட்டை அடைவதற்கே ஐந்து நிமிடம் ஆனது அதுவரை சுற்றி கார்டன் நீச்சல் குளம் டென்னிஸ் கோட் பார்க் ஏரியா என்று இருந்தது. பக்கத்தில் ஒரு பெரிய கார் ஷெட் அதில் ஐந்து கார்கள் இருந்தது அனைத்தும் உலகத் தரம் வாய்ந்த கார். இது உண்மையா இல்ல கனவா என்று அதிர்ந்தாள் யமுனா.

பணக்காரர்கள் என்று தெரியும் ஆனா இவ்வளவு என்று யமுனா எதிர்பார்க்கவில்லை. "அய்யோ இந்த பங்களாவை பார்த்தா வயிறே கலக்குதே" என்று பயந்தாள் யமுனா. முதல் முறையாக தன் அத்தை விஜயலட்சுமியை திட்டி தீர்த்தாள் யமுனா மனதில் "இவங்க அவசரப்பட்டு வாக்கு கொடுத்து வெங்காயம் கொடுத்து இப்போ என் வாழ்க்கையே நரபலி கொடுத்த ஆடு மாதிரி ஆயிடுச்சே" என்று மனதில் புலம்பியவளுக்கு பயத்தில் கையெல்லாம் வேர்த்தது.
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

இப்போ புலம்பி என்ன பிரயோஜனம், யமுனா?
மாமாவாவது இன்னொன்னாவது
எவனோ எப்படியோ போகட்டும்ன்னு சம்மதம் சொல்லி சத்யாவை நீ கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது

சத்யாவுக்கு இருபத்தொன்பது வயசுக்கே அதிர்ச்சியான யமுனா இங்கே அவன் மகளைப் பார்த்து என்ன கதியாவாளோ?
 
Top