Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 16

Advertisement

AnuJey

Well-known member
Member
"லுக் யமுனா நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்லை நான் எப்பயும் உன்னை ஒரே மாதிரி ஹேண்டில் பண்ண மாட்டா என்னோட கோபத்தை கிளராம அமைதியா நகைய போட்டுட்டு வா அன்ட் நீ என்ன சொன்ன இந்த கல்யாணம் பிடிக்கலை என்னை பிடிக்கலை இதான என்று தான் அணிந்திருக்கும் முழுச்சட்டை கைமுட்டு வரை மடக்கினான். இதனைக் கண்ட யமுனா பயந்தாள் தன்னை அடிக்க தான் போகிறான் என்று பயந்து பின்னே சென்றாள் ஆனால் ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட சத்யதேவ் யமுனாவிடம் "இனிமேல் இந்த மாதிரி பேச்சு நீ பேசுனா உன்னை சும்மா விட மாட்ட. இன்னும் ஐந்து நிமிஷத்துல நகை போட்டு வெளிய வரனும்" என்று கதவை வேகமாக தள்ளி விட்டு வெளியே சென்றான். இவனிடம் இப்போது மல்லுக்கட்ட முடியாது என்று நகையை அணிந்து வெளியே சென்றாள்.

காரில் பின்னால் ஏறினால் அதற்கு வேற திட்டு விழும் என்று தலைவிதியே என்று முன்னால் ஏறினாள் தேவ் வின் முகம் இறுக்கமாகவே இருந்தது அப்படியே காரையும் ஓட்டினான் டெல்லியின் அழகை ரசிக்க முடியாமல் யமுனா ஒரு ஜடம் போல் உட்கார்ந்திருந்தாள்.

கார் லட்சுமி நகர் 12 வது குறுக்குச் சந்தில் நின்றது யமுனா டெல்லி வருவதே இதான் முதல் முறை அதனால் தன் மாமா வீடு எங்கே என்று கூட அவளுக்குத் தெரியாது. சத்யதேவ்வின் கார் நின்றது கூட தெரியாமல் யமுனா கண் இமைக்காமல் அமைதியாக இருந்தாள். அவளைக் கண்ட தேவ் யமுனா என்று சத்தமாக அழைத்தான் எதோ கனவில் இருந்து விழித்தவள் போல முழித்தவள் வீடு வந்துவிட்டது என்பதை உணர்ந்து கீழே இறங்கினாள்.

சேகரின் வீடு ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் வீடு போல இருந்தது கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து யமுனா தன் மாமாவைப் பார்க்க இருப்பதால் அவள் மனதில் மகிழ்ச்சி இருந்தது. இருவரும் உள்ளே சென்ற போது அவர்களை முதலில் பார்த்தது விஜயலட்சுமி தான். முதலில் தேவ் வைக் கண்டவர் தம்பி வாங்க என்று பம்மினார் பக்கத்தில் யமுனாவைக் கண்டதும் "அடிப்பாவி வந்துட்டியா உன்னால தான் டி இப்போ என் பையன் வேலை போய் வீட்ல கிடக்கிறான் நீ நல்லா இருக்க மாட்ட" என்று கத்தினாள். விஜயலட்சுமி இதுவரை யமுனாவை இப்படி எல்லாம் கேவலமாக கத்தியதில்லை அவள் நடந்த விதம் அதிர்ச்சி அளித்தாலும் கண்களில் நீர் நின்றது தேவ் வின் முன் தான் அழக் கூடாது என்று அழுகையை உள் வாங்கினாள்." தம்பி இவ மேல தான் திவாகர் பைத்தியமா சுத்துற அந்த யமுனா ராட்சசி இவளை என்னா வேணாலும் பண்ணுங்க தம்பி அப்போ தான் திவாகர் நம்ம பிரியாவ கல்யாணம் பண்ணிப்பான்" என்று வாய்க்கு வந்தபடி கத்தினாள். தன் மேல் இவ்வளவு வன்மமா இந்த அத்தைக்கு என்பதை நேரடியாகவே கண்டாள் யமுனா. அவ்வளவு நேரம் விஜயலட்சுமி பேசுவதை வேணும் என்றே கவனித்துக் கொண்டிருந்த தேவ் "கொஞ்சம் பேசுறதா நிறுத்துறீங்களா யமுனா என்னோட மனைவி" என்றான் தேவ் கம்பீரமாக. "என்னது மனைவியா!!" என்று உள்ளே சென்று தூங்கிக்கொண்டிருந்த சேகரை எழுப்பி ஹாலுக்கு கூட்டிக்கொண்டு வந்து விஷயத்தைச் சொன்னாள்.

யமுனா வினைக் கண்ட சேகர் "யமுனா ம்மா" என்று அழத் தொடங்கினார். தன்னுடைய மாமா வைக் கண்ட யமுனாவின் இதயம் நிற்பது போல் ஆனது எப்படி கம்பீரமாக இருந்த மனிதர் இன்று எழும்பும் தோழுமாக இருக்கிறார் அவரை ஐந்து வருடம் கழித்து கண்ட யமுனா ஆனந்தக் கண்ணீரும் அவரின் உடல்நிலை பார்த்து வருத்தக் கண்ணீரும் மாறி மாறி வந்தது ஓடிப்போய் தன் மாமா சேகரை கட்டிப்பிடித்து அழத் தொடங்கினாள்.

"அழாத யமுனா ம்மா நீ வந்த அப்பறம் எனக்கு புது நம்பிக்கை வந்திருச்சு மா.. திவாகர் க்கு வேலை போய் ஒரு வாரம் ஆகுதுமா இப்போ இங்க தான் இருக்கான் அவன் பிரண்ட பார்க்க போயிருக்கான் வேலை விஷயமா" என்று சோகமாக சொன்னார். சத்யதேவ் அங்கு இருக்கிறதை மறந்த சேகர் "பிரியா வோட பெரியண்ணன் தான் திவாகர் வேலைய போக வெச்சிட்டாராம் மா எப்படியாவது திவாகர் பிரியாவ கல்யாணம் பண்ணனும் மா நீ தான் திவாகர சம்மதிக்க வெக்கனும்" என்றார் கவலையாக." யமுனா கண்டிப்பா திவாகர சம்மதிக்க வெப்பா ஏன்னா இப்போ அவளுக்கு பிரியா வோட அண்ணினு வேற பெரிய பொறுப்பு இருக்கே" என்று அழுத்தமாகக் கூறினான்.இவனை மாதிரி யாரலும் இப்படி திரிச்சி பேச முடியாது என்று தேவ்வை மனதளவில் கடிந்த யமுனா அமைதியாக நின்றாள். "என்ன தம்பி சொல்றீங்க புரியல" என்று விழித்தார் சேகர். இப்போ யமுனா என்னோட மனைவி எங்களுக்கு கல்யாணம் ஆகி ரிஜிஸ்டரே பண்ணிட்டோம் என்று தன் மொபைலில் இருந்த கல்யாண சான்றிதழ் சாஃப்ட் காபியை சேகரிடம் காட்டினான் தேவ். விஜயலட்சுமி வாயைப் பிளந்தாள் இனிமேல் இவளை நம்ம எதுவும் தப்பா பேசக் கூடாது பேசவும் முடியாது என்று நினைத்தாள்.

"என்னது யமுனா உன் மனைவியா யார் கிட்ட பொய் சொல்ற" என்று பின்னாடியிருந்து கத்தினான் திவாகர். அவனை தேவ் சுட்டு எரிக்கும்படியாக பார்த்தவுடனே "அது வந்து உங்கள் மனைவியா இருக்காது" என்று குரலைத் தாழ்த்தினான். "என்ன யமுனா அமைதியாக நிக்குற சொல்லு" என்று அவளிடம் அழுத்தம் கொடுத்தான் தேவ்." ஆமா திவா அத்தான் எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு நீங்க பிரியாவ கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாக இருக்கனும் என்று தேவ் வைப் பார்த்து இடைவேளி விட்டவள் அதான் உங்களுக்கும் மாமா வுக்கும் நம்ம குடும்பத்துக்கே நல்லது" என்றாள்.

"ஆனா என்னால இதை நம்பவே முடியல யமுனா நீ எப்படி இவனை... அது இவரை கல்யாணம் பண்ண எனக்கு ஒரே குழப்பமா இருக்கு" என்றான் திவாகர்."சோ லெட் மீ கம் டு த பாயிண்ட் உனக்கு வேலை என்னால தான் போச்சு இனியும் உனக்கு எங்கயும் வேலை கிடைக்காது உங்க வீட்டு பத்திரமும் கிடைக்காது அது மட்டும் இல்லாமல் என்கிட்ட வாங்குன ஐம்பது லட்சம் அன்ட் டீரித்மென்ட் செலவு முப்பது லட்சம் எல்லாம் மொத்த பணமும் இன்னும் ஒரு வாரத்துல எனக்கு வரனும் அப்படி இல்லன்னா குடும்பத்தோட கூண்டுல போட்டுடுவ உங்க மூனு பேரையும்" என்று கர்ஜித்தவன் யமுனாவின் கையைப் பிடித்து வெளியே கூட்டிச் சென்று காரில் தள்ளியவன் காரை வேகமாக ஓட்டிச் சென்றான்.

கார் நேராக நின்ற இடம் தேவ் வின் வீடு. அதுவரை எதுவும் பேசாமல் இருந்த யமுனா"நீங்க பண்ற எதுவும் செரி இல்லை" என்று அழுத்தமாகக் கூறினாள். அவளை மதிக்காமல் காரிலிருந்து இறங்கியவன் நேராக வீட்டின் உள்ளே சென்று தன் அறைக்கு விரைந்தான் அவனொடு பின்னே சென்ற யமுனா அவனின் நடையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினாள். தன் அறைக்குச் சென்று கதவினை பலமாகச் சாற்றினான் தேவ். இவனிடம் இப்போ எப்படி பேசுவது என்று யோசித்த யமுனா பிறகு கண்டிப்பாக பேசனும் பேசியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து தன் அறைக்குச் சென்றாள்.

அறைக்குச் சென்ற யமுனா மீண்டும் அழத் தொடங்கினாள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும் அதற்கு பதில் கிடைக்காமல் அவளுக்கு தலையே சுற்றி அதனால் தலைவலியே வந்தது. நேரம் ஆக ஆக தலையின் பாரம் அதிகம் ஆனதால் உடுத்தி இருந்த சேலையோடே அப்படியே படுத்து விட்டாள்.

இரண்டு மணி நேரம் உறங்கிய பின் ஏதோ ஒரு சத்தம் கேட்டு உடனே விழித்தாள் யமுனா.வெளியில் இருந்து வந்த அந்த சத்தம் வந்துக்கொண்டே இருந்தது என்னவென்று பார்க்க அறைக்கு வெளியே சென்றாள். அங்கு ஒரு இரண்டு வயதுக்குரிய பெண் குழந்தை பிரியா வோடு விளையாடிக்கொண்டிருந்தது. அந்த குழந்தை யார் என்று அப்போடு யோசிக்கும் மனநிலையில் இல்லாத யமுனா அந்த குழந்தையின் மழலைப் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தாள்.

"யமுனா நான் உன் கிட்ட பேசனும்" என்று யமுனாவின் பின்னாடி இருந்து கம்பீரமாக அழைத்தான் தேவ். அக்கணம் பயந்த யமுனா பின் சுதாரித்துக்கொண்டு "நானும் உங்க கூட பேசனும்" என்று அழுத்தமாகக் கூறினான். அவளை மாடிக்கு அழைத்துச் சென்ற தேவ் ஆரம்பிக்கும் முன்னரே "நீங்க பண்ற எதுவும் சரியில்ல நான் உங்கள கல்யாணம் பண்ணா திவா அத்தான் வேலை போகாது சொன்னீங்க அவங்க பத்திரம் கொடுத்து பணத்தை தள்ளுபடி பண்றேனு சொல்லிட்டு இப்போ என்ன பண்ணிட்டு வந்திருக்கீங்க என்ன பார்த்தா உங்களுக்கு லூசு மாதிரி இருக்கா" என்று கொட்டி தீர்த்தாள்.

அதைக் கேட்டு பயங்கரமாக சிரித்தான் தேவ். அவன் சிரிப்பில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த யமுனா அவனை சந்தேகமாக கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு எண்ணிற்கு தன் செல்லில் கால் செய்தவன்" பிரியா ஆதிராவ கூட்டிட்டு மேல வா" என்று போனை வைத்தான். இவன் என்ன பண்றான் என்று நினைத்துக் கொண்டிருந்த யமுனாவை தட்டி எழுப்புவது போல "அம்மா.. மா." என்று ஒரு குழந்தை ஓடி வந்து யமுனாவின் கால்களை கட்டிக்கொண்டது.அங்கு என்ன நடக்கின்றது என்றே புரியாத யமுனா அந்த குழந்தையைப் பார்த்தாள். அது அவள் அறையில் இருந்து வெளியே பார்த்த பெண் குழந்தை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே "அப்பா...அம்மா..பாக்கு மாட்டுது" என்று தேவ் விடம் வந்து கேட்டது. "ஆதிரா பாப்பா யமுனா அம்மா உன் கூட நாளைல இருந்து விளையாடுவாங்க நீ இப்போ பிரியா அத்தை கூட போய் விளையாடு" என்று பிரியாவை ஆதிராவை தூக்கி எடுத்துட்டுப் போக சொன்னான். மண்டை குழம்பிய யமுனா சிலையாய் நின்றாள் அவளைக் கண்ட தேவ் அவள் முகத்தின் முன் சுடக்கு போட்டு அவளை தன்னை பார்க்க வைத்தான்.

" ஆதிரா என்னுடைய மகள் எனக்கும் என் முதல் மனைவி பிரணிதா விற்கும் பிறந்த குழந்தை பிரணிதா க்கும் எனக்கும் இப்போ டைவர்ஸ் ஆகிடுச்சு இனிமேல் நீ தான் ஆதிராவின் அம்மா" என்றான் ஒரே வார்த்தையாக. அவன் சொல்லி முடிக்கும் போது யமுனா மயங்கி விழுந்தாள் அவள் கீழே விழுவதற்குள் அவளை தாங்கிப் பிடித்தான் தேவ்.
 
Why this is not continued
 
Top