Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 7

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 7

பலார் என்று கன்னத்தில் அறை வாங்கிய யமுனா கீழே விழப் பார்த்தாள் அவளை திவ்யா தாங்கி பிடித்தாள். "எவ்வளவு திமிர் டீ உனக்கு இவங்கல ஓடிப் போக சொல்றதுக்கு நீ யாரு. நீயெல்லாம் குடும்பத்துப் பெண்ணா என் கண்ணு முன்னாடி நிக்காத வெளியே போ." என்று கத்தினான் சத்யதேவ். அவமானத்தில் உடனே வெளியே சென்ற யமுனா அவளுடைய ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள். "இவன் யாரு என்ன அடிக்க என் மாமா கூட என்ன இது வரைக்கும் அடிச்சது இல்ல இவனுக்கு லாம் மிளகாய் தூள் முழுசா சாப்பாடுல கொட்டி சாப்பாடு போடனும் அவனும் அவன் மூஞ்சும் சிடுமூஞ்சி" என்று தன் அறையில் தானாகவே அவனை திட்டிக் கொண்டிருந்தாள்.

அண்ணா என்ன மன்னிச்சிருங்க என்று சத்யதேவைப் பார்த்து பயந்தான் குணா." இதெல்லாம் நீ தப்பு பண்றதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கனும். நானும் நீ விளையாட்ட நடந்துருக்கனு நினைச்ச ஆனால் நீ ரொம்ப சீரியஸா இருக்க இந்த பொண்ணும் பார்க்க நல்ல குணமுள்ள பெண் மாதிரி தான் இருக்கா.உங்க ரேண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கனுமானு யோசிச்சு பார்க்குற".அப்படி உங்களுக்கு கல்யாணம் நடக்கனும்னா உன் தோழி அதான் அந்த திமிரு பிடிச்சவ யமுனா என்ன இன்னிக்கு மாலை பார்க் ஹையாத்ல வந்து மீட் பண்ணனும்" என்றான். இதைக் கேட்ட உடனே திவ்யா மற்றும் குணா அதிர்ச்சி அடைந்தனர். "யமுனா கிட்ட நான் பேசி வரவைக்கிறேன் நீங்க எங்க கல்யாணத்த பண்ணி வைங்க ப்ளிஸ் குணா வோட குழந்தை என் வயித்துல சுமந்துட்டு இருக்க" என்று அழுதாள்." எல்லாமே உன் தோழி கைல தான் இருக்கு" என்று சென்றுவிட்டான்.

குணா திவ்யாவை அவளுடைய ஹாஸ்டலில் விட்டுவிட்டு நம்ம கல்யாணம் நடக்குறது இப்போ யமுனா சிஸ்டர் கைல தான் இருக்கு ஏனா சத்யா அண்ணாவ எதிர்த்து என்னால எதுவும் பண்ண முடியாது. அவரே இப்படி சொல்ராருனா நமக்க யமுனா சிஸ்டர் உதவி வேணும் " என்று சென்றுவிட்டான்.

திவ்யாவிற்கு யமுனா விடம் எப்படி இதை சொல்லப் போகிறோம் என்று பதற்றமாக இருந்தது. நேரே யமுனாவின் அறைக்குச் சென்று" யமுனா சாரி டீ நீயும் அப்படி ஐடியா கொடுத்தது தப்பு தான. குணா வோட அண்ணா என்ன நல்ல பொண்ணு மாதிரி இருக்குனு சொன்னாரு" என்று சொல்லி முடிப்பதற்குள் அமைதியாக உட்கார்ந்து இருந்த யமுனா எழுந்தாள் "எப்படி எப்படி தப்பு பண்ண நீங்க நல்லவங்க அதனால ஓடிப்போய் கல்யாணம் பண்ண சொன்ன நான் கெட்டவளா. அந்த சிடுமூஞ்சி என்ன போட்டு அடிக்கிறான் அவன் தலையில ஈயத்த கரைச்சு ஊத்த" என்று கொதித்தாள். "ஏய் யமுனா என் கல்யாணம் நடக்குறது உன் கையில தான் இருக்கு டீ. சத்யதேவ் அத்தான் இன்னிக்கு உன்ன பார்க் ஹையாத்ல வந்து பார்க்க சொன்னாரு. ப்ளீஸ் டீ உன்ன கெஞ்சி கேட்கிறேன் எனக்காக பொய்ட்டு வா" என்று அழுதாள். என்னது அத்தானா இப்போவே அந்த ஆள் மேல உனக்கு பாசமா என்று கேட்டாள்.

" நான் எடுக்கு அவர பார்க்கனும் ஏன் எனக்கு குடுத்த அடி பத்தலயாம் அவருக்கு என்னால லாம் அந்த ஆள பார்க்க முடியாது பார்க்கனும்னு அவசியமும் இல்ல" என்று கத்தினாள்." "யமுனா ப்ளிஸ் டீ எனக்காக பொய்ட்டு வா என்ன மாதிரியே என் குழந்தைக்கும் பிறக்கும் போதே கஷ்டத்தோடு இருக்க கூடாது உனக்கும் தெரியும் குடும்பமா இல்லனா எவ்வளவு கஷ்டம்னு" என்று அழுதாள்.

"அழாத திவ்யா மறுபடியும் முன்னாடி மாதிரி சோகம் திவ்யா ஆகிடாத. நான் பொய்ட்டு வரேன் போதுமா" என்று சமாதானப்படுத்தினாள் யமுனா.அன்று மாலை தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பார்க் ஹையாத் சென்றாள் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பரையில் காத்திருந்த யமுனா விற்கு தன் நிலையை நினைத்து அழுகை வந்தது பொதுவாக யமுனா சீக்கிரம் அழும் பெண் இல்லை தைரியமாக சமாளிப்பாள் ஆனால் எவனோ ஒருவன் தன்னை அடிக்கிறான் மிரட்டுறான் தன்னை பொம்மை போல் செயல்படுத்துகிறதால் தன் நிலையை நினைத்து அழுது வெம்பினாள். "என்ன யோசிக்குற யமுனா வா உள்ள போலாம்" என்று அவளை அழைத்து சத்யதேவ் ஒரு அறைக்குச் சென்றான். என்னது இவன் பாட்டுக்கு நம்மள ஏதோ ரூம்குள்ள வர சொல்றான் என்று யோசித்து கொண்டிருந்தாள். "ஏய் உன்ன என்ன உள்ளே வானு தனியா கூப்பிடனுமா" என்றான். எவ்வளவு திமிர் இவனுக்கு என்று நினைத்தவள் அமைதியாக அறையின் உள்ளே சென்று அங்கு இருந்த சோபாவில் உட்கார்ந்தாள் அவன் பாட்ரூம் சென்று குளித்துவிட்டு வந்தான். சத்யதேவிற்கு எப்போதுமே மாலையில் ஒரு முறை குளிக்கும் பழக்கம் உள்ளது. குளித்து முடித்து விட்டு துண்டோடு வெளியே வந்தான். இதைப் பார்த்த யமுனா விற்கு தூக்கி வாரிப் போட்டது. இவனுக்கு கொஞ்சமா வது வெக்கம் மானம் இருக்கா ஒரு பொண்ணு முன்னாடி எப்படி வந்து நிக்குறான் ஆனாலும் தினமும் உடற்பயிற்சி பண்ணுவான் போல நல்லா கச்சிதமா உடம்ப வெச்சிருக்கான் என்று நினைத்தவள் அவனுடைய பரந்து விரிந்த மார்பை பார்த்தாள் "என்ன யமுனா எனக்கு எவ்வளவு மார்க் போடுவ" என்று தன் இருகைகளையும் கட்டி அவளை நேராக நோக்கி கேட்டான். அவன் அப்படி கேட்டதில் அதிர்ந்தவள் "ச பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த மாதிரி பார்த்திருக்கேனே" என்று தன்னையே மனதில் திட்டி "பாம்பு கூட தான் பார்க்க அழகாக இருக்கு ஆனா வெஷம்" என்று சமாளித்தாள்."ஒ ஓ உன் திவா அத்தான் இல்லன்னு ஃபீல் பண்ற போல" என்று நக்கலாக கேட்டான். இவன் ஆரம்பிச்சிட்டான் என்று நினைத்தவள" நீங்க நினைக்கிற மாதிரி திவா அத்தான நான் காதலிக்கல அவர் தான் ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்காரு"என்றாள். ஹோட்டல் எக்ஸ்டென்ஷன் நம்பருக்கு கால் செய்து இரண்டு காபி வேண்டும் என்று கட் பண்ணி விட்டு அவளின் எதிரில் இருக்கும இன்னொரு சோபாவில் உட்கார்ந்தான்.

"நீ சொல்ற மாறினே எடுத்துக்கலாம் ஆனா திவாகர் என் தங்கையை கல்யாணம் பண்ணணும்னா உன்ன அவன் மறக்கனும் இல்ல வெறுக்கனும் இதுல முதல் விஷயம் நடக்காது இரண்டாவது விஷயம் நடக்கனும்னா நீ என்ன கல்யாணம் பண்ணனும்" என்றான். தன் காதில் எதாவது தப்பா விழுந்திருக்கா என்று சந்தேகம் இருந்ததால் என்ன சொன்னீங்க என்று கேட்டாள். நீ யமுனா சத்யதேவ் ஆகனும்னு சொன்ன என்னோட மனைவியா வரனும் புரியுதா என்றான்.
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

அடப்பாவி சத்யதேவ்
தப்பு செஞ்ச உன் தம்பி திவ்யா இவங்களை விட்டுட்டு எதுக்குடா ஊரான் வீட்டுப் பொண்ணை அடிக்கிறே?

தப்பு செஞ்ச திவ்யா எப்படியோ போய் தொலையட்டும்ன்னு விடாமல் சத்யா சொன்னான்னு ஹோட்டலுக்கு நீ போயிருக்கக் கூடாது யமுனா

என்னது?
அவன் தங்கச்சியை திவாகர் கல்யாணம் செய்ய சத்யதேவ்வை யமுனா கல்யாணம் பண்ணிக்கணுமா?
இது என்ன வியாபாரமா?
இது என்ன நியாயம்?
 
Top