Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முதல் காதல் ( first love ) ep - 7

Advertisement

என் இனிய இரவு வணக்கம் நண்பர்களே

நான் உங்கள் நண்பன்
ராஜ் குமார்

வாருங்கள் கதைக்குள் செல்வோம்

கலை : டேய் உங்களுக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு இங்க வந்து மொக்க போட்டுட்டு இருக்கிங்க

ராஜ் : டேய் ஜூஸ் வேணும்னா கேளுடா அதுக்கு ஏன் சம்மந்தம் இல்லாம கத்துற ?

கலை : டேய் பட்டர் பிஸ்கேட் தலையன் அங்க இருந்து உங்களையே பாத்துட்டு இருக்கான் டா அதான் சொல்லிட்டு போலாம் னு நினைச்சன்

ராம் : சரி வா ராஜ் நம்ப போலாம்

ராஜ் : எங்கடா கூப்பிட்ற

ராம் : சும்மா அப்டியே ரெஸ்ட் ரூம் போயிட்டு வரலாம் வா உனக்கு ஒரு விஷயம்

ராஜ் : அப்டி என்ன மச்சான் விஷயம் சொல்ல போற கருமம் அதுவும் பாத்ரூம் ல

ராம் : வா சொல்றன்

ராஜ் : அதான் வந்தாச்சு ல என்ன டா மேட்டர்

ராம் : கலை ஷாலினி ய லவ் பண்றான் டா அவன் attitude லாம் பாத்தாலே தெரியுது

ராஜ் : அட லூசு கூ முட்ட அத சொல்லவா கூட்டிட்டு வந்த
அவன் லவ் பண்றது எனக்கு முன்னாடியே தெரியும் நானும் அவனை கடுப்பேத்தி அவன் வாயிலேயே உண்மைய சொல்லணும் தான் ஷாலினி கிட்ட பேசி இவனை வெறுப்பேத்திட்டு இருக்கன்

ராம் : அப்டியா, எனக்கு இப்போ தான் மச்சான் மத்தவங்க விஷயமே தெரியுது

ராஜ் :, அது ஒன்னும் இல்ல லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா அப்டி தான் மத்தவங்க லவ் லாம் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சிடும்

ராம் : எதாச்சி அடிச்சி விடுவியே உம் பாட்டுக்கு

ராஜ் : சரி கலைக்கு ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கலாமா

ராம் : என்னடா பண்ண போற

ராஜ் : என் கூட வா மச்சான் இப்போ

கலை : என்னடா என் கேபின் பக்கம் வந்துருக்கீங்க அதிசயமா

ராஜ் : அது ஒன்னும் இல்ல மச்சான் ஷாலினி இருக்கா ல

கலை : (mind voice) ஐயோ என்ன சொல்ல போரான் தெர்லயே?, சொல்லுடா என்ன ஷாலினி க்கு

ராஜ் : ஷாலினி க்கு ஒன்னும் இல்ல மச்சான் எனக்கு தான் ஒரேய் அவ ஞாபகமே இருக்கு

கலை : அதுக்கு நான் என்னடா பண்ணனும்

ராஜ் : ஒன்னும் இல்ல மச்சான் நாளைக்கு அவ கிட்ட ப்ரொபோஸ் பண்லாம் னு இருக்கன்

கலை : (mind voice) அங்க கை வச்சி இங்க கை வச்சி கடைசில என் மடிலேயே கை வைக்க பாக்குறியே டா ??, மச்சான் அவளுக்கு இதெல்லாம் புடிக்காது da நீ லூசு மாறி எதுனா பண்ணி தொலைக்காத

ராம் : இரு அவளுக்கு இதெல்லாம் புடிக்காது னு உன்கிட்ட வந்து சொன்னாளா

ராஜ் : ஆமா நீங்க தான் பேசிக்கிட்டது கூட இல்லையே உனக்கு எப்படி தெரியும்

கலை : இல்ல மச்சான் பொதுவா சொன்னன் டா

ராஜ் : அவளுக்கு புடிக்குதோ புடிக்குளியோ நான் நாளைக்கு சொல்றன் அவளோ தான் டாட்

கலை : (mind voice) பேசாம உண்மைய சொல்லிடலாமா இவன் இருக்க ஸ்பீட் 'ஹ் பாத்த இன்னைக்கே சொல்லிடுவான் போலயே

ராஜ் : டேய் என்ன யோசிச்சிட்டு இருக்க

கலை : உன் லவ் எப்படி பிரிக்கலாம்னு தான் சீ சாரி டா இல்ல ராம் லவ் க்கு வேற நீ ஹெல்ப் பண்ணனும் இந்த டைம் ல நீ இவ கிட்ட ப்ரொபோஸ் பண்ணி அவ ஒகே சொல்லாம போயிட்டு அந்த பீலிங் ல இவன் லவ் கோட்ட விட்டுட்டா என்ன பண்றது

ராஜ் : என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி கற்ற கதையெல்லாம் இழுத்து போடுறான் ???

கலை : ஏன்டா சிரிக்குறிங்க

ராம் : நான் கூட ஒரு டவுட் ல தான் டா இருந்தன் நீ ஷாலினியை லவ் பன்றியொன்னு

கலை : டேய் லூசு மாறி பேசாத

ராம் : தம்பி போதும் டா முடியல ராஜ் சொன்னான் எனக்கு முன்னாடியே தெரியும் டா னு நான் நம்பள இப்போ நம்புறேன்

கலை : என்ன நம்பள இப்போ என்ன நம்புற

ராஜ் : டேய் இன்னுமா டா நடிக்க ட்ரை பண்ணிட்டு இருக்க ???

ராம் : நீ ஷாலினி ய லவ் பண்றனு எங்களுக்கு தெரியும் டா

கலை : எப்படி டா கண்டு புடிச்சீங்க?

ராஜ் : டேய் நான் அவ கிட்ட போய் பேசும்போதெல்லாம் நீ இங்க கடுப்பாகுற அப்போவெய் கண்டு புடிச்சிட்டன் நீயே சொல்லுவ னு நினைச்சன் அது மட்டும் இல்லாம நான் உன் friend டா எனக்கே விபூதி அடிக்க பாத்த ல நீ ???

கலை : சரி அதான் கண்டுபுடிச்சிட்டியே விடு

ராம் : என்னது விடா ஒழுங்கா ட்ரீட் வை வா

ராஜ் : தம்பி நீ எங்க அவனை மாட்டி விட்ர ரெண்டு பேரும் தான் ட்ரீட் வைக்கணும் வாங்க இல்ல உங்க லவ் க்கு நான் ஓலை வச்சிடுவன் வாங்க கேன்டீன் போலாம்

கலை : போலாம் அவளை கூப்பிட்ற

ராஜ் : தங்கச்சி கேன்டீன் போகலாம் வாம

ஷாலினி : ? என்னது தங்கச்சியா ராஜ் யாரை கூப்பிட்டீங்க

ராஜ் : அய்ய பால் டப்பா உன்ன தான் கூப்பிட்டேன் ஆன கூப்பிட சொன்னது கலை தான்

ஷாலினி : என்னது தங்கச்சி னா

ராஜ் : இல்ல கேன்டீன் க்கு கூப்பிட சொன்னதே அவன் தான் ட்ரீட் வைக்கிறான் வா

ஷாலினி : எதுக்கு

ராம் : அவர் கிட்டயே கேளுங்க வந்து

ஷாலினி : சரி போலாம்
to be contineud


 
Last edited:
Top