Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முதல் காதல் ( first love ) episode - 3

Advertisement

இனிய மாலை வணக்கம் நண்பர்களே...

குறிப்பு : பாகம் 2'ல் எழுத்து பிழைகள் இருந்தது அதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் தவறுகள் செய்வது மனித இயல்பு தானே அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன் பதிவேற்றப்பட்ட பின்னர் தான் நானும் கவனித்தேன்.

நான் உங்கள் நண்பன் ராஜ் குமார்...

சரி கதைக்குள் செல்வோம்

மானேஜர் : Mr கலை ராம்'ஹ கொஞ்சம் வர சொல்லுங்க.

கலை : ஒகே சார், ராம் மேனேஜர் உன்ன கூப்பிடறாரு

ராம் : எதுக்கு டா

கலை : தெரில மச்சான் காலைல திட்னாருல அதான் சாரி கேட்க கூப்பிடறாருனு நினைக்குறேன் ?

ராஜ் : ஆமாம் மச்சான் ஆஃபீஸ்லயே நீ மட்டும் தான் வேலை செய்யுற அதான் ப்ரோமோஷன் குடுக்க கூப்பிடறாரு நெனைக்குறன்?

ராம் : உங்கள போயிட்டு வந்து வச்சிக்கரண்டா

ராம் : மே ஐ கம் இன் சார்

மேனேஜர் : வாங்க ராம் உட்காருங்க

ராம் : தங் யு சார்

மேனேஜர் : ஒன் வீக் ஆஹ் ஒரு ஒர்க் சொல்லிட்டு இருக்கனே முடிச்சிட்டீங்களா அத

ராம் : அத தான் சார் பண்ணிட்டு இருக்கன் இன்னும் 2 டேஸ் ல முடிஞ்சிடும் சார்

மேனேஜர் : என்ன ராம் விளையாடிட்டு இருக்கீங்க இன்னும் ரெண்டு நாள ஆடிட்டிங் ராம் அசால்ட்டா சொல்றிங்க இன்னும் முடிக்கலைனு நீங்க எங்க வேலை பாக்கறீங்க மூணு பேரும் டூர் க்கு தான வந்து இருக்கிங்க சொன்ன வேலைய முடிக்காம என்னத்த கிழிச்சிட்டு இருந்திங்க நாளைக்கு எனக்கு ஒர்க் ஆஹ் முடிச்சி ரெகார்ட் ஆஹ் சப்மிட் பண்றிங்க.

ராம் : சாரி சார் நாளைக்கு முடிச்சிடறன் சார்.

மேனேஜர் : சாரி க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல சாரி லாம் வேணாம் ராம் வேலைய சீக்ரம் முடிங்க யு கேன் கோ நொவ்

ராம் : ஒகே சார் ??

ராஜ் : என்ன மச்சான் உள்ளே ஒரே பாராட்டு விழா போல அப்றம் ட்ரீட் எப்போ ப்ரோமோஷன்லாம் கிடைச்சிருக்கு ???

கலை : அப்டி என்ன இவரு கிழிச்சிட்டாரு இவருக்கு ப்ரோமோஷன்லாம்???

ராம் : நான் ஒன்னும் கிழிக்குல மச்சான் உள்ள கூப்டு அவன் தான்டா என்ன கிழி கிழி'னு கிழிச்சான் ???

ராஜ் : அது தான் ஊருக்கே கேட்டுச்சே ??? நீ வேற தனியா சொல்ற

கலை : ஆமாம் மச்சான் எல்லாருக்கும் கேட்டுச்சி ???

ராஜ் : மச்சான் நீ உம் னு சொல்லு மூஞ்ச கிழிச்சிலாம் அவனை

ராம் : கிழிச்சிடலாம் அடுத்த வேலை சோறுக்கு எங்க போகரது அது மட்டும் இல்லாம நீ என்ன கிழிப்பனு எனக்கு நல்லா தெரியும் மூடிட்டு வா ??

கலை : அப்பா சிரிச்சிட்டான் டா மூட் அவுட் ஆய்டிவியோனு நினைச்சன்

ராஜ் : இப்போ என்ன இவனை மூட் அவுட் ஆக்கணுமா கலை இப்போ பாரு, மச்சான் ராம்
இன்னாடா இது அந்த பொண்ண பாத்த முதல் தடவையே இப்படி இங்க திட்டு வாங்குற அந்த பொண்ணு உனக்கு செட் ஆகாது போலயே???

ராம் : அப்றம் அசிங்கமா வாயில எதுனா வந்துடும் இவன் என்ன நம்பள புதுசாவா திட்றான் டெய்லி தான் திட்டிட்டு இருக்கான் அதுக்கு ஏன்டா அந்த பொண்ணு மேல பழிய போடுற ???

ராஜ் : பாத்தியா மச்சான் கலை இவன் 5 நிமிஷம் பாத்திருப்பானா அந்த பொண்ணை அதுக்குள்ளே பாச மழைய கொற்றான்
காதல் செய்யும் பாடு யாரை விட்டுருக்கு ???

ராம் : இப்டியே பேசிட்டு இருங்க எனக்கு டைம் ஆச்சி நான் போய் வேலைய முடிக்குறன்

கலை : சரி மச்சான் கோச்சிக்காத டா வேலைய போய் பாரு

ராஜ் : சரி மச்சான் நானும் என் வேலைய கன்டினியூ பன்றன்?

ராம் : வேலையா செஞ்சிட்டு இருந்த

ராஜ் : டேய் அங்க பாருடா என் ஆப்பிள்'ஹ அவ கூட கொஞ்ச நேரம் பேசி ஈவினிங் வரைக்கும் டைம் ஓடுனோம் டா

கலை : அதனா பாத்தன்

ஷாலினி : என்ன ராஜ் வேலை லாம் முடிஞ்சா
ராஜ் : இனிமே தான் ஆரம்பிக்கணும்
ஷாலினி : சரி போய் ஆரம்பிங்க
ராஜ் : என்ன ஷாலுமா என் வேலையே உன்கிட்ட பேசறது தான

ஷாலினி : ஏன் ராஜ் நீங்க என் கூட பேசறது தான் உங்க friend ( நண்பன் ) க்கு புடிக்க்களையே அப்றம் ஏன் பேசுறீங்க

ராஜ் : யாருக்கு புடிக்கல?

ஷாலினி : கலைக்கு தான்

ராஜ் : அவனுக்கா, உன்கிட்ட நான் பேசறது அவனுக்கு புடிக்கலயா அப்டிலாம் இருக்காது நான் வேலை செய்யாம உன்கிட்ட வந்து பேசுறன்ல அப்போ அவன் தான் என் வேலையும் சேத்து பார்ப்பான் அதனால எப்பயாட்சி கோவ படுவான் வேற ஒன்னும் இல்ல

ஷாலினி : என்னவோ ராஜ் எனக்கு தப்பா தெரிஞ்சிருக்கலாம் ஒரு வேலை சரி விடுங்க மூணு பேரும் ட்ரிங்க்ஸ் பண்ணுவிங்களா

ராஜ் : ஏன் வாங்கி தர போரியா இல்ல நீ ஓசில குடிக்கலாம்னு பாக்கறியா ??

ஷாலினி : அய்ய எனக்கு வேற வேலை இல்ல பாரு

ராஜ் : அப்றம் எதுக்கு கேட்குற

ஷாலினி : சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான்

ராஜ் : சரி சாம்பார் சமைக்கும் போது எண்ணெயை முதல கடாய் ல ஊத்தணுமா இல்ல கடுக முதல போடணுமா

ஷாலினி : கடுகா அப்டினா

ராஜ் : உன் மூஞ்சி? அடுத்தவனை பத்தி தெரிஞ்சிக்கர்துலேயே இரு தெரிஞ்சிக்க வேண்டியதை தெரிஞ்சிக்காமலே இருங்க

ஷாலினி : சொல்ல முடியுமா முடியாத

ராஜ் : நான் குடிப்பன் அவங்க ரெண்டு பேரும் குடிக்க மாட்டாங்க

ஷாலினி : உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது ஏன் குடிக்க ஆரம்பிச்ச

ராஜ் : என்னோட பிளாஷ் பேக் தெரியணும் அதனா

ஷாலினி : ஆமாம் மூணு பேருதும்

ராஜ் : ??? சஸ்பென்ஸ் நாளைக்கு சொல்றன்...
to be contineued























 
Last edited:
வாசகர்களுக்கு நன்றி பிழை இருப்பின் நினைவு கூறுங்கள் திருத்தி கொள்ள முயல்கிறேன்
 
Top