Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முதல் காதல் ( first love ) episode - 6

Advertisement

இரவு வணக்கம் நண்பர்களே இது கதா நாயகியின் கதையின் தொடர்ச்சி

சரி கதைக்குள் செல்வோம்

நான் உங்கள் நண்பன் ராஜ் குமார்

ஐஸ்வர்யா : சரி ஸ்டேஷன் வந்துடிச்சி வாங்க போலாம்

லட்சுமி : சரி வாங்க போலாம் அப்றம் ஜனனி நீ வேணும்னா பாரு ஈவினிங் உன்ன தேடிட்டு இருப்பான் கண்டிப்பா

ஐஸ்வர்யா : எப்படி சொல்ற

லட்சுமி : அவன் தான் இதுவரைக்கும் பொண்ணுங்கள பாத்ததே இல்லாத மாறி இவளை பாத்தானே ???

ஜனனி : ஹேய் அவன் எதையோ பாத்துட்டு போரான் நீ எதுக்கு அவனை பத்தி பேசிட்டு இருக்க

லட்சுமி : இல்ல பையன் கொஞ்சம் பாக்க அழகா இருந்தானா அதான்

ஜனனி : அப்போ அவன் கூடயே இறங்கி அவன் பின்னாடி போக வேண்டி தான

லட்சுமி : போலாம் தான் ஆனா அவன் தான் என்ன திரும்பி கூட பாக்கலையே

ஐஸ்வர்யா : இப்போ எதுக்கு நீங்க அடிச்சிக்குறிங்க அமைதியா வாங்கடி டைம் ஆச்சி

லட்சுமி : ஹ்ம்ம் சரி வாய மூடிட்டேன்

ஜனனி : அப்படியே வா

ஐஸ்வர்யா : ஜனனி நீ என்ன கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணிக்காம ஒளவையார் ஆக போறியா

ஜனனி : என்னடி அவ மூடிட்டா இப்போ நீ ஆரம்பிக்குறியா

ஐஸ்வர்யா : இல்லடி எப்படியும் யாரோ ஒருத்தர கை புடிச்சி வாழ தான போற அப்றம் ஏன் பசங்கள தப்பவேய் பாக்குற

ஜனனி : என்னோட பயமே அதான் வர போறவன்நல்லவனா இல்ல ஊர் பொறுக்குறவன இல்லாம இருக்கணும்

ஐஸ்வர்யா : ஊர் பொறுக்குறவனா அப்டினா

ஜனனி : பொறுக்கியா கூட இருக்கட்டும் ஆனா பொண்ணுங்க பின்னாடி போறவன இருக்க கூடாது


லட்சுமி : அதுக்கு இனிமேல் எவனாட்சி பொறந்து தான் வரணும்

ஐஸ்வர்யா : சீ அப்டிலாம் ஒன்னும் இல்ல பசங்கள உண்மையா லவ் பண்ற பசங்களும் இருக்காங்க டி

ஜனனி :எந்த கிரகத்துல சொன்னிங்கனா போய் பாத்துட்டு வந்துடுவோம்??

ஐஸ்வர்யா : சரி அப்டி ஒருத்தன் கெடச்சா ஒகே வா உனக்கு

ஜனனி : கிடைச்சா பாக்கலாம்

லட்சுமி : என்னடி இவளோ நம்பிக்கையா இருக்க மாட்டாங்கன்னு

ஜனனி : ஆமாம் இந்த உண்மையான லவ் லாம் சினிமா ல தாண்டி நடக்கும் நடை முறை வாழ்க்கைல அதெல்லாம் செட் ஆகாது

ஐஸ்வர்யா : சரி அப்டி உண்மையான லவ் உனக்கு நான் காட்னா எனக்கு என்ன தர பெட் வச்சிக்கலாமா

ஜனனி : காட்டு அப்றம் பாக்கலாம்

ஐஸ்வர்யா : Oprah Winfrey and Stedman Graham இவங்க யாரு தெரியுமா favorite ஹாலிவுட் couple இவங்க ரெண்டு பேரும் marriage கூட பண்ணிக்காம 30 years லவ் பண்ணி வாழ்ந்தவங்க

ஜனனி : சரி அதான் கல்யாணமே பண்ணிக்கலையே

ஐஸ்வர்யா : ஐயோ அறிவாளி அவங்க அன்பு மட்டுமே போதும் னு வாழந்தாங்க அதான் முக்கியம்

ஜனனி : தோ பாரு எனக்கு என்னோட பேமிலி இருக்கு அதோட எனக்கு நிறைய கனவுகள் இருக்கு நான் இந்த லவ் க்கு லாம் செட் ஆக மாட்டேன் என்ன ஆள விடு

ஐஸ்வர்யா : இந்த மாறி காதலே வேணாம் னு சொல்றவங்களுக்கு தாண்டி கடவுள் அத கொடுக்க ரெடியா இருப்பாரு

லட்சுமி : ஆமாம் அவர் டெலிவரி பாய் தான ஒடனே டெலிவெரி பன்னிடுவாரு ரெண்டு true லவ் பார்சல் னு சொன்ன ஒடனே ???

ஐஸ்வர்யா : நீ வேற சும்மா இருடி அவளுக்காக ஒருத்தன் வருவான் அப்போ புரியும்

ஜனனி : சரி அப்போ பாத்துக்குலாம் இப்போ நடங்க office க்கு

to be contineued

முதல் காதல்
( First love )
எண்ணில் அடங்கா பலநூறு மாற்றங்கள் என்னுள்
அவள் கண் முன்த் தோன்றிய முதல்
நாள் !
பங்குனி வெயிலின் இலையுதிர் காலம் அதில் அவள் தரிசனம்
மார்கழி பனியாய்!
மற்றப் பெண்களின் அழகை ரசிக்க
மறுக்கும் என் கண்கள்!
பசி மறந்து காத்திருக்கும் என் உடல்
அவள் வருகைக்கு!
தூக்கம் மறந்து அவள் நினைவுகள்
ஆட்கொள்ளும் இரவுகள்!
மரத்தடியும் அரண்மனையாய் என் எதிரில் அவள் வகுப்பறை!
இறுதியில் அவள் கணவருடன் கைக் கோர்த்து சென்றால் மணவறை...



 
Top