Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மூவிலை - 1 | வெள்ளைக்கூடு |

Advertisement

writerkrishna

Member
Member
நவம்பர் 18, 2018. அதிகாலை.


வாழ்வு முடிந்துவிட்டதாக எண்ணிய காய்ந்த இலை ஒன்று, மரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நேரம் தேடிய பொழுது, காற்று கை கொடுத்து, அதனை கருணைக் கொலை செய்து, தாலாட்டி மெல்ல மெல்ல கீழிறக்கி சாலையோர வழிகாட்டியின் விளிம்பில் வைத்தது. தள்ளாடிய இலையை வேகமாக சென்ற மகிழுந்து கீழே தள்ளியது. "தஞ்சாவூர் 254 கிமீ " என்று தூசியுடன் காட்டிய வழிகாட்டியை வேகமாக கடந்து சென்ற மகிழுந்தில் சண்முகவேல் மற்றும் அவர் மகள் பிரணிதா இருவரும் பயணித்தனர்.

"அப்பா இந்த மார்னிங் செமயா இருக்குப்பா.. " பிரணிதா இயற்கையை உள்வாங்கினாள்.

"நான் தஞ்சாவூர் போலாம்னு கூப்பிடும் போது டென்த் ஸ்டாண்டர்ட், ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு, எக்ஸாம் இருக்கு படிக்கணும்னு சொன்ன?"


"ஆமா எக்ஸாம் இருக்கு.. படிக்கணும் தான். ஆனா டூ டேஸ் ல ஒன்னு ஆயிடாது. ."


"ஆமா டூ டேஸ் ல ஒன்னு ஆயிடாது. ." சொல்லிவிட்டு சிரித்தார் சண்முகவேல்.

"ஆனா அம்மா தான் வேஸ்ட்பா . அவங்க வரலைனா யாரும் போக கூடாது!! ஆமாம்ப்பா. . அங்க இருக்குற லேண்ட் எல்லாம் நம்ம லேண்ட் தான். இல்லப்பா?" அம்மாவை லேசாய் கடிந்துக்கொண்டு கேள்வியில் பேச்சை முடித்தாள்.

"ரொம்ப நாளா நம்ம நிலம் தான் பிரணி. அங்க நிறைய தென்னை மரம் சாஞ்சிடுச்சாம். கஜா புயல் வந்ததுல அந்த சைடு ரொம்ப அடி வாங்கிடுச்சு.. நெறய லாஸ். நம்ம தோட்டத்துலயே நெறய மரம் விழுந்துடுச்சு"

"அந்த கஜாவ நாம ஏதாது செய்யனும்பா..." வருத்தத்துடன் கோபமும் வெளிப்பட்டது.

"அத நாம என்ன பண்ண முடியும்? இதெல்லாம் நேச்சர் பிரணி."

"யூட்யூப்ல இருந்து ஒரு சஸின்ஸ் சேனல் விழுந்த தென்னை மரம் எல்லா மீண்டும் நட்டு வைக்க முடியும்னு ஹெல்ப் பண்ண இன்னைக்கு வராங்க.. அதான் மயிலப்பன் போன் பண்ணி வர சொன்னாரு." வண்டியை ஓட்டிக்கொண்டே பேசினார் சண்முகவேல்.

மகிழுந்து வேகமாக அந்த காலை நேர காற்றை உள்வாங்கி சென்றது.

காலை 10.27 மணி.

தஞ்சை நெருங்குவதற்கு முன்பே புயலின் விளைவு நன்றாக தெரிந்தது. நிறைய சாலைகள் சேதமடைந்து கிடந்தன. பல்வேறு புதிய வழிகள் தேடிப்பிடித்து செல்ல வேண்டியிருந்தது. சமூக வலைத்தளங்களில் #சேவ்_டெல்ட்டா என்ற பெயரில் நிவாரண உதவிகள் கோரப்பட்டன. ப்ரணிதா மரங்களை பார்த்து மனம் வருந்தி, பேசாமல் அமைதியாக வந்தாள்.

"பசுந்தோகை" என்ற பெயர் பலகை கொண்ட வேலியை கடந்து மகிழுந்து உள்நுழைந்தது. கருங்கல்கள் கொண்டு அடுக்கப்பட்டு அதன்மேல் மண் பரப்பி சமன் செய்த சாலை. அதில் நீண்ட நாள்கள் மழை பெய்தததை வண்டிகளின் சக்கரத் தடங்கல் உறுதி செய்தன. இருபுறமும் சிலமரங்கள் காற்றை எதிர்கொண்ட கர்வத்துடனும் பல மரங்கள் தோல்வி கொண்ட நம்பிக்கையுடனும் இருந்தன. இவற்றை சோகமாக பார்த்தபடி வந்தாள் பிரணிதா.

மகிழுந்து மெல்ல அந்த பெரும் வீட்டின் முன்பு நின்றது. அந்த வீட்டை எந்த வகையிலும் சேர்க்க இயலாது. மிகப்பெரிய வீடு. வீட்டை சுற்றி தென்னந்தோப்பு. இரண்டு மாடி கொண்டு 3600 சதுர அடியில் வீடு அமைந்திருந்தது. சதுர வடிவ வீட்டை சுற்றி தாழ்வாரம் ஓட்டினால் வேயப்பட்டு, மற்ற இடங்களில் கான்கிரீட் போடப்பட்டு, மொட்டை மாடியில் தடுப்புகள் ஏதுமில்லாது, மத்தியில் 20 அடி விட்டத்தில் உருளை வடிவ சுவர் எழுப்பப்பட்டு அதன் உச்சியில் கூம்பாக ஓடு வேயப்பட்டு அதிலிருந்து வெளிவர நேரடி வாயிலில்லாமல் காற்றோட்ட வசதியுடன் சாளரங்கள் வைத்து கட்டப்பட்டு இருந்தது.


வண்டி வந்து நின்றதும், வீட்டின் மறுபக்கத்திலிருந்து மயிலப்பன் ஓடி வந்தான்.

"ஐயா, வாங்க ஐயா!"

"வரங்கண்ணே.. எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா தான்யா இருக்கேன். ஆனா மனசு தான்யா வலிக்குது. இப்படி பண்ணிட்டு போயிடுச்சுங்க. மரமெல்லாம் ஒடிஞ்சு போச்சுங்க.."

"ம்ம்.. என்ன பண்றது. அந்த டீம் வந்துட்டாங்களா? "

"இப்போ தான்யா போன் பண்ணாங்க. இருபது நிமிஷத்துல வரதா சொன்னாங்க. அடடே. சின்ன ராணிம்மா கூட வந்துருக்காங்களா?" பிரணிதாவை பார்த்து சொன்னார். அவள் அழகு சிரிப்பு சிரித்து "ஆமா.." என்றாள்.

"உள்ள போலாமா?" பிரணிதாவை பார்த்து சண்முகவேல் கேட்டார் .

தலையாட்டல் விடையாய் வந்தது.


வீட்டினுள் மூவரும் சென்று பொது அறையில் அமர்ந்து மயிலப்பன் கொண்டுவந்த தேநீரைப் பருகிக் கொண்டிருந்தபோது வண்டி சத்தம் கேட்க மூவரும் வெளிவந்தனர்.

"ஹலோ சார்... 'வளம்பெறுவோம்' யூடியூப் ஒளியலைவரிசையில்(சேனல் ) இருந்து வர்றோம். நாந்தான் உங்களுக்கு கால் பண்ணது. 'பிரபு' " சொல்லிக்கொண்டே ஒளியலைவரிசை தலைமை இயக்குநர் இறங்கினார். உடன் அவரது குழுவினை சேர்ந்த சிலரும் வந்தனர்.

"வாங்க... ஏதாது சாப்பிடுறீங்களா? இல்லை, வேலை ஆரம்பிக்கலாமா?" வரவழைத்ததுடன் நேரடியாக விஷயத்துக்கு வந்தார் சண்முகவேல்.

"ஆரம்பிச்சுடலாம் சார்"

"சரி வாங்க. எத்தனை மரம் இப்போ நட போறோம்?"

"உடைஞ்சிபோன மரங்களை ஒன்னும் பண்ண முடியாது சார், முதல வேரோட சாஞ்ச மரங்களை நடுவோம் சார். பின்ன மத்த இடங்கல்ல புது கண்ணு வச்சுடலாம் சார்"

"சரி வாங்க." சண்முகவேல் குழுவினை அழைத்து செல்ல, பிரணிதா மயிலப்பனை பார்த்து வீட்டைச் சுற்றிக்காட்ட கூட்டிப்போக சொன்னாள். அவளுக்கு வீட்டை சுற்றிப்பார்க்க ஆர்வம் அதிகமிருந்தது. அவனும் அழைத்து சென்றான்.

சண்முகவேல் இடத்தை காண்பித்துவிட்டு அமர்ந்து கொண்டார். வேலைகள் தொடங்கின. சண்முகவேல் மனதில் இருந்த வருத்தங்கள், ஏதேதோ நினைவுகள் முகத்தில் பெரும் இருளை கொண்டு வந்து சேர்த்திருந்தது . கண்களை லேசாக மூடினார். நினைவு நேராய் அவரது அப்பா முத்துசுவாமியிடம் கொண்டு சேர்த்தது. "அப்பா......." என மனதுக்குள் ஒரு முறை சொல்லிக்கொண்டு நீண்ட பெருமூச்சு விட்டார். சில நிமிடங்களுக்கு பிறகு,

"சார்ர்ர்ர்ர்ர்...................." பிரபு சண்முகவேலை அழைத்துக்கொண்டே பதற்றத்தோடு ஓடி வந்தார்.

திடுக்கிட்டு எழுந்தவர் "என்ன? " என்பதுபோல் ஏறிட்டு பார்த்தார்.

"சார்... லைட்டா வேற ஏதோ ஸ்மெல் வருது சார். ஸ்டாப் பண்ண சொல்லிருக்கேன். நீங்க வந்து பாருங்க...."

மெல்ல எழுந்து நடந்தார். மரம் நடுவதற்க்காக வெட்டிய குழியை சுற்றி வேலையாட்கள், மற்ற குழிகள் தோண்டுதலை அப்படியே விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். யூட்யூப் குழுவினரும் சேர்ந்து, கூட்டம் பெரிதாய் இருந்தது. அவர்கள் முகத்தில் கலவரம் தெரிந்தது. கூட்டத்தினரை விலக்கிக்கொண்டு உள்நுழைந்து பார்த்தார் சண்முகவேல். மேலும் தோண்டாமல் சண்முகவேல் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர். ஆச்சர்யத்துடன் வந்த சண்முகவேல் மேலும் தோண்டச்சொல்லி கையால் சைகை காட்டினார்.


வேலையாள் ஒருவன் குழிக்குள் இறங்கி மண்வெட்டியால் ஒருமுறை வெட்டி மண்ணை வெளியே கொட்டினான். கொட்டிய மண் பெரிய கட்டியாக ஏற்கனவே கொட்டப்பட்ட மண்குவியலின் மீது விழுந்தது. ஈரத்தினால் மண்கட்டி பிளவுபட்டு சறுக்கியது. அப்போது கடவாய் உடைபட்டு கண்ணிற்கு பதிலாக இரு துளைகள் கொண்ட ஒரு மனித மண்டையோடு லேசாய் மண் குவியலின் மீது சறுக்கி இருமுறை சுழன்று, பின் கம்பீரமாய் நின்றது!



தொடரும்...

அடுத்த அத்தியாயம் விரைவில்.


`````````````````````````````````````````````````````````````````````

நான் உங்களிடம் பேச ஓரிடம்!

இந்த அத்தியாயம் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

பகிருங்கள்! விமர்சியுங்கள்! மதிப்பீடளியுங்கள்!

ஆதரவிற்கு நன்றி.

*வினை மட்டுமே உயிர்*

கிருஷ்ணா பச்சமுத்து
 
:D :p :D
உங்களுடைய "மூவிலை"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கிருஷ்ணா பச்சமுத்து தம்பி
 
Last edited:
எனக்கு திரில்லர் ஸ்டோரி நா ரொம்ப பிடிக்கும். ?மகிழுந்து நா? வண்டியா? :unsure:
nice (y)(y)
 
ஆரம்பமே சூப்பர்
தென்னை மரக் குழியில் மண்டையோடு வருதே
அது யாருடையது?
சண்முகவேலின் அப்பா ஏதாவது வில்லங்கம் செய்திருக்கிறாரா?
இல்லை சண்முகவேலே செய்தாரா?
 
Top