Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மூவிலை - 4 | திசுவுரம் & புதையலுக்கருகே! | கிருஷ்ணா பச்சமுத்து | திகில் நாவல்

Advertisement

writerkrishna

Member
Member
மூவிலை - 4

திசுவுரம் & புதையலுக்கருகே !​
- கிருஷ்ணா பச்சமுத்து​

| திசுவுரம் |​

சண்முகவேலும் பவளமும் மயங்கிய நிலையில் இருந்த வட்டச்செயலாளர் சுப்ரமணியைத் தூக்கிக்கொண்டு படிவழியே கீழிறங்கி, கீழே இருந்த அறையின் சிறிய கதவினை திறந்தனர். பவளம் விளக்குகளை ஒளிர விட்டாள். அறை முழுவதும் நீல நிற விளக்கு ஒளிர்ந்தது. அறை மிகச்சிறியதாக இருந்தது. பழைய மேசைகள், நாற்காலிகள், ப்ரணிதா சிறிய வயதில் பயன்படுத்திய விளையாட்டுப் பொருள்கள் மற்றும் பல பழைய பொருட்கள் இருந்ததன. இருவரும் உடைந்திருந்த நாற்காலிகளை கடந்து பழைய மேசை அடுக்குக்களின் பின்னே சென்று மறைவாய் இருந்த அறைக்குள் நுழைந்தார்கள். ஒளியை பரவவிட்டுப் பின் சுப்பிரமணியத்தை நடுவில் இருந்த மேசையின் மீது கிடத்தினார்கள். பின் ரத்தம் ஏதுமில்லாமல் முகத்தையும் வாயையும் பொத்தி சுப்பிரமணியின் மூச்சை நிறுத்தினார்கள். இரும்பு மற்றும் தகரத்தில் செய்யப்பட்டிருந்த சவக்கிடங்குகளில் இருப்பது போன்ற பெட்டிகள் அதைவிட கொஞ்சம் அளவில் பெரியதாய், அந்த அறையின் இரு பக்கங்களிலும் இருந்தன. மொத்தம் 8 நெடுவரிசைகள் பக்கத்திற்கு நான்காய் இருந்தன. வரிசைகள் மூன்று இருந்தன.

"பி காலம் பிரீ தான?" சண்முகவேல் கேட்டார்.

"ஆமா... ஈ டு எப் தான் நெக்ஸ்ட் ஸ்டேஜ் ல இருக்கு..." பவளம் பதிலுரைத்தாள்.

"ஹ்ம்ம்.. அதெல்லாம் 140 டிகிரிக்கு மேல ஹீட் பண்ணனும் அப்போதான் எக்ஸ்பெக்ட்டு கரெக்ட்ஆ வரும்.. இப்போ பாடிய புடி, பி-3 ல வைப்போம் .."

சுப்ரமணியின் ஆடைகள் அனைத்தையும் களைந்தனர். நகைகள், கையில் கட்டியிருந்த சாமிக்கயிறு என எதையும் விடாமல் வெறும் உடலை மட்டும் குறிப்பிட்ட பெட்டியில் வைத்து இரண்டு ஆட்டுத்தொடை மாமிசத்தை தலைக்கு ஒன்று காலுக்கு ஒன்றென வைத்தார்கள். பின்னர் மரச்சில்லுகள், மரத்தூள் மற்றும் குதிரை மசால் தண்டுகள் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்துக் கலந்த கலவையை அதிகமாக உடலைச்சுற்றி கொட்டினார்கள். பின் உடலைத் திருப்பி கலவை உடலை சூழ்ந்துகொள்ளுமாறு செய்தனர். பின் பெட்டியை அடைத்துவிட்டு சண்முகவேல்,

"இதெல்லாம் ஹீட் பண்ணி டிஸ்போஸ் பண்ணிடு பவளம்.. நான் ஈ டு எப் காலம்ல இருக்கிறத கவனிக்கிறேன்.." என்று சொல்லி சுப்ரமணியன் உடைமைகளை பவளத்திடம் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

அரைமணி நேரத்திற்கு பிறகு,

அந்த அறைக்கதவை இருவரும் சாத்திவிட்டு பின் சுழல்படிக்கட்டுகளின் வழியே வீட்டின் கூடத்திற்கு வந்தமர்ந்தனர்.

"நாளைக்கு பூஞ்செடிகளுக்கு உரம் போடணும்.. "

சொல்லிவிட்டு சிரித்தாள் பவளம். உதடுகளை ஒரு கோட்டில் குவித்து பதிலுக்கு சத்தமில்லாமல் சிரித்தார் சண்முகவேல்.

அதே நேரம்,

காவல்துறை கண்காணிப்பு அறை!

ஒரு அழைப்பு வந்தது. காவலர் ஒருவர் எடுத்தார். மறுபக்கம்,

"என் பேர் ரோஷ்ணி, என் அப்பாவ ஈவினிங் ல இருந்து காணோம்..."


| புதையலுக்கருகே ! |​

கற்பனைக்கோடுகளைக் கண்டவுடன் மதன்ராஜின் இமைகள் விலகி ஆச்சர்யத்தை வெளிப்படுத்தின. கையில் செல்லிடப்பேசி எடுத்து சுந்தரத்திற்கு அழைப்பு விடுத்து, பேசினார். பேசிவிட்டு தாழ்வாரத்தில் நடந்து சுற்றிலும் பார்த்துவிட்டு, அறைக்கதவின் முன்னே வந்து நின்றார். மதன் வரட்டும் என மயிலப்பன் காத்துக்கொண்டிருந்தவர் அவர் வந்தவுடன் "தொறக்கவா சார்.." என கேட்டுவிட்டு அனுமதி கிடைத்தவுடன் திறந்தார். ஷண்முகவேல் அழைத்ததால் மயிலப்பன் கீழே சென்றார்.

உள்ளிருந்து ஒருவிதமான வாசனை நாசியை தொட்டுச்சென்றது. ஒரு மகா ரசிகனின் அறைக்குள் வந்திருந்தார். அந்த அறையில் சுற்றிலும் பெரியதாய் ஓவியங்களாகவும், புகைப்படங்களாகவும் இருந்தது. வெளியே அறை உருளை வடிவமாய் இருந்தாலும் உள்ளே அறுங்கோண வடிவில் இருந்தது. இரண்டு பக்கங்களில் சுவரோடு பதிக்கப்பட்ட புத்தக அலமாரி. அதில் ஆங்கிலம், தமிழ், மலையாளம் என மும்மொழி புத்தகங்கள் இருந்தன. மலையாளத்தில் பெரும்பாலும் நாவல்கள், சிறுகதைகள் போன்றவையே இருந்தன. ஆங்கிலத்தில் கட்டடக்கலை பற்றியும், மனித உடலமைப்பை பற்றியும் பல புத்தகங்கள். தமிழில் கட்டுரைகள், கவிதை தொகுப்புகள், இயற்கை தொடர்பான ஆராய்ச்சி புத்தகங்கள், புதினங்கள் என இரண்டு பக்கத்தில் ஒரு பக்கம் முழுவதும் தமிழுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது போலிருந்தது. அந்த அலமாரியில் மேலிருந்து இரண்டாம் வரிசையில் ஒரே ஒரு புத்தகம் மட்டுமே பெரிய விரிப்பு விரித்து அதன் மீது வைக்கப்பட்டிருந்தது. மதன் அருகில் சென்று பார்த்தார். தூசி படிந்திருந்ததை புத்தக மேற்பரப்பு தெளிவாய் எடுத்துக்காட்டியது. தூசியை விளக்கினார். "பொன்னியின் செல்வன்" என தன் பெயர் சொன்னது புத்தகம். திறந்தார். இதற்கு முன் திறந்து படித்ததற்கான தடையங்களே இல்லை. புதிதாய் அப்படியே இருந்தது. சில நிமிடங்கள் புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்த மதன் சற்று நேரம் கழித்து, தன்னிலை உணர்ந்து, ஏதாவது துப்பு கிடைக்கிறதா என தேடலானார்.

இருபது நிமிடங்களுக்கு பிறகு. மதன் படிவழியே கீழிறங்கி வந்தார். பெரிதாய் ஒன்னும் கிடைக்கவில்லை. புத்தகங்களும் ஓவியங்களுமே கிடைத்தன. தடயவியல் துறையிலிருந்த நாகராஜிடமிருந்து செல்லிடப்பேசியில் அழைப்பு வந்தது. பேசிவிட்டு பின் வீட்டின் முன்னே வந்து, விழாதிருந்த வேம்புவின் அடியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து, சாய்ந்து கண்களை மூடினார். தனக்குள் பேசினார்.

"மொத்தம் இதுவரை 11 ஸ்கெலிடன்ஸ். எல்லாம் சரியா 8 வருசத்துக்கு முன்னாடி கொல்லப்பட்டிருக்கு. அப்டினா சரியாய் 2010ம் வருஷம். இதுல நேரடியா தொடர்பானவங்க மயிலப்பன், சண்முகவேல், அவரோட அப்பா முத்துசுவாமி. மயிலப்பன் இங்க வேலைக்கு வந்தே ஏழு வருஷம்தான் ஆகுது. முத்துசாமி இறந்தும் ஏழு வருஷம் தான் ஆகுது. இரண்டும் 2011ம் வருஷம். மயிலப்பன் சொன்னது உண்மைனா சண்முகவேல் இல்லனா முத்துசுவாமி பண்ணிருக்கணும். ஏன் இந்த விஷயத்தை பத்தி பேச்சை எடுத்தாவே சண்முகவேல் ஒரே வார்த்தையா எனக்கு தெர்ல னு சொல்லணும்? நமக்கு கம்பளைண்ட் கொடுத்ததே அவர்தான். அவரா வந்து கொடுத்தாரா இல்ல விஷயம் பெருசாயிடுச்சு னு கொடுத்தாரா..? சரி, மயிலப்பன் அன்ட் சண்முகவேல் ரெண்டு பேர் சொல்றதும் உண்மைனா மீதி இருக்கிறது முத்துசுவாமி. அவர்தான் ஆரம்பம் முதலே இந்த நிலத்தை பத்தியும் வீட்டைப் பத்தியும் தெரிஞ்சவர். ஆனா அவர் ரொம்ப நல்லவர்னு ஊரே சொல்லுதே.. எப்போமே ரொம்ப நல்லவர் னு பேர் எடுத்தவங்கதா குற்றவாளியா? தனி ஒரு ஆளா இத்தனை காரியங்களை செய்யமுடியுமா? அதுவும் வயதான காலத்தில்? இன்னும் நமக்கு தெரிய வேண்டிய மனிதர்கள் இருக்கணும் இல்லைனா இங்க இருக்குறவங்க பொய் சொல்லணும். இதுவரைக்கும் கிடைச்சுது 11. இன்னும் ரெண்டு ஸ்கெலிடன்ஸ் இடையில இருக்கிற மரங்களை தோண்டினா கிடைக்கும்.. மொத்தம் 13.. இன்னும் இங்க வேறேதாவது இருக்கானு தெர்ல.. சுத்தியும் தோட்டமா இருக்கு. இன்னும் அதிக ஸ்கெலிடன்ஸ் கிடைக்க வாய்ப்புகள் ரொம்ப அதிகம். இறந்தவங்கல்லாம் யார் யார்? இவங்க உறவுக்காரங்களா? இல்ல வேறு யாரோவா?" யோசனை தொடர்ந்தது.

நன்றாக உருண்டோடி சிக்கல் போட்டுக்கொண்ட நூற்கண்டில் ஒவொரு சுற்றையும் இழுத்து பார்த்து சிக்கல் விலகுகிறதா என்று பார்ப்பது போல மூளையை கசக்கிகொண்டிருந்தார். சற்று நேரத்திற்கு பின் கண்விழித்தார்.

"செந்தில்! எனக்கு உடனே 2010ம் வருஷம் பைல் ஆன எல்லா மிஸ்ஸிங் கேஸ் டீடெயில்ஸ் வேணும்.." கத்தினார் மதன்.

கத்திவிட்டு வாய்க்குள் இவ்வாறு முனகினார் மதன்.

"காலக்கோட்டில் நிகழ்வுகள் குறிக்க வேண்டிய வருஷம், 2010"



தொடரும்...
அடுத்த அத்தியாயம் ஜூன் 28, 2020 அன்று!
`````````````````````````````````````````````````````````````````````
பகிருங்கள்! விமர்சியுங்கள்! மதிப்பீடளியுங்கள்!
ஆதரவிற்கு நன்றிகள்!!!
*வினை மட்டுமே உயிர்*
- கிருஷ்ணா பச்சமுத்து
 
அடப்பாவிகளா
புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து சுப்பிரமணியின் ஜோலியை முடிச்சிட்டீங்களே
மனித உடல்கள்தான் திசுவுரமா?
வெளங்கினாப்புல தான்

"ரத்தம் வராமல்?" or
"சத்தம் வராமல்?"
 
Last edited:
சுப்பிரமணியை இப்படி கொன்னுட்டீங்களே ரெண்டு பேரும், இதுதா உரமா.....
மதன் கண்டுபிடிச்சிடுவாரா ?????????
 
Top