Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -06

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -06

யாரடி நீ என்று இனியன் கேட்டதற்கு, பயத்தில் ஆ..ஆ என அழுது ஊரை கூட்டினாள் தேனு...

குட்டிமா.. அழாதடா, டேய் இனியா இப்படியா சின்னபிள்ளையை பயமுறுத்துவ...பார்த்து பேசுடா..நீ வாம்மா கண்ணை துடை..சரண் அவளுக்கு ஆதரவாக பேச..

அண்ணா என்று அவனிடம் ஒட்டிக்கொண்டாள்...

உன் பெயர் என்னம்மா சரண் கேட்க

நான் ஆரா... தன் அழுகையை நிறுத்திவிட்டு, இனியனை பார்த்து அப்பவே எங்க அம்மா சொன்னாங்க... நீ ரொம்ப முரடன்னு, அப்பறம் போக்கிரி பையன்னு..

அப்படியா சொல்லுச்சு உங்க அம்மா...

ம்ம்... உனக்காக நான் சாக்லெட் இல்ல வாங்கிட்டு வந்தேன்...தன் கண்கள் விரிய இனியனை பார்த்தாள்..

இங்க வா, மேஜீக் செஞ்சி எடுத்து தரேன். தன் ஒரு கையை அவள் முகத்தின் முன்னால் பாஸ்டாக சுற்றி விட்டு அவள் அசந்தநேரம் பாக்கெட்டிலிருந்து சாக்லெட் எடுத்து தந்தான்..

ஹய்...சாக்லெட் எப்படி வந்துச்சு அண்ணா... என்று வாய்வரைவர..

பெயரவிட்டே கூப்பிடு இனியான்னு...

எனக்கு ரொம்ப பிடிக்கும் டையிரி மில்க் சாக்லெட்.. ம்ம் எப்படி வந்துச்சு இனியா.. நீ நல்ல பையனா இருக்க...

நான்தானே போகபோக நான் எவ்வளவு நல்லல பையன் உனக்கு தெரியும், ஈ..ஈன்னு அசடு வழிய சிரித்தான். சாக்லெட் வாங்கிட்டு நல்ல பையன் சொல்லுது பாருடா சரணு... அதற்குள் சத்யமூர்த்தி உள்ளே வந்தார்.. அனைவரும் சாப்பிட்டு தூங்க சென்றனர்...

காலை 7.00 மணிக்கு குருவிகள் சத்தம் கீச் கீச்ன்னு கேட்க...முகத்தில் விழுந்த சூரிய வெளிச்சத்தில் கண்ணை திறந்தான் இனியன்... அதற்குள் சரண் எழுந்து குளித்துவிட்டு வர...

டிஷர்ட் போட்டுக்கொண்டே, டேய் மச்சான் என்ன காலையிலே குளிச்சிட்ட...இனியன் கேட்க..

ஆமாம்டா காலையிலே தூக்கம் தெளிச்சிடுச்சு...

பிரஷ் பண்ணிக் கொண்டே வெளியே வந்தான் இனியன்... காம்பௌவுன்ட் உள்ளே ரைட்டா, ராங்கா என்று கண்ணை மூடி கட்டத்தில் காலை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் தேனு..

வாயிலிருக்கும் பேஸ்டை வெளியே துப்பி, வெளியே இருக்கும் குழாயில் தன் வாயை கொப்பளித்துவிட்டு அவளருகில் வந்தான் இனியன்..

அய்யோ திரும்பவும் குட்டிமாவை மிரட்டுவானோ என்று நினைத்து சரனும் அவனையே பார்த்திருந்தான்...

அவளை சுற்றி ஆறு,ஏழு வயது பிள்ளைகள் விளையாட்டில் இருக்க... அவர்களை துரத்திவிட்டான் இனியன்...

சின்னபசங்களோட விளையாடுது, ஏய் பெரியபொண்ணாயிட்டல்ல..

ஆமாம் போனவருஷம் தானே வயசுக்கு வந்தேன்.. சடங்குகூட சுற்றினாங்க... மாமாவும் வந்தாங்களே உங்களுக்கு தெரியாதா..

தன் தலையில் அடித்துக்கொண்டான், நாம்ம என்ன கேட்டா இவயென்ன சொல்லுறா பாரு...

எந்த மாமா..

ம்ம் உங்க அப்பா தான்..

எனக்கு தெரியாம பங்ஷனுக்கு வேற வந்திருக்காரு தன் அப்பாவை மனதில் திட்டிவிட்டு... சின்ன பசங்ககிட்ட விளையாடிட்டு போடி வீட்டுக்கு..

டேய் சரண், நல்லவேளை அகிலா அத்தைக்கு என்னை பிடிக்காம போனது இல்லனா இவளை கட்டிக்கிட்டு பாண்டியாட்டம், பல்லாங்குழிதான் ஆடனும்...மேலே கையை உயர்த்தி காட்டி கடவுளே என்னை காப்பாத்திட்டபா என்று சொன்னவன்தான்...

இன்று அவள் மடியில் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறான்...

காலை உணவாக இட்லியும், நாட்டுகோழி குழம்பும் அவர்களுக்கு பரிமாறினார் சத்யா..

மாமா எங்கே அத்தை ஆளையே காணோம் நீங்களும் இந்த வீட்டிலே இருக்கீங்க..

அவங்க அம்மாவீட்டுக்கு போயிருக்கா வர ஐந்து நாளாகும்..

ஹா...ஹா சிரித்த இனியன் அதுக்குதான் எங்களை வரச்சொன்னீங்களா மாமா...

சரி எல்லோரும் கிளம்புங்க நம்ம தோப்புவீட்டுக்கு போகலாம், அங்கே பம்புசெட் இருக்கு அதிலே குளிச்சிக்கலாம் இனியா..

சரிமாமா.. அனைவரும் தோப்புவீட்டில் இறங்கினார்கள்.. ஆரா இரண்டுபேரையும் பம்புசெட் இருக்கும் இடத்தை காட்டிட்டு வா... நான் இங்க சமைக்க ஆரம்பிச்சிட்டாங்களா பார்க்கிறேன்..

இருவருடன் ஆரா நடந்துபோக, அந்த வழியில் ஒரு பையன் என்ன தேனுமிட்டாயி இந்தபக்கம் கலாய்க்க..

டேய் தேனுமிட்டாய் சொன்ன பல்லை பேத்துடுவேன் சொல்லிட்டேன்..

ச்சே இவனுங்களுக்கு இதே பொழப்பா போயிடுச்சு...

நீயே சொல்லு இனியா, எவ்வளவு அழகாக ஆரான்னு பெரு.. எங்க அம்மா சொல்லுச்சு தேனுன்னு யாரோ விளங்காதவன் பெயரு வச்சானாம்.. எங்கப்பாவும் அந்த பெயரையே வச்சிடுச்சு..

அந்த விளங்காதவனால்..தினமும் இவனுங்க தேனுமிட்டாயின்னு கலாய்க்கிறானுங்க..

அதைகேட்டு சரண் வயிற்றை பிடித்து சிரிக்க... அவளை முறைத்தபடியே நின்றான் இனியன்...வலது கையால் அவளின் பின்பக்கம் தலையை தட்டிவிட்டு அமைதியாகயிருந்தான்..

பின்னாடி திரும்பி பார்த்து ஆரா...யாரு என்னை அடிச்சது.. திரும்பி திரும்பி பார்த்தாள்..

என்ன பார்க்கிற..

யாரோ அடிச்சாங்க..

இங்கபாரு புளியமரத்தில பேய் இருக்குமா, அது யாருக்கும் தெரியாம அடிக்குமா..

பயந்துபோய் அப்படியா இனியா... எங்க பாட்டிகூட சொல்லுருக்காங்க... நம்ம வேற புளியமரத்துக்கு கீழே நிற்கிறோம், அண்ணா வேற லூஸூ மாதிரி சிரிக்குது... பேய்ன்னா எனக்கு பயம்...நான் உன் கையை பிடிச்சிக்கவா... ப்ளீஸ்..

ம்ம்..யோசித்துவிட்டு உன்கிட்ட எப்படி கையை கொடுக்கிறது... நான்தான் போக்கிரி பையனாச்சே... சரி என் சுண்டுவிரலை பிடிச்சிட்டு வா... இனியா இனியா சொல்லிட்டே வா.......

ஏன் உன் பெயர சொல்லனும்...

ஆம்பள பசங்க பெயர சொன்னா, பொம்பளை பேய் விட்ரும்மா..

இனியா இனியா என்று சொல்லிக்கொண்டே நடந்தாள்.. விளங்காதவனா நானு... எவ்வளவு அழகாக சொல்லுறா பாரு...

....

அன்று இரவு ஒன்பது மணிக்கு சைக்கிளில் போய்க்கொண்டிருந்த அந்த பையனை மடக்கினார்கள். சரணும், இனியனும்..

முகத்திலே ஒரு குத்துவிட்டான், ஏன்டா பெயரவச்ச நானே தேனுன்னு கூப்பிடல... தேனுமிட்டாயா உனக்கு.. முதுகிலும், வயிற்றிலும் அடித்தான்... அண்ணா தெரியாம சொல்லிட்டேன்.. இனிமே சொல்ல மாட்டேன் அந்த பையன் அழ..

விடுடா மச்சான் , பையன் பயந்துட்டான்...

.....

அடுத்த நாள், மாடியில் இனியன் ரூமில் அந்த ஊர் பசங்க மூவரும் சேர்ந்து திருட்டு தம் அடித்துக் கொண்டிருக்க... அதில் ஒருவன் மச்சான் நேற்று பார்த்த மலையாள பேய்படம் நடுவுல ஒரு பிட் ஒட்டனா பாரு.. நைட்டு தூக்கமே வரலடா..

டேய் மெதுவா பேசுடா மாமாவுக்கு கேட்டுச்சு அவ்வளவு தான்...யாருக்கும் தெரியாம திருட்டு தம்மு வேற...

சரண் இனியனின் தோளை சுரண்டி குட்டிமா பார்த்துட்டு இருக்கா சொல்ல.. சாப்பிட அழைக்க மேல வந்த ஆரா இவர்கள் செய்வதை பார்த்தபடி நின்றிருந்தாள்.. அந்த ஊர் பசங்க டேய் சத்யமூர்த்தி மாமாகிட்ட போட்டு கொடுத்துடுவா நாங்க கிளம்புறோம் என்று ஓடிபோய்விட்டார்கள்.

சிகரேட்டை கீழே போட்டு, ஏய் ஆரா இங்கவா என்று இனியன் கூப்பிட

இரு அப்பாகிட்ட சொல்லுறேன் திரும்பி போக...அவள் கையைபிடித்து இழுத்து வந்தான். சரணை வெளியே போடா என்று கண்னை காட்டினான்...

டேய் குட்டிமா பாவம்டா என்று சரண் கண்களால் கெஞ்ச, அதை இனியன் கண்டுகொள்ளவில்லை.

இங்கபாரு ஆரா... நான் ஏன் தம் அடிச்சேன் தெரியுமா... நாங்க பார்த்த பேய் படம் அப்படி..

அவனை நம்பாமல் பார்க்க... அவ்வளவு பயமாயிருந்தது... அப்பதான் நம்ம கிஷோரில்ல தம் அடிச்சா பயம் போயிடும் சொன்னான்...

நீ உட்காரேன்.. நான் கதை சொல்லுறேன்... கேளு ,அந்த பேய் பங்களா.. அதுல புதுசா கல்யாணம் ஆனவங்க குடி போறாங்களா... நைட்டு 12 மணி ஊன்னு நாய் ஊளை விடுது...டப் டப் கதவு தானா அடிக்குது.. ஜன்னல் ஒரமா அந்த பொண்ணு திரும்பி நிற்குது... பயந்தபடியே அந்த கதையை கேட்ட கொண்டிருந்தாள் ஆரா

பின்னாடியே போய் ஹீரோ அந்த பொண்ணு மேல கையை வைக்கிறான். டக்குனு அந்த பொண்ணு திரும்புது.பே...ன்னு இனியன் கத்த..

அய்யோ எனக்கு பயமாயிருக்குன்னு.. அவனின் தோளை அனைத்துக்கொண்டு பயத்தில்கண்ணை இறுக்கி மூடினாள். தனது நோக்கியா செல்லில் படம்பிடித்து அவள் கண்ணத்தில் முத்தமிட்டான்...

அவனது செயலில் திடுக்கிட்டு ஆரா இனியனை தள்ளிவிட்டாள்...

என்ன அப்படி பார்க்கிற உங்கப்பாகிட்ட சொன்ன நீ என்னை கட்டிபிடிச்சிட்டு முத்தம் கொடுக்க சொன்னேன்னு சொல்லுவேன் என்றான்.. இதோ செல்லுல போட்டோ கூட எடுத்து வச்சிருக்கேன்..

ச்சீ நீ எங்கம்மா சொன்ன மாதிரி போக்கிரி இல்ல இல்ல பொறுக்கி பையன்... எங்க வீக்கிமாமா தான் நல்லவங்க என்றாள்..

என்னடி சொன்ன பொறுக்கியா, முத்தமிட்ட கண்ணத்தில பளாருன்னு அறைவிட்டான்... இனிமே என் முகத்தில முழிக்காதே... போடி வெளியே என்றான்.

அழுதுக்கொண்டே ஆரா வெளியே வர... சரண்தான் அவளை சமாதானம் படுத்தினான்.. வெளியே சொல்லாத குட்டிமா.. அவன் கோவத்தில இப்படி பண்ணிட்டான்.. நாளைக்கு குடும்பத்தில பிரச்சனை வரும் என்று...

சொல்ல மாட்டேன் ணா அழுதுக்கொண்டே போனாள்... உள்ளே சென்று சரண் இனியனை திட்டினான்...என்னடா செஞ்சிருக்க, அகிலாம்மா கிட்ட சொல்லுச்சு அவ்வளவு தான்...

என்ன செய்வாங்க தலையை வாங்கிடுவாங்களா..போடா சப்ப மூக்கி ஒவரா சீனை போடுறா...

அன்றே இருவரும் சென்னைக்கு கிளம்பிவிட்டார்கள்...

......

ஐந்து வருடம் கடந்து...

கனடாவில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்பினான்... டோட்டலா மாறிபோன தேவ் இனியன்... ஹேர் ஸ்டைலிருந்து, அவன் உடுத்தும் உடைவரை... எல்லாவற்றிலும் பெர்பெக்ட்டா இருக்கனும் நினைப்பான்...

இவனுடைய உருமாற்றமும், அவன் நுனிநாக்கு ஆங்கிலமும், ஆளுமையும் கோபத்தையும்.. கண்டு பயந்துபோனது சக்கரவர்த்தி தான், பிளைட்டிலிருந்து இறங்கியவுடன் இந்த வெள்ளைக்கார பொண்ணுதான் உன் மருமகள் சொன்னதே அவருக்கு ஹார்ட் அட்டாக் வராதா குறைதான்...

லதாவிற்கு பெருமைதான் தன் மகனை பார்த்து, அம்மா கண்ணு பொல்லாத கண்ணு சொல்லுவாங்க, ராஜா மாதிரியிருக்கடா என்று திருஷ்டி கரைத்து உள்ளே அழைத்தாள்...

மெய் தீண்டுவான்....
 
Nirmala vandhachu ???
 
இனியா... சின்ன பொன்னு.... இருந்தாலும் உன் சேட்டை ரொம்ப ஓவர்....
தேனு.... don't worry... இனியா கொஞ்சம் ஸ்வீட் தான்
தேனு என்று கொஞ்சி பேரு வைச்சா மட்டும் போதுமா....
தேனு...என்று கொஞ்ச வேண்டாமா....
தேனாய் இனிக்கும்
தேனு விடம்
இனிமையாய் பேச வேண்டாமா இனியா....
 
Last edited:
என்ன இவன் பாவம் அந்த
பிள்ளைய அடிக்கிறானே
ஆரா அப்பாவியா இருக்கா
 
இனியா... சின்ன பொன்னு.... இருந்தாலும் உன் சேட்டை ரொம்ப ஓவர்....
தேனு.... don't worry... இனியா கொஞ்சம் ஸ்வீட் தான்
தேனு என்று கொஞ்சி பேரு வைச்சா மட்டும் போதுமா....
தேனு...என்று கொஞ்ச வேண்டாமா....
தேனாய் இனிக்கும்
தேனு விடம்
இனிமையாய் பேச வேண்டாமா இனியா....
நிறைய எபிவரும் சிஸ் தேனுவ கொஞ்ச...
 
Top