Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -31

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -31

தேனு ஆக்ரோஷமாக மின்சங்கை பார்த்தாள்... மாமா போலீஸை வரச்சொல்லுங்க... இங்கபாரு என் மாமா பற்றி எனக்கு தெரியும்... எதுக்கு இந்தமாதிரி பொய் சொல்லுற.. யாரு உன்னை இங்கே அனுப்பினது...

விக்கி திகைத்து நின்றான்.. என்ன தேனு இப்படி டிவிஸ்ட் கொடுக்கறா... கோவம் வரும் நினைச்சா... நம்பிக்கை பயிரையில்ல வளர்க்கிறா...மின்னை பார்த்து கண்களால் சமிகை செய்தான்... போயிடு என்று.

தேனு அடித்ததில் கண்ணம் எரிய, கையை வைத்து தடவினாள் மின்.. யாரும் என்னை அனுப்பல... இது இனியன் பையன்தான் எங்க காதலின் சின்னம் என்றாள்.. நீ யாரு அதை கேட்க...

மறுபடியும் தேனு அவளின் மற்றொரு கண்ணத்தில் அறைத்தாள்.. ம்ம் அவர் பொண்டாட்டி... இன்னொரு முறை இப்படி பேசின திரும்ப அவளை தாக்க... தேனுவை பிடித்துக்கொண்டான் இனியன்.. விடு மாமா, அவள கொன்னுடுவேன்டி... போயிடு...

தேனுவை இறுக்கி அனைத்துக்கொண்டான்.. நம்ம மேல இவ்வளவு நம்பிக்கையா என் தேனுமாவுக்கு... இனியனுக்கே அதிர்ச்சிதான், தேனுவின் ரியாக்ஷனை பார்த்து... உச்சிகுளிர்ந்து போனான்... என் மனைவி என்னை புரிந்துக்கொண்டாள்.. நினைக்கும்போதே அடுத்தது சொன்னாள் பார்ப்போமே..

ஏய் என் மாமாவை விரும்புறேன் சொல்லு... நானே அவருக்கு உன்னை கல்யாணம் செய்து தருவேன்.. ஆனா எவனுக்கோ பிறந்த குழந்தையை என் மாமாது சொல்லுவ...

அடிப்பாவி.. இப்பதான் உன்ன உயர்வா நினைச்சேன்... இவ மாற மாட்ட.

சரண், எதுக்கு தேனு, அவகிட்ட வளவளன்னு பேசற ஐ.ஜிகிட்ட விவரத்தை சொல்லிட்டேன் வராரு என்றான்..

பயந்த மின்... தான் மாட்டிவிட்டோமே.. சாரி இனியா பணத்திற்கு ஆசைபட்டு இப்படி பேசிட்டேன்.. பட் ரியலி ஐ லவ் யூ..

கெட் அவுட் என்று கத்தினான் இனியன்.. மின் குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு போனாள்..

தன் அப்பா அம்மாவை பார்த்து தேனுமொழியாள்... இதுக்காக தான் இங்கே வந்தீங்களா... இந்த ஜாதகம் பிரச்சனையாலதான் என் இனிமாமாவை பிரிஞ்சிருக்கேன்மா... யார்யாரோ சொல்லுறாங்கன்னு இந்த மாதிரி பஞ்சாய்த்து பண்ண வராதீங்க..

அப்படி சொல்லு தங்கம்.. என் மகனை பற்றி எனக்கு தெரியும் ஆனா உங்க வீட்டுல தப்பு எதுவுமில்லை என்று விளக்கனும் இல்லையா..

ம்ம்...

சரி இன்று இனியன் பர்த் டே... ஸ்பெஷல் விருந்து ஏற்பாடு செஞ்சிருக்கோம்... வாங்க சாப்பிட போலாம் சத்யாவையும் , அகிலா மற்றும் விக்கியையும் அழைத்தார் சக்கரவர்த்தி...

அகிலாவும், விக்கியும் மறுத்துவிட்டு கிளம்பிவிட்டார்கள்... இனியன் மாடியேறி தன் ரூமிற்கு சென்றான்... அவள் சுற்றிதிரிந்த வீடுதான்.. ஆனால் இன்று இனியன் ரூமிற்கு செல்ல அச்சப்பட்டு முதல் படியிலே நின்றாள்..

வேலைக்காரர் ஜூஸ் எடுத்துவந்து லதாவிடம் கொடுத்தார்.. லதா அந்த கிளாஸை ஆராவின் கையில் கொடுத்து... இனியன் கேட்டான் போய் கொடும்மா என்றார்..

சக்கரவர்த்தியும்.. உன் வீடுடா என்ன தயக்கம் ஆரா..

முகம் பளீச் என்றானது தேனுவிற்கு... கோபப்பட்டு இல்ல இனியன் சென்றிருக்கிறான்... கையில் ஜூஸை எடுத்துக்கொண்டு மாடிபடி ஏறினாள்... கதவு திறந்திருந்தது.. கதவை தட்டிவிட்டு உள்ளே காலை வைத்தாள்...

ரூம் முழுவதும் அவளுக்கு பிடித்த பிங்க் நிறத்தில் டிசைனர் பையின்ட் கர்டைன்ஸ்... அந்த பால்கனியில் ஊஞ்சல் போடப்பட்டிருந்தது..பெட்டின் அருகே போடப்பட்டிருந்த சோபாவில் கால்மேல் கால் போட்டு மொபைலில் பேஸ்புக்கை பார்த்தபடி தேனுவிடம் பேசினான்... இப்பதான் நம்ம ரூமிற்கு வர தோனுதா... அதுவும் கதவை தட்டிட்டு வர..

அவள் ரூமை கண்களால் அளந்தாள்..

என்ன அப்படி பார்க்கிறவ.. எல்லாம் பஞ்சுமிட்டாய் கலர்ல இருக்கா..

ஜூஸை டீபாய் மேல் வைத்துவிட்டு அவனை நெருங்கி உட்கார்ந்தாள்..

என்னடி திடிரென்று பாசம் பொத்துக்கிட்டு வருது... உங்க மாமனார்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு வந்திருப்பீயே

அவனின் கையை பற்றினாள்..

அவள் கையை உதறிவிட்டு நகர்ந்து உட்கார்ந்தான்...

மாமா... எதுக்கு கோவம்..

ம்ம்.. நீ பேசனதுக்கு மெய் மறந்து உட்கார்ந்திருக்கேன்.. முடியெல்லாம் நட்டுகிட்டு நிற்குது...

ஆமா தெரியாமதான் கேட்கிறேன்... நான் என்ன கேக் நினைச்சியா.. யார் கேட்டாலும் பீஸ் போட்டு தரதுக்கு... பிஸினஸ் சைட்ல இருபது பொண்ணுங்க மேல என்னை விரும்புது.. அப்ப தினமும் கல்யாணம் செய்து வைப்பீயா...

மாமா.. அவனை கொஞ்சிக் கொண்டு இன்னும் நெருங்கி அமர்ந்தாள்...

ஏய் என்னை தொடாதே.. கிட்ட வந்தே அவ்வளவுதான் நகர்ந்து உட்கார்ந்தான்..

என்னடா செய்வ, வேண்டுமென்றே அவன் தொடையில் உட்கார்ந்தாள்... அவன் முகமருகே அவளின் வதனம்... தேனு.. எப்படி மாமாமேல உனக்கு அவ்வளவு நம்பிக்கை... சொல்லுடி.

எல்லாம் அப்படிதான்.. எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம்..

சீக்ரேட்... என்ன சொல்லுடி பிளீஸ்...

அது.. அது.. நீ பர்ஸ்ட் நைட்ல தடுமாறினாயா... நான் வலிக்குது அழசொல்ல நீ பயந்துபோயிட்டியா.. அப்பவே தெரிஞ்சிடுச்சு... ஒருத்தியும் உன்னை தொடல, என் இனியன்னு..

போடிங்க... இதுவாடி உன் நம்பிக்கை..

ம்ம்.. அது பெண்களுக்கு மட்டுமே புரியும்..

ச்சீ பே.. பெரிசா கண்டுபிடிச்சிட்டா.. இங்கபாரு கனடா பொண்ணு கிளாரா பேரு.. அவ இப்படி சொல்லிருந்தா நான் ஓகே சொல்லிட்டிருப்பேன்.. செம பிகரு தெரியுமா..

இவன் பேச பேச எரிச்சல் வந்து அவன் மூடியை பிடித்து ஆட்டினாள்.. என்னடா சொன்ன...

அவளை அலேக்கா தூக்கிட்டுபோய் ஊஞ்சலில் கிடத்தினான்... தேனு..தேனு மாமாவுக்கு ஒரு ஆசை...

என்ன மாமா...

ஊஞ்சல்ல மேட்டர் செய்வாங்களாம்.. ட்ரை செய்யலாமா என்று அவள்மேல் படர்ந்தான்..

மாமா.. அறிவிருக்கா கீழே என்ன நினைப்பாங்க... எழுந்திரு மாமா மேலிருந்து.. அவள் சொல்லி முடிப்பதற்குள் சிலபல இடத்தில் முத்தமிட்டு எழுந்தான்...அவன் தோளில் சாய்ந்தபடி ஊஞ்சலை ஆட்டினாள்..

அவன் முகநாடியை பிடித்து... எனக்காக தான் இந்த உயிர் வாழுதுன்னு தெரியும் மாமா, நான் ஒண்ணும் அழகியில்ல...

நீதான்டி என் அழகி...

வேறு ஒருத்தனா இருந்தா இந்த ஜாதகம் ப்ராபளத்தில கழிட்டி விட்டு போயிருப்பான்... எப்பவும் நான் உன்னை சந்தேகிக்க மாட்டேன்... இனியவனின் இதழில் மென்மையாக முத்தமிட்டாள்.. முத்தமிட முத்தமிட இனிக்கிற மாமா... என்னை மயக்குற மாமா.. ஹாங்.. மாமா ஜூஸ் மறந்துட்டேன்.. என்று எழுந்து சென்று மாதுளம் ஜூஸை எடுத்துவந்து தந்தாள்..

உனக்குடி..

எனக்கு மாதுளம் பிடிக்காது மாமா.. நீங்க குடிங்க.. காலையில சாப்பிட்டதுதான்.. அவன் குடித்துமுடித்தவுடன்..

தேனுமா.. அடுத்த மாசம் சரணுக்கும், அபிக்கும் கல்யாண தேதியை பிக்ஸ் செய்ய போறாங்க... நமக்காக இரண்டுபேரும் கல்யாணமே பண்ணிக்காத இருக்குறாங்கடா.. அவங்க கல்யாணம் முடிக்கிற வரை நீ இந்த சாகபோறதை பேசாதே.. அண்ணன், அண்ணி என்று சில கடமைகள் இருக்கு தேனு...

புரியுதுங்க... சரண்ணாவுக்கு வயசாகுதுல்ல...

தொண்டை எரிச்சல் தர... ஒரு நிமிஷம்டா நான் ரெஸ்ட் ரூமுக்கு போயிட்டு வரேன்.

ம்ம்..

ரூமிற்கு சென்று வாஷ்பேஷநில் தண்ணீயை திறந்துவிட்டு, ரத்தமாக வாந்தி எடுத்தான்...

உடனே சரணை போனில் அழைத்தான்.. மச்சான் நான் பேசறது மட்டும் கேளு.. விஷம் சாப்பிட்ட மாதிரியிருக்கு..

டேய் இனியா என்னடா ஆச்சு... பதறியபடி தன் அறைவிட்டு ஒடி வந்தான்.. சரண்.

பின்பக்கமா காரை நிறுத்திட்டு வா.. முக்கியமா தேனுக்கு தெரியகூடாது..

இனியனின் ரூம் கதவு திறந்திருக்க... சரண் கதவை திறந்து உள்ளே வந்தான்.. எங்கமா அவன் தேனுவிடம் கேட்க..

அண்ணா பாத்ரூமுல..

முக்கியமான கிளைன்ட் வந்திருக்காரு, பேசனுமா... இனியன் பாத்ரூமிலிருந்து வெளியே வர... இனியன் வாடா போலாம் ராம மூர்த்திஸார் வந்திருக்காரு... அவனின் தோளில் கைபோட்டு குட்டிமா சாரிடா நாங்க உடனே வந்திடுறோம்... இப்படிபோன கீழே விடமாட்டாங்க நாங்க பின்பக்கமா போறோம்...ஓகேவா..

சரியண்ணா தேனு சிரித்து பை சொல்ல..

படியிறங்கியதும் மயங்கி விழுந்தான் இனியன்... காரில் ஏற்றிக்கொண்டு அவன் நன்பன் பிரபாவின் மருத்துவமனைக்கு விரைந்தான் சரண்... எமர்ஜன்ஸில் சேர்த்துவிட்டு மூச்சிவாங்கி நின்றான் .. டேய் பிரபா பயமாயிருக்குடா...

அரைமணி நேரம் கழித்து பிரபா வெளியே வந்தான்... சரண் டாக்டரின் கையை பிடித்துக்கொண்டான்

பயப்படாத கரெக்டான டைமுக்கு கூட்டிட்டு வந்துட்டே.. அப்பறம் அவனே பாதி வாந்தியெடுத்துட்டான்...

பயந்துட்டேன்டா.. உயிரே போயிடுச்சு... கஷ்டப்படுறான்டா பார்க்க முடியல என்று கண்கலங்கினான்..

டேய் மச்சான், அவனால சமாளிக்க முடியும்டா.. எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி உண்டு..

இரண்டுமணி நேரத்திற்கு பிறகு இனியன் கண்விழித்தான்.. அங்கே சேரில் உட்கார்ந்திருந்த சரண் எழுந்து அவனருகில் வந்தான்..

மச்சான் டேய்.. அவனை அனைத்துக்கொண்டான்.. பயந்துட்டேன்டா என்று கண்கலங்க..

எதுக்குடா பயப்படுற... எதுவுமே என்னை கேட்டுதான் நடக்கும்... என்ன உன் தங்கச்சிக்கூட இன்னைக்கு ஹனிமூன் சூட் புக் பண்ணிருந்தேன்..

ஏன்டா இப்பகூட விளையாட்டா... எப்படிடா பாய்சன் வந்தது..

அதுவா ஜூஸ்ல... கொடுத்ததே தேனுதான்.. இப்படி ஆச்சுன்ன தெரிஞ்சது உயிரே விட்ருவா மச்சான்..

வேலைக்காரன்தான் ஜூஸ் போட்டிருப்பாங்க... எப்படி விஷம் வந்துச்சு...

யாராயிருக்கும் நம்ம விக்கி தம்பித்தான்..

கோபம் கொண்டு எழுந்தான் சரண்.. ஒண்ணு நீ அவன போட்டுதள்ளு இல்ல நான் பார்த்துக்கிறேன்... கொசுக்கெல்லாம் பயந்துட்டு இருக்கிறீயா.. பிஸினஸ்ல எத்தனை பேரை பார்த்திருப்போம்டா.. இவனெல்லாம் தூசுடா.

அவனுக்குபோய் யாராவது பயப்படுவாங்களா சரண்... என் தேனுக்காகடா.. அவன்தான் சொன்னா நம்ப மாட்டா... நல்லவேளை அவமுன்னாடி வாத்தி எடுக்கல... அவன் ப்ளானே நான் மயங்கி விழறதுதான்..

மருந்தின் வீரியம் மறுபடியும் இனியன் கண் சொக்க... அவனின் அருகிலே உட்கார்ந்தான் சரண்.. இனியனின் தலையை வருடி.. டேய் ஏன்டா இப்படி படுத்திருக்க... தன் உயிர் தோழனாக, உடன்பிறவா சகோதரனாக சந்தோஷத்தையும், கஷ்டத்தையும் பகிர்ந்துக் கொண்டவன்... வேறு ஒருவனை நன்பனாகவே ஏற்றுக்கொள்ள மாட்டான் இனியன்... இந்த விக்கியை ஏதாவது செய்வேன்டா என்று மனதில் நினைத்துக்கொண்டான் சரண்...

சரணின் மொபைல் ஒலிக்க... வந்த அழைப்போ அவனின் குட்டிமா... சொல்லுடா என்றான்..

அண்ணா அவரு போனே எடுக்க மாட்டுறாரு..

ஹாங்.. மீட்டிங்ல இருக்கான்மா... நான்தான் சைலன்டில் போட்டு வச்சேன்... கொடுக்கவாடா..

வேணாம் அண்ணா... வேலை நேரத்தில்ல பேசனா அவருக்கு பிடிக்காது.. அண்ணா நைட் ஆகபோது எப்போ வருவாரு...

இனியன் சொன்னது ஞாபகம் வந்தது... உன் தங்கச்சி காத்துட்டு இருப்பா மச்சான்னு... எச்சிலை கூட்டிக்கொண்டு, தெரியலடா லேட் நைட் ஆகும்டா.. மலேசியாவிலிருந்து கிளையன்ட் அதான் பிஸி..

ஓ.. சரி.. சரி, அண்ணா அவரு மதியமே சாப்பிடல ஜூஸ் மட்டும் குடிச்சாரு.. எப்படியாவது சாப்பிட வச்சிடுங்கண்ணா... மனைவியாக அவனின் உடல்நலத்தில் அக்கறை கொள்ள..

மதியமே சாப்பிட்டான்டா.. நீ கவலைபடாதே அண்ணாயிருக்கேன்ல... சரியண்ணா என்று போனை வைத்தாள்..

ஏமாற்றமே தான்.. வாட்ஸ் அப்பிலும் மேசேஜ் வரல... நைட் தனியா சந்திக்கலாம் என்றல்லவா சொன்னான்... பெண்ணவள் அவனை நினைத்துக்கொண்டே காத்திருந்தாள்..

அடுத்தநாள், காலை 9.00 மணிக்கு, டேய் இனியா தேனு வராடா என்று சரண் இனியனை எழுப்பினான்..

......மெய் தீண்டுவாள்
 
Nirmala vandhachu ???
Surprise
 
இன்னும் இந்த விக்கி பக்கிய
விட்டு வைக்கலாமா
 
Top