Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -35

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -35

தன் அத்தையின் மடியில் படுத்துக்கொண்டு, மாமா என்னை மறந்திடுச்சா அத்தே... பதிலுக்கு லதாவின் முகத்தையே பார்க்க...

அவன் உன்னை பற்றி பேசினாவே தீட்டுவான்.. வீட்டில தங்கறதே இல்லடா, பிஸினஸ் பிஸினஸூனு அலையறான்...

அபி, சரண் அண்ணா எப்படியிருக்கிறாங்க.. எதாவது விஷேசம் உண்டா அத்தே..

எங்கடா கல்யாணம் ஆச்சு.. இரண்டுபேரும் இன்னும் கல்யாணமே பண்ணிக்கல..

அத்தே என்ன சொல்லுறீங்க.. சடன்னா எழுந்திருக்க... உள்ளே இருக்கும் சிசு அதிர்வை தாங்கமுடியாமல் வயிற்றை பிடித்து உட்கார்ந்தாள்...

ஆரா இப்படி எழுந்துக்க கூடாதுடா.. மெதுவா எழுந்துக்கனும்... சரியா, இரு தண்ணீ எடுத்துட்டு வரேன் என்று லதா உள்ளே சென்றார்..

அப்பவே மாமா படிச்சு படிச்சு சொல்லுச்சு... நம்மைவிட்டா சரணுக்கு யாருமில்ல.. நாம்ம தான் முன்நின்று கல்யாணம் பண்ணிவைக்கனும்... நான் கேட்கல.. என்னால இரண்டுபேரும் பிரிஞ்சியிருக்காங்க...

இந்தாடா தண்ணீ லதா, ஆராவிடம் நீட்ட... கையில் தண்ணீர் கிளாஸை வாங்கி... அத்தே ஏன் கல்யாணம் நின்னுடுச்சு..

அது ஒண்ணுமில்ல, உன் நாத்தனாரு நீ இல்லாம கல்யாணம் செஞ்சிக்க மாட்டாளாம்... உள்ளே வந்த சக்ரவர்த்தி... தங்கம் வாடா வாக்கிங் போலாம்..

மாமா நீங்களாவது சொல்லக்கூடாதா... அவ சின்ன பொண்ணு இப்படிதான் பேசுவா..

யாரு நான் பெத்தது எது என்பேச்சை கேட்டுகுதுங்க... அவளே இன்னும் ஒரு மணிநேரத்தில வருவா கேளு..

நிசமா மாமா அபி வராளா... கூட யாரு வரா..

யாரு வரனும் எதிர்ப்பார்க்கிற தங்கம்.. உன் புருஷனா... க்கும் அவன் வரமாட்டான்... அவன் தன்மானத்தை சீண்டிட்டுல்ல வந்துட்டே எப்படி வருவான்... நீ வா வாக்கிங் போலாம்...

பெண்களுக்கே உரிய ஏக்கம் கணவன் தன் அருகில் இருக்கவேண்டுமென்று... முதலில் தெரியவில்லை தேனுவிற்கு.. மாதம் மூன்றானதும் ஏங்க ஆரம்பித்துவிட்டாள்....

அவர்கள் வீட்டின் முன் கார்சத்தம் கேட்க... காரிலிருந்து அபி வந்திறங்கினாள்... ஹய்யா அபி வந்துட்டா ஆரா கத்த... ஏய் அண்ணீ எப்படி இருக்க ஒடி வந்து அனைத்துக்கொண்டாள் அபி...

ஏன்டி டிவின்ஸாமே... வயிறெல்லாம் பெரிசாயிருக்குடி... அவள் வயிற்றை தடவியபடி இரண்டு மருமகனுங்க... அபியை பார்த்துவுடனே கண்கலங்கினாள் தேனு... உறவைவிட தன் தோழி..

ச்சீ கண்ணைத்துடை, செய்யறதெல்லாம் செஞ்சிட்டு அழற... எங்கண்ணாவுக்கு அழறதென்னா பிடிக்காது... அவர் பிள்ளைக்கும் பிடிக்காதுடி..

தேனுவின் கையை பிடித்துக்கொண்டு சோபாவில் உட்காரவைத்தாள்... ராதாக்கா அபிக்கு சாப்பிட எடுத்துட்டு வாங்க...

அப்பறம் ஏன்டி கல்யாணத்தை கென்சல் செஞ்சீங்க..எங்க விஷியம் வேற... அதுக்காக உங்க வாழ்க்கையை எப்ப ஆரம்பிக்கிறது... அண்ணா பாவம்டி...

அதேதான் நானும் சொல்லுறேன்...

என்னத்த..

ஏய் இங்க வந்து உட்கார்ந்திட்ட... அங்க என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமாடி...

பயந்துக்கொண்டு அபியின் முகத்தை பார்த்தாள்... உங்கண்ணா எப்படியிருக்கார் அபி..

அவனுக்கென்னா உன்னை பிரிந்து இன்னும் சூப்பராயிருக்கான்...

ஏய் பொய்சொல்லாதடி..

நிஜமாதான்டி பேசுறேன்... உன்னையே நினைச்சிட்டு இருக்கான்னு நினைக்கிறீயா... அதான் இல்ல சனி, ஞாயிறு, திங்கள் வீட்டுக்கே வரதில்ல தேனு... நைட்டு எங்கோ வெளிய தங்குறான்... சில நாள் குடிச்சு வரான் அம்மாக்கு தெரியும்... அப்பாவுக்கு தெரியாது.. இப்ப சகவாசம் யார்கூட தெரியுமா..

யாரு..

ம்ம்... மாயாகூட தான்..

என்ன அபி சொல்லுற மாயாவா... அதற்குள் லதா, அபி சும்மாயிரு ஏதாவது பேசிட்டு.. ஆராக்குட்டி அதெல்லாம் ஒண்ணுமில்ல, முகம் தொய்ந்து தன் அத்தையை பார்த்தாள் தேனு...

உன் மாமன் எப்பவும் உன் ஞாபகமாகவே இருக்கான்... இதுக்கு போய் கண்கலங்கிட்டு இருக்க..பிள்ளதாச்சி பொண்ணு மனசை சந்தோசமா வச்சிக்கனும்..

ஆராவிற்கு சமாதானம் செய்துவிட்டு தன் மகளை தீட்டி தீர்த்தாள்... அவ எந்த நிலைமையில இருக்கா தெரியுமில்ல.. வயிற்றில இரண்டு குழந்தைடி...

சாரிம்மா..

போ அவகிட்ட நல்லவிதமா பேசு... முக்கியமா உன் அண்ணனை பற்றி நல்லதா சொல்லு, ஆசையா கேட்பா..

....

ஒரு வாரம் முடிந்து ஊருக்கு கிளம்பினார்கள்... தங்கம் ஒழுங்கா வாக்கிங் போ... சரியான நேரத்தில சாப்பிடனும் சக்ர தன் மருமகளுக்கு அறிவுரை சொல்லியபடி இருக்க.. அவரின் கையை பிடித்து, மாமா அபிக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யுங்க.. நான் வரேன் சொல்லிமுடிக்கும் போதே தேனுவை கட்டிக்கொண்டாள் அபி..

இப்போ எத்தனாவது மாசம்டா...

ஆறு ஆரம்பிக்குது மாமா...

சீக்கிரம் நல்லநாள் பார்த்து மண்டபம் பிக்ஸ் பண்ணுறேன்டா... மதியம் உங்கம்மா அப்பாவை வரச்சொல்லிருக்கேன்... வரட்டா தங்கம்..

அவர்களை பிரிய எண்ணமில்லாமல் அனுப்பி வைத்தாள்...

இரண்டு வாரம் பிறகு...

காலையில் இனியன் வீட்டில்... டேய் இனியா நாங்க கோவிலுக்கு போறோம் என்று சக்ர ஆரம்பிக்க..

இப்பதானே போனீங்க..

ஆமாம், அது மீனாட்சியம்மன் கோவில்.. இப்ப போறது ராமேஸ்வரம், அக்கடா போய் உட்கார்ந்திடலாம் இருக்கு..

என்ன இவ்வளவு சலிப்பு... உங்களை பார்த்தா நல்லா என்ஜாய் செஞ்சிட்டுயில்ல வந்தமாதிரியிருக்கு...

அய்யோ, கண்டுபிடிச்சிட்டானா... என்னடா நான் என் மருமகளை பார்க்கதான் போறேன்.. உன்கிட்ட சொல்லனும் அவசியமில்ல.. சக்ர உளறி கொட்ட..

இந்த மனுஷனை என்ன செய்யறது என்று தலையில் அடித்துக்கொண்டாள் லதா..

என்னடி உன் ரியாக்ஷன்...

எனக்கு பொண்டாட்டியில்ல சொல்லி டாட்டா காட்டிட்டு போயிட்டா உங்களுக்கு என்ன உறவு வருது...

அது உங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை... என் பேரனை வயிற்றில சுமக்கிறா அதுவும் இரண்டு பேரன் தெரியுமா... தந் மகனிடம் விஷியத்தை போட்டு உடைக்க..

எதுவும் காதில் வாங்காம ரூமிற்குள் சென்றான் இனியன்...

.....

இரு குடும்பமும் மாற்றி மாற்றி வந்து பார்த்துக்கொண்டனர்... இதற்கிடையில் அபியின் கல்யாண வேலையில் நடந்துக்கொண்டிருந்து... விக்கியும் தன் அத்தையுடன் வந்து தேனுயை பார்த்து சென்றான்..

இன்று அபி வெட்ஸ் சரண் என்று கொட்டை எழுத்தில் மண்டபத்தின் முன்னாடி பேனர் வைத்திருக்க... காலை 5.30 மணிக்கே மண்டபம் முழுக்க ஆட்கள் வந்திருந்தன... இனியன் ஒரு ஆளாக வந்தவர்களை அழைப்பதும் மேடையில் தேவையானவற்றை தன் நன்பன் பக்கத்தில் அமர்ந்து பார்த்துக்கொள்வதுமாக இருந்தான்...

ஒரு பக்கம் ஊரிலிருந்து வந்த உறவினர்களை பார்த்து உபசரித்துக்கொண்டார்கள் சக்ரவர்த்தியும், சத்தியமூர்த்தியும்...

மணி ஆறாக.... மண்டபத்தின் முன்னே பி.எம்.டப்ளியூ கார் நிற்க... காரின் கதவை திறந்து வெளியே வந்தாள் தேன்மொழியாள்... தூரத்திலே பார்த்துவிட்டான் இனியன் தன்னவளை... நடக்க முடியாமல் எட்டுமாத கருவை சுமந்து தேர் அசைந்து வருவதுபோல் அழகாக நடந்துவந்தாள் மாது... அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்தான்... தன் தேவதையின் அழகு உருவத்தை... நிறம் இன்னும் கூடி, சதை பிடித்து, வயிறு பெரிதாக... பட்டுச்சேலை கட்டியிருந்தாள்

பின்னாடி காரின் கதவை திறந்து அவளின் கையை பிடித்து அழைத்து வந்தான் விக்கி..

அதை பார்த்தவுடனே.. தன் பல்லைகடித்துக்கொண்டு தேனுவை பார்க்காமல் திரும்பி நின்றான்..

லதா தன் மருமகளை அனைத்துக்கொள்ள... வாடா ஆரா... அவளின் கையை பிடித்துக்கொண்டாள்... மேடையில் நிற்கும் தன் கணவனை பார்த்துவிட்டாள் தேனு... எத்தனை மாசம் கழித்து அவனை பார்க்கிறாள்...

அவளின் கிராமத்து மக்கள் தேனுவை பார்த்து சூழ்ந்துக்கொண்டனர்... அவர்களிடம் தன் நலனை சொல்லிவிட்டு, தன் அத்தைதோடு மேடையேறினாள்... இனியனின் அருகில் நின்றாள்.. சரண் குட்டிம்மா என்று கூப்பிட..

அண்ணா என்று கண்கலங்கினாள்...

தன் கணவனை ஏறிட்டு பார்க்க, இனியன் பார்த்தால்தானே அவளின் முகத்தை பார்க்காமல் தன் நன்பனிடம் பேசினான்..

தன்னை அவாய்ட் செய்யுறான் என்று தெரிந்துக்கொண்டாள் தேனு... மாமா தாடி விட்டிருக்கு... இளைச்சி போயிடுச்சு... நெருங்கி அவன் அருகில் நின்றாள் தேனு... இனியன் விலகி நின்றான்... முகூர்த்த நேரம் நெருங்க... ஒரு சின்ன பையன் ஒடி வந்து மாமா உங்களை அந்த அக்கா கூப்பிடுறாங்க கையை காட்ட யாருன்னு பார்த்தான் இனியன்..

கீழே மாயா பட்டுச்சேலையில் ஆறுமாதம் கருவுற்றிருக்க... இனி மாமா ப்ளீஸ் என்று கெஞ்சினாள் மாயா...

இனியன் எங்கே பார்க்கிறான் என்று தேனு பார்க்க.. பார்த்துவிட்டாள் மாயாவை... கழுத்தில் மஞ்சள்கயிறு வயிற்றில் பிள்ளை சுமக்கிறாள்.. வேறென்ன வேணும் நம்ம தேனுவிற்கு வழக்கம்போல் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க...

இனியன் கீழேயிறங்கி மாயாவின் தோளை யனைத்து மேடைக்கு கூட்டிட்டு தன் அருகில் நிறுத்தினான்...

அன்றே சொன்னானே... இனிமே நீ என்கிட்ட கூட வரமாட்ட மனம் துடித்தது தேனுவிற்கு... மூச்சை இழுத்து விட்டாள்... அவளால் தாங்கமுடியவில்லை தன் கணவன், காதலன்... இன்னொருத்திக்கா... அபியும் சொன்னாலே இன்று தன் கண்ணாலே பார்த்துவிட்டோம்... இதுக்கா ஓடிவந்தேன்..

மாமா... என்று உதடுகள் அசைய..

மாயா வேர்த்துகொட்டுது பாரு.. நீயேன் மேலே வந்தே என்று கடிந்துக்கொள்ள..

இனிமாமா.. எனக்கு தாலிகட்டுறதை பார்க்கனும் ஆசையாயிருந்தது அதான் வந்தேன்... தேனுவையும் கண்டுக்கொள்ளவில்லை மாயா..

இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள் தேனு...

எங்கடா போனே உன் பொண்டாட்டியவிட்டு...

ஸாரி இனியாண்ணே உங்களை தொந்தரவு பண்ணிட்டாளா... மாயா நான் வரதுக்குள்ள ஏன்டி வந்தே நிர்மல் சொல்ல...

தன் காலேஜ் சீனியர் நிர்மலை பார்த்தாள் தேனு... மாயா லவ் செஞ்ச பையன்தானே இவன்...

தன் மாமனை கண்சிமிட்டாமல் பார்க்க...

தேனுவை பார்த்து கண்களாலே பேசினான் நீ என்னை நம்பலதானே... எந்த உணர்ச்சியும் காட்டாமல் எச்சில் கூட்டினாள் தேனு...

கெட்டிமேளம் கொட்ட, வாத்தியங்கள் முழுங்க அபியின் கழுத்தில் பொன் தாலியை பூட்டினான் சரண்... தன் மனைவியின் அருகே நெருங்கி நின்று மணமக்களுக்கு அட்சயதையை தூவினான் இனியன்...

-----மெய் தீண்டுவாள்
 
Nirmala vandhachu ???
 
Top