Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்------1

தலைவர் வாழ்க…!!! தலைவர் வாழ்க….!!! என்ற ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கூக்குரலின் சத்தத்தில் கண் விழித்த நம் கதையின் நாயகன் ஆதித்ய நாரயணன். நேற்று அடித்த சரக்கின் மப்பு கொஞ்சம் மிச்சம் மீதி இருக்க எழ முடியாமல் எழுந்து தன் தலையில் கைய் வைத்து அமர்ந்துக் கொண்டவனை.

தன் அறையின் கதவு தட்டும் ஒசையில் எரிச்சல் உற்று “யாரு” என்று எரிந்து விழுந்ததுக்கு கதவின் அந்த பக்கத்தில் இருக்கும் நபர் “நான் தான் சத்யா தலைவா” என்ற குரலில் “வா” என்ற ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டவன்.

சத்யா ரூமுக்கு வந்ததும் “ஏன்டா நேத்து என்ன கருமதத்தேடா வாங்கியாந்த தலை வலி மண்டையை பொலக்குது.” என்றதற்க்கு தலையை சொரிந்துக் கொண்டே “எல்லாம் நாம் வழக்காம வாங்கும் சரக்கு தான் தலைவா. நேத்து நம் தொகுதியில் ரெண்டாவது வாட்டியும் நீங்க ஜெயிச்சிட்டிங்க என்ற குஷியில் வழக்கத்தோட அதிகமா போயிடுச்சி அதனால் தான் தலை வலியா இருக்கும்.”

தன் கையில் உள்ள கிளாஸை காமித்து “அதுக்கு தான் ரெடியா எலிமிச்சம் ஜூஸ் கொண்டாந்திருக்கேன் தலைவா...இதை கப்புன்னு அடிச்சிடுங்க எல்லாம் சரியா போயிடும்.” என்றவனின் சொல்லை தட்டாது வாங்கி குடித்து விட்டு பாத்ரூம் நோக்கி சென்றான்.

தலைவர் வரும் வரையில் படுக்கையை தட்டி சுத்தம் செய்த சத்யா அப்படியே அந்த அறை முழுவதும் சிதறி கிடந்த சிகரெட் துண்டுகளை எடுத்து டஸ்பின்னில் போட்டு விட்டு குடித்து விட்டு வைத்த ஜூஸ் கிளாலை எடுக்கவும் ஆதித்ய நாரயணன் பாத் ரூம் விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

சத்யாவின் கையில் உள்ள கிளாஸை பார்த்தவனுக்கு ஏதோ ஏதோ பழைய எண்ணம் தோன்றாலாயிற்று. ஆனால் அந்த நினைவில் மூழ்க விடாமல் வீட்டின் முன் ஒலித்த சத்தத்தில் நிகழ் காலத்துக்கு வந்தவன். நடந்துக் கொண்டே “சத்யா கட்சி ஆபிசுக்கு நம் கட்சி ஆளுங்களை எல்லாம் கூப்பிட்டுட்டாயா….? என்றதற்க்கு.

“இப்பவே எல்லாரும் ரெடியாக நம் கட்சி ஆபிசில் காத்து இருக்காங்க தலைவா.” என்றவனிடம் “எல்லா ஏற்பாடும் செய்துட்டாயா….? அப்புறம் தேர்தல் வேலை பார்த்த நம் கட்சி தொண்டர்களுக்கு ஏதாவது செய்துடு.” என்று சொல்லி விட்டு டையினிங் ஹாலை நோக்கி சென்றவன்.

அதில் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டே பின் பக்கம் திரும்பி பார்க்க சமையல் அறையில் இருந்து வள்ளியம்மா தன் இரு கையிலும் இரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தவர் ஆதித்யா முன் வைக்க.

அதை பார்த்த ஆதித்யா “வள்ளியம்மா நான் உங்க கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ஒரு ஒரு பாத்திரமா எடுத்து வந்தா போதும் என்று.என்ன உங்களுக்கு வருஷம் ஆக ஆக வயசு ஏறுதா….? இல்லை இறங்குதா…..?” என்ற கேள்விக்கு.

“இல்லை தம்பி பசியோட காத்திருப்பிங்களேன்னு தான். அறக்க பறக்க கொண்டாந்தேன் தம்பி.” என்று வள்ளியம்மா சொல்வதை கேட்ட ஆதித்யா முறைக்க “சரி தம்பி இனி ஒன்னு ஒன்னாவே கொண்டாரே...கோச்சிக்காம்மா சாப்பிடுப்பா.” என்று சொல்லி ஆவி பறக்கும் ஆப்பத்தை வைத்து விட்டு கூடவே கால் பாயவையும் வைத்தார்.

வள்ளியம்மா வைத்ததை சாப்பிடுவதற்க்கு முன் தன் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த சத்யாவை பார்த்து “என்ன என் வாயையே பார்க்கிறே உக்காரு.” என்று சொன்னவன். “அவனுக்கும் வைங்க வள்ளியம்மா.” என்று சொல்லி விட்டு தன் உணவை சாப்பிட்டான்.

இது எப்போதும் நடப்பது தான் ஆதித்யா எப்போதும் தன் பக்கத்தில் இருப்பவரை பார்க்க வைத்து சாப்பிட மாட்டான்.ஆத்தியா கூடவே இருக்கும் சத்யாவுக்கு இது தெரியாமல இருக்கும்.

இருந்தும் சத்யா மரியாதை கருதியே ஆதித்யா சொல்லும் வரை காத்திருந்து அவன் சொன்னவுடன் உட்கார்ந்து வள்ளியம்மா வைத்த டிபனை ஒரு பிடி பிடித்தவன்.ஆதித்யா நிதானமக ரசித்து சாப்பிடுவதை பார்த்து “என்னன்னா சொல்லுங்க தலைவா. நம் வள்ளியம்மா கைய் பக்குவமே தனி தான்.” என்று சொல்லி விட்டு வள்ளியம்மாவை பார்க்க.

வள்ளியம்மா சிரித்துக் கொண்டே இன்னும் இரண்டு ஆப்பத்தை அவன் தட்டில் வைத்தவர் கூடவே கால் பாயாவையும் அதில் ஊற்றினார்.அதையும் வேக வேகமாக சாப்பிட்ட சத்யா அதன் ருசியில் தன் விரலில் ஒட்டியிருந்ததையும் தன் நாவினாலேயே சுத்தம் செய்ய.

அதை பார்த்த ஆதித்யா “வேனும் முன்னா இன்னும் இரண்டு கேட்டு வாங்கி சாப்பிடுடா. அதை விட்டு உச்சி உச்சி நக்காதே பக்கத்தில் உட்காந்து சாப்பிட முடியலை.” என்றவனை பார்த்து சிரித்துக் கொண்டே போதும் தலைவா வாயிறு புல் என்று சொன்னவன் எழாமல் உட்கார்ந்து இருக்க.

“நீ சாப்பிட்டேன்னா போ சத்யா.” என்று சொன்னதும் தான் எழுந்து தன் வேலையை பார்க்க கிளம்பினான்.

அவன் போனவுடன் ஆதித்யா வள்ளியம்மாவை பார்த்து “காலையிலேயே ஏன் வள்ளியம்மா ஆப்பம் கால் பாயான்னு வேலையை இழுத்து விட்டுக்குறிங்க. சிம்பிளா இட்லி சாம்பார் என்று வைத்தா போததா…..?” என்றதற்க்கு.

“இதில் என்ன கஷ்டம் தம்பி.நேத்தே காலை வாங்கியாந்து வேக வைச்சிட்டேன். இப்போ வந்ததும் திரும்ப ஒரு தப வேக வைத்து அது தலையில் மாசலா அரச்சி ஊத்தி கொதிக்க வைச்சா சரியா போயிடுச்சி. அதுவும் இல்லாமல் நீ ஒரு வேளை தான் ஆர அமர உட்காந்து சாப்பிடுறே...அது கூட ருசியா சமைச்சி போடுலேன்னா எப்படி தம்பி.” என்று கேட்பவரை பார்த்து சிரித்துக் கொண்டே எழுந்து கைய் கழுவ சென்றான்.

அவன் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்த வள்ளியம்மா ஒரு பெரும் மூச்சை இழுத்து விட்ட வாரே அவர்கள் சாப்பிட்ட தட்டை எடுத்து கழுவும் இடத்தில் போட்டவர். டேபிளில் இருந்தவற்றை திரும்பவும் சமையல் அறையில் வைப்பதற்க்கு எடுக்க.

அதை பார்த்த ஆதித்யா “என்ன வள்ளியம்மா நீங்க சாப்பிடலையா…?” என்றதற்க்கு “இதோ தம்பி சாப்பிடுறேன்.” என்று சொன்னவர் பாத்திரத்தை உள்ளே எடுத்து சென்றவரை பார்த்து.

“உங்களை திருத்தவே முடியாது வள்ளியம்மா. உங்ககிட்டே எத்தனை தடவை சொல்லி இருக்கேன். இங்கயே சாப்பிடுங்க என்று. நீங்க கேட்பதே இல்லே...அது என்ன சமையல் அறையில் சாப்பிட்டா தான் உங்களுக்கு உணவு உள்ளே இறங்குமா….?” என்ற கேள்விக்கு.

“என்ன தான் நீங்க வாயாறா என்னை வள்ளியம்மான்னு கூப்பிட்டாலும். நான் இந்த வீட்டு சமையல் காராம்மா தான் என்பதை நான் மறக்க கூடாது தம்பி.” என்று சொன்னவர் பாத்திரத்தோடு சமையலறை நோக்கி சென்றார்.

ஆம் வள்ளியம்மா அந்த வீட்டில் பத்து வருடமாக இருக்கும் சமையல் காராம்மா தான். இருந்தும் ஆதித்யாவுக்கு அவர்கள் மேல் அக்கரை என்பதோடு ஒரு மரியாதை என்று கூட சொல்லலாம்.

வள்ளியம்மாவை பற்றி சொன்ன நான் ஆதித்யாவை பற்றி உங்களுக்கு சொல்ல வில்லையே.ஆதித்ய நாரயணன் தன் பன்னிரண்டு வயது வரை தன் தாய் தந்தையரோடு சேலத்தில்*****கட்சி ஆபிசில் பக்கத்தில் இருக்கும் வீட்டில் தான் வாடகைக்கு இருந்தான். வீட்டை பற்றி சொல்வது என்றால் பின் பக்கம் பழைய காலத்து வீடு மாதிரி பெரியதாக இருந்தாலும். முன் பக்கத்தில் வாடகைக்கு விடுவதற்க்கு ஏற்ற வாறு மூன்று போஷனாக கட்டி வாடகைக்கு விட்டு இருந்தார். அந்த வீட்டின் உரிமையாளர்.

அந்த ஒரு போர்ஷனில் தான் ஆதித்யா குடும்பம் இருந்து வந்தது.ஆதித்யாவின் பெற்றோருக்கு ஆதித்யா ஒரே மகன் தான். அவன் அப்பா சத்ய நாரயணன் ஒரு கார் டிரைவர். அம்மா கற்பகம் தன் கணவரையும், பிள்ளையையும் பார்த்துக் கொண்டு இருக்கும் வீட்டு அரசி.

அவன் ஏழாவது படித்துக் கொண்டு இருக்கும் போது அவன் பெற்றோர் அவனை பள்ளிக்கு அனுப்பி விட்டு ஒரு உறவினர் வீட்டு விசேஷத்துக்கு செல்வதற்க்கு தன் காரையே எடுத்த சத்ய நாரயணன் பக்கத்தில் அமர்ந்து இருந்த தன் மனைவியிடம் தங்களின் மகனின் எதிர் காலத்தை பற்றி பேசிக் கொண்டே காரை ஒட்டிக் கொண்டு வந்தவர் எதிரில் வந்த லாரியை கவனிக்காமல் தங்கள் நிகழ் காலத்தை இறந்த காலமாக மாற்றியதும் அல்லாமல் தன் மகனின் எதிர் காலத்தையும் கேள்வி குறியாக்கி இந்த உலகத்தை விட்டு சென்று விட்டனர்.

சாவுக்கு வந்த அனைத்து உறவினர்களும் காரியம் முடிந்ததும் அந்த குழந்தையை எங்கே தங்களுடன் அனுப்பி விடுவார்களோ என்று பயந்து கிளம்பி விட. சொந்தக்காரருக்கு இல்லாத அக்கரை வீட்டு ஓனருக்கா இருக்க போகிறது. அவரும் அவர் பங்குக்கு வாடகை கொடுக்க முடியாத சின்ன பையனை அவன் வீட்டில் உள்ள பாத்திர பண்டத்தை எடுத்து வெளியே போட்டு அவனையும் வெளியேத்தி விட்டார்.

ஓனர் வெளியே தள்ளியவுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் முழித்து இருந்தவன் இரவு ஆனாதும் பக்கத்தில் இருந்த ****கட்சி ஆபிசின் வெளியில் படுத்து உறங்கி விட்டான். காலை எழுந்ததும் அவனின் சிறுகுடலை பெருங்குடல் திண்ணும் அளவுக்கு பசி வயித்தை கிள்ளும் வேளையில் தான் அந்த கட்சியின் உறுப்பினர் ஒருவர் வந்து ஆபிசை திறந்தவர்.

இவனை பார்த்து “என்ன தம்பி இங்கே இருக்கே….?” என்று கேட்டார். கட்சி ஆபிசு பக்கத்து வீடு என்பதால் அவருக்கு ஆதித்யா பொற்றோர்கள் இறந்தது தெரியும். அதனால் பாவப்பட்டு கேட்டதற்க்கு ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து இருக்கும் பையனை பார்த்தே அனுபவஸ்தரான அவருக்கு அனைத்தும் விளங்கி விட்டது.

“தம்பி கவலை படதே நீ இந்த ஆபிசிலேயே தங்கிக்கலாம்.இங்கே கொடுக்கும் வேலையை செய்துக் கொண்டு இங்கயே இருந்து விடு.” என்றதும் அன்றிலிருந்து அவன் இடம் அந்த கட்சி ஆபிசானது.

பன்னிரெண்டு வயது முதல் எடு பிடி வேலை செய்து தன் வயிற்று பாட்டை கவனித்தது மட்டும் அல்லாது அந்த கட்சி தொகுதியின் ஜாதி தலைவர் எம்.எல்.ஏக்கு அனைத்துமாய் இருந்து அவர் நம்பிக்கைக்கு பாத்திரமும் ஆனான்.

அந்த தலைவர் அவனின் பதினெட்டாவது வயதில் அந்த கட்சியின் உறுப்பினராய் அவனை சேர்த்தார். பின் அவனின் இருபத்திரெண்டாம் வயதில் இளைஞர் அணி தலைவாக ஆக்கப்பட்டான். அப்போதில் இருந்தே ஆதித்யாவின் உடை வெள்ளை வேஷ்ட்டி வெள்ளை சட்டை என்றானது.

அந்த உடை அவனுக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தி போனது என்பதால் தான் அந்த வயதிலேயே அவன் அந்த உடையை அணிந்தானா என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது.அவனின் ஆரு அடி உயரமும் கருமைக்கும் மேல் என்று சொல்லும் நிறத்திலும் கூர்மையான பார்வையுடன் அவன் யாரையாவது பார்த்தால் கண்டிப்பாக தன் மனதில் இருப்பதை அவனுக்கு சொல்லி விடுவார்கள்.ஆதித்யா ஆண் அழகன் என்று சொல்லா விட்டாலும் கம்பீரத்தோடு இருந்தான்.

அவனின் இருபத்தியெழாம் வயதில் அந்த ஜாதி தலைவர் ஒரு கேசில் மாட்டிக் கொள்ள அப்போது நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரை நிற்க வேண்டாம் என்று மேலிடம் சொல்லி விட. தன் ஜாதியில் இருக்கும் தனக்கு நம்பிக்கையானவனை நிறுத்த வேண்டும் என்று ஆதித்யாவை அந்த ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் நிறுத்தினார்.

ஆதித்யா அந்த தொகுதிக்கு புதியவன் இல்லையே…..? அந்த தொகுதி மக்கள் அனைவருக்கும் அவனை தெரியும். அதுவும் இல்லாமல் அந்த மக்களிடம் நேரிடை தொடர்பு அவனுக்கு இருந்த காரணத்தால் அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றான்.

அவனின் ஐந்தாண்டு ஆட்சி மக்களுக்கும் மிகவும் பிடித்து விட அவன் நின்றால் தான் அந்த தொகுதியில் நம் கட்சி வெற்றி பெறும் என்று தெரிந்த மேலிடம் அடுத்து நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அவனையே நிற்க வைத்தது. அவர்கள் எதிர் பார்த்ததுக்கு அதிகமாகவே அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் ஆதித்யா வெற்றி பெற்றான்.அந்த வெற்றியயை தான் நேற்று கட்சி கொண்டாடியது.

அவனின் முப்பத்திரெண்டாம் வயதிலயே அவன் இந்த உயரத்துக்கு வந்து இருக்கிறான் என்றால் அதற்க்காக அவன் பாடு பட்டது கொஞ்சம் நஞ்சமல்ல.ஆனாலும் அவன் ஏறி வந்த ஏணியை அவன் மறந்தது கிடையாது.

இன்றும் அந்த ஜாதி தலைவரை தனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவர் வீட்டுக்கே சென்று பார்ப்பான். அது மட்டும் அல்லாமல் அவனின் இந்த முன்னறேத்துக்கு காரணம் தன் ஜாதியே என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை . தான் இந்த ஜாதியில் பிறந்ததால் தான் அவனை தேர்தலில் நிற்க வைத்தார்கள். அதனால் தன் முன்னறேத்துக்கு தன் ஜாதியும் ஒரு காரணம் என்ற எண்ணம்.

இதன் இடையில் எந்த வீட்டில் இருந்து அவனை வெள்ளியேற்றினார்களோ…. அதே வீட்டில் முதலில் வாடகைக்கு இருந்தவன் பின் அதையே விலைக்கும் வாங்கி விட்டான்.முன்பக்க வீட்டை கட்சி ஆட்கள் வந்தால் பேசுவதற்க்கு வசதியாக மாற்றம் செய்தவன்.

பின் பக்க பெரிய வீட்டை எதுவும் செய்யாமல் அப்படியே வைத்துக் கொண்டான்.சிறு வயது முதலே அந்த பெரிய வீட்டின் பிரமாண்டம் அவனுக்கு மிக பிடிக்கும். வள்ளியம்மாவை வாடகைக்கு வந்த உடனே வீட்டு சாப்பாடு வேண்டும் என்று கருதி வேலைக்கு வைத்துக் கொண்டான்.

வள்ளியம்மாவும் காலை ஏழரைக்கு வந்தால் மாலை தன் பேத்தி வரும் வரை ஆதித்யா விட்டிலயே இருந்து இரவுக்கும் ஆதித்யாவுக்கு உணவு ஏற்பாடு செய்து விட்டு ஆதித்யாவின் உத்தரவின் பேரில் தனக்கும் தன் பேத்திக்குமான உணவையும் எடுத்துக் கொண்டு தான் தன் வீட்டுக்கே செல்வார். இந்த பழக்கம் வள்ளியம்மா வேலை சேர்ந்த நாள் முதல் நடப்பது.

அன்றும் அது போல் ஆதித்யாவுக்கு இரவு உணவை சமைத்தவர் தனக்கும் தன் பேத்திக்கும் தேவையானதை எடுத்து கிளம்பும் வேளையில் ஆதித்யா உள்ளே வந்தான். அவனின் சோர்ந்த முகத்தை பார்த்த வள்ளியம்மா தான் எடுத்த உணவை கீழே வைத்து விட்டு சமையல் அறைக்கு சென்று இஞ்சி தட்டி டீ போட்டவர் ஆதித்யாவிடம் தந்து

“குடி தம்பி தலை வலிக்கு இதமா இருக்கும்.” என்று சொன்னதும் மறு பேச்சி பேசாது வாங்கி குடித்தவன் குடித்த டம்ளர்க்காக கைய் நீட்டிய வள்ளியம்மாவிடம் அதை கொடுத்து விட்டு.

“ உங்க பேத்திக்கு காலேஜ் பீஸ் எப்போ கட்டணும் வள்ளியம்மா.”

“அடுத்த மாதம் தம்பி.” என்றதும் உடனே தன் பர்சில் இருந்து பணத்தை எடுத்தவன் அவரிடம் கொடுத்து கொண்டே “வேலையில் நான் மறந்துட்டாலும் நியாபகமா கேட்டு வாங்கிக்கனும் வள்ளியம்மா.” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வெளியில் கட்சி காரார் அழைக்கும் குரலில் ஆதித்யா வெளியேறினான்.

தன் கையில் உள்ள பணத்தையும் ஆதித்யாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்ட வள்ளியம்மாவுக்கு ஆதித்யாவை நினைத்தால் பிரமிப்பாக தான் இருந்தது. ஆதித்யா எப்போதும் அளந்து அளந்து தான் பேசுவான்.ஆனால் தன் பக்கத்தில் இருப்பவர்களின் தேவை அறிந்து உதவி செய்வதில் அவனை மிஞ்ச முடியாது.

அது போல் தான் வள்ளியம்மா தன் பேத்தி பன்னிரெண்டாம் வகுப்பில் வெற்றி பெற்றதும் மேல் கொண்டு படிக்க வைக்காமல் திருமணத்துக்கு பார்த்த போது ஆதித்யா “ஏன் வள்ளியம்மா இப்போதே திருமணம் செய்ய நினைக்கறிங்க.” என்று கேட்டதற்க்கு வள்ளியம்மா.

“நான் இருக்கும் ஏரியா அவ்வளவு சரியில்லை தம்பி. வயித்துள்ள நெருப்பு கட்டிக்கிட்டு இருக்கேன். அதுவும் இல்லாமல் நான் வீட்டை விட்டு காலையில் கிளம்பினால் பொழுது சாய தான் வீட்டுக்கே போறேன்.எனக்கும் வயசு ஆகுதே தம்பிஅப்பன் ஆத்தா இல்லாத பொண்ணு கால காலத்தில் ஒருத்தன் கையில் அவளை பிடிச்சி கொடுத்துட்டா நான் நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்.” என்பவரை கூர்மையுடன் பார்த்த ஆதித்யா “என் வீட்டில் வேலை செய்றவங்க வீட்டு பெண்ணை தப்பா பார்க்க யாருக்கு தைரியும் இருக்கு என்று நான் பார்க்கிறேன். இந்த காரணத்துக்கு எல்லாம் உங்க பேத்தி படிப்பை நிறுத்த வேண்டாம்.” என்று சொல்லியதோடு மட்டும் அல்லாமல் அவர் பேத்தியின் படிப்பு செலவை இந்த மூன்று ஆண்டுகளாக அவன் தான் பார்த்துக் கொள்கிறான்.

இன்னும் சொல்ல போனால் வள்ளியம்மாவின் பேத்தியை ஆதித்யா பத்து ஆண்டுகளுக்கு முன் வள்ளியம்மா வேலைக்கு வந்த அன்று அவளின் பத்து வயதில் பார்த்ததோடு சரி. அதன் பின் வள்ளியம்மாவும் தன் பேத்தியை இங்கு அழைத்து வந்தது கிடையாது.

அவர் தன் பேத்தியை இங்கு அழைத்து வராததுக்கு பெண்ககள் இல்லாத வீடு ஒரு காரணம் என்றால் அடுத்த காரணம் ஆதித்யா நல்லவனாக இருந்தாலும் அவன் வீட்டுக்கு வந்து செல்லும் கட்சியாட்கள் அனைவரும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது அல்லவா. அதனால் தான் தன் பேத்தியை வள்ளியம்மா ஆதித்யா வீட்டுக்கு அழைத்து வந்ததே இல்லை.

பழைய நினைவில் இருந்து கலைந்த வள்ளியம்மா தன் பேத்தி வரும் நேரமாகி விட்டதால் கையில் உள்ள பணத்தை தன் முந்தியில் முடிந்தவர் கீழே வைத்த உணவு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பின் கட்டு வழியாக வெளியே சென்றார்.

அவர் எப்போதும் ஆதித்யா வீட்டுக்கு வருவதும் பின் கட்டு வழியாக தான் போவதும் அதே வழியாக தான். முன் பக்கத்தில் எப்போதும் யாராவது ஆட்கள் இருந்துக் கொண்டே இருப்பதால் எப்போதும் வள்ளியம்மா பின் கட்டு வழியை தான் உபயோகிப்பார்.அன்றும் அறக்க பறக்க அய்யோ தாமரை இந்நேரம் வீட்டுக்கு வந்து இருப்பாளே… என்ற கவலையில் தன் வீட்டுக்கு விரைந்து சென்றார்.
 
Top