Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 12 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்-----12

அன்று தாமரையை விட வசந்திக்கு தான் மனம் திக் திக்கென அடித்துக் கொண்டது. அன்று விடியலையிலேயே வசந்தியை அழைத்த ஆதித்யா அன்று இரவு அங்கு வருவோம் எங்களுக்கும் சேர்த்து சாப்பாடு செய்து வைய் என்று சொன்னதுமே வசந்திக்கு விஷயம் விளங்கி விட்டது.

இன்று ஆதித்யா தாமரையிடம் தன் மனதில் இருப்பதை பேச போகிறான் என்று.ஆனால் அதை கேட்டு தாமரையின் மனம் என்ன பாடு படும் என்று நினைக்கும் போது தான் அவள் மனம் வேதனை அடைந்தது.

தாமரையைய் இந்த ஒரு மாத காலமாக தான் வசந்திக்கு தெரியும். அதுவும் தாமரை மனம் விட்டு வசந்தியிடம் பேசியது கிடையாது. எப்போதும் தன் பாட்டியின் நினைவிலேயே தான் மூழ்கி இருப்பாள். பேசினாலும் அந்த பேச்சி தன் பாட்டி பற்றியதாக தான் இருக்கும்.

அந்த பேச்சியியில் இருந்தே வள்ளியம்மா தன் பேத்தியை எப்படி பாது காத்து வளர்த்து இருக்கிறார் என்பதை அறிந்துக் கொண்டாள். அனைத்தும் எதற்க்காக இந்த கயவர்களிடம் அவளை விட்டு செல்லவா.

அதுவும் யாரை முழுவதும் நம்பி தன் பேத்தியை ஒப்படைத்து சென்றாரோ….அவர்களாளையே தன் பேத்தியின் மானத்துக்கு ஆபாத்து என்று சொல்லும் போது என்ன என்று சொல்வது.

ஆனால் இதை ஏதும் அறியாத தாமரையோ ஆதித்யா இன்று இரவு இங்கு தான் சாப்பிடுகிறாராம் என்று வசந்தி சொன்னதும். “அதுவும் சரி தான் பேசி விட்டு அவர் வீட்டுக்கு சென்று சாப்பிடுவதற்க்கு நேரமாகி விடும்.” என்று சொன்னவள்.

பின் என்ன நினைத்தாலோ அந்த வீட்டை தன் பார்வையால் அளந்தவள் பின் வசந்தியிடம் “நானும் இந்த வீட்டில் இருப்பது இன்று தான் கடைசி நாளாக இருக்கும் வசந்தி.” என்று சொன்னவள்.

அவள் கைய் பிடித்து “ உன்னை மறக்கவே மாட்டேன் வசந்தி. இப்போ நான் ஹாஸ்ட்டலில் தான் தங்க போறேன். அதனால் உன்னை அழைச்சிக்க முடியாது. என் படிப்பை முடித்ததும் ஆதித்யா சாரின் ஹாஸ்பிட்டலில் தான் வேலை பார்க்க போகிறேன். அப்போ நான் ஏதாவது வீட்டை பார்த்துட்டு உன்னை கூப்பிடுறேன். அப்போ நீ என் கூடவே வந்துடுறியா வசந்தி.” என்று கேள்வி கேட்டு அவளை ஏக்கத்தோடு பார்க்க.

அவள் பேச்சையும் அவள் பார்வையும் பார்த்த வசந்திக்கு மனதில் அய்யோ என்று ஆனாது. அடி பாவி இனி இது தான் உன் வீடு. இந்த வீட்டை விட்டு உன்னை அவ்வளவு சீக்கிரத்தில் அனுப்பி விட மாட்டார்கள் என்று தெரிந்தால் நீ எவ்வளவு துடித்து விடுவாய் என்று நினைக்கும் போது இப்போதே என் மனது கலங்குகிறதே…

என்று அவள் அவள் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே...தன் கேள்விக்கு பதில் அளிக்காது தன் முகத்தையே பாவமாக பார்க்கும் வசந்தியை பார்த்து இவள் ஏன் என்னை இப்படி பாவமாக பார்க்கிறாள் என்று நினைத்தவள்.

பின் அவளே அதற்க்கு காரணத்தையும் கண்டு பிடித்து “உன் ஆதித்யா அய்யா என்ன சொல்வார் என்று தானே யோசிக்கிறாய். நான் கேட்டால் உன்னை கண்டிப்பாக என் கூட அனுப்பி விடுவார்.” என்ற அவள் வெகுளி தனத்தை பார்த்து.

ஏழை பெண்கள் அழகாக பிறப்பது பாவம் என்றால், பெற்றோர்களோ...உறவு முறையோ இல்லாமல் இருப்பது அதை விட பாவம். அதுவும் இது மாதிரி வெகுளியைய் இந்த நிலைக்கு நிறுத்திய கடவுளை நினைத்து அவளாள் வைய்ய தான் முடிந்தது.

தன் பதிலுக்காக தன்னையே பார்த்திருந்த தாமரையை பார்த்து “நான் கண்டிப்பாக உன் கூட தான் இருப்பேன் தாமரை.” என்று சொன்னவள்.

தன் கண்ணீல் வழியும் நீரை அவள் பார்த்திட கூடாது என்று கருதி தலையை குனிந்துக் கொண்டே “ வேலை இருக்கு நான் போறேன்.” என்று அவ்விடத்தை விட்டு அகன்று விட்டாள்.

வசந்தி போனதும் நேற்று எடுக்காமல் விட்ட பொருட்களை பார்த்து பார்த்து எடுத்து அடுக்கியவள். தன் பாட்டியின் பொருட்களை ஒரு பெட்டியில் தனியாக அடுக்கும் போது மட்டும் தைரியாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்த உறுதி மொழி தூள் தூள் ஆவாதை அவளால் தடுக்க முடியாமல் போனது.

தன் பாட்டியின் துணியின் எண்ணிக்கை மிக குறைவே….. ஆனால் தன்னுடைய துணி அடுக்கிய பெட்டியை பார்க்கும் போது அவள் துக்கம் அதிகரித்தது. பாட்டி தனக்காக எதையும் வாங்காமல் எனக்காக மட்டுமே வாழ்ந்தார்கள் என்று அவள் அறிந்தது தான்.

ஆனால் இப்போது அவர்கள் இல்லாத போது அவர்கள் தனக்காக செய்த தியாகம் மலை போல் கண் முன் தோன்றி அவளை இம்சித்தது.ஒரு வேலைகாரியின் பிள்ளை போலவா நம்மை வளர்த்தார்.

மற்ற பிள்ளைகளின் எதிரில் நான் எந்த விதத்திலும் குறைந்து காணப்பட கூடாது என்று விலை உயர்ந்த ஆடையை தான் எடுத்து கொடுப்பார். அப்போது அவர் தனக்காக வாங்கியது என்னவோ மிக குறைந்த விலையில் உள்ள வாயில் சேலை தான்.

“நல்ல புடவையா எடுங்க ஆயா” என்று சொன்னதற்க்கு வேலை செய்வதுக்கு இது தான் வசதி கண்ணு. நீ படிக்க போறே உனக்கு தான் நல்ல துணியா வாங்கணும்.” என்று தன் வாயை அடைத்து விட்டதை இப்போது நினைக்கும் போது அவள் மனமே விண்டு விடுவது போல் வளித்தது.

தாமரையை தனியே விட்டு வந்த வசந்திக்கு கீழ் வந்தும் எந்த வேலையும் இல்லாது போக. சரி வாங்கும் சம்பளத்துக்கு நமக்கு கொடுத்த தாமரையை நன்றாக பார்க்கும் வேலையாவது செய்வோம் என்று நினைத்து தாமரைக்கு ஆதித்யா சொன்ன மாதிரி ஆப்பிள் ஜூஸ் கலந்து தாமரையின் அறைக்கு சென்ற போது.

அங்கு தன் நெஞ்சை பிடித்து அழுதுக் கொண்டு இருக்கும் தாமரையை பார்த்து பயந்து போய் “என்ன தாமரை என்ன ஆச்சி. நான் போகும் போது கூட நல்லா தானே….இருந்தே.” என்று அவளை உலுக்கி கேட்டதில்.

தன் மனதில் இருப்பதை அனைத்தையும் சொன்ன தாமரை “கடைசி வரை அவங்க எனக்காக தான் வாழ்ந்தாங்க வசந்தி. ஏன் உயிர் போகும் போது கூட ஆதித்யா சாரிடம் என்னை பத்தி பேசி தான் சத்தியமும் வாங்கினாங்க.” என்ற வார்த்தையில் கண்ணில் ஒரு கூர்மையுடன்.

“சத்தியமா...என்ன சத்தியம் தாமரை.” என்று பதட்டத்துடன் கேட்ட வசந்தியை பார்த்து இவள் ஏன் இவ்வளவு பதட்ட படுகிறாள் என்று நினைத்தாலும் அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

“அப்போ உங்க பாட்டி ஆதித்யா அய்யா கிட்ட என்ன கேட்டாங்கன்னு உனக்கு தெரியாது.”

தாமரை தெரியாது என்று தலையாட்டியவளை பார்த்து “அப்போ சத்யா உன் கையைய் ஆதித்யா கையில் வைத்து பேசும் போது கூட நீ என்ன என்று கேட்டுக்கலையா தாமரை.” என்றதற்க்கு.

“அந்த சமயத்தில் எனக்கு கேட்க தோனலை வசந்தி.”

“அப்புறமாவது கேட்டு இருக்கலாமே தாமரை….”

இவள் ஏன் இதை பெரிய விஷயமா நினைத்து பேசுகிறாள். என் கிட்ட என்ன பெரிய சொத்தா இருக்கு என்னை ஏமாத்தி அவங்க வாங்குவதுக்கு என்று நினைத்தவள். அதை அவளிடமே கேட்டு விட.

தாமரையை ஆழ்ந்த ஒரு பார்வை பார்த்துக் கொண்டே “எனக்கும் அது தான் பெரிய கவலையா இருக்கு தாமரை. உன்னிடம் இருக்கும் பெரிய சொத்தை பறித்து விடுவாங்களோ…..என்று.”

அதை கேட்ட தாமரை தன் பாட்டி இறந்த இந்த ஒரு மாதகாலமாக ஏன் அவள் பாட்டிக்கு எப்போது ரத்த புற்று நோய் என்று தெரிந்ததோ அன்றிலிருந்து தன் சிரிப்பையே தொலைத்து விட்டு இருந்தவள்.

வசந்தியின் இப்பேச்சை கேட்டு வயிறு வலிக்க சிரித்து விட்டு வசந்தியை பார்த்து “என்ன என்ன என் கிட்ட இருக்கும் சொத்தை ஆதித்யா சார் வாங்கிப்பாரா…..” என்று அவள் சிரித்துக் கொண்டு இருக்கும் போது அங்கு வந்த ஆதித்யா அதை அதிசயத்துடன் பார்த்து நின்றான்.

ஆதித்யாவை அந்த நேரத்தில் அங்கு எதிர் பார்க்காத பெண்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நின்றனர். அப்போது அவர்கள் தாமரையின் அறையில் இருக்கும் பால்கனியில் நின்று தான் பேசிக் கொண்டு இருந்தனர்.

ஆதித்யாவின் கார் சத்தம் கேட்கவில்லையே என்று நினைத்த தாமரை பால் கனியில் எட்டி பார்க்க அங்கு கார் நிற்காமல் இருப்பதை பார்த்து இவர் எதில் வந்தார் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே….

“என்ன தாமரை என்ன பார்க்குறே….?” என்ற கேள்விக்கு.

“ கார் வந்த சத்தமே கேட்கலே…..கீழேயும் கார் நிக்கலே….” என்று அவனை பார்க்க.

“காரை பின் பக்கம் நிறுத்தி இருக்கேன்.” என்று சொன்னவன்.

“நான் எப்போதும் அங்கு தான் நிறுத்துவது. இனியும் அங்கு தான் நிறுத்த வேண்டி இருக்கும்.” என்ற பதில் தாமரைக்கு புரிந்ததோ…. இல்லையோ…..வசந்திக்கு புரிந்து தாமரையைய் பார்க்க.அந்த முகத்தில் குழப்பமே இருந்தது

பின் ஆதித்யாவை பார்க்க அங்கு தன்னை முறைத்துக் கொண்டு இருக்கும் ஆதித்யாவை பார்த்து இனி தான் இங்கு இருக்க முடியாது என்று கருதியவளாய் தாமரையின் கையை பிடித்து அழுத்தி விட்டு சென்றாள்.
 
ஒருத்தரோட அருமை அவர் இறந்த அப்புறமும் அதிகமா தெரியுதுனா அவர் அவருக்காக‌ வாழ்ந்ததை விட உடனிருந்தவருக்காக வாழ்ந்திருக்கிறார்
 
Last edited:
Top