Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 16 2

Advertisement

Admin

Admin
Member
அது போல் இப்போது எல்லாம் தன் உடலின் தேவையை விட தன் உள்ளத்துக்கு மருந்தாக அவள் இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கியது. தன் தாய் மடியில் படுத்தது போல் அவள் மடியில் தலை சாய்க்க வேண்டும்.

அவளும் தன் முடி கோதி தன்னை தூங்க வைக்க வேண்டும் என்று எதிர் பார்த்தான். இங்கு பேச்சிக்கே வழி இல்லாத போது இது எங்கு கிடைக்கும் என்று தன் உள்ளத்து ஆசையை உள்ளயே போட்டு இருக்க.

இப்போது எவனோ ஒரு நல்லதம்பியிடம் அவ்வளவு நேரம் பேசியது அவனுக்கு பொறாமையை தூண்டி இருந்தது. படிப்பு சம்மந்தமாக இருந்தாலும் இவள் எப்படி பேசலாம்.

ஏன் காலேஜில் பெண் பிள்ளைகளே படிக்க வில்லையா….ஒரு ஆணிடம் தான் தன் சந்தேகத்தை கேட்க வேண்டுமா….? என்று நினைத்தான்.

ஒழுங்காக தாலி கட்டி குடும்பம் நடத்தினால் இது மாதிரி எல்லாம் எண்ணி இருப்பானோ...என்னவோ….கழுத்தில் தாலி இல்லாது காலேஜ் சென்று வந்ததால் எங்கு யாராவது லவ் லட்டர் நீட்டி விடுவார்களோ….என்றும் சில சமயம் யோசிக்க ஆராம்பித்து விட்டான்.

இந்த அனைத்து எரிச்சலும் ஒன்றாய் சேர்ந்தது இவ்வளவு நேரம் அவனிடம் மட்டும் பேச தெரிந்தவளுக்கு தன்னிடம் பேசாது இருப்பவளை பாத்து “இப்போ இவ்வளவு நேரம் நான் வந்தது கூட தெரியாது பேசிக் கொண்டு இருந்தாயே….அவனை கேட்கிறேன். யார்…..?”

எப்போதும் அவன் பேச்சிக்கு பதில் அளிக்காதவள் இதற்க்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று நினைத்தவள் அவளை தெனவெட்டாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே “என்னுடைய பாய் பிரண்ட்.”

என்று சொன்னது தான் தன் கையைய் ஓங்கி விட்டான். அதையும் ஒரு கைய்யால் தடுத்து நிறுத்தியவள். “என்ன ஆதித்ய நாரயணன் தாலி கட்டிய பொண்டாட்டி போல கைய்ய ஓங்கிட்டு வர்றிங்க. மறந்து போச்சா எனக்கு நீ தாலி கட்டவில்லை.யாருக்குன்னாலும் நான் போன் போடுவேன்.அது மாதிரி யாருன்னாலும் எனக்கு போன் போடுவாங்க.

நீ தானே சார் எனக்கு சொல்லி கொடுத்திங்க வாழ்வதுக்கு தாலி அவசியம் இல்லை. மனதுக்கு பிடித்தா போதுமுன்னு. எனக்கு என்னவோ நீ எவ்வளவு வசதி செய்து கொடுத்த போதும் உன்னை பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்….?” என்று அவனிடமே கேள்வி எழுப்ப.

முதல் முறையாக ஆதித்ய நாரயணன் பேச முடியாமல் பேச தோன்றாமல் நின்றான். அவன் ஏதோ பேச வரும் போது சத்யா அந்த அறைவாயில் நின்றுக் கொண்டு “தலைவா….” என்று அழைக்க.

எப்போதும் மேலே வராத சத்யா முகத்தில் பதட்டத்துடன் இருப்பதை பார்த்து “என்ன சத்யா என்ன…..?” என்று கேட்டதுக்கு.

தாமரையைய் சங்கோஜமாய் பார்த்துக் கொண்டே “ ஒருத்தன் உங்களுடைய பேனரை பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருக்கும் பில்டிங் மேல் மாட்டும் போது கீழே விழுந்துட்டான். சீரியஸாக நம்ம ஹாஸ்பிட்டலில் தான் சேர்த்து இருக்காங்க.



எதிர் கட்சி ஆளுங்களுக்கு தெரிவதற்க்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும் தலைவா…..” என்று சொல்லியும் தாமரையிடம் பேசாது எப்படி போவது என்று தாமரையை பார்த்துக் கொண்டு நின்றான்.

இப்போது என்னவோ கட்சி பிரச்சனை விட தாமரை பிரச்சனை தான் பெரியதாக தோன்றியது. முதலில் எல்லாம் தன்னை மரியாதையாக பார்த்துக் கொண்டு இருக்கும் போது தன்னை முதலில் ஐய்யா பின் சார் என்பதை தவிர வேறு சொல் போட்டு அழைக்க மாட்டாள்.

எப்போது தன் விருப்பதை சொல்லி அவளை தொட்டானோ….அப்போதிலிருந்து பேசுவது கம்மி தான். அப்போதும் நீ வா போ என்று மரியாதை இல்லாமல் தான் அழைப்பாள்.

அப்போது எல்லாம் பெரியதாக தோன்றாதது இப்போது தன் முழுபெயரான ஆதித்ய நாரயணன் என்று அழைத்தது. ஏனோ தன்னை விட்டு அவள் விலகி போவது போலவே இருந்தது.அதுவும் உங்களிடன் எந்த விருப்பமும் தோன்றவில்லை என்பதை கேட்டவுடன் ஏதோ தவறு நடந்து விடுமோ என்று உள்ளுக்குள் பயம் வந்து விட்டது.

அதனால் தான் அதை பற்றி தாமரையிடம் பேசி விட நினைத்து இருந்தான். இப்போது கட்சி பிரச்சனை வந்தவுடன் போலாமா வேண்டாமா….? என்று யோசிக்கும் வேளையில் “அவர் வரமாட்டார் சத்யா….ஏன்னா உங்க தலைவர் வந்த வேலை இன்னும் முடியலே…..” என்று கட்டில் உள்ள புத்தகத்தை எடுத்துக் கொண்டே சொல்ல.

தாமரையை முறைத்துக் கொண்டே ஒன்னும் பேசாது வெளியேறினான் ஆதித்யா….

“அது என்ன நாக்கா தேள் கொடுக்க ….அவள் வாய் திறந்தாலே இப்படி கொட்டுகிறாள்.” என்று சத்யாவிடம் சொல்ல.

சத்யா ஏதும் பேசாது அமைதியாக ஆதித்யாவை பார்த்தான்.

“இவன் வேற இப்போ எல்லாம் இப்படி ஒரு பார்வை பாத்து வைக்கிறான்.” என்று அதற்க்கும் திட்டிக் கொண்டு இருக்கும் போதே ஹாஸ்பிட்டல் வந்து விட.

தன் கவலை மறந்தவனாய் அங்கு அட்மிஷன் செய்த தன் கட்சி ஆளை பார்த்து விட்டு பயப்படும் படி ஒன்றும் இல்லை என்று டாக்டர் சொன்னதும் அவன் குடும்பத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைய் தன் கைய் காசு கொடுத்து விட்டு வரும் போது எதிரில் பார்த்த டாக்டர் சுரேந்தர் “என்ன ஆதித்யா சார் தாமரை எப்படி இருக்கா…..?” என்று ஒருமையில் கேட்க.

பதில் சொல்லாது இருக்கும் ஆதித்யாவை பார்த்து “தாமரை சேத்துல தான் பூக்குது. ஆனா அதை நாம் இறைவனுக்கு தான் சூடுறோம். அது போல தெரியாமல் தாமரை சேத்துல விழுந்துட்டாலும் அது புனிதம் கெடாது. ஏன்னா தாமரை தாமரை தான்.” என்று சொல்லி விட்டு செல்பவனையே பார்த்திருந்த ஆதித்யாவை சத்யா தான் வீட்டுக்கு அழைத்து வந்தான்.

வீட்டுக்கு வந்தும் சுரேந்தர் பேசியதும் தாமரை பேசியதுமே மாறி மாறி காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பின் என்ன நினைத்தானோ தன் அறையில் இருந்து “சத்யா…. சத்யா…” என்று கத்தி அழைக்க சத்யாவும் என்னவோ ஏதோ என்று அவன் முன் “என்ன தலைவா….என்ன விஷயம்.” என்று கேட்டதுக்கு.

மொட்டையாக “நாளை தாமரையை கல்யாணம் செய்துக்க போறேன்.”

“என்ன தலைவா என்ன சொல்றிங்க.” என்று அதிர்ச்சியா….ஆச்சரியமா…..என்று அவனுக்கே தெரியாத குரலில் கேட்க

.”ஆமா சத்யா நான் தாமரையைய் கல்யாணம் தான் செய்ய போறேன். வள்ளியம்மா படத்துக்கு முன்னே…. நீயும் வசந்தியையும் சாட்சியாக வைத்து தாமரை கழுத்தில் தாலி கட்ட போறேன். அதற்க்கு உண்டான தாலி மாலை வாங்கி வா…..

என்று சொல்லி கத்த நோட்டை அவன் கையில் திணிக்க “தலைவா புடவையும் வாங்கி வரவா….!!!!” என்றதற்க்கு “வேண்டாம் சத்யா அம்மா புடவை இருக்கு.” என்று சொல்லி போனில் நான்கு மணிக்கு அலாரம் வைத்து விட்டு கட்டிலில் படுத்தவன் மனதுக்குள் இனி யாரும் என் தாமரையைய் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று நினைத்தானே தவிர.

இப்போதும் அவளுக்கு ஊர் அறிய மனைவி என்ற அந்தஸ்த்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

ஆனால் அந்த கடவுள் ஆதித்யா அந்த உரிமையைய் கொடுக்க விட்டாலும் நான் கொடுக்கிறேன் என்று தாமரைக்கு கொடுத்து இருப்பதை ஆதித்யா அறியவில்லை.

இதுவும் தான் இனி ஊர் அறிய திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று அவள் முன் நிற்க போவதையும்….அவள் அதற்க்கு சம்மதிக்க போவது இல்லை என்பதையும் …..

ஆதித்யாவுக்கு நல்ல நேரம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.அந்த நம்பிக்கை சத்யாவுக்கு இருப்பதால் ஆதித்யா சொன்னவுடன் மகிழ்ச்சியுடன் காலண்டரில் நாளை முகூர்த்த நாளா என்று பார்த்தான்.ஆம் மகிழ்ச்சியுடன் தான்.!!!!

கொஞ்ச நாளாகவே சத்யாவுக்கு நாம் செய்வது தவறு என்று அவன் மனசாட்சி அவனை கேள்வி கேட்க ஆராம்பித்து விட்டது. இப்போது ஆதித்யாவின் இந்த பதிலால் அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடலாம் என்பது ஒரு புறம் என்றால்!!!!!!

தலைவர் யாரும் அறியாமல் தானே தாலி கட்டுகிறார் அதனால் அவர் பதவிக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று நினைத்தவன் இன்னும் ஒன்றும் நினைத்தான்...சே நமக்கு ஏன் இந்த ஐடியா தோனவில்லை என்பதை.

சரி இப்போதாவது இதற்க்கு ஒரு முடிவு வந்ததே என்று நினைத்து காலண்டரை பார்க்க அதில் மறு நாள் முகூர்த்த நாள் என்று போட்டு இருக்க மகிழ்ச்சியுடன் தலைவர் சொன்ன பொருட்களை வாங்க சென்றான்.
 
:love: :love: :love:

போங்கடா ரெண்டு பேரும்......... எல்லாம் உங்க ரெண்டு பேர் இஷ்டம் தான்..........
அவள் ஒத்துப்பாளான்னு எல்லாம் கிடையாது.........
தாமரைக்கு சான்ஸ் மேல சான்ஸ் நீங்களே குடுப்பீங்க போல.......

4 மணிக்கே குளிச்சுட்டு போங்க....... அவ உங்களுக்கு பொங்கல் வச்சு பூசை வைப்பா.........
 
Last edited:
Top