Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 20 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---20

ஆதித்யா கொடுத்த ராஜனாமவை மேலிடம் ஏற்றுக் கொள்ள .ஆதித்யா தனியாக சுயேச்சையாக நிற்பதால் அதிக அளவில் வேலை இருந்தது.தன் முழு நேரத்தையும் தேர்தல் வேலை செய்வதிலேயே ஈடுபடுத்திக் கொண்டான். வேலையில் தாமரை பற்றியும் குழந்தை பற்றியும் இருந்த கவலையை மறக்க தன் கட்சி வேலையில் முழு மூச்சுடன் ஈடுபட்டான்.

இருந்தும் இரவில் அந்த கவலை பிடித்துக் கொள்ள ஒவ்வொரு இரவும் தூக்கமில்லா இரவாக தான் சென்றது. குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டதால் இன்னும் அவன் நிலை மோசமாக தான் ஆகியது.

சத்யாவே தலைவரின் நிலை பார்த்து தானே தாமரையிடம் பேசிவிடலாமா….என்று யோசிக்க ஆராம்பித்து விட்டான். அவன் யோசனை அவன் கண்களே காட்டி கொடுத்து விட ஆதித்யா ஸ்டிட்டாக “இனி எந்த முடிவும் அவள் தான் எடுக்க வேண்டும். நீ எதுவும் சென்று பேசாதே…” என்று சொன்னவன்.

சிறிது யோசித்து விட்டு “உன் ஆள் வசந்தி மூலமாக ஏதாவது செய்தால் அவ்வளவு தான்.” என்று மிரட்ட.

“ வசந்தி என் ஆளா……?இது என்ன தலைவா புதுசா என்னையும் கோத்து விடுறிங்க.”

“நான் கோத்து விடுறேனா….? நீ தான் பசை இல்லாமலேயே அங்கு போனவுடன் உன் கண் அவள் மேல் ஒட்டிக் கொள்கிறதே….இதில் நான் வேறு புதுசா கோத்து வேற விடனுமா…..?” என்று அவனை வாரா.

“அய்யோ தலைவா நான் அதுக்காக பாக்கலை…..அவ எப்போ பார்த்தாலும் என்னை ஒரு தினுசாவே பார்ப்பாளா….அது என்ன பார்வை என்று கண்டு பிடிக்க தான் அவளை பார்த்தேன். நீங்க நினைப்பது போல எல்லாம் இல்லை தலைவா….” என்றதற்க்கு.

“ஒரு தினுசானா….விருப்பமாவா….?”

“அது தான் இல்லையே….”என்று சத்யா சட்டென்று சொல்லி விட. அவன் பதிலே அவன் விருப்பத்தை சொல்ல.

“பாத்தியா உனக்கு அவள் மேல் விருப்பம். அதனால் தான் உன்னை அவள் பார்ப்பது என்ன பார்வை என்ற ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறாய். இதே வேறு யாராவது உன்னை இது மாதிரி பார்த்தால் அவங்களை இப்படி தான் உத்து உத்து பார்ப்பியா….சொல்.

யார் எப்படி பார்த்தால் எனக்கு என்ன என்று தானே கண்டுக்காம போய் இருப்பே…..”என்று சொன்னவன்”

பின் “முயலை பிடிக்கிறவனை மூஞ்சை பார்த்தாலே தெரியாதா…..வசந்தி நல்ல பொண்ணு தான் அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. என்ன அவளை நீ கட்டிக்கிட்டா மீனாட்சி ஆட்சி தான் நடக்கும்.” என்று சத்யாவின் மனதை பிட்டு பிட்டு வைத்து விட்டு பின் அவளை திருமணம் செய்துக் கொண்டால் அவன் நிலை என்ன என்பதையும் விளக்கிய ஆதித்யாவை பார்த்த சத்யா…

“தலைவா அங்கே போனா அண்ணியைய் பார்க்கிறதே விட்டுட்டு என்னை எல்லாம் நோட் பண்ணி இருக்கிங்களா….?” என்று சத்யாவும் ஆதித்யாவின் இப்போதைய மனநிலையை மாற்றும் பொருட்டு அவன் கேலிக்கு பதில் கேலியில் ஈடுபட்டான்.

ஆதித்யா தன்னிடம் பேசி விட்டு சென்றதில் இருந்து தாமரைக்கு அவன் நினைவாகவே இருந்தது. அவன் நினைவு என்றால் அவனை மன்னிப்பது பற்றி அல்ல.என்ன காரணம் சொன்னாலும் அவன் செய்தது தப்பு தான் அதில் எந்த வித மாற்று கருத்தும் தாமரைக்கு கிடையாது

அவன் யோசனை என்றால் அவன் பேசியது தான். தன் பாட்டி அவனை பற்றி சொல்லி இருக்கிறார்கள் தான். ஆனால் இது பற்றி எல்லாம் சொல்லியது இல்லை.

அவளுக்கு இதுவும் தோன்றியது கண்டிப்பாக இதை தன் பாட்டியிடம் என்ன தன் வலது கைய்யாக இருக்கும் சத்யாவிடம் கூட சொல்லி இருக்க மாட்டான் என்று .

அவனின் சின்ன வயதில் அவன் பட்ட கஷ்டத்தை அவனுக்கு ஏற்பட்ட அவமானத்தையும் நினைக்கு போது அவளுக்கே கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது.

அதுவும் படிக்கும் வயதில் பாட்டில் வாங்கிக் கொண்டு வருவது மட்டும் அல்லாமல் அவனையே ஊத்திக் கொடுக்க சொன்ன அந்த கட்சி ஆபிசில் உள்ளவர்களை நினைத்தால் அவளுக்கு கோபம் தான் வந்தது.

அது போல் அந்த கட்சி தலைவரே இருக்கட்டும் அந்த மாதிரி இடத்துக்கு எல்லாம்மா இவனை கூட்டிக் கொண்டு செல்வார்கள் அதுவும் ப்ரீ அட்வைஸ் மாதிரி நீயும் ஆனுபவியா….?இதே இவன் பிள்ளையா இருந்தா இப்படி தான் சொல்வாரா….என்று அவன் மேல் கோபமும் எழுந்தது.

பின் இதுவும் அவளே நினைத்துக் கொண்டாள் நல்ல வேலை அந்த மாதிரி தப்பு எல்லாம் செய்யவில்லை அது அவள் மனதுக்கு சிறிது ஆறுதலாக தான் இருந்தது.

இதையும் அவள் மனது இடுத்துரைக்க மறக்க வில்லை. தன்னை தவிர ஆதித்யாவின் பார்வை வேறு எங்கும் பார்க்கவில்லை என்பதை. ஏன் வசந்தி கூட பார்க்க கண்ணுக்கு லட்சணமாக தான் இருக்கிறாள்.

அவள் ஏதாவது கேட்டாலோ...இல்லை இவனாய் ஏதாவது கேட்டாலோ….வசந்தியின் முகத்தை பார்த்து கேட்காது வேறு எங்கோ பார்வையைய் செலுத்திய படியோ…..இல்லை போனை நோண்டிய படி தான் கேட்டு வைப்பான்.

என்று நினைத்துக் கொண்டே வந்தவள் பின் என்ன நினைத்தாளோ...நானா அவனை பற்றி நல்ல விதமாக நினைக்கிறேன். என்ன இது அவனை எனக்கு பிடிக்காதே….அப்படி இருக்கும் போது அவன் வசந்தியிடம் எப்படி நடந்தான் எப்படி நடந்துக் கொண்டான் என்று ஏன் நான் இவ்வளவு உண்ணிப்பாக….கவனிக்க வேண்டும் என்று நினைத்தவள்.

பின் தனக்குள்ளவே நீ யோசிப்பதே சரியில்லை தாமரை உனக்கு அவன் அநியாயம் செய்து இருக்கிறான் அதை நீ மறந்து விடாதே….மற்ற பெண்களை பார்த்தானா…..? இல்லையா….? என்பதில் இல்லை பிரச்சனை.

உன்னை பார்த்தான் தானே…..அதை நினைவில் வைய். அவன் சிறுவயதில் பட்ட கஷ்டம் கொடுமைதான் அதை மறுப்பதற்க்கு இல்லை. ஏன் தாய் தந்தை அற்ற நானே அது மாதிரி கஷ்டம் எல்லாம் பட்டது கிடையாது. தனக்கு பேணி காக்க தன் பாட்டி இருந்தார்கள். அதனால் இது மாதிரி கஷ்டம் எல்லாம் தனக்கு வரவில்லை..

அவன் கஷ்ட்டப் பட்டால் அந்த கஷ்டத்துக்கு ஈடாக எனக்கு கொடுப்பானா….?அவன்.என்று அவள் சிந்தனை எல்லாம் முன்னுக்கு பின் முரணாவே யோசித்தது.

ஆதித்யா பேசி விட்டு சென்று மூன்று நாட்கள் கடந்து கூட அவளால் எந்தமுடிவும் எடுக்க முடியவில்லை. வசந்தியும் தாமரை ஏதாவது தன்னிடம் சொல்லுவாள் சொல்லுவாள் என்று காத்திருந்தது தான் மிச்சம்.

பின் வசந்தி ஒரு முடிவுக்கு வந்தவளாய் இவளாய் ஏதும் ஒரு முடிவுக்கு வரமாட்டாள் நாமே ஏதாவது செய்தால் தான் உண்டு என்று நினைத்து தாமரையின் அறைக்கு சென்றாள்.

அங்கு அவள் எப்போதும் செய்வது போல் பால் கனியில் அமர்ந்துக் கொண்டு தோட்டத்தை பார்த்துக் கொண்டே சிந்தனையில் இருக்க. விட்டா இவள் ஆயுசுக்கும் யோசிச்சிட்டே தான் இருப்பா… என்று நினைத்து அவள் அருகில் சென்றவள்.

அவள் தோள் மீது கைய் வைத்து “என்ன தாமரை என்ன யோசனை செய்யிற…..?” என்ற கேள்விக்கு பதிலும் அளிக்கவில்லை. அவள் பக்கம் பார்வையும் திருப்பவில்லை.

அவள் பார்வை தன் பக்கம் திருப்பும் பொருட்டு “நான் வேனா…..அந்த டாக்டர் பேர் என்ன…….? என்று கேட்டதுக்கு.

இவள் ஏன் இப்போ டாக்டரை இழுக்குறா….என்று யோசித்தாலும் எந்த டாக்டர் என்று கேட்காமல் “சுரேந்தர்…..” என்றவள்.

“பின் ஏன் கேட்குறே…..?” என்றதற்க்கு.

“அவரை இங்கு வர சொல்ல தான்.”

“ஏன்….?அவர் இங்கு வரனும்.” என்று அவள் கேட்கும் போதே அன்று ஆதித்யா உன்னை அந்த டாக்டர் பக்கத்தில் பார்த்த பிறகு தான் நீ எனக்கு மட்டுமே….உரியவள் என்ற நினைப்பு வந்தது என்று அவன் சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்தது.

“இல்லை நீ எப்படியும் ஆதித்யாவை மணக்க போறது இல்லை. அன்னிக்கி ஹாஸ்பிட்டலிலேயே பார்த்தேன். அவருக்கு உன் மேல் விருப்பம் என்று. நீ எந்த நிலையில் இருந்தாலும் அவர் ஏற்றுக் கொள்வார் தான்.
 
ஹா ஹா ஹா
ஆதித்யா பட்ட கஷ்டத்தைப் பார்த்து மங்கையவள் மனம் மயங்குதோ
தாமரையின் சுய அலசல் சூப்பர்
 
Last edited:
என்ன பார்வை உந்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆஆ

என்ன பார்வை உந்தன் பார்வை என்னை மறந்தேன் இந்த வேலை
வண்ண வண்ண சேலை தோத்து கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆஆ
 
Last edited:
Top