Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 20 2

Advertisement

Admin

Admin
Member
இருந்தாலும் ஒருத்தரோட குழந்தைக்கு ஒருத்தனை அப்பன் ஆக்க கூடாது இல்லையா….அதுவும் உயிருடன் இருக்கும் பொருட்டு. அந்த சுரேந்தர் தான் டாக்டர் ஆச்சே முதலில் நீ நினைத்தது போலவே இந்த குழந்தையைய் அவரே ஏதாவது செய்து விட்டு உன்னை மணப்பாரா…..? என்று கேட்க தான்.”

என்று அவள் சொல்லி முடிக்க கூட வில்லை. “வெட்டிடுவான்.அவனையும் அதற்க்கு ஐடியா கொடுத்த உன்னையும் வெட்டிவான்.” என்று ஆவேசத்துடன் பேச.

அவள் ஆவேசமான பேச்சை காதில் வாங்கியும் “ஏன் வெட்டனும். அது தான் இப்போ ஆதித்யா திருந்திட்டாரே…...அன்னிக்கு அவர் சின்ன வயசு கஷ்டத்தை எல்லாம் உன் கிட்ட உருகி உருகி சொன்னாரே….அப்புறம் இனி உன் விருப்பம் தான் என்று சொன்னாரே…..” என்று அவளையே மடக்க.

“என் விரும்பம் தான்னு தான் சொன்னாரு. அது அவரை கல்யாணம் செய்து கொள்வதில் தானே தவிர என்னை அடுத்தவனுக்கு தூக்கி கொடுப்பதில் இல்லை.”

“அப்படின்னா சொல்ற….நானும் நீ அன்னிக்கி ஆதித்யா பேசியதை எல்லாம் என் கிட்ட சொன்னவுடன் பயப்புள்ள திருந்திடுச்சி போல…சரி நம் தாமரைக்கு நாமே ஏதாவது நல்ல வழி யோசிப்போம் என்று யோசிச்சேன்.”

“ஒ….இது தான் உன் நல்ல வழியா…..?”

“ஏன் தாமரை இந்த வழிக்கு என்ன குறைச்சல்.” என்று கேட்டவள்.

“சரி என்னால் தான் நல்ல வழியா யோசிக்க முடியலே நீ தான் நல்ல வழியா யோசியேன்……?” என்று அவளையே திருப்ப.

இப்போது என்ன பேசுவது என்று தெரியாது வசந்தியை பார்த்திருந்தாள்.

“தோ பார் தாமரை ஒன்னு நான் சொல்வதை கேளு. இல்லை ஆதித்யா சொல்வதையாவது கேளு...இரண்டும் இல்லாமல் யோசிச்சிட்டே இருந்தா குழந்தை பிறந்து அதுவே என் அப்பா யார் என்று கேட்பது போல் வைச்சிடதே……”

“நீ சொல்வது எல்லாம் சரி தான் வசந்தி ஆனால் .எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி நான் அவனை கல்யாணம் செய்வேன்.”

“சரி அப்போ விடு நான் அந்த டாக்டரை வர சொல்றேன்.” என்று சொல்ல.

அவசரமாக “வேண்டாம் வேண்டாம்.” என்று மறுக்க.

“இதோ பார் தாமரை.இது மத்தவங்களுக்கு நடப்பது போல் முறையா நடக்கும் கல்யாணம் இல்லை. நீ கஷ்டப்பட்டாலும் இதை நான் சொல்லி தான் ஆகனும்.

வெத்து பேப்பரில் எதை என்றாலும் நம் இஷ்டத்துக்கு நாம் நினைத்தை எழுதிடலாம். ஆனால் விட்டு விட்டு இருக்கும் எழுத்தில் என்ன எழுத்து போட்டால் வார்த்தை வருமோ அது தான் எழுத வேண்டும். நீ வெத்து பேப்பர் இல்லை தாமரை ஏற்கனவே பாதி எழுதியும் எழுதாதும் இருக்கும் பேப்பர் இதற்க்கு மேல் நான் சொல்வதற்க்கு எதுவும் இல்லை.

முடிவு உன் கையில் தான். ஆனால் எடுக்கும் முடிவை சீக்கிரம் எடு. காலம் தாழ்த்தினால் உன் வயிறு காட்டிக் கொடுத்துடும்.” என்று சொல்லி விட்டு. அடுத்து தன் வேலையை பார்க்க சென்று விட்டாள்.

வசந்தி பேசி சென்றதில் இருந்து தாமரையின் நிலை இன்னும் மோசமாக தான் ஆகியது. அவளாள் எந்த முடிவையும் எடுக்க முடியாது தவித்தாள். அவளாள் ஆதித்யாவுடன் திருமணம் செய்து கொண்டு அவன் தவறை நம்மால் மன்னிக்க முடியுமா…..?

அனைவரும் வாழும் வாழ்க்கையைய் தான் வாழ முடியுமா….?என்று நினைத்துக் கொண்டே தன் வயிற்றை தொட்டு பார்க்க. அதில் எந்த அசைவும் தெரியவில்லை என்றாலும்….

தன் மனதின் கூக்குரல் அம்மா என்னை மறந்து விடாதே என்றே சொல்வது போலவே இருந்தது.

சட்டென்று தன் கையைய் வயிற்றில் இருந்து எடுத்தவள் நான் என்ன முடிவு எடுப்பது என்று யோசித்துக் கொண்டே அங்கு இருக்கும் தன் பாட்டியின் படத்தையே பார்த்திருந்தவளுக்கு அன்று ஒரு நாள் தன் பாட்டி சொன்ன நீ தொங்க தொங்க தாலி கட்டி வாழனும் கண்ணு.

நம் வீட்டு ராசியோ என்னவோ தெரியலே….நான் கல்யாணம் செய்த அடுத்த வருடமே தாலிய அறுத்துட்டேன். உன் ஆத்தாலும் அப்பனும் நல்லா தான் குடும்பம் நடத்தினாங்க யாரு கண்ணு பட்டுதோ…..

அந்த காலி பசங்களாலே உன் ஆத்தா செத்ததும் மட்டும் இல்லாமல் உன் அப்பனும் செத்துட்டான். உன் ஆத்தா சுமங்கலியா தான் போனா….ஆனா அவ சாவு போல யாருக்கும் வரக் கூடாதுன்னு தான் நான் சொல்லுவேன்.

என் ஆசை எல்லாம் நீ தொங்க தொங்க தாலி கட்டி கிட்டு உன் புருஷனோட குழந்தையும் குட்டியுமா…..தீர்க்க சுமங்கலியா வாழனும் என்பது தான் என்று தன் பாட்டி அன்று சொன்னது அசந்தர்ப்பமாக இன்று நினைவுக்கு வந்தது.

தன் பாட்டியின் கடைசி ஆசையும் அது தானே என் கழுத்தில் தாலி ஏறுவதை பார்க்கனும் என்று. இன்று நான் தாலி இல்லாமலேயே ஒரு குழந்தையைய் சுமந்து இருக்கேன்

இந்த நிலையில் நான் இருப்பதே என் ஆயாவின் ஆத்மா சாந்தி அடையாவது. அப்படி இருக்கும் போது வாழ் நாள் முழுவதும் நான் தாலி இல்லாமலேயே வாழ்ந்தால்.

அந்த நினைவே அவளுக்கு அருவெறுப்பை தந்தது. ஆதித்யா தன்னுடன் வாழ ஆராம்பித்து விட்ட பிறகு கூட அவள் கல்லூரிக்கு சென்று கொண்டு தான் இருந்தாள்.

ஆனால் யாராவது தன்னை உத்து பார்த்தாலோ...இல்லை தன்னை பார்த்து பேசினாலோ….இவர்களுக்கு என் வாழ்க்கையின் ரகசியம் தெரிந்து விட்டதோ என்று பயந்துக் கொண்டு ஒவ்வொரு நாள் கல்லூரி வாழ்க்கையை கழித்தது அவளுக்கு தான் தெரியும்.

இதே நிலை என் குழந்தைக்கும் கொடுப்பதா...இல்லை இல்லவே இல்லை…. பின் ஏதோ முடிவு எடுத்தவளாய் ஆதித்யாவுக்கு போன் செய்தவள்.”வாங்க.” என்று சொல்லி விட்டு போனை வைத்து விட.

தாமரை போன் செய்த அரை மணி நேரத்துக்கு எல்லாம் ஆதித்யா தாமரையின் வீட்டு ஹாலில் இருந்தான். மேல செல்லாமல் கண்ணை மேலயே அலைய விட.

ஆதித்யாவின் கார் ஓசையிலேயே அவன் வந்து விட்டதை அறிந்துக் கொண்டாள். ஆம் இப்போது எல்லாம் ஆதித்யா காரை பின் பக்கம் நிறுத்துவது இல்லை.

அதே போல் பின் பக்கமும் வருவது இல்லை தன் சொந்த காரிலேயே அவனே ஓட்டிக் கொண்டு முன் பக்கம் தான் நிறுத்தினான்.

தாமரை மேலிருந்து எட்டி பார்த்து “வாங்க “ என்று அழைத்து விட்டு தன் அறைக்கு செல்ல. ஆதித்யாவும் மேல சென்றவன் அவளுடன் அவள் அறைக்கு சென்றான்.

அவனை “உட்கார் .” என்று சொன்னவள்.

பின் நேரிடையாகவே “திருமணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்.” என்று அவள் சொல்லி கூட முடிக்கவில்லை.

மகிழ்ச்சியுடன் தன் இருக்கையில் இருந்து எழுந்த ஆதித்யா அவள் அருகில் செல்ல.

அவன் அருகில் வந்ததும் கொஞ்சம் பின்னடைந்தவள். “அதற்க்கு முன் நான் உன்னிடம் பேச வேண்டும்.” என்ற அவள் பேச்சில் யோசனையுடன் தான் முன் இருந்த இருக்கையிலேயே வந்து அமர்ந்தவன்.

அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவள் முகத்தை பார்க்க. “நீங்க சொன்ன மாதிரி. கட்சி ஆபிஸ் முன்னால் எல்லாம் .வேண்டாம்.ஏன்னா உன் கட்சியால் தான் எனக்கு இந்த நிலை.

ஒரு கோயிலில் கல்யாணம் வைத்தாலே போதும்.முக்கியமானதை மறந்துட்டேன் உன்னை கல்யாணம் செய்ய ஒத்துக் கிட்டதாலேயே உன்னை மன்னிச்சிட்டேன் என்று நினைச்சிடாதே…..

என்னவோ சொன்னியே இனி உன் விருப்பபடி தான் நடக்கும் என்று அனைத்திலும் என் விருப்ப படி நடப்பீங்க என்ற நம்பிக்கையில் தான் உன்னை திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்.

என் ஆயாவின் நம்பிக்கையைய் தான் காப்பாத்துல குறைந்த பட்சம் இந்த நம்பிக்கையாவது காப்பாத்துவீங்க என்று நம்புகிறேன்.” என்று தன் பேச்சி முடிந்தது என்பது போல் திரும்பி நிற்க.

சிறிது நேரம் அவளையே பார்த்திருந்த ஆதித்யா கம்மிய குரலில் “கண்டிப்பா இந்த உன் நம்பிக்கையாவது நான் காப்பாற்றுவேன். அடுத்த மூகூர்த்ததிலேயே நம் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம்.” என்று சொல்லி விட்டு சென்றவனையே பார்த்திருந்தாள் தாமரை.
 
கல்யாணத்துக்கு நீ ஓகே சொன்னால் போதுமா, தாமரை?
மணி-யடிக்கணுமே
ஆதித்யா எம்மெல்லே மீது சத்யா
வைத்திருக்கும் அன்பு, விசுவாசம்
உனக்கு தெரியணுமில்லே
 
Last edited:
Top