Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 21

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----21

தாமரையின் சம்மதம் கிடைத்தவுடன் ஆதித்யா காலம் தாழ்த்த விரும்பவில்லை.தாமரையின் விருப்பம் போலவே கோயிலில் கல்யாணம் வைத்துக் கொண்டாலும், கல்யாணத்திற்க்கு பழைய கட்சி தலைவரையும் அந்த ஊரின் முக்கிய புள்ளிகளையும் அழைத்திருந்தான்..

பின் தன் கல்யாணத்தை பற்றிய செய்தியை பத்திரிகையில் இடம் பெறும் மாறும் பார்த்துக் கொண்டான்.தாமரை ரிசப்ஷன் எல்லாம் வேண்டாம் என் என்று சொல்லி விட்டதால் ஆதித்யா அதற்க்கு ஏற்பாடு செய்யவில்லை.

மொத்ததில் திருமணம் எளிமையாக நடை பெற்றாலும் சாத்திர சம்பிரதாயத்தில் எந்த வகை குறையும் இல்லாமலும் மற்றவர்கள் அனைவருக்கும் தெரியும் படியுமே….தங்கள் திருமணத்தை முடித்திருந்தான்.

அனைத்தும் அவன் நினைத்த படி தான் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த பிறகு தான் இருக்கும் இடத்துக்கு தாமரையைய் அழைக்கும் போது தான் பிரச்சனையே ஆராம்பமானாது.

திருமணம் முடிந்த பின் தாமரையின் கையைய் பற்றிக் கொண்டே காருக்கருகில் வந்தவன் கூடவே வந்த சத்யாவை பார்த்து “காரை எடுடா…” என்று சொல்லி காரின் பின் சீட்டில் தாமரையுடன் அமர்ந்துக் கொண்டதும்.

வசந்திக்கு தான் எங்கு அமர்வது என்று காரில் ஏறாது விழித்திருந்ததை பார்த்த ஆதித்யா “என்ன வசந்தி நிக்குறே….ஏறும்மா….நல்ல நேரம் முடிவதற்க்குள் வீட்டுக்கு போய் தாமரை விளக்கை ஏற்ற வேண்டாமா…..?” என்று கேட்க.

சரி தாமரையைய் தள்ள சொல்லி அவள் பக்கத்தில் அமரலாம் என்று பின் பக்கமாக செல்ல போக ….”ஏய் அறிவு என்பதே கிடையாதா….ரொம்ப சீன் போடமா முன்னாலே வந்து ஏறு.”

சத்யாவின் அதட்டலில் அவனை முறைத்துக் கொண்டே முன் பக்கமாக வந்து அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தவள். “என்ன சத்தம் எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு.”

“ஆ இனி எல்லாம் அப்படிதான்…..”

“தோ பார் நான் தாமரை கிடையாது. இந்த வேலை எல்லாம் வேறு எங்காவது வைச்சிக்கோ…..”

“ அது தான் சொல்றேன் நீ எனக்கு அNணி கிடையாது என்று.அப்புறம் என்ன சொன்ன வைச்சிக்கோவா...இனிமா பேச்சி வாக்குல கூட இந்த வைச்சிக்கோன்னு சொல்ல மாட்டேன்மா….ஒருத்தன் பட்டது போதும்.” என்று வசந்தியிடம் பேசிக் கொண்டே வண்டியை ஓட்டியவன்.

ஆதித்யாவின் வீடு வந்ததும் நிறுத்த அது வரை கண்ணை மூடி அமர்ந்திருந்த தாமரை கார் நிற்க்கும் சத்ததில் கண் திறந்து பார்க்க. அது ஆதித்யா வீட்டின் வாசலில் நிற்பதை பார்த்தும்.

ஆதித்யாவை பார்த்து “இங்கே ஏன் நிறுத்தினிங்க….?” என்று கேட்க

“என்ன தாமரை இது தானே நம் வீடு.இனி நீ இந்த வீட்டில் தானே இருக்கனும் தாமரை.” என்றதற்க்கு.

“நீங்க என் கிட்ட என்ன சொன்னிங்க.திருமணத்துக்கு பிறகு எல்லாம் என் விருப்பம் என்று தானே சொன்னிங்க.”

“ ஆமாம் சொன்னேன்.”

“எனக்கு இங்கு இருக்க விருப்பம் இல்லை.”

“ஏன் தாமரை….?இந்த வீடு தான் என் பெயரில் இருக்கு தாமரை. அந்த வீடும் என்னுடையது தான் என்றலும் அது பினாமி பெயரில் இருக்கு. அதுவும் இல்லாமல் இந்த வீடு என் அம்மா...அப்பாவுடன் நான் இருந்த வீடு. அந்த வீட்டில் நம் வாழ்க்கையை ஆராம்பிக்கனும் என்று நான் நினைக்கிறேன்.” என்றதும்.

சிறிதும் யோசிக்காது “அதுக்கு தான் சொல்றேன் இந்த வீடு வேண்டாம் என்று.”

அவள் சொல்வதை புரியாது என்ன சொல்கிறாள் என்று அவள் முகத்தை பார்க்க “என்ன புரியவில்லையா…? அது தான் வாழ்க்கை ஆராம்பிக்க போகிறது பற்றி பேசினிங்களே…...அது தான்.

வாழ்க்கை தான் வாழ்ந்து வயித்திலேயும் வந்த பிறகு தானே என் கழுத்திலே தாலியே கட்டி இருக்கிங்க. இன்னும் என்ன புதுசா வாழறதுக்கு என்று என்னை இங்கே கூட்டி வந்து இருக்கீங்க.

அதுவும் இல்லாமல் இந்த வீட்டை பார்த்தா….என் ஆயாவின் நியாபகம் தான் அதிகமா வருது. நான் இந்த வீட்டுக்கு அதிக அளவில் வந்தது இல்லை என்றாலும் என் ஆயா சொல்ல சொல்ல இந்த வீட்டின் வரைபடம் என் மனதில் ஆழ பதிந்து விட்டது.

இது வீடு என்பதை விட கோயிலாக தான் நான் நினைத்திருந்தேன்….ஏன்னா…?இங்கு நீங்க இருப்பதால் இந்த வீடு பதிந்தது போல தான் உங்களை பற்றிய உயர்ந்த எண்ணமும் பதிந்து விட்டது. ஆனால் அது எல்லாம் ஒன்னும் இல்லைன்னு ஆயிடுச்சி...இந்த வீடு பாக்க பாக்க.

நானும் என் ஆயாவும் எவ்வளவு ஏமாந்து இருக்கோம் என்று தான் என் நியாபகத்தில் வருது.இங்கு நான் இருந்தால் கண்டிப்பாக நிம்மதியாக இருக்க முடியாது.

இது மாதிரி சமயத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் குறைந்த பட்சம் நிம்மதியாகவாவது இருக்க வேண்டும்.” இனி உன் விருப்பம் என்பது போல் அவனை பார்க்க.

சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தவன் பின் “சரி தாமரை அந்த வீட்டுக்கு போகலாம். ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக நீயே இங்கு வரலாம் என்று சொல்வாய்.” என்று சொன்னவன் சத்யாவை பார்க்க.

சத்யா அவன் கண் ஜாடையிலேயே காரை தாமரை இருந்த வீட்டுக்கு செலுத்தினான்.வீடு வந்ததும் வசந்தி அரக்க பறக்க முன்னே இறங்கி ஆலம் கலக்க செல்ல.

ஆதித்யா அவளின் நோக்கம் புரிந்தவனாய் “வேண்டாம் வசந்தி.” என்று தடுக்க.

தாமரையும் வசந்தியும் ஒரு சேர கோவிச்சிகிட்டானோ….என்று நினைத்து அவனை பார்க்க.

“கோபம் எல்லாம் இல்லை வசந்தி. கண்டிப்பா நீ ஆலம் சுத்துவ அது நிச்சயம். ஆனால் இந்த வீட்டில் இல்லை. அந்த வீட்டில்.” என்று சொன்னவன் தாமரையைய் பார்க்க.

அது நடக்குமா என்று அவனை சந்தேகமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் செல்ல.

அவள் கூடவே நடந்த ஆதித்யா அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் “கண்டிப்பா ஒரு நாள் நடக்கும் தாமரை.” என்று சொல்லி அவளை பார்க்க.

அவன் பார்வைக்கு எதிர் பார்வையாக அவனை முறைத்து பார்த்த தாமரையிடம் “இன்று தான் நமக்கு திருமணம் நடந்து இருக்கு தாமரை. ரொமான்ஸ் பார்வை பார்க்க வில்லை என்றாலும்.

குறைந்த பட்சம் முறைக்காமலாவது இருக்கலாம் இல்லையா….? என்று அவன் கேட்டதுக்கும் சேர்த்து வைத்து ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கட கடவென்று படிக்கட்டில் ஏற ..

“தாமரை மெதுவா மெதுவா...இப்போ என்ன உன்னை யாராவது துரத்துறாங்களா…?ஏன் இப்படி ஒடுற...என்று ஆதித்யா சொன்னதும் தான்.

டாக்டர் முதல் மூன்று நான்கு மாதத்துக்கு பொறுமையாக தான் நடக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னது நியாபகத்தில் வந்து பொறுமையாக நடந்தவள்.

பின் இவனுக்கு எப்படி தெரியும் என்று மாடியின் முடிவில் சென்ற பிறகு ஆதித்யாவை திரும்பி பார்க்க. அவள் போவதையே பார்த்திருந்த ஆதித்யா அவள் திரும்பி தன்னை பார்த்ததும்.

“ எல்லாம் சினிமாவை பார்த்து தெரிந்துக் கொண்டது தான்.” என்று அவன் சொன்னதும்.

சட்டென்று திரும்பிய தாமரை நான் மனதில் நினைப்பது இவனுக்கு எப்படி தெரிகிறது என்று நினைத்துக் கொண்டே தன் அறைக்கு சென்றவள். அங்கு இன்று விடியலிலேயே எழுந்ததால் உடல் சோர்வாக இருக்க வசந்தி கொடுத்த ஜூசை குடித்து விட்டு படுத்ததும் உறங்கி விட்டாள்.

தாமரைக்கு ஜூஸ் கொடுத்து விட்டு கீழே வந்த வசந்தி ஆதித்யாவை பார்த்து “ இன்னிக்கி ஸ்வீட்டோடு சமைக்கிறேன் சாப்பிட்டு போறிங்களா…?” என்று கேட்டு அவன் பதிலுக்காக அவனை பார்த்திருக்க.

ஆதித்யா பதில் சொல்வதற்க்குள் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த சத்யா “இல்லே வசந்தி நீ ஒருத்தி எப்படி சமைப்பே….நான் ஒட்டலில் இருந்து வாங்கி வந்துடுறேன்.” என்று மறுக்க.

“இல்லே பரவாயில்லை நானே சமைச்சிடுவேன்.” என்று அவன் முகம் பார்த்து சொல்லாது தரையைய் பார்த்து சொல்லி விட்டு சமையல் அறைக்குள் புகுந்துக் கொள்ள.

அடப்பாவிங்களா...இன்று கல்யாணம் செய்த நானே மாடியில் என் பொண்டாட்டியை விட்டுட்டு கீழே சிவனேன்னு உக்காந்து இருக்கேன், இவன் என்னண்ணா என்னவோ கல்யாணா சாப்பாட்டையே அவளை சமைக்க சொன்ன மாதிரி சிலுத்துகிறான் என்று நினைத்து.

“ஏன்டா உனக்கே இது அநியாயமா இல்லே...அந்த புள்ள என்ன ஆயிரம் பேருக்கா சமைக்க போது. எப்போவும் தாமரைக்கும் அந்த புள்ளைக்கும் சமைக்கும் தானே….

இப்போ நம்ம இரண்டு பேருக்கும் சேர்த்து சமைக்க போவுது அதுக்கு நீ ஓவரா தான்டா சீன் போடுற…..” என்று தான் செய்ய வேண்டியதை அவன்

“இல்லை தலைவா சமைக்க மட்டும் இல்லை மேல் வேலை எல்லாம் அந்த புள்ளை தானே பார்க்குது. அதுவும் அவங்க இரண்டு பேருக்குமுன்னா….சிம்பிளா ஏதாவது சமைச்சிப்பாங்க.

உங்களுக்கு என்றால் ஏதாவது கூடுதலா….செய்வாளே…..” என்று தான் மறுத்ததுக்கு உண்டான காரணத்தை சொல்ல.

“அடப்பாவி இதில் இத்தனை இருக்கா….நான் உன் கிட்ட கத்துகிறது நிறைய இருக்குடா….” என்று சொன்னவன்.

“சரி இனி வசந்தி மட்டும் ஏன் கஷ்ட்ட படனும் மேல கூடுதலா வேலைக்கு ஆளை போடு. அப்புறம் முக்கியமானது முழு நேர வாச் மேனுக்கு ஏற்பாடு செய்.” என்றதற்க்கு.

“செய்துட்டேன் தலைவா….”

“எப்போதுடா ...கல்யாணம் முடிந்து நம்ம வீட்டுக்கு தானே போவதா இருந்தது. இங்கு வரும் ஐடியாவே இல்லையே….நீ எப்போ ஆளை ஏற்பாடு செய்த.”

“அது அண்ணியும் நீங்களும் கண்ணாலேயே பேசிக்கிட்டிங்களே...அப்போ தான்.” என்று சொல்லி விட்டு சிரிக்க.

“உதை வாங்க போற…..” என்று அவனும் மனது விட்டு சிரித்தான்.

தாமரை தன் வீட்டுக்கு வரவில்லை என்றாலும் தான் கட்டிய தாலி அவள் கழுத்தில் இருப்பதே அவன் மனதில் ஒரு நிறைவை கொடுத்தது. எங்கே தன் மீது இருக்கும் கோபத்தில் கல்யாணத்துக்கு மறுத்து விடுவாளோ….என்று பயந்தது அவனுக்கு தானே தெரியும்.

ஆதித்யாவின் சிரிப்பை பார்த்த சத்யா “ தலைவா அண்ணி அங்க வர மாட்டேன் என்று சொல்றாங்களே…..” என்று கேட்டதுக்கு.

“கண்டிப்பா வருவாடா….எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.” என்று அவன் சொல்லி முடிப்பதற்க்கும். சமையல் செய்து முடித்த வசந்தி சாப்பிட அழைப்பதற்க்கும் சரியாக இருந்தது.

“தாமரையும் கூப்பிடு வசந்தி சேர்ந்தே சாப்பிடலாம்.” என்று இன்று திருமணம் முடிந்த ஆதித்யா மனைவியுடன் சேர்ந்து சாப்பிடும் ஆசையில் சொல்ல.

அவனின் ஆசை புரிந்த வசந்தியும் தாமரையை அழைக்க அவள் அறைக்கு சென்ற போது தாமரை தூங்கி எழுந்து உட்கார்ந்து இருப்பதை பார்த்து “வா தாமரை சாப்பிட….ஜூஸ் குடித்தது எப்போவோ...ஜீரணம் ஆகியிருக்கும்.” என்று ஆதித்யாவும் சாப்பிட இருக்கிறான் என்று சொல்லாது அழைக்க.

தாமரைக்கு வயிறு காலியாக இருந்ததால் உடனே சரி என்று எழுந்து கீழே வந்த பிறகு தான் ஆதித்யா இருப்பதை பார்த்து விட்டு வசந்தியைய் பார்க்க. வசந்தி அப்போது தான் மிக மும்முரமாக சமைத்த சாப்பாட்டை டையினிங் டேபிளில் வைக்கும் வேலையைய் குனிந்துக் கொண்டே பார்க்க.

அவள் ஏன் அப்படி செய்தாள் என்று தெரிந்தும் ஒன்றும் சொல்லாது சாப்பிட அமர்ந்தாள். அதுவும் ஆதித்யாவின் பக்கத்தில் ஏன் என்றால் அது ஒன்று தான் காலியாக இருந்தது.

ஆம் அது நாளு பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிடும் டையினிங் டேபிள் என்ன தான் தாமரைக்கு ஆதித்யா மேல் கோபம் இருந்தாலும் சத்யா பக்கத்தில் அமர்வது அதுவும் ஆதித்யாவின் முன் ஒரு மாதிரியாக இருக்க யாரும் சொல்லாமலேயே அமர்ந்தாள்.

அதை பார்த்து அனைவரையும் விட வசந்தி தான் ஆச்சரியத்துக்கு ஆளானாள். ஆதித்யா இருப்பதை சொல்லாமலேயே சாப்பிட கூட்டிக் கொண்டு வந்து விட்டோமே...எங்கே திட்ட போகிறாளோ...இல்லை சத்தம் போட போறாளோ...என்று பயந்து இருந்தவளுக்கு தாமரை ஒன்றும் சொல்லாது ஆதித்யாவின் பக்கத்தில் அமர்ந்ததும் வியந்து போய் பார்க்க.

அவள் வியப்பை பார்த்த சத்யா” என்ன வசந்தி அப்படியே நின்னுட்ட நீயும் உட்கார் நாமே பரிமாறிக்கெல்லாம்.” என்று சொல்ல.

தாமரையும் அதையே தன் கண் அசைவில் காட்ட அங்கு சத்யா பக்க இருக்கை மட்டுமே காலியாக இருக்க வேறு வழி தெரியாது வசந்தியும் சத்யா பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

ஆதித்யா “ நடத்துடா நடத்து” என்ற கிண்டலை தன் கண் ஜாடையிலேயே சத்யாவுக்கு பாஸ் செய்ய.

சத்யாவும் சிரித்துக் கொண்டே தன் சாப்பாட்டை கவனிக்க வசந்தி சாப்பிட்டுக் கொண்டே அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறி ஒருவித மகிழ்ச்சியுடன் அனைவரும் சாப்பிட்டு விட்டு எழ.

ஆதித்யா வீட்டுக்கு கிளம்பும் முன் தாமரையைய் பார்த்து “நாளை ரெடியாக இரு டாக்டரிடம் காமிக்க வேண்டும்.” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இடையில் சத்யா.

“தலைவா நாளை கட்சி விஷயமா ஒரு முக்கியமனா ஆளை பார்க்கனுமே….” என்று தலைவர் மறந்ததை அவனுக்கு நினைவூட்ட.

ஒரு நிமிடம் கூட யோசிக்காது “இல்லை நாளை கண்டிப்பாக ஹாஸ்பிட்டலுக்கு தாமரையைய் அழைத்துக் கொண்டு போயாகனும். பிறகு எப்போ அவரை பார்க்க முடியும் என்று கேட்டு அப்பாய்ன்மென்ட் வாங்கு.” என்று சொல்ல.

அதற்க்கு தாமரை “அது முக்கியம் என்றால் அந்த வேலையே பாருங்க. நான் ஹாஸ்பிட்டலுக்கு வசந்தியைய் அழைச்சிட்டு போறேன்.” என்று சொல்லி விட்டு ஒரு ஆராய்ச்சி பார்வையுடன் ஆதித்யாவை பார்க்க.

உன் டெஸ்ட்டில் எல்லாம் நான் பெயில் ஆக மாட்டேன் என்ற வகையில் “பரவாயில்லை தாமரை எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் நான் அதை அப்புறமா பாத்துக்குறேன். நீ நாளை ரெடியாக இரு.” என்று சொல்ல.

ஒன்றும் சொல்லாது “சரி.” என்று தலையாட்டி நிற்க.

அவளை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே ஆதித்யா சத்யாவுடன் தன் வீட்டுக்கு சென்றான்.

இங்கு தாமரையோ அவன் சட்டென்று கிளம்பி விட்டது ஒரு மாதிரியாக இருந்தது.


ஒரு சமயம் அந்த வீட்டுக்கு தான் வரவில்லை என்றதும் ஆதித்யாவும் இங்கயே இருந்து விடுவான் என்று அவள் உள் மனம் சொன்னதோ என்னவோ….
 
Top