Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 23 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்-----23

ஆப்பிரேஷன் தியேட்டர் வாசலிலேயே கண் பதித்து இருந்த தாமரை அது திறக்கவும் பதட்டத்துடன் அந்த ஹாஸ்பிட்டலின் சீப் டாக்டரும் அவர் மகன் சுரேந்தரும் தன் முகதிரையைய் கழட்டி தாமரையைய் பார்த்து ஏதோ சொல்ல வர.

பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த மகேஷ் “டாக்டர் தலைவருக்கு ஒன்னும் இல்லையே…..?’ என்று பதறி கேட்பது போல் கேட்க.

இவன் யார் என்பது போல் பார்த்த டாக்டரை பார்த்து “என்ன டாக்டர் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறிங்க.உங்களால் முடியவில்லை என்றால் சொல்லுங்க. நான் என் தலைவரை காப்பத்தா வெளிநாட்டில் இருந்தது டாக்டரை வரவழைக்கிறேன்.” என்று சொல்ல.

“அதற்க்கு அவசியமே இல்லை சார். ஆதித்யாவின் ஆபிரேஷன் சக்ஸஸ் தான். அதுவும் பயப்படும் படி பெரிய ஆபிரேஷனும் இல்லை.கத்தி சைடில் தான் குத்தி இருக்கு. இதுக்கு எல்லாம் வெளிநாட்டு டாக்டர் வேண்டாம்.

நம் நாட்டிலேயே ஏன் இந்த ஹாஸ்பிட்டலிலேயே நல்ல டாக்டர்கள் இருக்காங்க. அதுவும் அவரின் ஹாஸ்பிட்டலில் அவரை பார்க்காமல் விட்டு விடுவோமா…?.” என்று சொன்னதிலேயே ஆதித்யாவுக்கு ஒன்றும் இல்லை என்ற நிம்மதியில் தாமரை.

“தேங்ஸ் டாக்டர்.” என்று சொல்ல.

வந்ததில் இருந்து அவளை மட்டுமே பார்த்திருந்த சுரேந்தர் இவளுக்கு ஆதித்யாவை பிடிக்குமா…..ஒரு கட்டாயத்தில் தான் அவன் கூட இருக்கிறாள் என்று தானே நினைத்தேன்.

அவர்களின் திருமண செய்தி கேள்வி பட்ட பிறகு கூட குழந்தைக்காக தான் அவனை மணக்கிறாள் என்று தான் நினைத்தான்.ஆனால் இவளின் பதட்டத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டே அவளை பார்த்தான்.

பெண்களின் மனஇயல்பே அது தானே….கழுத்தில் தாலி என்று ஒன்று ஏறி விட்டால் போதும் அந்த தாலி தான் இறக்கும் வரை இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள் என்று. அதுவும் தன் பாட்டி சொன்ன பேச்சும் நியாபகத்தில் வர அவளின் குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொண்டது.

டாக்டர் சொன்னதும் வசந்தி உடனே “அப்போ அய்யாவை பார்க்கலாமா…..?” என்று கேட்க.

“இப்போ அவரை ஐசியூலே மாத்திடுவாங்க அப்போ போய் பார்த்துட்டு வந்துடுங்க. அவர் இன்னும் நான்கு மணி நேரம் மயக்கத்தில் தான் வைத்திருப்போம்.” என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு அப்பா மகன் அகல.

ஆதித்யாவுக்கு ஒன்றும் இல்லை என்பது தாமரைக்கும், வசந்திக்கும் நிம்மதியை தந்தது என்றால் மகேஹூக்கு நிம்மதி இழக்க செய்தது.இப்போது இவன் கதையை முடிக்க இன்னும் கஷ்டப்பட வேண்டுமே…

அது தான் நான்கு மணிநேரம் மயக்கத்தில் வைத்திருப்பேன் என்று சொல்றாங்களே...அப்போ முடிச்சிடலாம்.

கண்டிப்பாக முடிச்சிடனும் அவன் முழித்து விட்டால் சத்யா குத்தவில்லை என்பது தெரிந்ததோடு நமக்கு பணம் கொடுத்தவனும் சும்மா விட மாட்டான்.என்று நினைத்தவன் தாமரையோடு தானும் பார்க்க அவளுடன் ஐசியூக்கு செல்ல.

அவன் போவதை பார்த்த வசந்தி “எங்கே போறிங்க.” என்று அவனை தடுத்து நிறுத்தி விட்டு தாமரையைய் பார்த்து “நீ போ தாமரை.” என்று அவளை மட்டும் உள்ளே அனுப்பி விட்டு திரும்பவும் மகேஹிடம் அதே கேள்வியைய் கேட்க.

“அட யாருடா இவ...சும்மா நம்மையே வேவு பார்த்துட்டு இருக்கா….என்று நினைத்தவன்.வசந்தியிடம் “தலைவரை பார்க்க தான்.”

“ அது தான் அவர் பொண்டாட்டி போவுது இல்லே அப்புறம் நீ என்ன….?” என்று சொல்லி தடுத்த அவளை பார்க்க பார்க்க மகேஹூக்கு கொலை வெறியே வந்து விட்டது.

நாம் தலைவரை முடிக்கிறோமோ...இல்லையோ….முதலில் இவளை முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஆதித்யாவை தனியாக பார்க்க முடியாதா என்று காத்து இருக்க.

ஆதித்யா நினைவு வரும் வரை இவனை அருகில் செல்ல விடாது பார்த்துக் கொண்டாள். தாமரை பார்த்து விட்டு வந்த கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் வேறு ஒரு டாக்டர் அங்கு வர.

இவர் யார் என்று பார்க்கும் போதே வந்தவர் நேராக மகேஹிடம் பேசவும் வசந்திக்கு சந்தேகம் வந்து விட்டது. இந்த மருத்துவமனை ஆதித்யாவோடது தான் அதில் அவனுக்கு யாரும் எதிராக செயல் பட மாட்டார்கள் என்று ஒரு மனது சொன்னாலும்.

மற்றொரு மனமோ ஏன் அந்த கட்சி ஆபிஸ் கூட ஆதித்யாவுடையது தான். ஏன் இன்னும் சொல்ல போனால் அவன் வீட்டில் வைத்து தான் அவனை குத்தினானே அப்படி இருக்கும் போது இங்கு இருக்கும் மருத்துவரை வைத்தே ஆதித்யாவை முடிக்க முடியாத என்ன.

அது தான் பணம் அனைத்து வேலையும் செய்ய வைக்குமே என்று சந்தேகத்துடன் அவர்கள் அருகில் சென்று அந்த டாக்டரிம் “நீங்களும் இங்கு தான் மருத்துவராய் இருக்கிங்களா…..?” என்று வினாவ.

இவ்வளவு நேரம் இவளை பற்றி மகேஹின் வாயிலாக அனைத்தும் சொல்ல கேட்ட அந்த டாக்டர் “ஆமாம் நான் இங்கு தான் வேலை பார்க்கிறேன். ஏன் அதில் கூட உனக்கு சந்தேகமா…..வேண்டும் என்றால் என்னுடைய அடையாள அட்டையைய் காண்பிக்கவா….?” என்று கேட்க.

முதலில் சந்தேகத்தில் இருந்த வசந்தி இப்போது உறுதியே ஆகிவிட்டது. தான் கேட்டது சாதரண ஒரு கேள்வி. அதற்க்கு ஆம் ஒன்று பதில் அளித்தாலே போதும்.

அதை விட்டு அதிலும் உனக்கு இதிலும் சந்தேகமா என்ற வார்த்தையிலே இவன் தான் ஏதோ நம்மை பற்றி சொல்லி இருக்கிறான். ஏன் சொல்ல வேண்டும் என்று தன் மனதில் ஆயிரத்தெட்டு கேள்வி அணிவகுத்தாலும் பதில் மட்டும் ஒன்றாய் தான் இருந்தது.

இந்த டாக்டரைய் ஆதித்யாவின் அறைக்கு தனியாக அனுப்ப கூடாது என்று முடிவு செய்தவளாய் சோகத்துடன் அமர்ந்து இருக்கும் தாமரையின் அருகில் சென்றவள்.

அவளை பிடித்து உலுக்கினால் பின் அவள் என்ன தான் செய்வாள். அப்போ அப்போ ஏதோ ஒரு உலகத்துக்கு செல்பவளை இப்படி தான் உலுக்க வேண்டி இருந்தது.

வசந்தியின் உலுக்களில் அவளை பார்த்த தாமரை திரும்பவும் “எல்லாம் என்னால் தான் வசந்தி அவர் என் கழுத்தில் தாலி கட்டியதால் தான் இப்படி ஆகியது.” என்று சொல்ல.

அதற்க்கு வசந்தி “அது தான் இப்போ ஒன்னும் இல்லை என்று டாக்டர் சொல்லிட்டாங்களே ...இன்னும் என்ன….?” என்று கேட்க.

“இல்லை வசந்தி அவரை பார்க்க முடியலே கிழிந்த நாரை கிடைக்கிறார்.” என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல.

இவளை இப்படி சொன்னால் வழிக்கு வர மாட்டாள் என்று அந்த டாக்டர் மேலும் ஒரு கண் வைத்துக் கொண்டே “தாமரை நீ இப்படியே பேசிட்டு இருந்தா ….? உன் பாட்டி சொன்னது போல் உனக்கும் தாலி பாக்கியம் இல்லாமல் தான் போயிடும்.” என்று சொல்ல.

அந்த வார்த்தைக்கு நல்ல பயன் இருந்தது. என்ன ஒன்று ஓவர் டோசேஜா ஆகி விட்டது என்று நினைக்கிறேன் ஏன் என்றால் வசந்தி அந்த வார்த்தை சொல்லி கூட முடிக்கவில்லை.

தன் பலம் மட்டும் ஓங்கி அவள் கன்னத்திலேயே அடித்தவள். ஒரு கைய் விரலை காட்டி “இன்னொரு வாட்டி அப்படி சொன்னா….? நான் உன்னை கொன்னுடுவேன்.”

அவள் அடித்த கன்னத்தை பிடித்துக் கொண்டே “அடி பாவி இவ்வளவு நேரம் நீ அதை தானடி சொல்லிட்டு இருந்த . நான் ஒரு தடவை சொன்னத்துக்கு இந்த எபக்ட்டா….?” என்று கேட்க.

“நான் சொல்லுவேன். அதுக்கு நீ அப்படியே சொல்லுவாயா….?நீ என்ன சொல்லனும் ஒன்னும் ஆகாது சரியா போயிடும் என்று நீ எனக்கு ஆருதல் சொல்லாமல் இப்படி அச்சாணி மாதிரி பேசி வைப்பியா…?” என்று அவளையே திருப்ப.

இவர்கள் இப்படி வழக்காடிக் கொண்டு இருக்கும் போதே அந்த டாக்டர் ஐசியூக்குள் போவதை பார்த்து தாமரையிடம் “தாமரை நான் சொல்வதை கவனி. இப்போ பேசுவதுக்கு டைம் இல்லை. இப்போ போறானே அவன் மேல் எனக்கு சந்தேகமா இருக்கு.” என்று சொன்னவள். தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை சுருக்கமாக சொல்லி முடிக்க.

“அது தான் தாமரை நான் ஒன்னும் செய்ய முடியாது ஏன் என்றால் நான் வெறும் வேலைகாரி தான். ஆனால் நீ ஆதித்யாவின் மனைவி. அது மட்டும் இல்லாமல் இந்த மருத்துவனையின் முதலாளியும்,உன்னால் தான் ஆதித்யாவின் பக்கத்திலேயே இருக்க முடியும்.” என்று நிலையைய் விளக்க.

அய்யோ நம் நினைவிலேயே இதை எல்லாம் கவனிக்க விட்டு விட்டோமே என்று பதைத்து போய் தாமரையும் அந்த டாக்டரை பின் தொடர்ந்து உள்ளே போக.

அவளை தடுக்க நினைத்த மகேஷை தடுத்து நிறுத்திய வசந்தி “இப்போ ஏன் அவளை தடுக்கிறிங்க….?” என்ன…?”

“இல்லை அவங்க கூட போனா டாக்டருக்கு டிஸ்டபா இருக்குமில்லே….”

“டிஸ்ட்டப்பா எதுக்கு…?”

“செக் பண்ண தான்.

“அது எல்லாம் டாக்டருக்கு தொந்தரவுக்கு கொடுக்காம அவ பார்த்துப்பா…..” என்று சொல்ல.

ஆதித்யாவை செக் செய்து தன் பாக்கெட்டில் உள்ள இன்ஜெக்க்ஷனை எடுக்கும் போது தாமரை வந்து விட எடுத்ததை உள்ளே போட்ட டாக்டர் “நான் செக் செய்யனும் கொஞ்சம் வெளியே இருங்கள்.” என்று சொல்ல.

“ஏன் நான் இருக்கும் போது செக்கப் செய்ய கூடாதா….?அது என்ன யாருக்கும் தெரியாமல் செய்யும் செக்கப்.” என்று அந்த டாக்டருடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே….

அங்கு வந்த சுரேந்தர் “என்ன சத்தம் ஏன் பேஷண்டை டிஸ்டப் செய்யிறிங்க.” என்று சொல்லிக் கொண்டே போனவன் அங்கு தாமரையைய் பார்த்தது.

தன் தோரணையை மாற்றி “என்ன தாமரை என்ன பிரச்சனை” என்று கேட்க.

தாமரை பதில் சொல்வதற்க்குள் அந்த டாக்டர் “நான் பேஷண்டை செக்கப் செய்யனும் கொஞ்சம் வெளியே போங்க என்று தான் சொன்னேன் டாக்டர். அவங்க போக மாட்டேங்கிறாங்க.”

தாமரையைய் பார்த்த சுரேந்தர் அவள் முகத்தில் என்ன கண்டனோ அந்த டாக்டரிடம் “செக்கப் செய்து விட்டிங்களா…..? என்று கேட்க.

இதற்க்கு என்ன பதில் சொல்வது என்று தலையை இருபக்கமாக ஆட்டி வைக்க.

இது என்ன பதில் என்று நினைத்தவன்.”சரி வாங்க வெளியே போகலாம். பேஷண்டுக்கு இன்பெக்சன் வந்துட போகுது என்று அழைத்து வெளியில் சென்றான்.
 
Top