Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 23 2

Advertisement

Admin

Admin
Member
தாமரை வெளியே வருவதை பார்த்த வசந்தி விரைந்து அவள் அருகில் வந்து “ அந்த டாக்டரால் ஒன்னும் பிரச்சனை இல்லையே…..? என்று கேட்க.

அது இந்த பக்கம் நின்றுக் கொண்டு இருந்த சுரேந்தர் காதிலும் விழ. என்ன பிரச்சனை என்று நினைத்துக் கொண்டே தாமரையைய் பார்த்து “தாமரை என்ன பிரச்சனை….?” என்று கேட்க.

அதற்க்கு ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாது அந்த டாக்டரையும் அப்போது தான் வந்த மகேஷையும் பார்த்துக் கொண்டே “ இன்னும் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பது போல இருக்கு. அது தான் அவர் பக்கத்திலேயே இருக்கனும்.” என்று மேலும் ஏதோ சொல்ல வர.

அதற்க்குள் மகேஷ் “ஆபத்தா நம் தலைவருக்கா….?அது தான் அந்த சத்யா பைய்யனை உள்ளே தூக்கி போட்டுட்டாங்களே...இன்னும் என்ன ஆபாத்து. அதுவும் இது அவர் மருத்துவமனை. இங்கு அவருக்கு ஆபத்தா….?” என்று சொல்ல.

“ சத்யாவை உள்ளே வைச்சிட்டாங்கன்னு சொன்னிங்களே…..அது தான் எனக்கு சந்தேகமா இருக்கு. இதுவே சத்யா அவர் கூட இருந்தா நான் பயப்பட மாட்டேன். அவர் இல்லாது தான் என்னுடைய பயமே….” என்று சொன்னவள்.

சுரேந்தரை பார்த்து “என் கணவர் மயக்கம் தெளியும் வரை. நீங்களோ...இல்லை உங்களுடைய அப்பாவோ...அவரை பார்த்தால் நல்லா இருக்கும்.” என்று சொல்ல.

இப்போது சுரேந்தர் கண்ணுக்கு தாமரை ஆதித்யாவின் மனைவியாக மட்டும் தான் தெரிந்தாள். “சரி தாமரை...இதை நீங்க ரிக்வெஸ்ட்டா சொல்ல தேவையில்லை. ஆர்டரே போடலாம்.ஏன்னா இது உங்க கணவரின் மருத்துவமனை தான்.

அவன் கணவன் என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து சொன்னவன். பின் சொன்னது போலவே ஆதித்யாவின் மயக்கம் தெளியும் வரை அவன் கூடவே இருந்தான்.

டாக்டர் சொன்ன நான்கு மணி நேரத்துக்கு முன்பே ஆதித்யாவுக்கு மயக்கம் தெளிய அவன் கண் முழித்து கேட்ட முதல் வார்த்தை “சத்யா எங்கே….?” என்பது தான்.

அதற்க்கு சுரேந்தர் “உங்க மனைவி வெளியே வையிட் பண்ணிட்டு இருக்காங்க. முதலில் அவங்களை கூப்பிடுறேன்.” என்று சொல்லி போக பார்க்க.

அவன் கைய் பிடித்து நிறுத்திய ஆதித்யா “சத்யா எங்கே….” என்று திரும்பவும் அதையே அழுத்தி கேட்க.

“ அவரை அரெஸ்ட்டு பண்ணி இருக்காங்க.” என்றதும்.

“வெளியே போலீஸ் இருக்காங்களா….?”

“ஆ இருக்காங்க. உங்க கிட்ட வாக்கு மூலம் வாங்க.” என்றதும்.

“முதலில் அவங்களை உள்ளே அனுப்புங்க.”

“அப்போ தாமரை.”

அவள் என் மனைவி தான்.என்னை விட்டு அவள் எங்கேயும் போயிட மாட்டா….அது போல தான் நானும். இப்போது போலீஸை அனுப்புங்க.” என்று சொல்லி விட்டு கண்ணை மூடிக் கொண்டான்.

உடல் சோர்வு அவனை திரும்பவும் தூக்கத்துக்கு இழுக்க. இல்லை இல்லை நான் தூங்க கூடாது என்று நினைத்துக் கொண்டே தன் இரு கண்ணையும் விறிய திறந்து கொண்டு அவர்கள் வரும் வழியே பார்த்திருக்க.

அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் சுரேந்தர் போலீஸை அழைத்து வந்திருந்தான். அவனுக்கு தெரியும் மயக்கம் தெளிந்து எழுந்தாலும் உடல் சோர்வு அவனை திரும்பவும் தூக்கத்துக்கு இழுக்குக் என்று.

போலீஸை பார்த்த ஆதித்யா “சத்யாவை யார் அரெஸ்ட் செய்தது.” என்று கேட்க.

“நம்ம ஏரியா சபின்ஸ்பெக்டர் தாங்க.” என்று சொல்ல.

“யார் புகார் சொடுத்தாங்க.”

அந்த போலிஸ்காரருக்கு என்னடா இது நான் தான் விசாரரிகனும் இவர் என்னடான்னா என்னை விசாரிச்சிட்டு இருக்கார் என்று நினைத்தாலும் பெரிய இடம் என்பதால் “அங்கு இருந்த எல்லாரும் தாங்க சத்யா மீது சந்தேகப்பட்டாங்க. அது தான் அரெஸ்ட் செய்துட்டோம்.” என்றதும்.

சரி இது பின் யார் இருக்காங்கன்னு அப்புறம் பார்க்கலாம். இனி ஒரு நிமிடம் கூட சத்யா உள்ளே இருக்க கூடாது என்று நினைத்தவனாய். அந்த போலீஸ் அதிகாரியிடம் “என்னை சத்யா குத்தவில்லை.முதலில் அவனை ரிலிஸ் செய்யுங்க.” என்றதும்.

“சரிங்க சார். நான் அவரை விட்டுடறேன். அப்போ உங்களை குத்தினது யாருன்னு விசாரிக்கிறேன். உங்களுக்கு யாரின் மேலாவது சந்தேகம் இருக்கா…?” என்று கேடக.

“சந்தேகம் இல்லை.கன்பாம் என்னை குத்தியது மகேஷ்.” என்று சொல்ல.

“என்னது மகேஷா அவன் வெளியில் தானே நின்னுட்டு இருக்கான்.பாவி பய பாலுக்கு காவல் மாதிரி என்னம்மா ஆக்ட் கொடுக்கிறான்.” என்றதும்.

“ சும்மா சொல்லக் கூடாது நீங்களும் ரொம்ப நல்லாவே ஆக்ட் கொடுக்கிறிங்க.”

“என்ன சார் சொல்றிங்க எனக்கு ஒன்னும் புரியலே….?”

“புரியும் படியா எனக்கு கொஞ்சம் உடம்பு சரியாயிட்ட பிறகு உங்களுக்கு சொல்றேன். முதலில் சத்யாவை வெளியே விடுங்க. மகேஷை அரெஸ்ட் செய்யுங்க.” என்று அந்த கடைசி வாக்கியம் பேசும் போது மூச்சி வாங்க.

சுரேந்தர் “ நீங்க பேசுனது போதும் ஆதித்யா சார்.” என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் இருந்த மாஸை அவனுக்கு மாட்ட.

அதனை தடுத்த ஆதித்யா “இப்போ தாமரையைய் கூப்பிடுங்க.நான் தூங்க ஆராம்பிச்சா எப்போ எழுந்துப்பேன் என்று எனக்கே தெரியலே...ஏன்னா அவ்வளவு டையடா இருக்கு.” என்று சொல்ல.

“பின் இருக்காதா….ஆதித்யா சார். கத்தி அந்த அளவுக்கு அல்லவா உள்ளே இறங்கி இருக்கு. அது மட்டும் நேர பட்டு இருந்தா இப்போ நீங்க என் கிட்ட பேசிட்டு இருக்க மாட்டிங்க.” என்று சொல்ல.

“அப்படி இருந்தா உங்களுக்கு திரும்பவும் ஒரு சான்ஸ் கிடச்சி இருக்கும் இல்லையா….?” என்று கேட்டதுக்கு.

“இருக்காது கண்டிப்பா இருக்காது. அது என்னவோ படிச்சா பெண்ணா இருந்தாலும் சரி படிக்காதா….பெண்ணா இருந்தாலும் சரி. தாலி கட்டிட்டா இந்த பெண்ணுங்க அவன் செய்ததை எல்லாம் மறந்துடுவாங்க போல.” என்று சொல்ல.

“என்ன சொல்ற சுரேந்தர்.”

“ காது குளிர கேளுங்க. தாமரை வாயில் இருந்தே என் கணவருக்கு மகேஷால் ஆபாத்து அதனால் நீ இல்லை உன் தந்தை மட்டும் தான் வைத்தியம் பார்க்க வேண்டு என்று என்னிடம் சொன்னா….சாரி சொன்னாங்க.” என்று சொல்ல.

அந்த வலியிலும் ஆதித்யாவின் முகத்தை அப்படி ஒரு மகிழ்ச்சி இதற்க்கு தானே நான் ஆசைப்பட்டேன். அவள் வாயால் என்னை கணவன் என்று சொல்ல வேண்டும் என்று.

என்ன ஒன்று அவள் சொல்வதை நான் கேட்க முடியவில்லை. சரி இனி வாழ் நாள் முழுவதும் தான் இருக்கே கேட்க.” என்று நினைத்தவன்.

“மகிழ்ச்சியுடன் “அவளை சீக்கிரம் அனுப்பு சுரேந்தர்.” என்றதும்.

ஒரு டாக்டராய் “அதிக நேரம் பேச வேண்டாம்.” என்று தாமரையைய் உள்ளே அனுப்பியவன் அவன் வெளியிலேயே நின்றுக் கொண்டான்.

தாமரையைய் பார்த்ததும் படுத்து இருந்தவன் எழ பார்க்க.

“படுங்க படுங்க இப்போ எதுக்கு எழுந்துக்குறிங்க.” என்று சொல்லிக் கொண்டே அவன் அருகில் வந்தவள் அவன் தோள் தொட்டு சரியாக படுக்க வைத்தவள்.

“இப்போ எப்படியிருக்கு…?” என்று கேட்க.

அவள் கேட்டது எதுவும் அவன் காதில் விழவில்லை. அவள் தொட்ட அந்த பரிசமே அவன் நினைவுக்கு திரும்ப திரும்ப வந்து சென்றது.

பின் இருக்காதா….தாமரை தானே வந்து ஆதித்யாவை தொட்டது அவனுக்கு அப்படியே வானத்தில் பறப்பது போல இருந்தது.

தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது சீலிங்கையே பார்த்திருந்த ஆதித்யாவை பார்த்து பயந்து திரும்பவும் அவன் தோளை உலுக்கியவளாய் “என்ன பண்ணுது. நான் டாக்டரை கூப்பிடவா….?” என்று செல்ல பார்க்க.

கெட்டுது போ என்று நினைத்துக் கொண்டே அவள் கைய் பற்றி “வேண்டாம் தாமரை உடம்புக்கு ஒன்னும் இல்லை.” என்று சொன்னவன்.

அவள் கைய் பற்றி “என்னை மன்னித்து விட்டாயா…?தாமரை” என்று கேட்க.

“தெரியலே….ஆனா உங்களுக்கு ஒன்னும் ஆக கூடாது. இந்த தாலி நான் சாவும் வரை என் கழுத்தில் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.” என்று வேறு ஒன்றும் சொல்லாது.

“இதை எல்லாம் யோசிக்காதிங்க. முதல்லா உங்க உடம்பு நல்லபடியா ஆகட்டும். டாக்டர் ரொம்ப நேரம் உங்களை பேச வைக்க கூடாது என்று சொல்லி தான் உள்ளே அனுப்பினார்.” என்று சொல்ல.

“அவனுக்கு பொறாமை.” என்று சொல்லி விட்டு அய்யோ கோச்சிப்பாளோ...என்று அவளை பார்க்க.

ஒரு சிறு சிரிப்பை பதிலாக தந்தவள் “ரெஸ்ட்டு எடுங்க நான் வெளியிலேயே இருக்கேன்.”

“நீ வீட்டுக்கு போறதுன்னா போ தாமரை இப்போ சத்யா வந்துடுவான்.” என்று வாய் சொன்னாலும் மனமோ...போக கூடாது இருக்க வேண்டும் என்று நினைக்க.

அவன் மனம் சொன்னது தான் பலித்தது. “இல்லே நான் இங்கயே இருக்கேன். வீட்டுக்கு போனாலும் மனம் இங்கயே தான் இருக்கும்.” என்று சொல்லி விட்டு போக.

அவள் சொன்ன வார்த்தையா இல்லை உடலில் பலவீனமா என்று தெரியவில்லை ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றான்.
 
Top