Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 3

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----3

அன்றும் அந்த பழக்கப்படியே தாமரை சென்ற பிறகு ஆதித்யா வீட்டு பின் பக்கமாக சென்றவர் அதிசயத்துக்கு மாறாக அன்று காலையிலேயே ஆதித்யாவும் இன்னும் சிலரும் ஹாலில் இருப்பதை பார்த்து யோசனையுடம் சமையல்கட்டுக்கு சென்றவர் ஆதித்யாவுக்கும் மற்றும் அங்கு பேசிக் கொண்டு இருந்த மற்ற நால்வருக்கும் சேர்த்து காபி போட்டவர்.

அதை ட்ரேயில் வைத்துக் கொண்டு ஹாலுக்கு வரவும் அதை பார்த்த ஆதித்யா பக்கதில் இருக்கு சத்யாவிடம் வாங்கும் மாறு சைகை செய்ய. சத்யாவும் உடனே வள்ளியம்மாவிடம் இருந்து ட்ரேயை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தான்.

ஆதித்யா எப்போதும் இப்படி தான் வள்ளியம்மா ஏதாவது இப்படி தூக்கி வருவதை பார்த்தால் பக்கத்தில் இருப்பவரை வாங்கு மாறு சொல்லி விடுவான். அது போலவே வள்ளியம்மாவும் யாராவது வந்தால் காபி போடனுமா….? என்று கேட்டுக் கொண்டு இருக்க மாட்டார்.

எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்து கொடுத்து விடுவார். ஆதித்யாவுக்கும் வள்ளியம்மாவுக்கும் முதலாளி தொழிலாளி என்ற உறவையும் தாண்டிய உறவு என்று தான் சொல்ல வேண்டும்.

கொடுத்து விட்டு சமையல் அறைக்கு வந்த வள்ளியம்மா தன் வேலையை பார்க்க.ஆதித்யா தன் எதிரில் இருந்தவரை பார்த்து “என்ன முத்து உன் மகள் இருக்கும் இடம் இன்னுமா தெரியலே….?” என்ற கேள்விக்கு.

“தெரியலே அய்யா. அவள் மட்டும் என் கையில் கிடைக்கட்டும்.” என்று ஒரு அப்பனாய் கோபத்துடன் அவர் பேச. அவரை தடுத்த ஆதித்யா….

“இந்த விஷயம் மட்டும் நம்ம எதிர் கட்சி காரனுக்கு தெரிஞ்சது. சும்மா நம்மளே பிச்சி மேஞ்சிடுவான்.ஏய்யா உன் பொண்ணு கூட்டிட்டு ஒடிப் போறதுக்கு அந்த ஜாதிகாரன் தான் கிடைச்சானா….?

என்ற ஆதித்யாவின் பேச்சிக்கு பதில் சொல்ல முடியாது தலை குனிந்து இருந்த தன் கட்சியின் உறுப்பினரான ஏகாம்பரத்திடம் “சரி உன் பொண்ணு பிரண்டு கிட்ட விசாரிச்சியா…..?”

“விசாரிச்சேட்டேன் தலைவா….ஆனா அந்த பொண்ணு எனக்கு தெரியாதுன்னு அடிச்சி சாதிக்கிறா….”

“என்னது தெரியாதா….அது எப்படி தெரியாமல் போகும். கூடவே சுத்துன பொண்ணுக்கு தெரியாது என்றால் நம்புவது போல் இல்லையே.” என்று சொன்னவன் தன் பக்கத்தில் இருக்கும் சத்தியாவை பார்த்து “சத்யா அந்த பொண்ணு கிட்ட நம்ப பாணியிலே கொஞ்சம் விசாரி.” என்றதற்க்கு.

ஒன்றும் சொல்லாமல் இருந்த சத்யாவை பார்த்து “என்ன சத்யா நான் சொன்னது காதில் விழுந்ததா இல்லையா….? இது சாதரணம் விஷயம் இல்லை. ஜாதி பிரச்சனை. இந்த தொகுதியில் நம் வெற்றி பெற்றோம் என்றால் முக்கால் வாசி ஓட்டு நம் ஜாதி ஓட்டு தான் புரிதா…..சீக்கிரம் நம் ஏகாம்பரத்தோட பொண்ணு பிரண்டு கிட்ட விசாரி.”

“விசாரிச்சலாம் தலைவா...ஆனா….?”

“என்ன சத்யா என்ன விஷயம். நான் எது சொன்னாலும் டக்குன்னு என்ன ஏது என்று கேட்காமல் செய்வே...இப்போ நான் இவ்வளவு சொல்லியும் யோசிக்கிறே என்றால் என்ன அந்த பொண்ணு உனக்கு வேண்டிய பட்ட பொண்ணா….?”

“எனக்கு வேண்டிய பட்ட பொண்ணு இல்லே தலைவா. அது வந்து பொண்ணு நம்ம வள்ளியம்மாவோட பேத்தி.”

அதை கேட்டதும் ஒரு நிமிஷம் ஆதித்யாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பின் என்ன நினைத்தானோ பின் பக்கம் திரும்பி “வள்ளியம்மா வள்ளியம்மா” என்று கூப்பிட்டான்.

வேலை செய்துக் கொண்டு இருந்த வள்ளியம்மா ஆதித்யா தன்னை கூப்பிட்டதும்.

“ இதோ வரேன் தம்பி.” என்று சொன்னவர் கைய் கழுவிக் கொண்டு அந்த கையை தன் முந்தியில் துடைத்துக் கொண்டு ஹாலுக்கு வரும் போதே தம்பி இது போல் கட்சி ஆட்களை ஹாலில் வைத்து பேசாதே….

அதே மாதிரி கட்சி ஆட்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது நம்பளை அழைக்கவும் அழைக்காதே என்று யோசனையுடனே ஆதித்யாவிடம் சென்றவர்.

“என்ன தம்பி என்னை கூப்பிட்டிங்க.” என்ற வள்ளியம்மாவிடம் கொஞ்சம் தழைந்த குரலில் ஏகாம்பரத்தை காட்டி அவர் பெண் இரண்டு நாள் முன்னே ***அந்த ஜாதி காரன் பையனோடு போயிட்டா….”

இதை ஏன் தன்னிடம் சொல்லுது தம்பி என்று வள்ளியம்மா யோசிக்கும் போதே “இதை ஏன் உங்களிடம் சொல்றேன் என்று தானே யோசிக்கிறிங்க. அது ஒன்னும் இல்லே வள்ளியம்மா அந்த பொண்ணோட பிரண்டு உங்க பேத்தி.” என்று அவன் முழுவதுமாக சொல்லி கூட முடிக்க வில்லை.

வள்ளியம்மாவுக்கு பயத்தில் கைய் நடுங்க ஆதித்யாவிடம் “தம்பி என் பேத்திக்கு எதுவும் தெரியாதுப்பா….அது பச்ச புள்ள.” என்ற வள்ளியம்மாவின் பேச்சிக்கு இடையில் ஏகாம்பரத்தில் மச்சான் “அதை கூப்பிட்டு விசாரிச்சா தெரிஞ்சிட போகுது. பச்ச புள்ளையா இல்லை சுட்ட வைச்ச புள்ளயான்னு.”

என்ற அவன் பேச்சிக்கு பக்கத்தில் இருக்கும் பேப்பரை எடுத்து அவன் மீது வீசிய ஆதித்யா “ நான் பேசிட்டு இருக்கும் போது நீ என்ன நடுவில் வந்து மூக்கை நுழைக்கிறது.பொண்ணு எங்க போவுது யார் கூட பழகுதுன்னு விட்டுட்டு இப்போ வந்து பேச்சி என்ன வேண்டி இருக்கு.

என் வீட்டிலேயே இருந்து வள்ளியம்மாவே பேசுறதுக்கு உனக்கு எவ்வளவு திமிரு இருக்கனும். வெட்டிடுவேன் ஜாக்கிரதை.” என்ற ஆதித்யாவின் பேச்சில் பயந்து “மன்னிச்சிக்குங்க தலைவரே”என்று பம்மிக் கொண்டே வள்ளியம்மாவை யோசனையுடன் பார்த்தான்.

வள்ளியம்மா அந்த வீட்டு சமையல் காராம்மா தானே என்று தான் ஏகாம்பரத்தின் மச்சான் வாய் விட்டான். அதுவும் இல்லாமல் தன் ஜாதி காரனுக்கு ஒன்னுன்னா ஆதித்யா பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டான். அந்த தைரியத்திலும் தான் ஆதித்யா எதிரிலேயே வள்ளியம்மாவிடம் அப்படி பேசினான்.

இப்போது அந்த வள்ளியம்மாவுக்காக தன் ஜாதிகாரானான தன்னை திட்டியதும் வள்ளியம்மா என்ன ஆதித்யாவுக்கு அவ்வளவு முக்கியமா என்று நினைத்து தான் வள்ளியம்மாவை யோசனையுடன் பார்த்தான்.

அவன் பார்வையை பார்த்த சத்யா “அங்கே என்ன பார்வை வேண்டி இருக்கு. நீ இங்க வருவதோ ஆடிக்கு ஒரு தடவை இல்லை அம்மாவாசைக்கு ஒரு தடவை. அதுவும் கட்சி ஆபிசோடு உன் வேலை முடிச்சிடும். அது தான் வள்ளியம்மாவை நம் தலைவர் எப்படி நடத்துறார் என்று உனக்கு புரியாமா வார்த்தையை விட்டுட்ட.

இப்போ வள்ளியம்மாவை உத்து உத்து பார்த்து வைச்சி மேலும் பிரச்சனையை கூட்டிக்காதே….அவ்வளவு தான் நான் சொல்றது.” என்று அவனிடம் பேச்சை முடித்த சத்யா ஆதித்யா பேச்சை கவனிக்களானன்.

ஏகாம்பரத்தின் மச்சான் பேச்சால் மேலும் பயந்து போன வள்ளியம்மாவிடம் “ பயப்பட ஒன்னும் இல்லை வள்ளியம்மா. சத்யாவோடு உங்க பேத்தி காலேஜிக்கு போங்க. அங்கே உள்ளே போய் ஏதாவது சொல்லி உங்க பேத்தியை கையோடு கூட்டிட்டு வாங்க.உங்க கண்ணு முன்னாலே தான் நான் உங்க பேத்திக் கிட்ட ஏகாம்பரத்தின் பொண்ணை பத்தி எதுன்னா தெரியும்மா என்று கேட்க போறேன்.

தெரிஞ்சா சொல்லட்டும். தெரியலேன்னா தெரியலேன்னு சொல்ல போது நீங்களும் உங்க பேத்தியை கையோடு கூட்டிட்டு போயிடலாம்.” என்ற ஆதித்யாவின் பேச்சில் கொஞ்சம் தைரியம் பெற்றவராய் சத்யாவுடன் தாமரையின் காலேஜிக்கு சென்றார்.

காலேஜ் வாசலில் டாட்டா சுமைவை நிறுத்திய சத்யா “வள்ளியம்மா நீங்களே போய் கூட்டிட்டு வந்துடுறிங்களா...?இல்லை நானும் வரட்டுமா….?”

“இல்லேப்பா நானே கூட்டியாறேன்.” என்று சொன்னவர்.காலேஜ் உள்ளே நுழைந்து அங்கு இருக்கும் ப்யூனிடம் “என் பேத்தி இங்கு தான் படிக்கிறா. நான் அவளை கூட்டிட்டு போகனும்.” என்று சொன்னதும்.

“அதுக்கு எச்.ஒ. டியே பார்க்கன்னும் பாட்டியம்மா. நானே கூட்டிட்டு போறேன்.” என்று சொன்னவன். வள்ளியம்மாவை எச்.ஒ.டி அறை முன் நிற்க வைத்து. “இது தான் அவங்க அறை பாட்டிம்மா.” என்று தன் வேலையை பார்க்க போக.

வள்ளியம்மா எப்படி உள்ளே செல்வது என்று யோசித்துக் கொண்டே வெளியில் கைய் பிசைந்து நின்றுக் கொண்டு இருக்கும் போது அங்கு வந்த சத்யா “தலைவர் சரியா தான் சொல்லி இருக்கிறார்.”

“என்ன பார்க்குறிங்க இப்போதான் தலைவர் போன் பண்ணினார். நீ ஏன் வள்ளியம்மாவை தனியா அனுப்பி வைச்சே ….அவங்களுக்கு ஒன்னும் தெரியாமல் சேலை முந்தியே திரிகிட்டு இருப்பாங்கன்னு சொன்னாரு இங்கு வந்து பார்த்தா அதே தான் பண்ணிட்டு இருக்கிங்க.” என்று சொன்னவன்.

வள்ளியம்மாவுடன் எச். ஒ.டியின் கதவை தட்டி அனுமதி வாங்கி உள்ளே சென்றவன் வள்ளியம்மாவை காமித்து “இவர்கள் பேத்தி இங்கு தான் படிக்கறாங்க.அவங்க வீட்டில் வெளிநாட்டில் இருந்து சொந்தகாரங்க வந்து இருக்காங்க.அடுத்த ப்ளைட்டிலேயே ஊருக்கு போறாங்க. அவங்க இவங்க பேத்தியே பார்த்துட்டு போகனும் என்று ஆசை படுறாங்க..” என்று சொன்னதும்.

அந்த எச்.ஒ.டியும் ப்யூனை வரவழைத்து “தாமரை செல்வியை அழைத்து வா” என்று சொன்னவுடம் அவனும் உடனே தாமரையை அழைத்து வந்து விட்டான்.

தன்னை அழைத்தது வள்ளியம்மா என்றவுடம் பயத்துடம் எதுக்கு ஆயா காலேஜிக்கு எல்லா வந்து இருக்காங்க.காரணம் இல்லாமல் வரமாட்டாங்களே…..என்று பதட்டத்துடன் வந்த தாமரை தன் ஆயா பக்கத்தில் ஒரு ஆடவன் இருப்பதை பார்த்து தயக்கத்துடன் தன் ஆயாவை பார்க்க.

தன் பேத்தியின் பார்வையை புரிந்துக் கொண்ட வள்ளியம்மா “பயப்படதே கண்ணு இந்த தம்பி நம்ம அய்யா கிட்ட வேலை பார்க்கிறவரு தான்.” சரி இருந்துட்டு போகட்டும் இப்போ என்னத்துக்கு என்னை அழைக்க வந்து இருக்காங்க என்று நினைத்தவள்.

எதுவும் பேசாமல் எது என்றாலும் தன் ஆயாவே சொல்லட்டும் என்று தன் ஆயாவை பார்க்க. வள்ளியம்மா சொல்வதற்க்குள் பக்கத்தில் இருந்த சத்யா “அது ஒன்னும் இல்லேம்மா தலைவர் உங்கிட்டே ஏதோ கேட்கனுமா...அது தான் கையோட அழைச்சிட்டு வரசொன்னார்.”

“எதற்க்கு”

“அது எல்லாம் அங்கே வந்து பார்த்துக்கலாம். உன் ஆயா உன் கூடவே தான் இருக்க போறாங்க. அப்புறம் என்ன பயம் வந்து காருலே ஏரும்மா…நம்ம வள்ளியம்மா பேத்தியை எதுவும் பண்ணிட மாட்டோம்.” என்ற பேச்சிக்கு வேறு எந்த எதிர் பேச்சிம் பேசாமல் கிளம்பினாள்.

தன் மனதில் அவசர அவசரமாக தான் அய்யாவிடம் என்ன பேச வேண்டும் என்ற திட்டத்துடன். ஆம் காலை தன் ஆயா தன் திருமணத்தை பற்றி பேசியதில் இருந்தே அய்யாவை பார்த்து தன் படிப்பு முடிந்ததும் அவர்கள் ஆஸ்பிட்டலிலேயே வேலை கேட்க எண்ணி இருந்தாள்.

மேலும் தன் திருமணத்தை மூன்று வருடம் தள்ளி நடத்துமாறு தன் ஆயாவிடன் சொல்லும் மாறு சொல்லவும் யோசித்து இருந்தாள். அவளுக்கு நம்பிக்கை இருந்தது அய்யா சொன்னா தன் ஆயா கேட்பாங்க என்று.

தன் படிப்பை கூட பன்னிரெண்டிலேயே நிறுத்தி விட்டு திருமணம் செய்ய தானே தன் ஆயா நினைத்து இருந்தார்கள். ஆனால் அய்யா சொன்னதால் தானே தன் ஆயாவே மேலே படிக்க வைக்கிறார்கள்.

அதுவும் படிப்பு செலவு அனைத்தும் அய்யா தான் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதும் அவளுக்கு தெரியும். தாமரை ஆதித்யாவை பத்து வருடம் முன் நேரில் பார்த்ததோடு சரி.

அதுவும் அவள் நியாபகத்தில் எதுவும் இல்லை. சமிபகாலமாக போஸ்டரில் பார்ப்பதோடு சரி. ஆனால் தாமரைக்கு ஆதித்யா மீது மிக மரியாதை உண்டு. அவரால் தான் தன் ஆயாவும் தானும் மரியாதையாக வாழ்கிறோம்.

தன் படிப்பை தொடர்ந்து படிப்பதற்க்கு அவர் மட்டுமே காரணம். அதுவும் இல்லாமல் அவள் பத்து வருடமாக அவள் உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் உடை முதல் அவரால் தான் என்பதால் அவன் மேல் விசுவாசம் என்று கூட சொல்லலாம்.

அதனால் அய்யா கூப்பிட்டார் என்றதும் எந்த பயமும் இல்லாமல் அவர்கள் கூட கிளம்பி விட்டாள்.அதுவும் தான் பார்க்க வேண்டும் என்று சொன்னால் ஆயா ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.இந்த சமயத்தை பயன்படுத்தி நமக்கு வேலைக்கும் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தோடு அவள் சென்றாள்.

வீட்டின் முன் காரை நிறுத்திய சத்யா உள்ளே செல்ல. வள்ளியம்மா எப்போதும் போல் பின் பக்க வழியாக தன் பேத்தியை அழைத்துக் கொண்டு சென்றார்.சத்யாவை பார்த்த ஆதித்யா “எங்கே “ என்று கேட்க.

சிரித்துக் கொண்டே “நம் வள்ளியம்மாவுக்கு தான் தனி வழியாச்சே….” என்று சொன்னதும் அவனும் சிரித்துக் கொண்டே பின் பக்க வழியாக தன் பார்வையை செலுத்த பார்த்தவன் அப்படியே எழுந்து நின்று விட்டான்.

அந்த சூரிய வெளிச்சம் பின் பக்க மாமரத்தின் மீது பட்டு வெளிச்சமும் நிழலும் கலந்து தாமரை முகத்தில் எதிர் ஒளிப்பது பார்ப்பதை பார்த்த ஆதித்யாவினால் கண்ணை அப்படி இப்படி நகர்த்த முடியாமல் நின்று விட்டான்.

உயரம் என்னவோ ஐந்தேகால் அடி தான் .நிறமும் பால் வெள்ளை என்று எல்லாம் சொல்ல முடியாது.(உனக்கு பால் வெள்ளை கேக்குதா)ஆனால் உடல் வாகு அப்படியே சிற்பி வடித்த சிலை போலவே இருந்தது.முக கலையும் அப்படியே….

ஆதித்யா எழுந்து நிற்பதை பார்த்த சத்யா தாமரையை பார்க்க. தாமரைக்கு அந்த பிரமிப்பு எதுவும் இல்லை போல். அதனால் தான் ஆதித்யா முன் வந்து நின்றவள் எதுவும் பேசாது தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த ஆதித்யாவை கேள்வியாக பார்த்திருந்தாள்.

ஆதித்யாவின் நல்ல நேரமோ….இல்லை தாமரையின் கெட்ட நேரமோ….பின் பக்கமாக வந்த வள்ளியம்மா ஆதித்யாவின் சாப்பிடும் நேரம் வந்து விட்டதால் சாப்பாட்டை டையினிங் டேபிளில் வைத்து விடலாம் என்று சமையல் அறைக்கு சென்றதால் ஆதித்யாவின் இந்த பார்வையை பார்க்கவில்லை.

பார்த்து இருந்தால் அனுபவம் வாய்ந்த அந்த பெரிய மனிஷிக்கு ஆதித்யாவின் பார்வைக்கு உண்டான அர்த்ததை கண்டு பிடித்து இருப்பார். அந்த அனுபவம் இல்லாத தாமரை அய்யா ஏன் இப்படி தன்னை பார்க்கிறார் என்று புரியாமல் விழித்திருந்தாள்.

சாப்பாட்டை டையினிங் டேபிளில் வைத்து விட்ட வள்ளியம்மா ஆதித்யா தாமரையை நோக்கி வர சத்யா உடனே ஆதித்யாவிடம் “தலைவா….” என்ற அவன் அழைப்பால் நிகழ் உலகுக்கு கொண்டு வந்தான்.

சத்யாவின் அழைப்பில் தான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என்ற சிந்தனையே அவனுக்கு வந்தது. பின் தன்னை சுற்றி பார்த்தான் அனைவரின் பார்வையும் தாமரையிடமே இருந்ததால் அவனின் பார்வையை சத்யாவை தவிர யாரும் பார்க்கவில்லை.

தன்னை சுற்றி பார்த்தவன் இத்தனை நேரம் செயல் இழுந்ததுக்கு சேர்த்து வைத்தது போல் மேலும் தன் முகத்தில் கம்பீரர்த்தையும், உடலில் விறைப்பையும் கொண்டு வந்தவன் சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் தாமரையை பார்த்து ஏகாம்பரத்தை காமித்து.

“இவரின் மகள் உன் பிரண்டா….?” என்ற கேள்விக்கு சொன்னாலே ஒரு பதில்.

“நான் அப்பாவை பார்த்து எல்லாம் பிரண்டு பிடிக்கிறது இல்லே அய்யா….”

உடனே வள்ளியம்மா “ஏய் என்ன பேச்சி பேசுறே….பெரியவங்க கிட்ட இப்படி தான் பேசுறதா…..”

என்ற அதட்டலில் “நான் தப்பா எதுவும் பேசலையே…..”என்று சொன்னதும் அல்லாமல் அதை ஆதித்யாவிடமே “நான் தப்பா ஏதாவது சொல்லிட்டேனா...அய்யா” என்று.

அவளின் பேச்சில் வந்த சிரிப்பபை வாய் அடக்கிய ஆதித்யா தன் கெத்தை விடாமல் முறைப்பாகவே “இதை பத்தி கேட்க உன்னை இங்கே கூப்பிடலே…..இவர் பொண்ணு மங்கை ***ஜாதிகாரனை விரும்புவது உனக்கு தெரியுமா…..?”

“மங்கை என் பிரண்டு தான். அது இவர் மகள் என்பது நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும். அப்புறம் அவள் ஒரு பையனை விரும்புவது எனக்கு தெரியும். அவன் ****ஜாதியா என்று எனக்கு தெரியாது.”

தாமரையின் பதிலில் அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் விழித்திருந்தான் ஆதித்யா.
 
Top