Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-10

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....

போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.... ?

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....:love:


சாரி...சாரி....
எல்லாரும் மன்னித்துக் கொள்ளுங்கள்.....?

இன்று என் செல்லக் குட்டியின்? பிறந்தநாள்...அதனால அவனுக்கு பிடிச்சத செய்தே நேரம் போகிவிட்டது....:love:இன்னும் வேலை இருக்கு...ஆனாலும் நேரம் ஒதுக்கி இப்ப வந்துட்டேன்......?

யூடி ய காப்பி &பேஸ்ட் பண்ண கூட என்னால் இங்க வர முடியல.....இதுல சோகம் என்னன்னா யாருமே என்ன தேடல....:cry:

சரி.... கதைக்குள் போவோம்.....:love:


அவளிடம் பதிலில்லை...தலையை கவிழ்ந்து அமர்ந்து இருந்தாள்....

"யாராயிருந்தாலும் அவன் துரதிர்ஷ்டசாலி என்றே கூறுவேன்...உன்னை போல் ஒரு பெண் வாழ்க்கையில் இருந்தால் அதைவிட அதிர்ஷ்டம் ஏது!!.. உனக்கு எப்படி அவனை தெரியும்???"...

"எங்க பக்கத்துவீட்டுக்கு வருவாங்க..பார்த்து பார்த்து பிடித்துவிட்டது....அப்புறம் என் காலேஜிலே பி.ஜி.பண்ணுனாங்க....அப்பொழுது தான் என் காதலை உணர்ந்தேன்"...

பின் அவன் முகம் பார்த்து,"ரொம்ப அழகா இருப்பாங்க..எல்லாரிடமும் அன்பாக கலகலனு பேசுவாங்க... எல்லாருக்கும் உதவுவாங்க....குறிப்பா பெண்களிடம் கண்ணியமாக இருப்பாங்க....எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும்..."என்றாள்

அவள் சொல்ல சொல்ல ஆரம்பிக்க அவன் முகம் சுருங்கி விட்டது...ஏன் இவளிடம் கேட்டோம் என்று ஆகிவிட்டது...தன்னவள் இன்னொருவனை இப்படி வர்ணிக்கிறத அவனால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை...

"காலேஜ் க்கு அப்புறம் அவங்கள பார்க்கவே முடியல...படித்து முடித்து வேலைக்கு செல்லும் போது தான் என் காதலை சொல்லனும் என்று நினைத்தேன்....

காதலை சொல்ல தைரியம் இல்லை..பார்க்கவாவது செய்வோம் என்று தேடிச் சென்றேன்...."நிறுத்தினாள்...

அப்புறம்....

தேடிச் சென்று அவங்க அலுவலகத்தில் வேலை செய்த பெண்ணிடம் சாதரணமாக இங்கு வேலை கிடைத்துள்ளது....இங்கிருப்பவர்கள் எப்படின்னு விசாரிக்கும் போது அவங்களை பற்றி கேட்டேன்....திருமணமாகி அவங்க மனைவி கற்பமாய் இருப்பதை கேள்வி பட்டு திரும்பி விட்டேன்....அதன்பிறகு எல்லாவற்றையும் மறந்து விட்டேன்‌‌....ஆனாலும் என்னால் இன்னொருவரை செய்ய திருமணம் முடியவில்லை....."என்றாள்....

உங்கள் வீட்டிற்கு இது தெரியுமா???....

என்னைத்தவிர வேறு யாருக்கும் என் காதல் தெரியாது.....

உனக்கு உங்கள் வீட்டில் திருமணம் செய்யாமல் விட்டுவிடுவார்கள் என்று எப்படி நினைத்தாய்??

இது என் வாழ்க்கை.....இதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை..யாருக்காவும் நான் மாறவும் மாட்டேன் என்று உறுதியாய் இருந்தேன்...."எழுந்து நின்று "சாப்பிடுவோம்‌.... மாலையில் குழந்தைகளை அழைத்து கொண்டு கடைக்கு போவோம்" என்றாள்....
மனதுக்குள்"சும்மா....கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க..."

சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வந்தான்....

அதன்பிறகு கிளம்பி கடைக்குச் சென்று விட்டு அப்படியே இரவு உணவை வெளியே சாப்பிட்டு விட்டு வந்தனர்....

மறுநாள் காலை ஊருக்கு செல்ல இருப்பதால் அவற்றை பேக் செய்ய ஆரம்பித்தாள்....

குழந்தைகளுக்கு ஏக சந்தோஷம்.... ஊருக்கு போறோம்னு....தூங்காமல் ஹர்சித் துடன் விளையாடிக் கொண்டிருந்தனர்....

பேக் செய்து விட்டு சமையலறையை ஒதுங்க வைத்து விட்டு குழந்தைகளுடன் சென்று படுத்து உறங்கி விட்டாள்...

ஆக மொத்தத்தில் இவனை கண்டுக் கொள்ளத்தான் ஆளில்லை.....
உறக்கம் வராமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கினான்....கண் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் மனமோ அதிலில்லை...

நெடுநேரம் கழித்தே சென்றே உறங்கினான்....

மறுநாள் கற்பகம் வந்து எழுப்பும் வரை தூங்கிக் கொண்டிருந்தான்...

அவர் எழுப்பியதும்,எப்போ வந்தீங்க அம்மா?"

நாங்க வந்து அரைமணி நேரம் ஆச்சி....எல்லாம் ரெடி ....நாங்க கிளம்ப நேரம் ஆகிவிட்டது...எழுந்து வா... என்றார்.

எழுந்து ரெப்ரஷ் ஆகி கீழே வந்து பார்த்தால் அவனைத் தவிர அனைவரும் அங்கு இருந்தனர்....

"தலையசைத்து எல்லாரும் வாங்க னு"கூறிக் கொண்டே சென்று அமர்ந்தான்....

சரவணன் அவனருகே வந்து,அண்ணா, அண்ணி உன்ன விட்டு ஊருக்கு போறாங்கனு ஓவர் நைட் ஸிப்ட் பார்த்ததில் ரொம்ப டையர்ட் போல.... இப்பதான் எழுந்துக்கிற.....என்றான்...

அவன் முறைப்பில்"அம்மா....இங்க பாருங்க அண்ணா வெட்கப் படுறான்....கத்திவிட்டு"அப்போ அது தான் நிஜமா??"கிசுகிசுத்தான்...

"முத்தத்துக்கே வழியில்லை....ஓவர்ஸிப்ட் ஒன்று தா குறை"முணுமுணுத்தான்..

"டேய்!!!நீ வேற!!!ஏன்டா!!கடுப்பேத்தற!!!என்ன விட்டுட்டு எல்லாரும் போறீங்க.....நானே கோவமாயிருக்கேன்....
யாராவது ஒருத்தங்க இங்கே இருந்தே ஆக வேண்டியது இருக்கேன்னு கடுப்பாகுதுடா....
ம்ம்ம்....அங்க பாரு!!!புருஷன் ஊர்க்கு நம்ம கூட வர்லயேனு அவ முகத்தில் கவலை இருக்கானு பாரு!!!எல்லாம் என் நேரம் டா ...."

கணேசன்"சரி...நாங்க கிளம்புறோம்...வாங்க எல்லாரும் வந்து ஏறுங்க"என்று அவர் ஏற்பாடு செய்த வேனில் ஏறச் சென்றார்....

பாய் அண்ணா..பாய் அத்தான்...பாய் பெரியப்பா.....வரோம்டா....வீடே சத்தத்தில் மூழ்கியது....பாய் அப்பா னு சொல்லி கார்த்திக் மற்றும் காவ்யா கண்ணத்தில் முத்தமிட்டு ஓடிவிட்டனர்....

பாக்கி இருப்பது மகிழினி மட்டுமே.....அவளை அனுப்ப சுத்தமாக மனசில்லை.....

சாப்பாடு டேபிள்ள வைச்சிருக்கேன்...சாப்பிட்டுட்டு கிளம்புங்க...

குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்...நேரத்திற்குப் சாப்பிடுங்க....போய் போன் செய்....

ம்ம்ம்‌....சரி... கிளம்பி விட்டாள்..அவனில்லாமல் கிளம்ப மனதில்லை...

வேன் கிளம்பி சென்றதும் உள்ளே வர வீடு வெறிச்சோடியது....

போய் குளித்து வந்து சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பி விட்டான்....அதற்கே அங்கே இருக்க பிடிக்கவில்லை....

வேலைகளை இரண்டு மணிநேரத்தில் முடித்து விட்டு வீட்டிற்கு வந்து அவனுக்கு தேவையான பொருட்களை பேக் செய்து ப்ளைட்டில் கிளம்பினான்...

அவர்கள் ஊர் தூத்துக்குடி யில் உள்ள ஒரு கிராமம்.....இங்கே வந்து சேர இரவு ஏழு மணி ஆகிவிட்டது....
அவர்களுடைய வீட்டில் அவர்களுக்கு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....

குழந்தைகளை கற்பகத்திடம் விட்டு ட்டு சோர்வுடன் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் வந்துப் பார்த்தவளுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.....

ஓடிச்சென்று அவன் கையை பிடித்து கொண்டு "எப்போ வந்தீங்க???எங்க கூடவே வந்திருக்கலாம்ல???"என்றாள்...

நீங்கள் இல்லாமல் வீடு வீடாக இல்லை..அதனால் அவசர வேலைகளை லாம் முடித்துவிட்டு கிளம்பிட்டேன்...

ஓஹோ....

குழந்தைகள் எங்கே??

"அத்தை கூட இருக்காங்க....பேக்கை வைக்க வந்தேன்....பார்த்தா நீங்க....ஐ யம் ஷோ ஹப்பி.... வாங்க போய் பார்க்கலாம்....ரொம்ப சந்தோசம் படுவாங்க..."சொல்லி கொண்டே முன்னால் நடந்தாள்......

"அத்தை...அத்தை.... காவ்யா.. கார்த்திக்...இங்கே பாருங்க....யார் வந்திருக்கானு..... "மகிழ்ச்சியாக கூறினா‌ள்...

திரும்பி பார்த்த அனைவருக்குமே மகிழ்ச்சி தான்.... குழந்தைகள் இருவரும் ஓடிச்சென்று கட்டிக் கொண்டனர்...


ஐ....ஐ....ஜாலி...அப்பா வந்தாச்சு......காவ்யா....

"எப்போ வந்த???...." கற்பகம்.

"மாலை ஐந்து மணிக்கு....அப்பாக்கு தெரிஞ்சிருக்குமே!!!!.."ஹர்சித்.

"அண்ணா....இது அநியாயம்....பதினொரு நாள் கழித்து தான் வரணும்..இப்பவே வந்துட்டீங்க....ஏன் குழந்தைகள பிரிந்து இருக்க முடியலயோ"சரவணன்.

"அக்காவ பிரிஞ்சியிருக்க கஷ்டமா யிருந்திருக்கும்...அதான் இன்னைக்கே வந்துட்டாங்க!!!சரியா அத்தான்?...." கலாய்த்தாள் ஸ்வேதா.

அவன் புன்னகைத்து மகிழினியை பார்க்க அவளோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்....

"வாலு....வாங்க சாப்பிட செல்வோம்...."கற்பகம்....

சாப்பிட்டு விட்டு எல்லோரும் சேர்ந்து பேசிவிட்டு படுக்க சென்றனர்.....

இப்படியே பத்து நாள்கள் ஊரில் மகிழ்ச்சியாக இருந்தனர்....



உள்ளம் வசமாகுமா??? தொடரும்...
 
Last edited:
? ? ?

உங்க மகனுக்கு என்" பிறந்தநாள் வாழ்த்துக்கள்" சொல்லிடுங்க சிஸ்....

கதையை நல்லா கொண்டு போறீங்க சிஸ்...
 
Last edited:
? ? ?

உங்க மகனுக்கு என்" பிறந்தநாள் வாழ்த்துக்கள்" சொல்லிடுங்க சிஸ்....

கதையை நல்லா கொண்டு போறீங்க சிஸ்...
நன்றி சகோதரி.

கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி :love:
 
Top