Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-11

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....

போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.... ? ? ? ? ? ?...

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....



இந்த பத்து நாளில் ஒருவரில்லாமல் ஒருவரால் இருக்க முடியாது என்று புரிந்து கொண்டனர்.... இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டிருந்தது....

அடுத்த நாள் காலை,கற்பகத்தின் ஊருக்கு செல்வதாக பிளான்....

கிளம்பி போகும் போது ஊரின் பெயர் பலகையை பார்த்த பின் அவளுக்கு ஆச்சர்யம் மற்றும் சந்தோசம்... ஏனென்றால் அது அவளின் அம்மாவின் ஊரும் கூட.....தனது பாட்டி இப்போது இங்கே தான் உள்ளார் என்று தெரியும்...அவர்களை சென்று பார்க்க ஆசை ஆகிவிட்டது....

"வீட்டை அடைந்ததும் அத்தை இந்த ஊரில் தான் என் பாட்டி யும் உள்ளார்....
ஒருதடவை சென்று பார்த்து விட்டு வருகிறேன்..."என்றாள்.

அதற்கென்ன எல்லாரும் சேர்ந்து போவோம் மகிழினி...."கணேசன்.

அது கற்பகத்தின் சின்னதந்தையின் வீடு....இவரோட தந்தை வீடு பராமரிப்பு இல்லாமல் இடிந்து விட்டது‌‌.‌‌.....இதே போல் எப்போதாவது வந்தால் இருக்க வேறு இடத்தில் ஒரு சிறு வீடு மூன்று அறையுடன் கட்டியுள்ளனர் ...

முதலில் சின்னதந்தை வீட்டிற்கு சென்று சிறிது நேரம் இருந்து விட்டு தங்கள் வீட்டிற்கு சென்றனர்.....

ஏற்கனவே அவர்கள் வீட்டிற்கு வந்தால் மூன்று ஆட்களை வேலைக்கு வறுமாறு சின்னதந்தையிடம் கற்பகத்திடம் கேட்டிருந்தார்... அதன் படி ஆட்கள் கிடைத்திருந்ததால் இவர்களுக்கு எளிதாக சமாளிக்க முடிந்தது....

மதியம் உணவை முடித்ததும் குழந்தைகளை உறங்க வைத்து விட்டு பாட்டியை பார்க்க செல்லலாம் என்று நினைத்தாள்....

ஆனால் குழந்தைகளோ மண்ணில் நீரை ஊற்றி என விளையாட்டில் மூழ்கினர்...

இதை பார்த்த ஹர்சித் ,"நான் குழந்தைகளை பார்த்து கொள்கிறேன்....நீ அம்மாவுடன் சென்று உன் பாட்டியை பார்த்து வா "என்றான்...

ம்ம்ம் சரி என்றாள்....

கற்பகத்திடம் சென்று,"அம்மா, நீங்களும் மகிழினியும் அவளுடைய பாட்டியை பார்த்து விட்டு வாங்க..."என்றான்...

கற்பகமோ"ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் அவங்கள பார்க்க போறாள்....எல்லாரும் குடும்பமாக சேர்ந்து போவோமே...அவளை குடும்பமாக பார்த்தால் தான் பெரியவங்களுக்கும் மகிழ்ச்சிபா..."என்றார்...

மகிழினியிடம் திரும்பி,"உன் பாட்டி ,தாத்தா பெயர் சொல்.....நான் என் சின்னதந்தையிடம் வீடு எங்கே இருக்கு னு கேட்டு சொல்றேன்..."என்றார்...

"தாத்தா பெயர் முத்தையா.....பாட்டி பெயர் அன்னப்பூரணி....மாமா வீட்டில் இருந்தாங்க....மாமா பெயர் மால்ராஜா..."என்றாள்....

அவர் சின்னதந்தையிடம் கேட்டதற்கு அவர்கள் வீட்டில் வேலை செய்யும் ஓர் ஆளை அனுப்புகிறேன்...அவன் கூட்டிச் செல்வான் என்றார்...

இவர்கள் அனைவரும் கிளம்பி அந்த வேலையாள் வந்ததும் சென்றனர்...

அவர்கள் மகிழினி பாட்டி வீட்டை அடைந்ததும் அவர் கிளம்பி விட்டார்....
கற்பகத்திற்கு இந்த வீடு இருந்த தெரு கூட தெரியவில்லை....

அவர்கள் வீட்டின் வாயிலில் நிற்கும்போதே மகிழினியின் மாமா மகள் வெளியே வந்து யார் வேணும் என்றாள்...

"அன்னபூரணி பாட்டியை பார்க்க வந்துருக்கோம்...."என்ற மகிழினியை அந்த பெண்ணுக்கு சுத்தமாக யாரென்று தெரியவில்லை....

உள்ளே வாங்க....என்று கூறிக்கொண்டே வீட்டினுள்ளே சென்று அவள் தாயை அழைத்து வந்தாள்....

வெளியே வந்த மால்ராஜாவின் மனைவி குந்தவைக்கு மகிழினியை தெரிந்திருந்தது.....

வாம்மா மகிழினி....என்றவர் மற்றவர்களை பார்த்தார்....

புரிந்து கொண்ட மகிழினி,இது என் குடும்பத்தார்....என ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்தினாள்...

உனக்கு திருமணம் ஆகிவிட்டதா??என்றார்...சரி...உள்ளே வாங்க... உட்காருங்க.... மாமா க்கு போன் போடுறேன்....இப்ப வந்துடுவாங்க...‌"என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்...

உடனே அவர் மகளிடம் அனைவருக்கும் பருக சொம்பில் நீர் கொடுத்து விட்டிருந்தார்....

அனைவரும் நீரை அருகியதற்குள் அனைவருக்கும் சிற்றுண்டி எடுத்து கொண்டு வந்துவிட்டார்...

அதற்குள் அவரள் மாமாவும் வயலிலிருந்து வந்து விட்டார்...அவர்க்கும் அதிர்ச்சி தான்...ஆனால் மகிழ்ச்சியுடன் எல்லாரையும் வரவேற்று பேசிக்கொண்டிருந்தார்...

கற்பகத்திற்கு இவரை எங்கோ பார்த்த நியாபகம்....ஆனால் தெரிய வில்லை...

மாமா,பாட்டி இப்போது எங்கே இருக்காங்க? மெதுவாக கேட்டாள்....

பின்னாடி ரூமில் தான் இருக்காங்க....வா...போலாம்னு அவளோட அத்தை கூப்பிட எழுந்து சென்றாள்....

பாட்டியை பார்த்ததும் ஓடிச்சென்று அவர் கையை பிடித்து கொண்டு ,"பாட்டி எப்படி இருக்கீங்க???..."என்றாள்...

முதலில் அவர்க்கு தெரிய வில்லை....
அவளை கண்டுகொண்ட பின்,"யம்மா...என்ன பெத்த ஆத்தா....நீயா...உன்ன போய் அடையாளம் தெரியாம பார்த்தேனே.... எங்குலச்சாமி....இப்பதான் என்ன பார்க்க வந்திருக்க....எம்புட்டு நாளாக உன்ன இனி ஒருவாட்டியாட்டி பார்க்க மாட்டேனானு ஏங்கி என் உயிர புடிச்சி வைச்சிருந்தே....இனி சாவு வந்தா கூட சந்தோசமா போவேன்....டேய்!!!மாலு....இங்க பாரு உன் மருமக வந்துருக்கா..."என்று மிக சந்தோசமாக கூறினார்....

மகிழினிக்கும் பேச்சே வரவில்லை.... அவரருகில் அமர்ந்திருந்தாள்...

அவங்க இவள பார்த்துட்டாங்க அத்த...நீங்க பேசிட்டிருங்க..‌..என்று கூறிவிட்டு
அவர் முன்னே சென்று விட்டார்....

"பாட்டி அவங்க இங்க எப்பவாவது வந்தாங்களா??போட்டோ கிடைச்சிட்டா??..."கேட்டாள்....

இல்ல கண்ணு....அவங்க வீடு புழக்கமில்லாம தான் கிடக்குது...யாரும் வர்ரதில்ல....அவங்க அட்ரஸும் தெரியல....

நான் போய் ஒருதடவை பார்க்கவா???

ம்ம்ம்...சரி கண்ணு...

உடனே பின் வாசல் வழியாக வெளியே சென்று விட்டாள்.....

அவளுக்கு அந்த வழி பழக்கமான இடம் என்பதால் அவள் வர காத்திருக்க ஆரம்பித்தார்....


உள்ளம் வசமாகுமா???தொடரும்...
 
Last edited:
Top