Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-12

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....

போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....?????

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....

இந்த ஸ்பெஷல் பதிவு என்னுடைய இந்த கதையின் வாசகிகளுக்கு...... :love:



கணேசன்,"நாமளும் மகிழினியோட பாட்டியை பார்த்து வருவோம்...."எழ அனைவரும் எழுந்தனர்....

கற்பகத்திற்கு அவரோட சின்னதந்தையிடமிருந்து போன் வர அவர் பேசிவிட்டு வருவதாக சொல்லி வெளியே செல்ல அனைவரும் உள்ளே சென்று பாட்டியை பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள்....

கற்பகம் போன் பேசி வந்தார்....அந்த பின் பக்க வீட்டுக்குள் நுழைந்ததும் அவருக்குள் ஒரு உணர்வு வந்தது..‌

யோசனையுடன் வந்தவர் அன்னப்பூரணி அம்மாவை பார்த்ததும் நின்றுவிட்டார்...

பாட்டியோ அதிர்ச்சியுடன் ,"நீ கற்பகம் தானே?"...என்றார்...

கற்பகத்திற்கோ இப்போது புரிந்து விட்டது..... "அம்மா நீங்களா???எப்படி இருக்கீங்க???இது உங்க வீடு தானா?எத்தனை முறை வந்தும் தெரியவில்லையே.....கைப் பிடித்து அன்போடு கூறினார்....

"அம்மா!ஏற்கனவே இவங்கள உங்களுக்கு தெரியுமா?..."சரவணன்...

"ஆமாபா!"...என்றவர்" கணேசனிடம் திரும்பி உங்கட்ட என்னோட உயிர்த்தோழி கண்மணி பற்றிக் கூறியிருக்கிறேன் அல்லவா....அவளோட அம்மா தான் இது"...
என்றவர் அன்னப்பூரணி அம்மாவிடம் அருகில் போய்,"கண்மணி இப்போ எப்படி இருக்காள்,எங்கே இருக்காள்?....நம்பர் குடுங்க...அவட்ட பேசனும் மா....இந்த ஊருக்கு எத்தனை தடவை வந்தேன்...நீங்க காலிபண்ணிட்டு போய்ட்டதா கேள்விப்பட்டேன்.....அப்புறம் உங்கள பத்தின் எந்த தகவலுமில்லை....உண்மை என்ன்னா உங்களலாம் நான் அப்புறம் தேடவேயில்லை....அப்படியே என் வாழ்க்கைக்குள் மூழ்கி விட்டேன்...அப்பப்போ நினைத்துக் கொண்டதோடு சரி"....என்று பேசிக்கொண்டே இருந்தவர் அன்னப்பூரணி அம்மாவின் முகமாறுதலை இப்போதான் கவனித்து நிறுத்தினார்.....

திடிரென்று கதறி அழத் தொடங்கி விட்டார்....

அம்மா!!!!என்னாச்சி.??...கற்பகம்...

சிறிது நேரத்தில் அவரே அழுகையை நிறுத்தி விட்டு கூறத் தொடங்கினார்....

--------------------------------------

நாமும் அங்கு சென்று பார்ப்போம்....


அது 1992....
அந்த ஊரில் உயர்நிலைப்பள்ளி ஆரம்பித்த ஆண்டு.....

முதல்நாள் வகுப்பில் இரண்டாம் வரிசையில் கற்பகம் அமர்ந்திருந்தாள்...
அவள் பக்கத்தில் கண்மணி வந்து அமர்ந்தாள்....அப்போதே கற்பகத்திற்கு கண்மணியை மிகப் பிடித்திருந்தது....

"என் பெயர் கற்பகம்....உன் பெயர் என்ன?"

கண்மணி.....

அதன்பின் கற்பகம் நிறுத்தவேயில்லை... பேசிக் கொண்டே இருந்தாள்... கண்மணி புன்னகை முகத்துடன் அதைக் கேட்டு கொண்டிருந்தாள்....

அன்றிலிருந்து இருவரும் உயிர் தன் தோழிகளாயினர்.....

கற்பகம் அந்த ஊரில் மிகப் பெரிய வசதியான குடும்பத்தை சேர்ந்தவள்...வீடு,வயல், தோட்டம் என் நிறைய சொத்து...அவள் வீட்டுக்கு அவள் ஒரே வாரிசு....பத்தாவது வரை வெளியூர்க்கு சென்று படித்துக் கொண்டிருந்தாள்....இந்த வருடம் அவளுடைய தாத்தா பொண்ணுங்க எழுத படிக்க தெரிஞ்சா போதும்னு சொல்லி நிறுத்தி விட்டார்...இவள் கெஞ்சி கொஞ்சி மிஞ்சி என எதற்கும் மசியவில்லை.....
அவள் நல்ல நேரம் அவள் ஊருக்கு அந்த வருடம் உயர்நிலை வகுப்பில் பதினொன்றாம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது...அவள் ஆசை கொண்டு பிடிவாதம் பிடித்ததால் உள்ளூரில் படிக்க அவள் தாத்தா சம்மதித்தார்....

ஆனால் கண்மணி யோ மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்....வானம் பார்த்த பூமி என்று வாழ்பவர்கள்... அவளுக்கு ஒரு அண்ணண்,மால்ராஜா....அவன் துபாயில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தான்.... அவனுடைய வருமானம் வந்த பிறகு கண்மணி க்கு கொஞ்சம் நகைகள் சேர்த்து வந்தனர்.... அவளுக்கு வரன் அமையும் வரை படிக்கட்டும் என்று அவள் பெற்றோர் முடிவு செய்திருந்தனர்....

கற்பகம் விடுமுறை நாளில் ஊர் சுற்றி, குளத்தங்கரையில் ஊஞ்சல் விளையாடி , கண்மணி வீட்டிற்கு வந்து அவளுடன் பல்லாங்குழி,சுட்டிக்கல் என பொழுது போக்குவர்....அந்த வருட திருவிழாவில் இருவரும் போட்டோ எடுத்து கொண்டனர்....

அடுத்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு வந்தனர்....இருவரும் நன்கு படிப்பதால் பள்ளியிலும் பிரச்சனை இல்லை...அந்த ஐப்பசி மாதம் கண்மணிக்கு ஒரு வரன் வரும்வரை எல்லாம் நன்றாகவே சென்றது...


உள்ளம் வசமாகுமா???தொடரும்....

மாப்பிள்ளை யார் னு guess பண்ணி சொல்லுங்கள் சகோதரிகளே...
 
Last edited:
Top