Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-5

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே,

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்....


அவளே தொடர்ந்தாள்....."நீங்க எதிர்பார்த்த மாதிரி நடந்தா உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே????"...

அவன் அவளை பார்த்தான்....

"என்னால் குழந்தை பெற்று கொள்ள முடியாது என்றே நினைத்துக் கொள்ளுங்கள்.....இந்த மூன்று வருடங்கள் நாம் எப்படி குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாக வாழ்ந்தோமோ அப்படியே கடைசிவரை இருந்துக் கொள்ளலாம்....அப்புறம் என்ன?"என்றாள்...

"அது எப்படி முடியும்??உனக்கும் சராசரி பெண்கள் மாதிரி கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தைகள் பெற்று என ஆசை இருக்கும் அல்லவா!!அதனால்...."இழுத்தான்...

"அதனால்.... கூறுங்கள்".....

"அதனால் நான் உனக்கு விவாகரத்து வழங்கி விடுகிறேன்....நீ வேறு திருமணம் செய்து சந்தோசமாக வாழ்..."என்றான்...


இதைக் கேட்டதும் அத்தனை சீற்றம் பெண்ணிடம்.... கோவமாக எழுந்து நின்று"அதே விவாகரத்தை நான் உங்களுக்கு தந்து விட்டு குழந்தைகளுடன் சென்று விடுகிறேன்... நீங்கள் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்."என்றாள்....

இப்பொழுது சீற்றம் இவனிடம்...."யார் குழந்தைகளை யார் வளர்ப்பது? அவர்கள் என் குழந்தைகள்..."என்று அவளை அடிக்க கை ஓங்கினான்.....

"இப்போ எதுக்கு இவ்வளவு கோபம் வருகிறது....எனக்கு வந்தா தக்காளி சட்னி, உங்களுக்கு வந்தா ரத்தமா?"என்றாள்...

புரியாமல்"லூசா நீ?? சம்பந்தமில்லாம பேசுற"என்றான்...

"யார் லூசு??நீங்க தான் லூசு....நான் சம்மந்தமாக தான் பேசுறேன்... உங்களுக்கு தான் புரியல....உடனே என்ன லூசுனு சொல்லுவீங்களோ!!!...
இங்க பாருங்க.... எப்படி உங்களால குழந்தைகள் இல்லாம இருக்க முடியாதோ அதே மாதிரி என்னாலையும் இருக்க முடியாது....அதனால் இந்த விவாகரத்து,பிரிவு னு பேசாம நம்ம பிரச்சனையை முடிக்க பாருங்க...."என்றாள்...

அதை கேட்டதும் அவனுக்குள் அவ்வளவு நிம்மதி....அவள் இல்லாம குழந்தைகள் இருந்து விடும்...நீ இருப்பியா?னு மனசாட்சி அவனை காரித்துப்பியது....
நான் ஏன் அவள் போவதை விரும்பவில்லை னு முதன் முதலாக அவன் மூளை யோசிக்க தொடங்கியது....ஏன்னா எனக்கு மகிழினியை ரொம்ப பிடிக்கும் னு மனசாட்சி கூறியது...அவன் மனசு போற போக்கை பார்த்து அவனுக்கே திகைப்பு....இது எப்போ எப்படின்னு.....

அவன் அமைதிய பார்த்து இவள் வேற மாதி யோசிக்க ஆரம்பித்து விட்டாள்...

"உங்கள் பிரச்சினை இதுதானே.....நான் என்னுடைய கற்பப்பையை எடுத்துறேன்....அப்போ என்னால் குழந்தை பெற்று கொள்ள முடியாது....நான் குறை உள்ள பெண்ணாகிவிடுவேனே"என்று சாதாரணமாக கூறினாள்...

கேட்ட அவனுக்கு தான் ஒருமாதிரி ஆகிவிட்டது...அவனுக்கு என்னமாதிரி உணர்கிறோம் என்று அவனுக்கே தெரிய வில்லை....ஒன்றும் சொல்லாமல் எழுந்து மேலே சென்று கதவடைத்துக் கொண்டான்...


அவள் அப்படடியே சோஃபாவில் தலை வைத்து குனிந்து அமர்ந்திருந்தாள்...


அவனுக்கு யோசிக்க தனிமை தேவை இருந்தது....இவள் சொல்வதை வைத்து பார்த்தால் இவளுக்கு இது தெரியாமல் தான் நடந்து உள்ளது...ஆனால் ஏன் இப்படி பட்ட பெண்ணுக்கு இல்லாத குறையை சொல்லி இரண்டாம் தாரமாக தன்னை திருமணம் செய்து வைத்தனர்....

எந்த பெண்ணுக்கு தான் இரண்டாம் தாரமாக இருப்பது அதுவும் இருகுழந்தைகளுடன் இருப்பது மகிழ்ச்சி யை தரும்... ஆனால் இதுவரை ஏன் இப்பொழுது கூட அவள் அதை பொருட்படுத்தவே இல்லையே.....

மாறாக என் நிபந்தனை பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக தான் தன்னுடைய கற்பப்பையை எடுத்து விடுகிறேன் என்று சொல்றாரளே..
எப்படி ஒரு பெண்ணால் இப்படி நினைக்க முடியும்.....

நானும் என் குழந்தைகளும் இவளுக்கு என்ன செய்தோம் என்று இவள் இவ்வாறு நடந்து கொள்கிறாள்..

பணம், வசதி,உல்லாச வாழ்க்கைக்காக என்றால் இதுவரை அவள் அவ்வாறு நடந்துக் கொண்டதுமில்லை...

ஆக அவள் கூறுவது தான் உண்மை... அவளுக்கு தெரியாமல் தான் இந்த திருமணம் நடந்துள்ளது....

ஆனால் என்னால் அவள் வாழ்க்கை பாதிக்க படுமே அதற்கு என்ன செய்வது...
என்னால் அவளுடன் சராசரி கணவனாக வாழ முடியாது....அவளை இவ்வாறே காலம் முழுவதும் எங்களுக்கு சேவகம் செய்ய வைக்கவும் முடியாது....இதை எப்படி நிவர்த்தி செய்வது..... ஐயோ!!!கடவுளே !!ஏன் என்ன இந்த நிலைக்கு கொண்டு வந்தீங்க....இன்னும் நான் எவ்வளவு தான் கஷ்டப்படனும்...எனக்கு நிம்மதியான நிறைவான வாழ்க்கை அமையாதா.....என்று மனதுக்குள் மருகினான்...

இப்ப தான் அவள் மேல் தப்பு இல்லை என்று தெரிந்து விட்டதே!! தப்பு செய்யாதவளுக்குத் தான் நீ தண்டனை வழங்கினாயே!!!அதை மாற்ற முடியுமா?? இதுவரை பெண்களிடம் ஒரிரு வார்த்தைகள் அதுவும் அவர்களாக கேட்டால் பதில் சொல்லி என் கன்னியமாக நடந்த நீ அவளை அடித்தது ஏன்??..மனசாற்றியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தான்...

திடிரென்று கேட்ட அலைபேசி ஒலியில் சிந்தனை களைந்தான்.....




உள்ளம் வசமாகுமா??
 
Last edited:
Tq dear for spl epi.
Author ji katha romba interesting ah, urukkama poguthu pa.
Avalu pava, avaluku vendi avan yosippathum seriye. Avan otthu kollathu ponalum avan ,aval mel vaithu irrukum priyam nijam.
Enthu seyaam.
Yedo ellam vidu ippol neegalu santhoshama, family ah thane irruku pinnae yen avala torture pannure?
 
Top