Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-9

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


இனிய சுதந்திர தின வாழ்த்துகள்....




போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....???

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....?


அடுத்து பதிவு நாளை காலை தான் தர முடியும் சகோதரிகளே....?

சைலண்ட் ரீடர்ஸ் கொஞ்சம் கருணை செய்து கமெண்ட் குடுங்க ....?

புதுசாக எதோ ட்ரை செய்தேன்...அதான் வரவில்லையே அப்புறம் ஏன் இவங்கள டார்ச்சர் பண்றனு என் மனசாட்சி ரொம்ப திட்டுது....
????????????


மூன்று நாட்கள் கழித்து,

காலையில் ஹர்சித்,கார்த்திக் மற்றும் காவ்யா பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.....மகிழினி மூவர்க்கும் மதிய உணவை டப்பாவில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.....


சாப்பிட்டு விட்டு கிளம்பி மூவரும் சென்றதும் வீட்டு வேலைகளை செய்து தோட்டத்தில் சிறுசிறு காய்கறிச் செடிகளை நட்டி,பாத்திக்கட்டி,தண்ணீர் பாய்ச்சி என அவள் நேரம் சென்றது...வேலை முடித்ததும் மேலே நிறைய சகதி மண்ணாக இருந்தது....


வீட்டினுள் வந்து மேலே அறைக்குச் சென்று குளிக்க சென்று விட்டாள்....


அன்கறு அலுவலகத்தில் மீட்டிங் முடிந்ததும் ஹர்சித் கணேசனிடம் ஷாப்பிங்க் செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்....


இதுவரை ஹர்சித் அவளை தனியே அழைத்துச் சென்றதில்லை....இப்பொழுது ஊருக்கு வேறு செல்ல வேண்டியுள்ளதால் அவளுக்கும் குழந்தைகளுக்கும் தேவையானதை வாங்கி குடுக்கலாம் என்று நேற்றிரவே முடிவு செய்துவிட்டான்....


அவளுக்கு ஷர்ப்ரைஸாக இருக்கும் என்று சொல்லவுமில்லை....அவள் என்னிடம் எவ்வாறு ரியாக்ட் பண்ணுவாள்??னு கற்பனையிலே வீடு வந்து சேர்ந்தான்...


வீட்டிற்கு வந்தால் கதவு உட்பக்கமாக பூட்டிருந்தது..... அழைப்பு மணியை அழுத்தி பார்த்தும் திறக்க வரவில்லை...


ஒருவேளை வெளியே எங்கும் சென்றிற்பாளோ என்றாலும் சொல்லாமல் செல்ல மாட்டாளே.....ஒருவேளை தூங்கிருப்பாளாயிருக்கும்!!!...அவனே முடிவு செய்து கொண்டான்.....


தன்னிடம் உள்ள சாவியை காரினுள் சென்று எடுத்து வந்து கதவை திறந்து உள்ளே வந்தான்...


மேலே சென்று அவர்கள் படுக்கையறை க்குள் சென்று பார்த்தான்...அவள் இல்லை... பால்கனியில் போய் பார்த்தான் ....அங்கு மில்லை.....
எங்கே சென்றிருப்பாள் என்று யோசித்து மறுபடியும் அறைக்குள் வர பாத்ரூம் கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க....பார்த்தவன் கண்ணைக் கூட சிமிட்டாமல் சிலையானான்...


வீட்டில் யாருமில்லாததால் மாற்றுடை எடுக்காமல் குளிக்க சென்றிருந்தாள்...குளித்து விட்டு டவலை மட்டுமே கட்டிக் கொண்டு வந்திருந்தாள்...


முதலில் இவனை கவனிக்கவும் இல்லை...
கவனித்த பிறகும் அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்...


ஹர்சித் அவளை நெருங்கிவர இவள் பின்னால் நடக்க.. அவன் நெருங்கி வர அவள் பின்னால் நடக்க...அதன்பின் இடமில்லாத தால் சுவரில் மோதி நின்றாள்....


அவளை நெருங்கி இரு கைகளையும் சுவற்றில் வைத்து சிறை செய்தான்....
அவளுக்கு இதயம் தொண்டைக்குழிக்குள் வந்தது.... அவனுடைய நெருக்கத்தில் வயிற்றில் ஒரு இதம்.... உடலெங்கும் புல்லரித்தது....


அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவள் உதடுகளை நெருங்கி விட்டான்...இரு இதழ்களுக்குமிடையே நூல் அளவு இடைவெளியே!!!.... அவளுக்கு சம்மதமா என்று அவள் கண்களை பார்த்தான்....அவள் பயத்தில் கண்களை இறுக்கமாக மூடியிருந்தாள்.... முகத்தில் பயம் அப்பிருந்தது....நெற்றியில் வேர்வை பூத்திருந்தது....


அவளுக்கு பிடிக்கவில்லை என்று புரிந்து மெதுவாக பின்னோக்கி நடந்தான்....அவள் கைகளை பார்த்தான்....பயத்தில் அவள் தொடை பகுதியிலிருந்த டவலை இறுகப் பற்றியிருந்தாள்...


என்ன காரியம் செய்ய இருந்தேன்.....
வெறும் முத்தத்தோடு என்னால் நிறுத்திருக்க முடியுமா???
பிடிக்காதவளை வற்புறுத்த பார்த்தோமே....
கண்டிப்பா எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டாள்....ஏதோ கட்டாயத்தில் என்னுடன் இருந்திருப்பாள்....எதுவும் வேண்டாம் என்று தானே சொல்லிவிட்டு இப்படி செய்ய இருந்தால் என்ன என்ன நினைத்திருப்பாள்....இது போன்று செய்திருந்தால் நம் அன்னை கூட தன்னை மன்னிக்க மாட்டார்....தன்னை தானே திட்டிக் கொண்டே அறையை விட்டே வெளியேறி விட்டான்....


முத்தமிட குனிந்தானே..ஆனால் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று மெதுவாக கண்களை திறந்து பார்க்கும் போது அவன் வெளியேறிக் கொண்டிருந்தான்.....


ஒருவேளை அனுசியா நியாபகம் வந்திருக்குமோ....அதனால் விலகி விட்டான் போல.....அவளே இதுதான் காரணம் என்று முடிவு செய்து கொண்டாள்....


அவன் சென்றதும் கதவை மூடிவிட்டு உடைமாற்றினாள்....


கீழே செல்ல முடியாமல் வெட்கம்....இப்படியா அவன் முன் நிற்பது....ஒரு ஆடவன் நிற்பது கூட தெரியாமல் நின்றிருக்கோமே....இனி இதுபோல் இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும் ‌...இப்படி செய்ய தூண்டி பின் அவனை குற்ற உணர்ச்சியில் தவிக்க விடுவது எவ்வளவு பெரிய பாவம்..


மெதுவாக கீழே சென்று பார்த்தாள்...அவன் கைகளை தலையில் தாங்கியபடி அமர்ந்திருந்தான்....


அவனை சகஜமாக்குவது நமது கடமை.. ஆதலால் நாமே போய் பேசுவோம்...என்று அவனருகில் சென்றாள்...


அவளை நிமிர்ந்து பார்க்க முடியாமல் குனிந்தவாரே" ஊருக்கு செல்ல இருப்பதால் ஷாப்பிங்க் செய்ய அழைக்க வந்தேன்...சாரி....சாரி மகிழினி.‌..ஏதோ உன்னை அப்படி பார்த்ததும் கண்ட்ரோல் செய்ய முடியாமல் உன்னை நெருங்கி விட்டேன்.....ஏதோ நான் செய்த புண்ணியம்... எதுவும் நிகழவில்லை....இனி கவனமாக இருப்பேன்"....என்றான்...


"ம்ம்ம்..இப்போ வெளியே போக வேண்டாம்... சாப்பிட்டு விட்டு போவோம்....என்றாள்...


மகிழினி....நான் கேட்பதற்கு உண்மையை சொல்ல வேண்டும்....

ம்ம்ம்‌‌....

ஊருக்கு கண்டிப்பாக போய்த்தான் ஆக வேண்டுமா???


ஆமாம்.. அத்தை மாமா விடம் வரோம்னு சொல்லியாச்சு....அத்துடன் குழந்தைகளும் மிக ஆவலுடன் இருக்கிறார்கள்....இனி மாற்ற முடியாது அல்லவா......


என்னால் நீ இல்லாமல் இருக்க முடியாது....சொல்லி விட்டான்....

......

நீ னா நீ இல்ல நீங்கள் .... குழந்தைகள் இல்லாமல் இருக்க முடியாது.....
நான் இல்லாமல் நீங்க இருந்துப்பீங்களா???

அப்போ எல்லாரும் சேர்ந்தே போவோம்....


அது முடியாது....கொஞ்சம் வேலையிருக்கு...


அப்போ என்ன செய்யலாம்!???


முதலில் நீங்க எல்லாரும் போங்க...நான் கடைசி நான்கு நாட்கள் மட்டும் வந்து பின் அனைவரும் சேர்ந்து திரும்பலாம்....


சூப்பர் ஐடியா!!!!


உன்னிடம் சில விஷயங்களை கேட்கனும்னு நினைத்தேன்....இப்போ கேட்கவா????


ம்ம்ம்...கேளுங்க...


நீ ஏன் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தாய்???


பதிலில்லை....


சொல்ல வேண்டாம் என்றால் வேண்டாம்....


அமைதி அவளிடத்தில்....


இந்த கேள்வி இப்ப எதற்கு?


சும்மா...தோன்றிற்று....கேட்டேன்...


ஓஹோ...‌


உனக்கா எப்ப சொல்லனும்னு தோனுதோ அப்போ சொல்.....


"நான் ஒருவரை நேசித்தேன்.....அவருடன் சேர முடியவில்லை.... ஆதலால் வேறு யாரையும் திருமணம் செய்ய விருப்பம் இல்லை....."எப்படியோ சொல்லிவிட்டாள்....மனதினுள் என்ன சொல்வானோ!!!என்று பயம்....


ஏன் சேரவில்லை?உன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டானா??



"என்ன...இப்படி கேள்விகள் நீண்டுக் கொண்டே போகுது" மனதினுள்....


இல்லை....என் விருப்பம் சொல்லுவதற்குள் அவருக்கு திருமணம் ஆகி விட்டது ‌‌..


ஓஓஓஓஓ.. ஒருதலைக் காதலா....அதனாலென்ன...அவனை மறந்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே.....


என்னால் அது முடிய வில்லை.....ஒருக்காதல்...ஒரு கணவன் என்றே எண்ணியிருந்தேன்....


ஓஹோ.....அது யார்?


ஏன்???ஏன் கேட்கிறீர்கள்?படபடத்தாள்...


ஏன் இவ்வாறு பதறுற?....யார் அந்த துரதிஷ்டசாலி என்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது...சொல்....



உள்ளம் வசமாகுமா??? தொடரும்...
 
Last edited:
Very nice appo Magil love panniyachu Yaara
மிக்க நன்றி சகோதரி:love:

பாருங்க....ஒருத்தன விரும்பிருக்காள் அதையும் தைரியமாக கணவனிடமே சொல்றாள்....
யாருனு தெரிஞ்ச பிறகு அவனுடன் சேர்த்து வைப்பானோ???
 
Top