Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் நீயே என் சுவாசக் காற்று அத்தியாயம் -2

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??



" ரித்விக்ட்ட கால் பண்ணி எப்போ வருவான் என்று கேட்டுக்கோ"என்றாள் அனிதா...

"ஓகே அனிதாக்கா"என்றபடி எழுந்து அலைபேசியில் பேசி வந்தாள்....

"என்ன உங்க கூட வரச்சொன்னாங்க....அவங்க நேரே கோவிலுக்கே வந்திருவாங்கலாம்...."என்றாள்...

"சரி ஹரிணி...அப்போ நம்ம எல்லாரும் ஒன்னாத்தான் போகபோறோம்...."எழுந்த படி கூறிச் சென்றாள் ஆனந்தி....


மதியம் சாப்பிட்டு விட்டு அனைவரும் கிளம்பினர்.... ஹரிணி அதே புடவையிலேயே கிளம்பி இருந்தாள்.‌.அனிதா மற்றும் ஆனந்தி அனார்கலி கவுன் அணிந்து கிளம்பி வந்தனர்....

"ஹோய்...நீ என்ன புடவைலேயே இருக்க??வேற டிரஸ் சேஞ் பண்ணலயா?"என்று ஆனந்தி கேட்டாள்..

"ஏன்க்கா‌‌..... இது நல்லா இல்லையா?.....வேற புடவை மாத்தவா?"

"நல்லாத்தான் இருக்கு....ஆனால் நம்ம இப்ப வெளியே போறோம்....அதனால சல்வார் ஜீன்ஸ் இப்படி ஏதாவது போட்டுக்கோ "என்றாள் அனிதா.‌‌.

"சேரியே கட்டிக் கட்டி பழகிட்டுக்கா...‌சல்வார் போடறதேயில்லைனு வாங்குறதேயில்லைக்கா‌..."

அனிதா ஏதோ கூற வாயெடுக்கும் முன்"அவ புடவையே பழகிட்டுனு சொல்றாள்....அப்புறம் என்ன... இரண்டு பேரும் குழந்தைகளை கூட்டிட்டு கிளம்புங்க"சந்திரலேகா கூறிய பின் அங்கே வேறேதும் பேச்சேயில்லை‌.....


கிளம்பி காரிலேறினர்‌..... கோவில் வளாகத்தில் காரை நிறுத்தி அதிலேயே இருந்தனர்.....

ஆண்கள் வந்ததும் அவரவர் மனைவிக்கு பூ வாங்கி குடுத்தனர்.... ரித்விக் மட்டும் இன்னும் வரவில்லை....அவனுக்காக காத்திருந்தனர்....

மேலும் அரைமணி நேரம் கழித்து தான் தன் என்ஃபில்டில் வந்தான்.....அவனையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்....

அவன் வந்ததும் அனைவரும் உள்ளே சென்றனர்....அவள் மட்டும் பூ இல்லாமல் இருப்பதை அவன் வந்ததும் கவனித்து விட்டான்... அவர்களை நடக்கச் சொல்லி விட்டு போய் பூவாங்கி அவளிடம் தந்து வைத்து கொள்ள சொன்னாள்.....அவளும் மகிழ்ச்சியாக வாங்கி கொண்டாள்....

அனைவரும் எல்லா சந்ததியிலும் நின்று வணங்கினர்....சந்திரலேகா சூர்ய நாராயணனிடம் ஏதோ சொல்ல அவர் ரித்விக் கிடம் அவளுக்கு நெற்றியில் குங்குமம் வைத்து விடச் சொன்னார்....அவனும் வைத்து விட்டான்....

சிறிது நேரம் அங்கிருந்து விட்டு கடற்கரைக்குச் சென்றனர்.....அங்கு போனதும் குழந்தைகள் தண்ணீரில் விளையாட அருண் மற்றும் ஆதி அவர்களை பார்த்து கொண்டனர்.....

அனிதா மற்றும் ஆனந்தி இருவரும் திண்பண்டங்களை சாப்பிட்டு கொண்டிருந்தனர்.....

பெரியவர்களுடன் ஹரிணியும் அமர்ந்திருந்தாள்... ரித்விக் யாரிடமோ அலைபேசியில் பேசி கொண்டிருந்தான்...


ஏழு மணியாகியதும் கிளம்பினர்... ஏற்கனவே வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தண்ணீரில் குழந்தைகளை கழுவி வேறு ஆடை மாற்றிக் கொண்டு கிளம்பினர்.....

நேராக அசைவ ஹோட்டலுக்குள் சென்று பெரிய மேசையாக பார்த்து உட்கார்ந்தனர்....

"கல்யாண சாப்பாடு தான் போடல...அதனால் உன் சொந்த காசுல டிரீட் வைடா"என்றான் அருண்....

"ஆமாப்பா....நீங்க சாப்பிட்டு விட்டு பில் பே பண்ணக் கூடாது"என்றான் ஆதி....

"சரி"என்று சிரித்துக்கொண்டே சூரிய நாராயணன் சொல்ல எல்லாரும் மெனு கார்டை பார்க்க ஆரம்பித்தனர்....

அண்ணண் களை பற்றித் தெரிந்ததால் "மாசக்கடைசிண்ணா..பார்த்து செய்ங்க.."என்று கவலையாக கூறினான் ரித்விக்...


அச்சச்சோ!!!பணம் கம்மியா வச்சிருக்காங்க போல.....அதை ஏன் இப்ப சொல்லனும்..‌‌எல்லாரும் ஒழுங்காவே சாப்பிட மாட்டார்களே என்று கவலைப் பட்டாள்....

அவள் எதுவுமே ஆர்டர் குடுக்க வில்லை...ஆனால் அனைவரும் ஆர்டர் செய்ததைப் பார்த்து திகைத்தாள்...என்ன இது....பணம் இல்லனு இப்படி சொல்லியும் இவ்வளவு ஆர்டர் செய்றாங்களே என்று....

"அவள் முகத்தை பார்த்து அவங்க சும்மா விளையாடுறாங்கமா.....இவன் போலீஸ்காரன்...அதுலயும் நேர்மை என்று டயலாக்லாம் பேசுவான்....சோ இங்க இவனுக்கு ப்ரியா இல்ல இவன் பணம் குடுக்குறானா என்று அவனை டெஸ்ட் பண்றாங்கம்மா....அதனால் நீ கவலைப் படாமல் ஆர்டர் குடும்மா..."என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சந்திரலேகா கூறினார்....

"இங்க பாருங்கப்பா....மாமியாரும் புதுமருமகளும் குசுகுசுனு ஏதோ ரகசியம் பேசுறாங்க"ஆதி...

"ஆமாம்டா....அவன் வேற காசு இல்லை என்று சொல்லாம சொல்றான்....எதுக்கும் மாவாட்ட ரெடியா இரு என்று சொன்னேன்"என்று சொல்லி சிரித்தார் சந்திரலேகா....

"அம்மா..விட்டா நீங்களே அவளுக்கு பக்கத்துல உட்கார்ந்து மாவாட்ட சொல்லி குடுப்பீங்க போல"ஆதி...

"டேய்"...என்று மேலும் ஏதேனும் கூறும் முன் உணவு வகைகள் வந்தது...

ஹரிணியோ ரித்விக்கை பார்க்க அவன் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு இல்லை.‌..எல்லாரும் நன்றாக பேசி மகிழ்ச்சியாக இருக்க இவங்க மட்டும் ஏன் இஞ்சி தின்ன மங்கி மாதிரி இருக்காங்க என்று யோசித்த படியே உணவை அருந்தினாள்...

அனைவரும் பேசியபடி மாறி மாறி பரிமாறிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.... ரித்விக் பில்லை செலுத்தி வந்ததும்"எனக்கு வேலை இருக்கிறது...அதனால் நான் கிளம்பனும்"என்றான்....

"ஓஓஓஓஓ....அப்போ ஹரிணி எங்க கூட மூவிக்கு வரியா?"என்று கேட்டான் ஆதி...


அவளோ ரித்விக் முகத்தை பார்க்க அவன் முகத்தில் இருந்து எதையும் தெரிந்து கொள்ள முடிய வில்லை...."இல்லை...நான் வீட்டுக்கு போறேன்"என்றாள்‌...

"சரிடா‌...அவள வீட்ல விட்டு விட்டு நீ கிளம்பு"என்றான் அருண்....

"எனக்கு இங்க இருந்து போறதுதான் ஈஸி....வீட்டுக்கு வந்துட்டு போகனும்னா ரொம்ப கஷ்டம்‌.....ஹரிணி அம்மா அப்பாகூட கார்ல போகட்டும்"என்றான்....

எல்லாரும் கிளம்ப ஹரிணியை அழைத்து "நான் இரவு வீட்டுக்கு வரமாட்டேன்....காலைல எட்டு மணிஆகிரும்‌...டோரா சென்ட்ரல் லாக் மட்டும் போட்டுக்கோ"என்றான்....

"ம்ம்ம்ம்....சரி‌.."

"நாளைக்கு லீவுதான....நீயும் வேணும்னா அவங்க கூட மூவிக்கு போய்ட்டு வா...."

"இல்ல.. வேண்டாம்..."

"ஏன்?"

"நான் அவங்க கூட போனா அவங்கலாம்
தனியா குடும்பமா எஞ்ஜாய் பண்ண முடியாது....எனக்கும் என்னால் அவங்க ப்ரைவசி போற பீல் னால எஞ்ஜாய் பண்ண முடியாது..அதுனால தான் வேண்டாம் என்று நினைக்கின்றேன் "என்றாள்...

"ம்ம்ம்...நீ சொல்றதும் கரெக்ட் தான்....அவங்க வொர்க் ப்ரெஸர்ல இப்படி குடும்பமா போய் எஞ்ஜாய் பண்றதும் நல்லது தான்...சரி நீ வீட்டுக்குப்போ...கட்டிலில் படுத்து தூங்கு..‌"என்றான்....

அவள் முறைப்பதைப் பார்த்து"சோபால கஷ்டப்பட்டு படுத்தீயேனு பாவம் பார்த்தா முறைக்கிற நீ..."என்றான்...


அனைவரும் கிளம்பி அவரவர் பாதையில் சென்றனர்.... வீட்டிற்கு வந்து குளித்து உடை மாற்றி விட்டு கட்டிலில் அமர்ந்தாள்....

ஏசியை ஆன்செய்தாள்...வேலை செய்ய வில்லை....என்ன செய்ய என்று யோசித்தாள்....

ரித்விக் கிற்கு கால் செய்தாள்...அவன் எடுக்க வில்லை ‌‌...

"பிஸியாக இருக்கேன்....அவசரமா? என்று அவன் குறுஞ்செய்தி அனுப்ப" எப்போ வருவீங்க ?"என்று பதில் அனுப்பினாள்...

"சொன்னேன்ல... அப்புறம் ஏன் திரும்பி அதே கேட்கிற...எட்டு மணிஆகிரும்‌ ..இப்ப நீ இருக்கிற இடம் ரொம்ப சேப் தான்..... அதனால் பயப்படாம தூங்கு...."என்று பதில் வந்தது‌....

என்ன கேட்டால் என்ன பதில் அனுப்பிருக்காங்க பாரு....என் தலை எழுத்து....இவங்கட்ட நான் சொல்லி இந்த பிரச்சினை சரிசெய்து தான் நான் தூங்கனும்னா விடிஞ்சிரும்...இதுக்கு பேன் காற்றிலே தூங்கிரலாம்...என்று நினைத்து கொண்டே தூங்க சென்றாள்....

தூங்கவே முடியவில்லை..அப்படி இப்படி புரண்டு திரும்பியும் வேர்வையில் தூக்கமே வரவில்லை ‌.....எந்திச்சி அங்குமிங்கும் லாந்தி ஒரு வழியாக தூங்கிவிட்டாள்....


ரித்விக் மூன்று மணிக்கு போல் தன்னிடமிருந்த சாவியால் கதவை திறந்து உள்ளே வந்தான்... அவளுக்கு தொந்திரவாயிருக்கும் என்று டியுப்லைட்டை போடாமல் விடிவிளக்கில் அவளை பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்தான்....



தொடரும்......

2541
 
Yenpa, innaiki adutha epi pottathu shock na. Ipa hero ethunala shock anarunu manda kayuthu ramina dear.
மிக்க நன்றி சகோதரி ?

இதுக்கே ஷாக் ஆன எப்புடிடிடி!!!!இன்னொரு எபி நைட் வரும் அரசி....

நானும் உங்களைப் போல் மண்டை காய்ந்து தான் உள்ளேன்.... என்னவாயிருக்கும்???? :unsure: :unsure:
 
Top