Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் நீயே என் சுவாசக் காற்று அத்தியாயம் -3

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??




உறைந்தவன் சில நிமிடங்களில் தெளிந்து கோபம் வர பால்கனி ஊஞ்சலில் போய் அமர்ந்து கொண்டான்.....

கோவத்தை குறைக்க ஒன்றிலிருந்து நூறு வரை மனதுக்குள் எண்ணினான்...‌சிறிது கோவம் குறைந்தது..‌‌நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான்....

ஏன் இப்படி படுத்திருக்காள்?என்று யோசித்தவனுக்கு ஒன்றும் உபயோகமான யோசனை வரவில்லை....பிறகு தனக்கு கால் செய்தாளே ஏன்?ஒருவேளை தான் இரவு வரமாட்டேன் என்று சொன்னதை உறுதிபடுத்த தான் கூப்பிட்ருக்கா?...உறுதி படுத்தி விட்டு மேடம் இந்த கோலத்தில் தூங்குறாங்க போல...அவனே முடிவு செய்து கொண்டான்....

எழுந்து உள்ளே சென்றான்....அவளோ அதே போஸில் இருக்க அவனோ தன் உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல் அவளையே ரசித்துக் கொண்டிருப்பது கூட தெரியாமல் நன்கு தூங்கிக் கொண்டிருந்தாள்....

அவளருகில் சென்று அங்கிருந்த பெட்சீட்டை எடுத்து அவளை முழுவதும் மூடிவிட்டு நமக்கு இந்த தரிசனம் கிடைத்ததே பெரியது என்று பெருமூச்சுடன் நிமிரும் போது தான் தனக்கு வேர்த்திருப்பது புரிய ஏசியை பார்க்க அது ஆன்செய்யவில்லை என்று புரிந்தது... ரிமோட்டை எடுத்து பட்டனை அழுத்த அது வேலை செய்ய வில்லை‌....ஆக இதற்கு தான் கால் செய்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்....

எழுந்து சென்று ரிமோட்டிற்கு வேறு பாட்டரியை போட அது வேலை செய்தது... சிரித்துக் கொண்டே உடைமாற்றி வந்து அவளருகே படுத்தான்....


அன்று நாள் முழுவதும் அலைந்த அலைச்சலில் அவள் முகத்தை பார்த்தவாறே உறங்கி போனான்....

காலையில் ஹரிணி கண்விழித்தது ரித்விக் முகத்தில் தான்..... போர்வையை விலக்கியவள் அதிர்ந்து போய் மறுபடியும் மூடிக் கொண்டு வெட்கி அவனை பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்....

இவங்க எப்போ வந்தாங்க??? வரமாட்டேன் என்று தான சொன்னாங்க....இதென்ன ஏசி வேலை செய்யுது.....அச்சச்சோ!!!என்னை பார்த்திருப்பாங்களோ!!!என்ன பத்தி என்ன நினைச்சிருபாங்க???இப்ப என்ன பண்ணலாம்?எழுப்பி கேளேன் என்ற மனசாட்சியை அடக்கிவிட்டது எழுந்து போர்வையுடன் குளியலறை புகுந்து கொண்டாள்....


குளித்து முடித்து வெளியே வந்து அவனை தொந்திரவு செய்யாமல் கீழே வந்தாள்....
யாரும் எழவில்லை.... ஞாயிறு கிழமை என்பதால் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர்...இவள் சமையலறை சென்று கூழ் தயாரித்து அதை ஆறவைத்து குடித்துக் கொண்டே தினசரியில் ஆழ்ந்தாள்‌‌....


எட்டு மணிக்கு தான் வேலை ஆட்கள் வர ஆரம்பிக்க ஒவ்வொருவராக எழுந்து வந்தனர்..... அதன்பின் நேரம் அதுபோல சென்றது‌...

"நேத்து மூவி எப்படி இருந்தது?"ஹரிணி கேட்க

"ம்ம்ம்...நல்லா என்ஜாய் பண்ணுணோம்...தலப்படம் வேற....கேட்கவா செய்யனும்?"அனிதா உற்சாகமாக கூற

"நீயும் எங்க கூட மூவிக்கு வந்திருக்கலாம் ஹரிணி... அடுத்த தடவை கண்டிப்பாக வரவேண்டும் "என்று ஆனந்தி கேட்க...

"ம்ம்ம்.. முயற்சி செய்றேன்க்கா"என்றாள் ஹரிணி....

பத்தரை மணியாகியும் ரித்விக் வராததால் ஹரிணியை சென்று அவனை எழுப்புமாறு கூறினார் சந்திரலேகா...

சரி என்று சென்றாலும் இவளுக்கோஅவன் முகத்தை பார்க்க தயக்கம்.... அவனை எழுப்ப அவன் எழுந்து ஒன்றும் கேட்கவில்லை.....கிளம்பி கீழே வந்தனர்....

ஹரிணி அவனுக்கு காலை உணவை பரிமாறிக் கொண்டு இருந்தாள்....



சாப்பிட்டு வந்தவனிடம் மேகலா இன்று வருகிறாள் என்றான் ஆதி....

"என்ன... திடிரென்று வாரா?"

"டேய்...அவ அவ வீட்டு பங்க்ஷனுக்கு வர்ற மாதிரி ஏற்கனவே பிளான் இருந்தது...‌அப்புறம் நீ பண்றது உனக்கே அடுக்கல....நீதான் எங்க யார்ட்டயும் சொல்லாம திருமணம் செய்து கொண்டாய்....அதுக்குன்னு நாங்களும் இப்படியே இருக்க முடியுமா???அதான் மேகலா வந்ததும் பேசி சின்ன வரவேற்பு மாதிரி வைக்கலாம்னு யோசிக்கோம்"அருண்...

"மேகலாக்கா..வர்றது சந்தோசம் தான்....ஆனா யார் கேட்டு வரவேற்பு க்கு முடிவு செய்தீங்க....."

"ஏன்டா.... ரித்விக்.... புரிந்து கொள்... உறவினர்களுக்குலாம் தெரிவித்து விருந்து மாதிரி பண்ணலாம்.சிம்பிளா தான்..."சூர்ய நாராயணன்...

"முடியாது...நான் ஒத்துக்க மாட்டேன்"...என்று கூறியபடியே எழுந்து தனதறைக்கு சென்று விட்டான்....


எல்லாரும் ஹரிணியை பார்க்க அவளோ தர்மசங்கடமான முகத்துடன் தலையை கீழே குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.....


இரவு ஏழு மணிக்கு போல் மேகா தன் குடும்பத்துடன் வந்திறங்கினாள்....அவள் வந்த உடன் பார்த்த ஹரிணியை அவளுக்கும் பிடித்துவிட்டது.....அவளும் அவள் அன்னையை போல் ரித்விக்கிடம் பேசவில்லை.....அவனும் பேசி பார்த்து அவள் பேசவில்லை என்றதும் ஒதுங்கி கொண்டான்....

அதன்பிறகு அனைவரும் சேர்ந்து உணவருந்தி படுக்க சென்றனர்....செல்லும் முன் ஹரிணி சந்திரலேகா விடம்"நாளை ஆஸ்பிட்டல் போக வேண்டியதை தெரிவிக்க அவரும் சரி என்றார்....

அவள் அறைக்கு வரும்போது அவன் அலைபேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.....

அவள் படுக்க வரவும்"ஏசி ரிமோட் வேலை செய்யவில்லை...என்ன பண்ண போற? டிரஸ் சேஞ் பண்ணனும்மா?"என்று வம்பிழுத்தான்....

அவளோ ஏசியை பார்க்க அது வேலை செய்து கொண்டிருந்தது...அவனை கேள்வியாகப் பார்க்க அவனோ சிரித்துக்கொண்டே கண்ணடிக்க இவளோ வெட்கத்தால் சிவந்து படுத்துக் கொண்டாள்....


சிறிதுநேரம் கழித்து ,
"நேற்று நீ போட்டிருந்த டிரெஸ் ரொம்ப நல்லா இருந்தது"என்று அந்த நல்லா வில் அழுத்திக் கூறினான்...

அவளோ முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டாள்.....சே!!!நேத்து கண்டிப்பா பார்த்திருக்காங்க...அதான் சொல்லி கிண்டல் பண்றாங்க....

அவன் அவள் அருகே வந்து அவள் முகத்தில் உள்ள போர்வையை விலக்கி முகத்தை மூடாமல் தூங்கு என்றும் கூறிக்கொண்டே படுத்தான்...


உன்னிடம் ஒன்று கேட்க மறந்துட்டேன்...."நாளைக்கு எப்போ போனும்?"

"எட்டு மணிக்கு"

"ம்ம்ம்...சரி..இப்ப சொல்லு....நேற்று நீ போட்டிருந்த டிரெஸ் பெயர் என்ன?"மறுபடியும் வம்பிழுக்க அவளோ வெட்கத்தால் அந்தப்பக்கமாய் திரும்பி படுத்து கொண்டாள்...."

மனதினுள்"ச்சை.... மறுபடியும் மறுபடியும் இதையே சொல்லி கிண்டல் பண்றாங்க.... நல்ல வேளை...முதலில் ஒன்னுமில்லாம தான் படுக்கலாம்னு நினைத்தோம்...நல்லவேளை புடவை மற்றும் ப்ளவுஸ் இல்லாமல் தானே படுத்திருந்தோம்...‌இல்லனா இன்னும் கேவலமா போயிருக்கும்"....என்று நினைத்தாள்...

"என்ன சத்தமேயில்ல...."

"தூக்கம் வருது"

"சொல்லிவிட்டு தூங்கு....அந்த டிரெஸ் பேறென்ன?"

மேலும் மேலும் வம்பிழுக்க பொங்கிவிட்டாள்....எழந்தமர்ந்து "ஆமா... வரமாட்டேன் என்று சொல்லி விட்டு ஏன் வந்தீங்க?"என்றாள்..

"வந்ததுனால தானே இந்த அரியவகை இயற்கை காட்சியை பார்க்க முடிந்தது..."என்று கண்ணடிக்க

"எ...என்..என்ன?? இப்படிலாம் பேசுறீங்க?"

"இதுக்கே சலிச்சிக்கிற..இன்னும் எவ்வளவோ இருக்கே!!!...ஏன் உனக்கேதும் தெரியாதா???...டாக்டருக்கு தான படிச்சிருக்க...அப்புறமென்ன"

"அதான் படிக்கிறதுக்கு முன்னாலே சொல்லி தந்துட்டிங்களே"

"சொல்லிக் குடுத்த குருவுக்கு தட்சணை ஏதும் தரவில்லையே"என்று கூறி விசிலடிக்க அவளுக்கோ அழுகை வரும் போல் இருந்தது..



அதை அடக்கியப் படியே "விடுங்க...இந்த பேச்சை....நான் தூங்கனும்...என்று எழுந்து சென்று சோஃபாவில் போய் படுத்துக் கொண்டாள்...

"ஹரிணி,சும்மாத் தான் வம்பிழுத்தேன்...இங்க வந்து படு...இனி எதுவும் சொல்லல"

"நான் இங்கேயே படுத்துக்கிறேன்...குட்நைட்"என்றாள்...

"நானா உன்ன அங்க போய் படுக்க சொல்லலம்மா...நாளப்பின்ன என்ன குறை சொல்லக் கூடாது"சிரித்துக் கொண்டே கூறினான்...

அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்று தெரிந்து கொண்டு தூங்கிவிட்டான்...


ஹரிணியோ தூங்காமல் அவன் கூறிய வார்த்தைகளை யோசித்து கொண்டு இருந்தாள்...
 
Last edited:
Top