Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் நீயே என் சுவாசக் காற்று அத்தியாயம் -. 5

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்
.....??

மறுநாள் காலையில் எழுந்து கிளம்பியவள் ரித்விக்கை தேட அவனோ உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தான்....


அவனிடம் சொல்லிவிட்டு மேக்னாவை பார்த்துவிட்டு செல்லலாம் என்று ஹாலிலிருந்த சோபாவில் காத்திருந்தாள்‌..

சந்திரலேகா வந்ததும்"அத்தை,மேக்னாவ பார்க்கனும்...மேகலா அண்ணி எத்தனை மணிக்கு கிளம்புறாங்க?"என்றாள்...

அவளருகே வந்து "மேகலா வீட்ல நாளைக்கு தான் ஊருக்கு போறாங்க....வா வந்து பாரு"என்று கூட்டிச் சென்றார்...


போய் பார்த்து பேசிவிட்டு கிளம்புவதாக சொல்லிக் கொண்டு வெளியே வந்து கிளம்பி சென்றாள்‌....போய் இரண்டு தடவை கால் செய்து மேக்னா வை பற்றி விசாரித்தாள்.....

அவள் அன்று மதியம் மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்துவிட்டாள்....

அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ரித்விக் கால் செய்து இன்று இரவு வரமாட்டேன் என்றான்....சரியென்றவள் பின் நாள் காலையில் மேகலா அண்ணி கிளம்புறாங்க....அதுக்குள்ள வரமுடியுமா என்று கேட்டதற்கு வரமுயற்சிக்கிறேன் என்றான்....

அடுத்த நாள் விடியற்காலை நான்கு மணிக்கு மேகலா குடும்பம் கிளம்பும் முன் வந்துவிட்டான்....
மேகலா குடும்பம் கிளம்பியதும் அனைவரும் சிறிதுநேரம் உறங்கச் சென்றனர்....

ஹரிணியோ இருவருக்கும் கூழ் செய்து கொண்டு வந்தாள்....

ரித்விக் குளித்து வந்தவனுக்கு அப்படி ஒரு சோர்வு..... அவனிடம் கூழ்ழை தர அவன் குடித்ததும் படுத்துவிட்டான்...

அவளோ அவனை தொந்திரவு செய்யாமல் ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு பால்கனியில் லைட் போட்டு கொண்டு அமர்ந்து விட்டாள்......


ஏழு மணியானதும் எழுந்து கதவை மெதுவாக சாற்றிவிட்டு கீழே வந்தாள்....


சாப்பிட்டு முடித்து சந்திரலேகா விடம் ரித்விக் தூங்குவதாக கூறிவிட்டு கிளம்பினாள்...அவளை நிறுத்தி "இந்த வெள்ளிக்கிழமை காலை ரித்விக் சித்தப்பா பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் இருக்குமா......இங்க பக்கம்தான் வீடு."என்றார்...

"சரியத்தை...நான் வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் ஆஸ்பிட்டல் போற மாதிரி பார்த்துக்கிறேன்" என்றாள்‌...

"ஹரிணி,எல்லா சொந்தகாரங்களுக்கும் இந்நேரம் விஷயம் தெரிந்திருக்கும்‌...‌அதனால பங்க்ஷனில் உன்னை பார்த்து பேசுவாங்க"என்றார்...

"ஓஓஓ."...

"நாங்கள் எல்லோரும் உன்கூட தான் இருப்போம்...அதனால் பிரச்சனை வராது....எல்லாரும் திருமணத்த பத்தி ஏதாவது கேட்பாங்க...அதான் வரவேற்பு மாதிரி பண்ணலாம்னா ரித்விக் ஒத்துக்க மாட்டேன் என்று சொல்றான்....எப்படி எல்லாரையும் சமாளிக்க என்றே தெரியல..."

பதிலில்லை அவளிடம்...அவள் முகத்தை பார்க்க அவளோ தயங்கியபடியே அமர்ந்திருந்தாள்....

"மேகலா அண்ணி எப்போ வருவாங்க?"

"அதே நாள்தான் தான் அவ மச்சினரோட கொழுந்தியாக்கு வளைகாப்பு....அதனால் அவ இப்போ வரமாட்டா... கல்யாணத்துக்கு வந்துட்டு அப்படியே வெளிநாடு போயிருவாள்"


"ம்ம்ம்....ஓகே அத்தை..."

"சரி...நீ கிளம்பு....நீ எதுவும் யோசிக்காத எதுனாலும் பார்த்துக்கலாம்மா"எனக் அவளும் சொல்லி கொண்டு கிளம்பினாள்....

மேலும் இரு தினங்கள் செல்ல வியாழக்கிழமை மாலை வீட்டிற்கு வந்த ஹரிணி பார்த்தது அனிதாவும் ஆனந்தியும் மெஹந்தி வைத்துக்கொண்டு இருந்ததைத் தான்..... பார்வையிலிருந்து ஒரு பெண் வீட்டிற்கு வந்து டிசைன்ஸ் போட்டுக் கொண்டிருந்தாள்...ஆனந்திக்கு வைத்து முடித்து அது ஒரளவு காய்ந்துவிட்டது....அதை பார்த்ததும் அவளுக்கும் வைத்து கொள்ள ஆசை தோன்றியது....

அவள் வந்ததை பார்த்த சந்திரலேகா"போய் பிரெஸ் ஆகி வந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு நீயும் மெஹந்தி போட்டுக்கோ"என்றார்....

சரி என்றவள் அவர் சொன்னதை செய்து உட்கார்ந்து பார்த்து கொண்டு இருந்தாள்....

அனிதாவுக்கும் முடிந்தது...ஹரிணியை டிசைன்ஸ் செலக்ட் பண்ண சொல்ல அவளோ ஆனந்தியிடம் கேட்டு ஒன்றை செலக்ட் செய்தாள்.‌.அவள் தன் கையை நீட்ட அவளுக்கும் அந்த பெண் வரைய ஆரம்பித்தாள்... ஐந்து நிமிடம் கூட இருக்காது..அவள் அலைபேசிக்கு அழைப்புவந்தது...

ஆனந்தி தான் முதலில் பார்த்து..."உன்னோட ஆள் தான் ஹரிணி"என்றாள்...

"ஓஓஓ....ப்ளீஸ்...அட்டன்ட் பண்ணி ஸ்பீக்கரில் போடுங்கக்கா"

"அடப்பாவி....புதுசா கல்யாணம் ஆனவங்க... இரண்டு பேரும் காலையில் பார்த்தது.... அவனுக்கு உன்னிடம் ஏதாவது ஆசையா பேச விருப்பபட்டு கால் பண்ணிருப்பான்..நீ என்னன்னா அசால்ட்டா ஸ்பீக்கரில் போடச் சொல்ற...நீங்க இரண்டு பேரும் கொஞ்சுறத கேட்க நாங்க தயாரில்லை ப்பா.....உன் காதுல வைக்கேன் நீயே பேசிக்கோ"என்று கூறிமுடிக்கும் அலைபேசி நின்றுவிட்டது.‌...


"ஏன்க்கா....இப்படிலாம் டயலாக்ஸ்....ஏதாவது இன்பர்மேஷன் தர்றதுக்கு தான் கால் பண்ணிருப்பாங்க....என்று அவள் கூறிமுடிக்கும்முன் மறுபடியும் அலைபேசி சிணுங்கியது.....

ஆனந்தி அவளை கேள்வியாக பார்க்க"ஸ்பீக்கரில் போடுங்கக்கா"என்றாள்....


ஸ்பீக்கரில் போட்டு டேபிளில் வைக்க கூட இல்லை அதற்குள் அந்த பக்கம்"கொஞ்சம் கூடவா அறிவில்லை...எத்தனை மெசேஜ் பண்றேன்...கால் பண்றேன்..கண்டுக்காம அப்படி என்னத்த கிழிக்க...... வீட்டிற்கு போனா போதும் அந்த இரண்டு பேரோட சேர்ந்து பல்லகாட்றது மட்டும் தான் செய்ற..அதுங்களும் பிள்ளை குட்டிகளை பார்க்காம எப்பவும் கதை தான்....எல்லாத்துக்கும் காரணம் எங்கம்மா தான்...மருமகள மருமகள் மாதிரி வைக்கனும்....இப்படி இஷ்டத்துக்கு விட்டா இப்படித்தான்"என்றான்...

அவள் தலையை நிமிர்த்தி பார்க்க அனிதாவும் ஆனந்தியும் ஹரிணியை இதுக்கு தான் என்னை அட்டன்ட் பண்ண சொன்னியா என்றவாறு முறைத்துக் பார்த்தார்கள்...

"ஹலோ...லைன்ல தான் இருக்கியா?"

"ம்ம்ம்....ஆமாங்க...இருக்கேன்."

"இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த?"


"கைக்கு மெஹந்தி போடுறோம்... நாளைக்கு பங்க்ஷன்க்கு".

"ரொம்ப முக்கியம்"

"ம்ம்ம்"

"கொஞ்சம் அவசரம்...நீ என்ன பண்றனா...ஒரு செட் டிரஸ் எடுத்துட்டு நான் சொல்ற அட்ரஸ்க்கு வா"


இருவரையும் பார்த்தவாறே "இப்பவா"

"ஆமாம்...அப்புறம் நம்ம வீட்டுக்கு திரும்பி வர லேட் நைட் ஆகிரும்"

"என்னது"

"சொன்னது கேட்கலையா?"

அதற்குள் ஆனந்தி"நான்தான் சொன்னேன்ல...நீங்க கொஞ்சுறத கேட்க தான நீஅட்டன்ட் பண்ண சொன்ன.."என்று சொல்லி சத்தம் போட்டு சிரித்தாள்..

"ஐயோ!!!அக்கா....நீங்க நினைக்கிற மாதிரிலாம் இல்லை...."

" என்ன இல்லை....இவன் ஏதோ அவசரமா ஒரு இடத்திற்கு இப்பவேவா திரும்ப லேட்நைட் ஆகும் என்று சொல்றான்...அதுவும் ஒரு செட் டிரஸ் வேற என்று சொல்றான்....."என்று சிரித்துக்கொண்டே கூறினாள்...

"ஹே...அங்க என்ன நடக்குது....நான் என்ன சொல்றேன்...நீங்கலாம் சேர்ந்து கிண்டல் பண்ணி விளையாடுறீங்க....ஹரிணி என்ன பண்றீங்க?"

"கைகளில் மெஹந்தி போடறேன்..அதான் ஸ்பீக்கரில் போட்டேன்"

"அறிவில்லை உனக்கு..முதல்ல ஸ்பீக்கர ஆப்பண்ணி பேசு"கோபமாக கத்தினான்...

பயத்தில் ஸ்பீக்கரை ஆஃப் பண்ணி போனை எடுத்து பேச ஆரம்பித்தாள்.....மெஹந்தி போட வந்த பெண்ணோ இவர்கள் அடிக்கும் கூத்தில் பயந்து போய் முதலிலே மெஹந்தி போடுவதை நிறுத்திருந்தாள்‌‌...

அந்த பக்கம் அவன் பிடித்து கத்தினான்...
"இப்படி தான் புருஷன் போன் பண்ணுனா ஸ்பீக்கரில் போட்டு பேசுவியா???கொஞ்சம் கூடவா பொறுப்பில்ல....அட்லீஸ்ட் அத சொல்லவாவது செஞ்சிருக்கனும்"

"இல்லங்க.... மெஹந்தி போட்டதுனால காதுல வைத்து பேச கஷ்டமாயிருக்கும் என்று தான் ஸ்பீக்கரில் போட்டேன்....."


"இனி இப்படி பண்ணாத....நம்ம பேசுறது நம்மோளடே இருக்கனும்..அடுத்தவங்களுக்கு கேலியாக இருக்க கூடாது..."

"ம்ம்ம்... சரி"

"சீக்கிரமா கிளம்பு....போன கைலயே வைத்துக்கோ....நீ ஒரு பொண்ண போய் பார்க்க போற..."

"மெஹந்தி மட்டும் போட்டுட்டு போகவா?"

"ரொம்ப முக்கியம்....நீ டாக்டர் தான...இவ்வளவு அசால்ட்டா இருக்க...கிளம்பு....ஒரு செட் டிரஸ் மற்றும் உன் மெடிக்கல் கிட் வச்சிக்கோ.....அங்க போனதும் எனக்கு கால் பண்ணிட்டு அந்த வீட்டுக்குள்ள போ"என்று கூறி அலைபேசியை வைத்து விட்டான்...

அவள் திரும்பி இருவரையும் பார்க்க இருவரும் அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்...

"எப்படி தான் இவன லவ் பண்ணி கல்யாணம் பண்ணி சமாளிக்கியோ"என்றாள் அனிதா....

அவள் அமைதியாக இருக்க இதுவரை இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சந்திரலேகா"ஹரிணி...நீ கிளம்பனுமா?"என்றார்‌....

"ஆமாம் அத்தை ....யாரோ ஒரு பொண்ணு பார்க்க போனுமாம்... மெஹந்தி வேண்டாம் அத்தை...நான் கிளம்புறேன்"
என்று கூறி அறைக்கு சென்று அவன் சொன்னவாரே ஒரு செட் டிரஸ்ஸையும் தன் மெடிக்கல் கிட்டையும் எடுத்து கொண்டு கீழே வந்தாள்‌‌.‌...

அவள் கைகளை பிடித்து கொண்டு"கவலைப் படாதே..... ஏதாவது அவசரமாயிருக்கும்....தெரிந்தவங்க பொண்ணுக்கு ஏதாவது பிரச்சினை ஆக இருக்கும்...நீ டாக்டர்ல... உன் மூலமா ஏதாவது உதவி தேவையாயிருக்கும் அதான் உன்னை வரச் சொல்லிருப்பான்...அவன் உன்ன வரச் சொன்ன இடத்துக்கு அவன் வர நேரமாகும்னு நினைக்கேன்....போன கைல வைச்சிக்கோ..ஏதாவதுனா கால் பண்ணு..போய்ட்டு வாம்மா"என்றார்....

அவள் தலையசைக்க இருவரும் வெளியே வர டிரைவர் காரோடு ரெடியாயிருந்தார்....
காரில் ஏற கார் கிளம்பியது....

அவர் உள்ளே வந்து மெஹந்தி போட்டுவிட்ட பெண்ணுக்கு பணம் குடுத்து அனுப்பிவிட்டு குழந்தைகளை பார்த்து கொண்டிருந்தார்....


காரில் அவன் சொன்ன அட்ரஸ்க்கு போனதும் ரித்விக்கிற்கு கால் செய்தாள்.....அழைப்பை ஏற்று "ஹரிணி....நான் அங்க வர லேட் ஆகும்...‌லைன்லேயே இருக்கேன்....நீ உள்ளே போ....உள்ள ஒரு பொண்ணை தன் தவிர யாருமில்லை.‌.‌‌வெளில நிற்கறது என் நண்பன் தான்....தைரியமா உள்ளே போய் பாரு.."என்றான்....

பயத்துடன் தான் உள்ளே சென்றாள்....அந்த வீட்டில் தரைத்தளத்தில் மட்டுமே அறைகள் இருந்தன....முதலில் ஓரறைக்கு செல்ல காலியாக இருந்தது.... அடுத்த அறைக்குள் செல்ல கதவை திறந்து பார்க்க அது சாத்தி தான் இருந்தது....நன்றாக திறந்து உள்ளே செல்ல ஒரு பெண் நிர்வாணமாய் படுத்திருந்தாள்....அவள் உடைகளோ கிழிந்து ஆங்காங்கே சிதறி கிடந்தது....

"ஹரிணி,லைன்ல இருக்கியா?"

"ஆமாம்...இங்க ஒரு பொண்ணு மட்டும் தான் இருக்கிறாள்"

"பக்கத்துல போய் பாரு...உயிர் இருக்கிறதா?"

"உயிர் இருக்குது....செக் பண்ணிட்டு சொல்றேன்"என்றாள்..

"ரித்விக்"

"ம்ம்ம்ம் சொல்லு...."


"ட்ரக்ஸ் குடுத்து ரேப் பண்ணிருக்காங்க.....அவ இப்போ கான்ஷியஸா இல்ல..."திக்கி திணறி சொன்னாள்....

"ஓஓஓ"

"நீங்க வர எவ்வளவு நேரம் ஆகும்?"

"ஏன்?"

"ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனும்ல?"

"நீயே ஹேண்டில் பண்ண முடியாதா?"

"பண்ணலாம்...ஆனா???"

"அப்ப நீயே பாரு.....நான் இன்னும் பதினைந்து நிமிடங்களில் வந்துருவேன்"

"ம்ம்ம்..சரி...ஆனா லைன்லேயே இருங்க...ப்ளீஸ்.‌‌."


"ஓகே...."

அவளுக்கு உடை அணிவித்து விட்டு மருந்தை சிரஞ்சியில் ஏற்றி ஊசிப்போட்டு விட்டு ரித்விக்கிற்கு காத்திருக்க ஆரம்பித்தாள்....

ஹரிணி நான் வந்துட்டேன் என்று கூறி காலை கட் செய்து விட்டு அறை வாசலில் நின்று அவளை அழைக்க வெளியே வந்தாள்...‌

அருகிலிருந்தவனை கேள்வியாக பார்க்க"ஹரிணி,இது அசோக்.....என் நண்பன்...உள்ள இருக்கிறது அவன் தங்கை தான்....அவன் அவள் போய் பார்க்கலாமா?"என்றான்....


"ம்ம்ம்"தலையாட்ட அசோக் உள்ளே சென்றவன் பெருங்குழலில் அழ ரித்விக் போய் சமாதானம் செய்தான்.....

மூவரும் அங்கிருந்த ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தனர்....

"ஹரிணி,சத்யா எப்போது எந்திரிப்பாள்?"

"இன்னும் அரைமணி நேரத்தில்"

"அவளுக்கு இதுஎல்லாம் நியாபகம் இருக்குமா?"

"இல்லை...."

"ரொம்ப சந்தோசம் ரித்விக்.....அப்போ பிரச்சனை இல்லையே..இப்படியே நாங்க கிளம்பிருறோம்...."அசோக்

"டேய்....நடந்தது வேணா தெரியாம இருக்கலாம்...ஆனால் இங்க வந்தது ,இவ்வளவு நேரம் இங்க இருந்தது,அவளோட வலி என்று அவ ஈஸியாக கெஸ் பண்ணிருவாள்"..
என்றான் ரித்விக்...

"இப்ப என்னடா பண்ண? வீட்டிற்கு தெரிந்தால் எல்லாரும் மொத்தமா தற்கொலை தான் பண்ணிக்கனும்....இவள் இங்க படிக்க கூட்டிட்டு வர எவ்வளவு கஷ்டப்பட்டு சம்மதம் வாங்கினேன்...தெரியுமா?இவ என்னனானா இந்தளவுக்கு பழகிருக்காள்"சொல்லி அழ அவனை அணைத்து சமாதானம் படுத்தினான்....

திடிரென்று சத்யா அழுகிற சத்தம் கேட்டு ஹரிணி மட்டும் உள்ளே சென்று அவளை சமாதானப் படுத்தினாள்....அப்படியொரு அழுகை ...தன்னை காதலிப்பதாக கூறிஏமாற்றி அவனை நம்பிய தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தானே என்று கூறி அழ அவளை சமாதானப் படுத்தி தெளிய வைத்து அசோக்கிடம் ஒப்படைத்தனர்.....

அசோக்கை பார்த்ததும் மறுபடியும் அழ இருவரையும் சமாதானப் படுத்த என்று நேரம் விரயமாகியது‌......


ஹரிணியை வீட்டுக்கு போ என்று கூற அவளோ சத்யாவை கண் காண்பித்தாள்....


சத்யாவை தனியே ஹாஸ்டலில் விட்டு அசோக் அவன் வீட்டுக்கு (காஞ்சிபுரம்) செல்ல வேண்டாமென்று நால்ரும் அசோக் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தனர்....காஞ்சிபுரமும் கிளம்பினர்....


ரித்விக் சத்யாவிடம் அவன் யாரென்று விவரம் கேட்டுக் கொண்டான்....போலீஸ் கேஸ் னு போனா வீட்டிற்கு நியூஸ் போய்விடும் என்று அசோக் சொல்ல இதை வேறு வழியில் டீல் பண்ணப் போவதாக ரித்விக் கூறினான்....


வழி முழுவதும் சத்யாவிடம் ஹரிணி பேசிக்கொண்டே சென்றாள்....."சத்யா...இந்த வயதில் காதல் வருவது தவறல்ல...ஆனால் காதலிப்பவன் தவறானவனாக இருக்க கூடாது....உன்னை கஷ்டப்பட்டு பெற்று படிக்க வைத்து வளர்த்து வரும் உன் அம்மா அப்பாக்கு இது தெரிந்தால் என்ன ஆகும்....அதை விடு...இது யாருக்கேனும் தெரிந்தால் உன் வாழ்க்கை என்னவாகும்?இப்ப என்ன பண்ணப் போற?"

"அக்கா"

"ம்ம்ம்...சொல்"

"நான் பண்ணுறது தப்பு தான்..... இரண்டரை வருஷமா காதலிப்பதாக கூறிக் கொண்டே இருந்தான்... எனக்கும் பிடித்திருந்தது....அதனால் அவன் கூட வெளியே செல்வேன்....இப்படி வீட்டிற்குலாம் போனது இல்ல....இன்று அவன் பிறந்தநாள் என்று சொல்லித் தான் இங்கே கூட்டிட்டு வந்தான்.... யாருமில்லை என்று கேட்டதற்கு கேக் வாங்கிட்டு வந்திட்டு இருக்காங்கன்னு சொன்னான்... அப்புறம் ஜூஸ் குடித்தேன்.....அப்புறம் தலைபாரமா இருந்த மாதிரி இருந்துச்சி‌....அப்புறம் கண்ண திறந்து பார்த்தா நான் மட்டும் தனியா கட்டில்ல படுத்திருந்தேன்...இந்த புடவை என்னோடது இல்ல...என்ன நடந்திருக்கும் என்று கெஸ் பண்ணினா நான்‌..நான்..".என்று அவள் அழ அவளை அணைத்துக் கொண்டாள்...

"அழாதே!!! பெண்கள் என்றால் அவன மாதிரி ஆட்களுக்கு போதை தரும் பொருள்தான்....நம்ம தான் கவனமா இருக்கணும்...இப்படி நடந்தா எப்படியும் வெளியே சொல்லமாட்டோம்...அவன மாதிரி ஆட்கள் ஒன்னும் பண்ண முடியாது...இல்லனா அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கும் என்று திமிருல இப்படி நடந்து கிறாங்கம்மா....விடு..உன்னோட சம்மதமில்லாம நடந்தது ஒரு விபத்து...அத தூக்கி போட்டு விட்டு உன் வழில போய்ட்டே இரு"......என்று சமாதானப் படுத்தினாள்....


ரித்விக் காரை நிறுத்தி அசோக்கை அழைத்துக் கொண்டு சாப்பிட வாங்கி வந்தான்....

சாப்பிட்டு முடித்ததும் ரித்விக் ஹரிணியை தனியே அழைத்து "சத்யா பிரக்னென்ட்டாக சான்ஸ் இருக்கா என்று கேட்டு தெரிஞ்சிக்கோ.....அதுதான் என்னோட கவலையே"என்றான்...

"கேட்டேன்....சான்ஸ் இல்லை....எத்தனை பேர் என்றும் தெரில...அவன் வீடியோ எதுவும் எடுத்திருப்பானோ என்றும் தெரியலேயே"என்றாள்.‌‌

"ஆளை பிடித்தாயிற்று.....மீதி நியூஸ் அவனிடம் கறந்துவிட லாம்"என்று கூறி னான்...

"எப்படி ?இவ்வளவு சீக்கிரமா எப்படி?"


"அதுதான் அப்படித்தான்....சத்யா சொன்னதும் என் கேக் ஈஸியாக வேலைய முடிச்சிட்டாங்க...இனி அவனுக்கு கவனிப்பு தான்..."கூறிமுடிக்க இருவரும் காரில் ஏறினர்.....


காஞ்சிபுரத்தில் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்..... அவர்களை பார்த்ததும் வீட்டினர்க்கு அதிர்ச்சி....

"அம்மா....நான் சத்யாவை பார்க்க போனேன்.அதன்பிறகு என் நண்பர் ரித்விக்க பார்க்க போனேன்....அவன் இங்க ஏதோ பங்க்ஷனுக்கு கிளம்புறதா சொல்லி என்ன டிராப் பண்றேன் என்று உறுதியாக சொல்லிட்டான்....என்னால மறுக்க முடில....கிளம்பும் போது தான் அவளுக்கு காலேஜ் ஒருவாரம் லீவ் என்று சொல்லி போன் பண்ணுனாள்...அதான் அவளையும் கூட்டிட்டு கிளம்பி வந்தோம்"என்றான் அசோக்....

சத்யா முகம் தெளிவடைந்திருந்தது....அசோக்கிடம் மிக கவனமாக இருக்க சொல்லி எச்சரிக்கை செய்தே கிளம்பினர்....

காரில் ஏறி பத்தாம் நிமிடத்தில் ஹரிணி தூங்கிவிட்டாள்....காரை நிறுத்தி சீட்டை சரிசெய்து அவளை படுக்க வைத்து காரை ஓட்ட ஆரம்பித்தான்...


நீண்ட இரவு பயணம்.....காரில் மெலடி பாடல்கள்....தனக்கு பிடித்தவளின் அருகாமை என மிக சந்தோசமாக வீட்டை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்....




வீட்டிற்கு வரும்வரை அவள் எழவேயில்லை...மணி பார்க்க பன்னிரெண்டரை..... அவன் அம்மாவிற்கு அலைபேசியில் அழைப்பு கொடுக்க அவர் கதவை திறக்க அவளை எழுப்ப மனமில்லாமல் தூக்கிச் சென்றான்....


அம்மா காரை விவேக்கிடம் கொடுக்கனும்...நீங்க போய் படுங்க...கதவை நானே பூட்டிக்கிறேன் என்று சொல்லி அவளை தூக்கிக் கொண்டே அவர்கள் அறைக்கு சென்று படுக்க வைத்தான்....அவரோ இவனுக்கு பதிலளிக்காமல் இவர்களை புரிந்து கொள்ள முடியாது என்று எண்ணியபடியே தனதறைக்கு சென்றார்....


அங்கே சூரிய நாராயணனிடம் இதை சொல்ல அவரோ"நீ சொல்றது உண்மை தான்ம்மா.....பொறுத்திருப்போம்...எல்லாம் சரியாகிவிடும்....இப்ப படு..."என்றார்...


ரித்விக்கோ அவளை படுக்க வைத்து விட்டு வந்து விவேக் காரை தனது நண்பர் விவேக் வீட்டில் விட்டுவிட்டு அங்கே நின்ற தனது பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கதவை பூட்டியவன் பார்த்தது டைனிங் மேஜையின் ஓரத்தில் இருந்த மருதாணி கோன்னைத்தான்...

அதை எடுத்து கொண்டு வந்தவன் தனதறைக்கு வந்து பார்க்க அவள் உடைமாற்றி சோஃபாவில் தூங்கிக் கொண்டிருந்தாள்....

சிரித்தவாறே அவன் பிரஷ்ஷாக குளியலறை புகுந்தான்...வந்தவன் அவள் படுத்திருந்த சோபோவின் கீழ் உட்கார்ந்து தனது அலைபேசியில் சில பேசிக் டிசைன்ஸ் பார்த்துக்கொண்டு அவளின் கைகளில் வரைய ஆரம்பித்தான்.....

முதலில் சிறிது நேரம் அவள் தூக்கத்தில் நெளிந்து திரும்பி படுத்து என அவனை தான் சோதித்தாள்.... எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டே வரைந்தான்....


சிலநேரங்களிலே அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல அவளிடம் அசைவில்லை.... இரண்டு கைகளிலும் தனக்கு தெரிந்ததை திறம்பட வரைந்து விட்டு படுத்துவிட்டான்....


வழக்கமான நேரத்தில் காலை விழிப்பு வர எழுந்த ஹரிணி தனது கைகளில் ஏதோ வித்தியாசமாக தோன்ற கைகளை பார்த்தவளுக்கு அவ்வளவு சந்தோஷம்... கண்டிப்பா இது இவங்க வேலை தான்....ஆனா எப்படி இவ்வளவு அழகா டிசைன்ஸ் போட்டுருக்காங்க.....இத போட எப்படியும் குறைந்தது இரண்டுமணிநேரம் ஆகிருக்குமே!!!எப்போதான் தூங்க ஆரம்பிச்சிருப்பாங்க???இத வரைந்த உணர்வு கூட இல்லாம தூங்கிருக்கேனே என்று எண்ணியப்படியே கைகளை கழுவி அழகு பார்த்தாள்.....


பின் குளித்து சிம்பிளான ஒரு புடவை அணிந்து கீழே வந்தாள்..... சந்திரலேகா வந்ததும் நேற்று நடந்ததை விரிவாக கூற ஆரம்பித்தாள்....அவரோ முதல் தடவை கதை கேட்பது போல் கேட்டு கொண்டிருந்தார்...

அவள் சொல்லி முடித்ததும்" நேத்து தான் அப்பப்போ மெசேஜ் பண்ணி தகவல் குடுத்தீயே அப்புறமும் ஏன்ம்மா இப்ப மறுபடியும் விளக்கமா சொல்லிட்டு இருக்க...இவளும் அத முதல் தடவை கேட்கிற மாதிரி கேட்கிகிறாள்....இவ என்னமோ தெரியலம்மா...நீங்க மூன்று மருமகள்களும் எத சொன்னாலும் காது குடுத்து கவனிக்காள்....இதே நான் சொன்னா எங்க கேட்குறா?"என்று சந்திரலேகா வை வம்பிழுக்க அவள் புன்னகையுடன் அவர்களுக்கு தனிமை குடுத்து எழுந்து தோட்டத்திற்கு சென்றாள்....

இடைக்கு கொஞ்சம் வரை கீழிருந்த முடியை காயவைத்து கொண்டே அங்கிருந்த பூக்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.....

அங்குவந்த சந்திரலேகா அவள் கைகளை பார்த்து ,"சூப்பரா இருக்கு.... ரித்விக் வரைந்தானா?"என்று கேட்டார்...

"ஆமாம் அத்தை...எப்படி கண்டுபிடிச்சீங்க?"


"இது என்ன கஷ்டமா?அவன் ஏற்கனவே நன்கறாக படம் வரைவான்....நேற்று நீங்க அழைந்த வேலையில் இதற்கு நேரமும்மில்லை.... அப்புறம் டிசைனர்ஸ் போடுற மாதிரிலாம் இது இல்லை...எல்லாம் வச்சி பார்த்தா அவன் தான் என்று தோன்றியது ம்மா....வா சாப்பிடலாம்"....எனாறு கூறிவிட்டு சென்றார்



உள்ளே வந்தவளை அனிதாவும் ஆனந்தியும் பிடித்து நேற்றைய கதையை கேட்க ஆரம்பித்தனர்.... அதன்பிறகு கைகளை பார்த்து கிண்டல் பண்ண அவள் முகமோ மருதாணிக்கு சமமாக சிவந்தது....

ரித்விக் கீழே வரும்போது பார்த்தது இதைத்தான்.... எல்லாரும் சாப்பிட்டு விட்டு கிளம்ப சென்றனர்.....

ரித்விக் கிளம்பி கட்டிலிலே அமர்ந்திருந்தான்....ஹரிணியோ தலைமுடியை அலங்காரம் செய்துவிட்டு புடவை மாற்றலாம் என்று எண்ணி அவனை பார்க்க அவனோ மொபைலில் மூழ்கியிருந்தான்....

அதன்பிறகு உடைகளை எடுத்துக் கொண்டு உடைமாற்றும் அறைக்கு சென்று மாற்றி விட்டு வந்து நகைகளை போட்டுக் கொண்டு பூவை வைத்துக் கொண்டு கண்ணாடியில் அவளை பார்த்துக் கொண்டிருக்க திடிரென்று அவளை பார்த்தவனால் கண்களை திருப்ப முடியவில்லை.....அவளை முழுவதுமாக ரசித்தவனின் கண்கள் கடைசியில் நின்ற இடமோ அவள் இதழ்களில் தான்....

அவளோ அவனை பார்க்க அவன் பார்வையில் வெட்கம் வர திரும்பிக் கொண்டாள்.....

அவளருகே சென்றவன் "போட்டோ எடுத்துக்கலாமா"?என்று அவளை அணைத்துக் கொண்டு ஸ்டில்ஸ் எடுக்க ஆரம்பித்தான்....அவளுக்குள் அத்தனை தடுமாற்றம்...

அதன்பிறகு அவள் கட்டிலில் அமர்ந்து போட்டோக்களை பார்த்துக் கொண்டிருக்க அவனோ அவளை மேலிருந்து கீழாக பார்த்துக் கொண்டிருந்தான்....

அவளிடமிருந்து போனை வாங்கி கீழே வைத்தவன் அவள் கண்களை பார்த்து சம்மதா என்று கேட்க அவள் கண்களாலே சம்மதம் தெரிவிக்க அவள் இதழ்களை தன்னிதழ்களால் முற்றுகையிட்டான்...

எவ்வளவு நேரம் முத்தத்தில் மூழ்கியிருந்தனரோ ரித்விக் அலைபேசி ஒலியில் தான் விலகினர்.... அவளுக்கோ அவனை ஏறிட்டு பார்க்க முடியாதபடி வெட்கம்....அதனால் அப்படியே கீழே வந்து விட்டாள்....



தொடரும்....
 
Last edited:
ரெண்டு பேரு லவ்வும் என்ன டிசைன்னோ :rolleyes::rolleyes::rolleyes:
 
Top