Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 13

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 13:

திருமணம் முடிந்து இரு நாட்கள் கழித்து மறுவீட்டுக்குச் செல்ல ஆயத்தமானார்கள் ராஜ் நந்தன் – மதுரவசனி தம்பதியர்.

காரில் இருவரும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்கையில் மது அமைதியாகவே வர ,

“என்ன மது சைலண்டா இருக்க…”

“ஒன்னுமில்லங்க… சும்மா வெளியே வேடிக்கைப் பார்க்கிறேன்” என மதுரவசனி பதிலளிக்க,
“மது… லிஸன் டூ மீ… நான் உங்கூட இருக்கும்போது நான் மட்டுமே உன் நினைப்புல நான் மட்டும் தான் இருக்கனும்.. வேடிக்கையை வெளியே பார்க்காத.. சீ மீ…” எனச் சொல்ல

“ப்ச்…என்னங்க நீங்க.. நீங்க என் நினைப்புல இல்லன்னு யார் சொன்னா…. அதுக்காக எவ்வளவு நேரம் அப்படியே பார்க்கிறது..?”

“பார்க்க போரடிச்சா அப்போ பேசுடி..”

“வண்டி ஓட்டும்போது பேசக் கூடாது.. உங்க கவனம் சிதறிடும்..”

“ஆஹான்… இப்ப நான் கவனமாவா வண்டி ஓட்டுறேன்.. என் முழு கவனமும் உன் மேல தான் மது….” என்றவனின் தோளில் அடித்து விட்டு அவள் சாய்ந்துக் கொள்ள

“ம்ம்.. இது பொண்டாட்டி லட்சணம்..” என்றபடி காரை செலுத்தினான்.

மதுரவசனியின் வீட்டு வாயிலில் காரை நிறுத்தி இறங்கவும் ஒரே தடபுடலான வரவேற்பு தான். இவர்களுக்கு முன்னரே சுந்தரம் தன் குடும்பத்தினரோடு வந்து விட்டார். தீபன் மட்டும் அலுவலைக் கவனிக்க வேண்டிச் சென்னை சென்றுவிட்டான். வைரம், சுந்தர் ராஜன், கீர்த்திகா மட்டுமே வந்திருந்தனர்.

கீர்த்தி ராஜாவைக் கண்டு விட்டு ‘அண்ணா’ என ஓடி வர அவளை ஆதரவாய் அணைத்தவன் ,

“கீதுமா… எப்படா வந்த…” எனக் கேட்க

“அண்ணா…. உளறாதீங்க. நம்ம ஒன்னா இருக்கோம்னு இவங்க நினைக்கிறாங்க இல்ல...” என அவள் மெதுவாய் சொல்ல

“டேய்… கீதுமா… இவனுங்க நம்மளை எங்க நோட் பண்றானுங்க.. இரண்டு நாள் பார்க்காத தங்கச்சிக்கு என்ன சீன் போடுறானுங்க பாரு…” எனக் கிண்டலடிக்க

“நீங்க கூட தான் என்னைப் பார்த்து இரண்டு நாள் ஆச்சு… ஆனா இப்போ என்னைப் பார்த்தவுடனே வரலயாண்ணா.. அது மாதிரி தான்…” எனச் சொல்ல

“நான் தான் இவங்களா..?” எனக் கொஞ்சம் கோபம் காட்டிக் கேட்கவும்,

“அய்யோ.. நீங்க தான் அண்ணா பெஸ்ட்… நோ கோவம்.. மாமியார் வீட்டு விருந்து.. சோ மூக்குப் பிடிக்க சாப்பிடலாம்னு வந்திருக்கேன்…. நோ கத்திங்க்ஸ்” எனச் சொல்ல

“வாலு.. வா…” என்றபடியே செல்ல, ராஜா மது இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

ராஜா உள்ளே சென்றதுமே குட்டிப்பெண் ப்ரியா வந்து ,

“மாமா…மாமா…நீங்க பெரிய சிங்கர் தானே…?” எனக் கேட்க

குழந்தையைப் புன்னகையோடு கண்டவன், “நான் பெரிய சிங்கர்லாம் இல்லடா சின்ன சிங்கர் தான் “ எனச் சொல்ல

“மாமா.. நீங்க சினிமால பாடி இருக்கீங்க தானே… என் ப்ர்ண்ட்ஸ்ட்ட அப்போ எங்க மாமா சிங்கர்னு நான் சொல்லலாம் தானே” என ஆசையாய் கேட்க ,

“கண்டிப்பா சொல்லிக்கோ டா..” என அவன் சொல்ல

“மாமா.. நீங்க பாடினதுல உங்க ஃபேவரைட் சாங் என்ன மாமா..” எனக் கேட்டான் திருவமுதன்.

“மதுவாய் மலராய் மங்கை ஒருத்தி என் வாழ்விலே” என அவன் பாட அங்கே அனைவர் முகத்திலும் புன்னகை என்றால் மதுவுக்கோ வெட்கம் தாளவில்லை. சின்னவர்கள் “ஓஹோ” எனக் கத்த

மதுரவல்லி தான், “என்ன சத்தம் இது…. முதல்ல வந்தவரை சாப்பிட விடுங்க…. இவங்க தான் சின்னப்பசங்க.. நீங்க என்ன குழந்தைகளா… போய் சாப்பாடு எடுத்து வைங்க..” என மருமகள்களிடம் காய,

அனைவரும் அவர் சொல்லுக்கு அடங்கி சாப்பாடு எடுத்து வைக்க, ஒருவழியாய் காலை உணவு முடிந்தது.

அதன்பின் மதுரவசனியின் குலதெய்வ கோவிலுக்குச் செல்ல அனைவரும் கிளம்பினார்கள். மது, ராஜா, கீர்த்தி, ஹரிணி, ஸ்ரீராம், ஆயுஷ் எல்லாம் ஒரு காரில் செல்ல, ஸ்ரீசரண், மோகனா, கார்த்திக்கேயன், அமுதன், ப்ரியா, ஸ்ரீவத்சன் ஒரு காரிலும், பெரியவர்கள் அனைவரும் ஒரு காரிலும், வைரம், சுந்தரம் தங்கள் காரிலும் தஞ்சாவூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த அவர்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்தனர்.

பெண்கள் அனைவரும் பொங்கல் வைப்பதில் ஈடுபட்டிருக்க, ஆண்கள் எல்லாம் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, குழந்தைகள் அனைவரும் அங்கிருந்த ஆலமரத்தின் விழுதுகளில் தொங்கி ஊஞ்சலாடினர்.

ஸ்ரீசரணும் ஸ்ரீராமும் பெண்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுத்து உதவி செய்ய, ராஜாவோ மதுவைப் பார்வை வட்டத்துக்குள் வைத்த வண்ணமே பெரியவர்கள் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

கீர்த்திகாவுக்குத் தான் என்ன செய்வதென தெரியாமல், அப்படியே குழந்தைகள் இருக்கும் இடம் சென்றாள். அவர்கள் ஆலமரத்தில் ஆடவும் இவளுக்கும் அதில் ஆட ஆவல் கொள்ள, உடனே அவர்களிடம் சென்று,

“குட்டீஸ் நானும் ஆடப்போறேன்” எனச் சொல்ல

“ஐய் அக்கா… ஜாலி.ஜாலி..” என அவர்களும் கூவ, இவளும் ஒரு விழுதில் தொங்கினாள்.

அந்த ஆலமரத்தின் அருகில் ஒரு குளம் இருக்க, அதன் விழுதுகளில் சில குளத்தின் அருகிலேயே அமைந்திருக்கும். கீர்த்தி ஆடிய விழுதும் அப்படியே. அவள் சுவாரசியமாய் ஆட, திடீரென ஒரு கட்டெறும்பு சுள்ளென கடிக்க, விழுதைப் பிடித்திருந்தப் பிடியை உதறக் குளத்தில் விழுந்தாள் அவள்.
இதைப் பார்த்த சிறுவர்கள், “அய்யோ அக்கா” எனப் பயந்து கத்த, அந்தப்பக்கம் விறகு எடுக்க வந்த ஸ்ரீசரணின் காதில் இது விழுந்து வைக்க, அவன் குழந்தைகளிடம் சென்று என்னவென விசாரிக்க,

“அண்ணா.. கீர்த்தி அக்கா இருக்காங்கள. அவங்க குளத்துக்குள்ள விழுந்துட்டாங்க..” எனப் பதற்றமாய் அமுதன் சொல்ல

உடனே ஸ்ரீசரணும் குளத்துக்குள் குதித்தான். ஒருவழியாக ஸ்ரீசரண் அவளை மீட்டு கரைச் சேர்த்த போது மொத்தக் குடும்பமும் அங்கே கூடிவிட்டது. வைரம் பதற்றத்திலும் பயத்திலும் அழத்துவங்க, அவரைத் தேற்றினார்கள். சுந்தரமோ அப்படியே அமர்ந்து விட, அங்கே பதட்டமான சூழ் நிலை நிலவியது.

வந்த இடத்தில் இப்படியாகி விட்டதே என அனைவரும் பயம் கொள்ள சரண் காப்பாற்றியதும் தான் நிம்மதி அடைந்தனர்.

கீர்த்தியின் கன்னத்தில் பலமாகத் தட்டிய ஸ்ரீசரண், அவள் கண் விழித்ததும் ,

“அறிவிருக்கா உனக்கு… லூசாடி நீ… சின்னப்பிள்ளையா நீ…. இப்படியா விழுந்து தொலப்ப.. ஒன்னு கிடக்கா ஒன்னு ஆகியிருந்தா…… கீழா…” எனத் திட்ட

“சரண்..” என அதட்டியது ரவிச்சந்திரனின் குரல். அப்போதுதான் அனைவரும் அங்கே வந்து விட்டிருந்ததை உணர்ந்தான். ரவிக்கோ எங்கே தன் மகன் அவர்கள் வீட்டுப்பெண்ணை திட்டுவதைத் தவறாக எடுப்பார்களோ என்ற எண்ணத்தில் மகனைக் கண்டிக்க,
ராஜாவும், “சரண்… அவளே பயந்துப் போயிருப்பா.. நீ திட்டாத..” என அவன் சொல்லி விட்டு ,

“கீதுக்குட்டி… ஒன்னுமில்லடா…. பாரு… அண்ணா பாரு..” என அவளைத் தன் மடியில் தாங்கிப் பேச

“தம்பி திட்டுறதுல்ல என்ன தப்பு… இவள் அங்கே ஒழுங்கா எங்களுக்கு உதவி செஞ்சிட்டு இருந்திருக்கலாம் இல்லையா…? இப்படி ஆகியிருக்காது இல்ல.. எல்லாத்திலேயும் விளையாட்டு….” என மகளை வைரம் அழுகைக் குறைந்துக் கடிந்துக் கொள்ள, ராஜா அவரை முறைத்த முறைப்பில் அவர் கப் சிப் என்றானார்.
 
சுலோச்சனா தான், “மாப்பிள்ளை பாவம்… புள்ள டிரஸ் எல்லாம் ஈரம்.. வீட்டுக்குப் போய் மாத்திட்டு வரட்டும்… பொங்கல் ரெடியாக இன்னும் நேரமாகும்.. அதுக்குள்ள மாத்திட்டு வந்திடலாம்…” என நிலைமை உணர்ந்துச் சொல்ல

பூம்பொழிலும், “ஆமா சம்பந்தி புள்ளையை வீட்டுக்கு அனுப்பி மது டிரஸ் இருக்கு… அதை மாத்திக்க சொல்லுங்க..” எனச் சொல்ல

ராஜா, “சரி அத்த… அப்போ நானே அழைச்சிட்டுப் போறேன்… கீதுமா வாடா..” எனச் சொல்ல, மற்றவர்கள் முகத்தில் இவர்கள் தானே இன்று முக்கியமாய் இருக்க வேண்டும், இவன் செல்கிறேனே என்கிறானே என்று யோசனைப் பட,

சிவச்சந்திரன் தான் “ராம்.. நீ அழைச்சிட்டுப் போ.. ஹரிணி நீயும் கூடப் போய் உன் டிரஸ் இல்ல மது டிரஸ் எது வாட்டமா இருக்குமோ அதை பிள்ளைக்குக் கொடு..” எனச் சொல்ல

“இல்ல மாமா.. நானே அழைச்சிட்டுப் போறேன்..” என ராஜா சொல்ல

மதுரவசனிக்குக் கோபம் சுருக்கென்றது. தன் அப்பாவும் பெரியப்பாவும் சொல்வதைக் கேட்காமல் எதிர்த்துப் பேசுகிறானே என்ற கடுப்பில் ,

“என்னங்க… அண்ணாவும் அண்ணியும் பார்த்துப்பாங்க…” என அழுத்தி சொன்னவள் பார்வையால் அவனைக் கண்டிக்க, அவள் பார்வையைப் பார்த்தவன்,

“சரி..” என்றான்.

ஸ்ரீராம் காரை எடுத்துக் கொண்டு வந்து நிற்க, ராஜா தங்கையை கைத்தாங்கலாய் அழைத்துச் சென்று காரில் உட்கார வைத்தான்.

தங்கையிடம், “கீது.. உனக்குக் கம்பர்டபிளா இல்லன்னா.. நான் வேணும்னா கூட வரவாடா..” எனக் கேட்க

“வேண்டாம்னா… ஐ வில் மேனேஜ்..” என அவள் சொன்னாலும் ராஜாவின் முகம் தெளியவில்லை.

சரணுக்கோ, “அந்த கீழா பொண்ணு விழுந்துட்டான்னு அவளைத் தாங்குறாங்க… காப்பாத்துன்ன எனக்குத் தேங்க்ஸ் சொல்லக் கூட இல்ல… அது பரவாயில்ல.. நானும் ஈரமாகிட்டேனே… என்னைப் பத்தி என் குடும்பத்துக்கு அக்கறை இருக்கா…” என மனதிற்குள் காய்ந்தான்.
சுந்தரம் தான், “ரொம்ப தேங்க்ஸ் தம்பி… என்னோட மூணுப் பசங்க தான் என்னோட உயிரே…. அதுவும் கீதுக்கு நீச்சல் கூடத் தெரியாது… ரொம்ப தேங்க்ஸ்.. எனக் கண்ணீர் மல்க சரணின் கைப்பற்றிச் சொல்ல, ராஜாவுக்கே அவரைப் பார்த்துப் பாவமாய் போயிற்று.

சரணோ மிகவும் பெருந்தன்மையாக,
“அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா…. அவங்களும் எங்க வீட்டுப்பெண் தானே.” என்றான்

அதன்பின் ஸ்ரீராம் காரை எடுக்கப் போக,

“டேய் அண்ணா.. காரை எடுக்காத..… நானும் டிரஸ் மாத்தனும்..” என்றவன் காரில் தொத்திக் கொண்டுச் சென்றான்.

அதன்பின் அவர்கள் வீட்டுக்குச் சென்று திரும்பியதும் பொங்கல் வைத்து பூஜையை நல்லபடியாக முடித்தனர். எல்லா பொருட்களையும் பெரியவர்கள் எடுத்து வைக்க,

ராஜாவோ மதுவின் அருகில் வந்து, “மது இங்க கொஞ்சம் வா..” என அழைக்க

“என்ன..?” என அவள் அவனருகில் செல்ல

“வியர்த்திருக்குப் பாருடா….” என்றபடி அவன் அவள் நெற்றியைத் துடைத்து விட,

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…” என அவள் முணுமுணுக்க

“ப்ச்.. என்னடா… கீதும்மா சின்னக்குழந்தை மாதிரிடா… அவளுக்கு எதாவது ஒன்னுன்னு என்னால் தாங்க முடியாதுடா… அதான்… அவளுக்கு நான் இருந்தா கம்பர்டா இருக்கும்னு சொன்னேன்..” எனச் சொல்ல

“நான் அதுக்கு சொல்லலங்க… சரண் காப்பாத்தினான் தானே அவங்கிட்ட தேங்க்ஸ் கூடச் சொல்லாம அவனை திட்டற மாதிரி பேசுனிங்க..” எனக் கடிய

“ஓ… அதனால் தான் கோவமா… அந்த நேரம் அப்படி சொல்லிட்டேன்.. என் தங்கச்சியை நான் திட்டலாம்… அவன் என்ன கீழா அது இதுன்னு பேசுறான்… கொஞ்சம் கூட மரியாதை இல்லாம..” என ராஜாவும் பதிலுக்குப் பேச

“நீங்க மட்டும் என்னவாம்… முதல் தடவ என்னைப் பார்த்தப்போ ரூத்ரமூர்த்தியா நின்னிங்க… சரண் டென்ஷன்ல பேசிருப்பான்..” என அண்ணனுக்குப் பரிந்துப் பேச

“நமக்குள்ள நடந்த இனிமையான விசயங்களை மட்டுமே ஞாபகம் வைச்சிக்கோ….. இன்னொரு தடவ என்னை யார் கூடவும் கம்பெர் செய்யாத…. புரியுதா..?” என்றபடி அவன் அவளை விட்டு விலகி நடந்தான்.

கீர்த்தியோ சரணுக்கு நன்றி சொல்லவென அவனைத் தேடியவள், அவனைக் கண்டதும்,

“ரொம்ப தேங்க்ஸ் சரண் மாமா..” எனச் சொல்ல

“என்ன தேங்க்ஸ் லூசு… இனிமேலாவது இப்படி குழந்தைனு மனசுல நினைச்சிட்டு சேட்டை பண்ணாம அடங்கி ஒடங்கி இரு.. அரைவேக்காட்டுத்தனம் செய்யாத..” என அதட்ட

அவள் அவன் பேச்சில் முறைக்க,

“என்னடி முறைக்கிற… கண்ணு முழியைத் தோண்டிடுவேன்.. ஜாக்கிரதை… போடி.. இனியாவது ஜாக்கிரதையா இரு” எனச் சொல்லிவிட்டுச்
சென்றான்.

ரவிச்சந்திரன் மகனை கூப்பிட்டு ,

“நீ செஞ்சது ரொம்பப் பெரிய விஷயம்டா சரண்… ஆனா அதுக்காக இன்னொருத்தங்க வீட்டுப்பெண்ணைத் திட்டக் கூடாது…. நம்ம உறவா நினைக்கலாம்.. ஆனா உரிமையா நம்ம வீட்டுப் பெண்ணைப் பேசறது போல பேசக்கூடாது.. இதுக்குத்தான் வீட்டுப்பெண்ணைக் கூட வாடி போடி சொல்லாதன்னு சொல்றது.. எங்க கேட்டா தானே.. அதே பழக்கம் தான் எங்கேயும் வரும்… வாயை அடக்கு..” என்று அறிவுறித்தினார்.

அவனுக்குமே அது சரியாய்ப் பட, “சாரிப்பா…” என்றான்.

அதன்பின் மதிய விருந்து முடிந்தவுடன் நல்ல நேரத்தில் மதுவும் ராஜாவும் கிளம்பும் நேரம் மது ஒரு அழுகையென்றால் அப்படி ஒரு அழுகை… தாயைக் கட்டிக் கொண்டு அழுதவள் ஒவ்வொருவரிடமும் சொல்லும்போது அழுதாள்.

“பெரியம்மா….”

“அம்மாஆஆஆஅ”

“சித்தி.. நான் போயிட்டு வரேன்..” என்றவள் மூவரையும் கட்டிக் கொண்டு அழுதாள்.

“அமுதா.. நல்ல படிகக்னும்…. சண்டைப் போடாதடா ப்ரியாவோட…”

“வத்ஸா போர்ட் எக்சாம் வருது…. ஒழுங்கா படி…”

“ப்ரிகுட்டி சமத்தா இருடி…”

“ஆயுஷ் கண்ணா… அத்தைப் போயிட்டு வரேன்…” என ஒவ்வொருவரிடமும் சொல்ல

ஆயுஷோ, “அத்த எப்ப வருவா… இனி எங்கூட இருக்க மாட்டியா..” எனக் கேட்க

குழந்தையை அணைத்தவள் ,

“சீக்கிரமே அத்த வருவேன் டா…” என்றவளுக்குக் கண்ணீர் விடவில்லை.
பூம்பொழில் தான், “மது.. அழாதம்மா… அழுதுட்டேப் போகக் கூடாது..” எனச் சொல்ல தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தினாள். அனைவருக்கும் அவள் போவதில் ஒரு பக்கம் வருத்தம், அவள் அழுகையில் வருந்தினர்.

ஆனால் இவ்வளவுக்கும் வருந்தாமல் இருந்த ஒரே ஜீவன் ராஜ் நந்தன் தான்.

ஒரு காரில் ராஜாவும் மதுவும் செல்ல, பின்னால் மற்றொரு காரில் சுந்தரம் குடும்பத்தினர் கிளம்பினர். போகும்போதே வைரம், “மதும்மா.. அவனை எப்படியாவது ஒரு தடவ வீட்டுக் கூட்டிட்டு வாடா.. இன்னிக்கு நீ வந்து நம்ம வீட்ல விளக்கேத்தனும்…” என்று சொல்லி தான் அனுப்பினார்.

திருச்சி விமான நிலையம் சென்றதும் காரை ராஜா நிறுத்தி விட்டு தன் நண்பனை வந்து காரை பிக்கப் செய்யச் சொன்னான்.

மது அப்போதும் அழுதுக் கொண்டே இருக்க,

“மது.. எதுக்கு அழற..?”
“………”

“கேட்கிறேன்ல….. சொல்லு..” எனச் சத்தம் போடவும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

“நானும் பார்த்துட்டே இருந்தா…. இன்னமும் அழுகையை நிப்பாட்டல்ல நீ.. அப்படி என்ன உனக்கு பிடிவாதம்… என் கூட வரது உனக்கு என்ன கஷ்டம்..?”

அவன் கூற்றில் அதிர்ந்தவள் “அய்யோ அப்படி இல்லங்க….. நான்…. நான்… எங்க.. வீட்டை… விட்டு…” என அவள் சொல்ல

“ஷட் அப்…. என்ன வீடுனு கேட்கிறேன்…? எங்கூட வரியே…. முதன்முதலா நம்ம வீட்டுக்குப் போகப்போறோம்னு சந்தோஷம் இருக்கா உங்கிட்ட…. சும்மா அழுதுட்டு… நான் முன்னாடியே சொன்னேன்.. என் பொண்டாட்டி அழுதா எனக்கு தான் அவமானம்னு…. உனக்குப் புரியலயா என்ன..?”அ
 
“போ… சும்மா கத்தாத… நான் ஏற்கனவே அழுதா.. என்னை இப்படி பேசி இன்னும் அழ வைக்கிற… உன் கூட வந்தா சந்தோஷம் தான்… ஆனா
அதுக்காக என் வீட்டை நான் மிஸ் பண்ணக் கூடாதா..?” என சரமாரியாக அவன் முதுகில் அடித்தவள் அவன் தோளில் சாய்ந்து அழ, அவனிடத்தில் அவள் ஆதரவு தேடியது மகிழ்ச்சியைத் தர மனைவியை அணைத்தவாறே விமான நிலையத்தின் உள்ளே அழைத்துச் சென்றான்.

அங்கு சென்னை விமான நிலையத்தில் இவர்களுக்காக ரகு காருடன் காத்திருந்தான். சுந்தர் ராஜனை அழைக்க தீபன் வந்திருந்தான். ரகு காரை ஸ்டார்ட் செய்து மீனம்ப்பாக்கத்தைத் தாண்டியவுடன் மதுரவசனி வாய் திறந்தாள்,

“ரகுண்ணா… நீங்க நேரா அத்த வீட்டுக்குப் போங்க..” எனச் சொல்ல

ரகு பயத்தோடும் அதிர்வோடும் ராஜாவைத் திரும்பிப் பார்க்க, ராஜாவோ அமைதியாகவே இருந்தான்.மதுவோ ,

“நான் தான் சொல்றேன்ல நீங்க போங்க…” என அதிகாரமாய் சொல்ல, அவனும் வண்டியை சுந்தர் ராஜனின் இல்லமான ராஜபவனம் நோக்கி செலுத்தினான்.

ராஜா எதுவும் பேசாமல் இருப்பதே மதுவுக்குப் போதுமானதாக இருக்க, அவளும் அவன் கையைப் பிடித்துக் கொண்டு வந்தாள். வீடு வந்தபின் மது இறங்க, ராஜாவும் இறங்கினான்.

ராஜா இறங்கியதும் வைரத்தின் முகம் வைரமென ஜொலிக்கத் துவங்க ,கீர்த்தி ஆரத்திக் கரைத்து வைரத்தின் கையில் கொடுத்தாள். வைதேகியும் பேரனின் வருகையை ஆவலாய் எதிர் நோக்கி வாசலில் நிற்க, ராஜ் நந்தன் எதையும் கண்டுகொள்ளாது காரைச் சுற்றி வந்து முன்னிருக்கையில் அமர்ந்தான். அனைவரும் அவனை அதிர்ச்சியோடு பார்க்க,

“மது… இன்னும் அரை மணி நேரத்துல நான் இங்க வந்து ஹாரன் அடிப்பேன்… உடனே வர..” என்றபடி நிற்காமல் சென்று விட, வைரத்தின் கண்களில் பொலபொலவென கண்ணீரைச் சிந்த, சுந்தரத்தின் முகமும் வாடிப்போனது. கீர்த்தியும் அழுகைக்குச் செல்ல, தீபனுக்கோ கோபம் தான்.

‘அப்படி என்ன வீம்பு இவனுக்கு..? இவ்வளவு பிடிவாதமா… அப்பா அம்மான்னு பாசம் கொஞ்சமாச்சும் இருக்கா..?’ என மனதுக்குள் வெம்பினான்.

மதுதான், “அத்த.. அழாதீங்கத்த.. அவரைப் பத்தி தான் தெரியுமே… ப்ளீஸ்…. உள்ளே போகலாம்.. அவர் அப்புறம் என்னையும் சீக்கிரம் வந்து கூப்பிட வந்துடுவார்…” எனச் சமாதானப்படுத்த,

சுந்தரும், “வைரம்…. சீக்கிரம் போய் மருமகப் பொண்ணை உள்ளே அழைச்சிட்டுப் போய் விளக்கேத்த வை… உன் புள்ள வேற புயல் வேகத்துல வந்துடுவான்..” எனச் சொல்ல

வைரம் மதுவுக்கு ஆரத்திக் கரைத்து உள்ளே அவளது வலது காலை எடுத்து வைத்து அழைத்துக் கொண்டார். பூஜையறையில் அவளை விளக்கேத்த வைத்தவர், சாப்பிடக் கொண்டுவருமாறு வேலை செய்யும் பெண்ணைப் பணித்தார்.

பின்னர் அவர் அறைக்குச் சென்றவர் ஒரு நகையை எடுத்து வந்து காட்டினார்.

“மதும்மா.. இந்த செயின் இந்த வீட்டோட முதல் மருமகளுக்குக் கொடுக்கிறது.. உனக்கு தான் இது சேரனும்… இந்தா போட்டுக்கோ..” எனக் கொடுக்க

“வேண்டாம் அத்த..” என அவள் மறுக்க

“ம..து… நீயும் அவனை மாதிரி எங்களை ஒதுக்கிறியா..?” என அவர் மீண்டும் அழுகைக்குத் தயாராக,

“அய்யோ அத்த…. அப்படியெல்லாம் இல்ல.. இப்ப நான் இதை வாங்கிக் கிட்டா உங்க பையன் என்னைத் தொலைச்சிடுவார்…. சீக்கிரமே உங்கப் புள்ளையை இந்த வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வரது என்னோட பொறுப்பு… அப்ப இதை எனக்குத் தாங்க. சத்தியம் அத்த.. என்னை நம்புங்க..” எனச் சொல்ல

வைரம் மருமகளை அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தார்.

“நீ சொன்னா செஞ்சிருவடா மது.. ஏன்னா என் ராஜாவுக்கு ஏத்த ராணி நீதான்னு எனக்குத் தெரியுமேடா…” என்றார்.

அரைமணி நேரம் அப்படியே ஓடிப்போக காரின் ஹாரன் சத்தம் கேட்க, கீர்த்தி தான்,

“ம்மா….. அண்ணா வந்துட்டார்…. அண்ணியை விடு… கதைப் பேசினது போதும்… அண்ணிப் போங்க…” எனச் சொல்ல

“அட டா.. என்ன நாத்தனாரே என்னை விரட்டுறீங்களா… அண்ணா தானே உங்கண்ணா ஒன்னும் அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக மாட்டாங்க… அவரு கிடக்காரு…” என்றபடி வைதேகியின் காலில் விழுந்து,

“என்னை ஆசிர்வாதம் செய்ங்க ஆத்தா…” என்றாள்.

அவரும், “நல்லபடியா இரு ராஜாத்தி…. என் ராசாவுக்கு ஏத்த ராணி… நீ… சீக்கிரமா என் பேரனை இந்த வீட்டுக்குக் கூட்டியாந்துரு ஆத்தா…” என்றார்.

ராஜா விடாமல் ஹாரன் எழுப்பி சத்தம் செய்ய, தீபன் தான், “அண்ணி கிளம்புங்க முதல்ல… அவன பாருங்க… சின்னப்பிள்ளை போல சத்தம் செய்றான்…. எனக்குக் காது வலிக்குது… அவனுக்குக் கோபம் வந்தா என்ன வேணும்னாலும் செய்வான்..” எனப் புலம்ப,

“ஆஹா… ரொம்ப பயப்படாதீங்க உங்க அண்ணாவைப் பார்த்து….. சும்மா சும்மா ஹாரன் அடிச்சா…. நான் பயப்படுவேனா….” என்றபடி அவள் மாமானாரிடம் சொல்லி விட்டுச் செல்லாமல் அமைதியாகவே நிற்க,

மதுரவசனியின் போன் அலறியது.

“உங்க புள்ள தான்…” எனச் சிரித்தபடியே சொன்னவள்,

“பார்த்தீங்களா… உங்க அண்ணாவை போன் செய்ய வைச்சு என் வழிக்கு வர வைச்ச மாதிரி சீக்கிரமே நான் அவரை இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வருவேன்..” என்றபடியே விடைப்பெற்றாள்.

வெளியே வந்து பார்த்தால் காரை நிறுத்தி விட்டு ஸ்டைலாய் சாய்ந்தபடி, அவன் நின்றிருந்தான்…. சிரிப்பு மட்டுமே குறைவு… அதை அவன் மனைவி கண்டுக்கொண்டு,

“ஏன் இப்படி உர்ருன்னு இருக்கீங்க… கொஞ்சம் சிரிச்சா தேஞ்சிடுவீங்களோ…. இங்க இறங்கி நிக்கிறத உள்ளே வந்திருக்கலாம்ல…” எனக் கத்த அதை சட்டைச் செய்யாமல் அவன் காரில் ஏறியமற அவளும் முறைத்து விட்டு அமைதியாக இருந்தாள்.

அவர்கள் வீடு வந்து சேர்ந்தப் போது மணிப் பத்தானது. இருவருக்கும் ரகு ஹோட்டலில் இருந்து உணவு வாங்கி வர அமைதியாக உண்டவர்கள், அதன்பின் உறங்க ஆயத்தமாக படுக்கறையினுள் செல்ல, அங்கே பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்க,

ராஜாவின் முகத்தில் லேசான முறுவல்,

“ரகு வேலை..” என்றான்.

அவனாகப் பேசத்துவங்கியதும் மதுரவசனியும் அவன் வைரத்தை அழ வைத்ததை நினைத்து சண்டையிட துவங்க,

“உங்க மனசுல என்ன நினைக்கிறீங்க…. அப்படி என்ன வீம்பு….? பெரியவங்களைக் கஷ்டப்படுத்தி என்ன கண்டீங்க….? ஒரு பத்து நிமிஷம்.. மிஞ்சிப் போனா இரண்டு நிமிஷம் நீங்க உள்ளே வந்து உட்கார்ந்திருந்தா எல்லாரும் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பாங்க தெரியுமாங்க ….” எனப் பொரிந்து தள்ள

வேகமாக அவளை இழுத்தவன் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட, அவனது திடீர் தாக்குதலில் அப்படியே அவன் மேல் விழுந்தவளோடு அவன் மெத்தையில் சரிய,

அவனோ அவளிடம் கிசுகிசுப்பாய் ,

“யூ நோ மது… A kiss is a lovely trick by nature to stop speech when words become superfluos அப்படின்னு ingrid bergman சொன்னது எவ்வளவு லவ்லீலீன்னு எனக்கு இப்போதான் தெரியுது…” என முதல் முத்தம் தந்தப் பரவச நிலையில் சொல்ல,

மதுவோ அவனது தாக்குதலில் தளிராய் சாய்ந்தாலும், அவன் முத்தாரத்தை அனுபவித்தாலும் மனதில் உள்ள கோபம் அவளை அமைதியடையைச் செய்யவில்லை.

அவன் அவளை வாகாய் அணைத்துக் கொள்ள, அவன் மார்பில் சாய்ந்தவள்,

“ஏன் இப்படி செஞ்சீங்க… அத்த பாவம் தெரியுமா… உங்க மேல உயிரா இருக்காங்க…. இப்படி செஞ்சு அவங்களைக் கஷ்டப்படுத்தலாமா..?” என மெதுவாய்க் கேட்க,

அவனோ ஹஸ்கி வாய்சில் அவளது காதுக்குள் பேச அவள் உடல் சிலிர்த்து அடங்கியது ,
“மது…. இந்த நிமிஷம் நீ எல்லாத்தையும் மறந்திடு…. எவிரிதிங்…. உன்னையும் மறந்திடு.. திஸ் இஸ் மை டைம்…. அதனால் தான் நான் சண்டைப் போடாம அமைதியா இருந்தேன்.. புரிஞ்சிக்கோ.. இது…. எனக்கே எனக்கான நேரம்…. நான் நான் மட்டும் தான் உன் நினைப்புல இருக்கனும்… லெட்ஸ் ஃபர்கெட் திஸ் வொர்ல்ட்..” என்றவன்

“உனக்கு சம்மதமா டா…?” என்றான் ஆசை முழுதும் நிரம்பிய குரலில்.

அவனை கண்ணோடு கண் நோக்கியவள்,
“எல்லாம் உங்க இஷ்டம் தானே… இதுக்கு மட்டும் என்ன பெர்மிஷன்… அப்படி நான் கொடுக்கலனா…?” என புருவம் உயர்த்திக் கேட்க

“எதுக்கு வேணும்னாலும் கேட்காம இருக்கலாம் மது.. ஆனா கணவனா இருந்தாலுமே இதுக்குக் கேட்கனும்… நான் கேட்பேன்… நீ ஒத்துக்காட்டியும் எனக்கு ஒன்னுமில்ல.. ஐ வில் வெயிட்….” என்று சொன்னவன் அவளை விலகி விட்டுப் படுத்தான்.

அவன் செயலில் பெருமிதமும் காதலும் கரை புரண்டு ஓட,
அவன் நெஞ்சில் புதைந்தவள்,

“ஓகே…ஓகே….” என அவள் மெதுவாய் சொல்ல

“எதுக்கு ஓகே…?” என்றான் அவன் கிசுகிசுப்பாய்.

“ம்ம்… உங்கள.. எல்லாத்துக்குமே… போதுமா...?” என சிடுசிடுக்க

அவளை மையல் பொங்கப் பார்த்தவன் ,
“போதவில்லையே….போதவில்லையே.
.உன்னைப் போல் போதை ஏதும் இல்லையே…
நாள் முழுக்க உன்னைக் கண்கள் தின்ற பின்னும்…
உந்தன் சொற்கள் மீது நான் நனைந்த பின்னும்
இன்னும் இன்னும் பக்கம் வந்து
கிட்ட தட்ட ஒட்டிக் கொண்டு …
உன் அழகைப் பருக என் கண்கள் போதாதடி
என் நிலையை எழுத வானங்கள் போதாதடி..” என்று பாடியவன் அவன் மதுவில் மதுவை(போதை) நாடினான்.

அவனது பாடலிலேயே பாதி உலகை மறந்தவள் அவன் செய்கையில் அனைத்தும் மறந்தாள். அவள் நினைவில் அவன் மட்டுமே..!!

அடுத்த நாள் மது அவள் அறையை விட்டு வெளியேறும் போது மணி மாலை மூன்று.

குளித்து விட்டு வந்தவள் மணியைப் பார்த்து அதிர்ந்தவள், வேகமாக வெளியே வந்தால் அங்கு கிச்சனில் ஜூஸ் பிழிந்துக் கொண்டிருந்தான் ராஜ் நந்தன்.

அதைக் கண்டவள், “நந்து…. நிஜமாவே மணி மூணா.. இல்ல.. வாட்ஸ்ல டைம் மாத்தினீங்களா…?” எனக் கேட்க

அவன் ட்ரேட் மார்க் குறுநகையோடு அவளை நோக்கி வந்தவன் அவள் தோளில் கைப்போட்டு ,

“பொண்டாட்டி மேடம்.. நிஜமா மணி மூணு… தான்… ஆனா எனக்கு அப்பவே தெரியும்.. எதுவும் நடக்காமலேயே அன்னிக்கு நீ அப்படி தூங்கின தானே…. சரி சாப்பிட வா…” என அழைக்க

“ப்ச்.. போங்க… நீங்க என்னை எங்க தூங்க விட்டீங்க…” என சிணுங்கியவள், அவன் மேல் சாய்ந்தவாறே

“நீங்க சாப்பிட்டீங்களா…? ஹோட்டல்ல வாங்கினீங்களா..?” எனக் கேட்க

“நீ சாப்பிடாம….. நான் மட்டும் எப்படி டி சாப்பிடுறது… ம்ம்… அதுவும் வீட்ல இருக்கும்போது உன்னை விட்டு நான் சாப்பிட முடியாது… சீக்கிரம் வா.. உனக்காக நானே சமைச்சது…” எனச் சொல்ல, அவள் அவனை விழி விரியப் பார்க்க,

“சாப்பாட்டை முதல்ல சாப்பிடு மது..” என்றபடி அவளுக்குப் பிடித்த தக்காளி சாதம், ரைத்தா, வெஜ் புலாவ், ப்ரேட் அல்வா, ஆரஞ்ச் ஜூஸ் என அசத்தியிருக்க, அதை உண்டவள் அதன் சுவையில் திளைத்து,

அவனுக்கும் எடுத்து உணவை ஊட்டினாள். அவள் செய்கையில் அவன் நெகிழ்ந்து நீர் நிறைந்த கண்களோடு பார்த்தான்.

வெஜ் புலாவை ருசிப்பார்த்தவள் அவன் கன்னத்தில் இதழொற்றி ,

“சூப்பருங்க நீங்க… செம டேஸ்ட்… என் சித்தி சொல்வாங்க உனக்கு ஒரு நளன் ராஜா தான் புருஷனா வருவார்னு.. சித்திக்கு ஸ்வீட் கொடுக்கனும்…. செம செம..கிழி கிழி…தான்….” என்றபடி மீண்டும் இதழ்ப்பதிக்க வர,

ராஜாவுக்கு தான் வெட்கம் வந்து தொலைக்க,

“ஏய்…. சாப்பிடு…. முதல்ல… எச்சிப் பண்ணாத.. சாதம்லாம் ஒட்டிக்கும்…”

“ஒட்டினா தான் என்ன…? இவ்வளவு டேஸ்டா சமைச்ச என் புருஷனுக்கு இது கூடக் கொடுக்கலன்னா எப்படி… நானே துடைச்சிடுறேன்..” என்றபடி மீண்டும் முத்தமிட்டாள் மது.

ராஜாவோ அந்த நிமிடம் ராஜாவாக உணர்ந்தான். அவனை உணரவைத்தாள் மதுரவசனி.

உணவுக்குப் பின் ,
“சாரிங்க.. நான் தூங்கி.. உங்களை வேலை வாங்கிட்டேன்…. கஷ்டப்பட்டு எல்லாம் சமைச்சிருப்பிங்க இல்ல..”

“ப்ச்.. உனக்கு செய்றதுனா எனக்கு எதுவுமே கஷ்டம் இல்ல.. முழுக்க இஷ்டம் தான்… மது…” என்க ,கணவனின் காதலில் கர்வமாய் உணர்ந்தாள் மது.

அதன்பின் அவள் செல்பேசியை எடுத்துப் பார்க்க, அதில் வீட்டிலிருந்த தவறு விட்ட அழைப்புகள் பல. உடனே போன் செய்ய, வீட்டில் உள்ள அனைவரும் அவளிடம் பேசினர்… பேசினர்… பேசிக்கொண்டே இருந்தனர்.

கடுப்பான ராஜா அவளை முறைத்துப் போனை கட் செய்யச் சொல்ல,

“ஒரு டூ மினிட்ஸ்பா…. பேசிட்டு வைச்சிடுறேன்…” என்று சொல்ல, அவனோ அவள் மடியில் வந்து படுத்துக் கொண்டான். அவளுக்குக் குறுகுறுப்பூட்ட, அதைத் தாங்காதவளாக இவன் பிடிவாதம் உணர்ந்துப் போனை கட் செய்து விட்டு ,

“ஏன் இப்படி செய்றீங்க.. நான் அவங்களை மிஸ் பண்ணுவேன்னு சொன்னேன்ல… இப்படி செஞ்சா எப்படி.. கொஞ்ச நேரம் தானே ஊருக்குப் பேசினேன்.. காலையில் இருந்து போன் எடுக்கலனதும் பயந்துப் போயிருப்பாங்க… இப்படியா செய்றது..?”

“ஊருக்குப் பேசலாம் மது.. ஆனா ஊரே பேசக்கூடாது….” என அவன் வம்பிழுத்தான்.

“போங்க…”

“லிஸன் மது… திரும்பத் திரும்ப என்னை சொல்ல வைக்காத.. நான் உன் கூட இருக்கப்போ நானும் நீயும் மட்டும் தான்.. நத்திங் பிட்வீன் அஸ்… நான் இல்லாதப்போ நீ போன் பேசிக்கோ புரியுதா…?” என அவன் மடி சாய்ந்து கேட்கும்போது மறுக்க முடியவில்லை மதுவால்.

ஆனால் இதையே சாக்காய் வைத்து மறு நாள் மதுவை வேலைக்குச் செல்லக் கூடாதென சொன்னபோது மதுவின் மனதில் பெரும் பிரளயமே வெடித்தது… அதுவே அனைத்திற்கும் காரணமாய் கருவாய் ஆகிப்போனது.

ஆட்டம் தொடரும்…!!

இந்த பாட்டு தான் கதை முழுசும் வரும்

விடியோ பார்த்து முடிவு பண்ணாதீங்க....listen to lyricss...and tune.shreya ghosal voice:love:?

thanksssssssssssssssssss alll....next update evening poduren...இங்க நல்ல மழை...பவர் கட்..அதான் போடல...

(y)(y)(y)(y)(y)(y)(y):love::love::love::love::love::love::love:
 
supera pothu story
 
Top