Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 17

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 17:

காலையில் எழுந்து விட்டாலும் வெறித்தப் பார்வையோடு படுக்கையில் அமர்ந்திருந்தான் ராஜ் நந்தன். அதைக் கண்ட மதுரவசனி ,

“என்னாச்சு.. உங்களுக்கு ஒருவாரமா நல்லா தானே இருந்தீங்க…. ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு..?” எனக் கவலையாகக் கேட்க

‘சே… என்னோட கவலையை இவளை பாதிக்க விடறேன்.. அவ சந்தோஷமா இருக்கனும்…’ என்று நினைத்தவன் நொடிப்பொழுதில் புன்னகையைப் பூசி,
“ஒன்னுமில்ல… சும்மா டயர்டா இருந்துச்சு… நீதான் என்னை நைட்ல தூங்க விட மாட்றியே…?” எனக் குறைபட

அவனை விடாமல் முறைத்தவள் அப்படியே பேசாமல் நிற்க

“என்ன முறைப்பு… அப்படி பார்க்கிற..?” என்றபோதும் அவள் அவனை அப்படி விடாமல் பார்க்க அவளை வேகமாக இழுத்தணைத்தவன் அவள் முகம் முழுவதும் முத்தமிட, அவள் அவனின் அணைப்பில் சாய்ந்த வண்ணமே,

“உங்களை முதல் தடவ பார்த்தப்போவே உங்க மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சவ நான்.. உங்க முகம் பார்த்து உங்க உணர்வுகளை எனக்குப் படிக்கத் தெரியும்.. சோ பாடகரா மட்டும் இருங்க.. நடிகரா இருக்காதிங்க… எப்பவும் இப்படி செஞ்சு என்னை திசைத் திருப்பாதிங்க..
சும்மா எல்லாம் எனக்குத் தெரியும்னு திமிர் காட்டக் கூடாது… எங்கிட்ட இறங்கிப் போகறதுல என்ன ஈகோ…?” எனக் காட்டமாகப் பேச

அவளின் கைப்பிடித்தவன், “ரொம்பத் திட்டுறே என்னை…. ஆனா நீ சொன்ன எதுவும் காரணமில்ல… நீ என்னை முதல் தடவையேப் புரிஞ்சிட்டு விட்டுக்கொடுக்கல.. என்னோட கண்ணு சொல்ற செய்தியைப் படிக்கத் தெரிஞ்சதால தான் நீ பாசாகி எனக்குப் பொண்டாட்டியா இருக்கடி….” என்று கொஞ்ச

அவள் அப்போதும் முறைக்க,

“ஊப்ஸ்… உனக்குத் தான் டி பிடிவாதம் திமிர் எல்லாம் என்னை விட ஜாஸ்தி… எல்லாத்திலயும் எனக்கு ஈக்குவள் தான் நீ… இப்ப என்ன… உங்கிட்டச் சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான்… இன்னிக்கு தீபன் பர்த்டே..” என்றான் எந்த வித உணர்ச்சியும் காட்டாத பாவத்தில்.

அவன் சொன்னது சில நொடிகள் அவளுக்குப் புரியவில்லை. புரிந்தப் போது கணவனின் மன நிலைப் புரிந்தது.அவனைப் பாவமாகப் பார்க்க

“கஷ்டமா தான் இருக்கு… இந்த நாளை மறக்க முடியல.. ஒருவேளை இனி வரப்போற வருஷங்கள் மாத்தலாம்.. ஆனா இன்னிக்கு இந்த வீட்டுல இருக்க நிமிஷம் எல்லாமே கண்முன்னாடி வந்து போகுது… ரொம்ப ரொம்ப…….. வலிக்குது மது……….. ஆனா இன்னொரு தடவ இவங்களைப் பிரியற சக்தி எனக்கில்ல மது…. ஆனாலும் என்னோடத் தன்மானத்தையும் இழந்திட்டு என்னால் எதுவும் செய்ய முடியாது… ஏன்னா எனக்கே எனக்குன்னு இருக்கறது அதுதான்…” என்றவனின் தோள் சாய்ந்தவளின் தலைமுடியை ஒதுக்கியவன்,

“நீயும் எனக்கே எனக்கு தான்… உஸ்ஸ்… நானும் நார்மலா இருக்க ட்ரை செய்றேன்… பட்…. இந்த ஒரு வாரம் நார்மலா இருந்தேன்… இந்த நாள் பழசைக் கிளறி…. ரத்தம் வராத குறைதான்.. வெளியே போய் எங்க என்னோட கஷ்டத்தை அதோட வலியை அவங்கக் கிட்ட காட்டிடுவேனோன்னு பயமா இருக்கு… அது மட்டுமில்லாம தீபனோட பிறந்த நாள் அவனுக்கு ஸ்பெஷல் தானே.. அது என்னால கெடக் கூடாது..” என்று சொன்னவன் கணவனின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் ஒற்றியவள் ,

“சூப்பருங்க நீங்க…. என் நந்துன்னா நந்துதான்… ஒன்னும் ஆகாது… நம்மோட எண்ணங்கள் வைஃபை போலவாம்.. நல்லா கனெக்ட் ஆகுமாம்.. யாரையும் காயப்படுத்தக் கூடாதுங்கற உங்க எண்ணம் கண்டிப்பா பலிக்கும்.. சோ நீங்க கவலைப்படாம போங்க.. யார்க்கிட்டையும் எதையும் காட்டிக்காதீங்க….” என்ற மனைவியை ஆதுரமாய்ப் பார்த்தவன்

“இதுக்குத் தான் பொண்டாட்டித் தேவைன்னு சொல்றது… மதும்மா…” என்றவன் அவளைக் கிறக்கத்துடன் அழைத்து அவள் இதழ் நோக்கிக் குனிய,

அவளோ வாயை மூடிக் கொண்டு குளியறைக்குள் புகுந்தவள் வாந்தி எடுத்தாள். சத்தம் கேட்டு பதறிப்போய் வந்தவனின் கரங்களில் வலு இல்லாமல் அவள் சரிய, அவளைத் தூக்கியவன் படுக்கையில் கிடத்தி தண்ணீர் தர

“என்னடா மதும்மா…ஓகேவா..?” எனக் கேட்க

அவன் மடியில் தலையை சாய்த்தவள், “ஒன்னுமில்ல.. உங்களை மாதிரியே உங்க புள்ளையும் படுத்துறான் என்னை… ஆமா பொண்ணு வேண்டாமா.. பையன் தான் வேணுமா? என வினவ

“என்ன குழந்தையா இருந்தா என்ன.... எனக்கு இரண்டுமே ஈக்குவள் தான் டா… ஏன்னா அது என்னோட குழந்தை இல்லையா..?.. எதுனாலும் ஒகே தான்.. நல்லபடியா என்னோடப் பொண்டாட்டியைப் படுத்தி எடுக்காமப் பொறந்தா சரிதான்..” என்று சொன்ன கணவனை நெருங்கியவள்,

“பார்டா…. எப்பவும் என் பிள்ளை தான் முக்கியம்னு சொல்லிட்டு இருப்பிங்க.. இப்ப என்ன என் மேல அக்கறை…?”

அவள் உதடுகளைத் தன் கையால் வருடியவன் , “உன்னை.. உன் மேல அக்கறை இல்லையா… எனக்கு…?… கோவிலுக்குப் போனா நமக்கு ஒரு அமைதி கிடைக்கும்.. கடவுள் இருக்காரு இல்லை அது இரண்டாம் பட்சம்… எந்த ஒரு விஷயமும் நாம செஞ்சாதானே நடக்குது.. அப்போ இவ்வளவு பெரிய உலகத்தை கடவுள்னு ஒருத்தர் ஆட்டி வைக்கிறார்னு தான் எனக்குத் தோணும்.. கடவுள் கிட்ட நம்மை ஒப்படைச்சப் பின்னாடி ஒரு பாதுகாப்பு கிடைக்கும் மது… அதனாலேயே நான் கோவிலுக்குப் போவேன்… எல்லாத்தையும் மறக்க…. அப்படி நான் எல்லாத்தையும் மறக்கறது உங்கிட்ட தான்.. நாட் ஜஸ்ட் செக்ஸ்… நீ என்னை அணைச்சிக்கிட்டாலே போதும்… அது தர நிம்மதி.. பார்வையால் நீ எனக்குத் தர சப்போர்ட்….ம்ம்ம்……..ம்…….து…” என்றவனை அவள் முடிக்க விடாமல் அவன் இதழ்களைத் தம் இதழ்களால் சிறை செய்தாள்.

முத்தங்கள் முடிவுற்ற பின்னே அவன் அவள் முகம் பார்க்கையில் அவள் கண்கள் கலங்கி இருக்க,

“ஏய்.. என்ன மதும்மா…. ஏன் அழற….. நான் தான் இன்னிக்கு ரொம்ப ஓவரா போயிட்டேன்..” எனச் சொல்ல

“நீங்க என்னைக்குத் தான் ஓவர் இல்லை…. எதுல குறைச்சலா இருந்திருக்கிங்க…. என்னால உங்க அளவுக்குக் காதலிக்க முடியல… இவ்வளவு காதலை என்னால தாங்கவே முடியல…. பயமா கூட இருக்கு… இந்த காதல் எப்பவும் கூடவே இருக்கனும்னு..” என உணர்ச்சி வசப்பட்டு பேச

அவள் கன்னமெங்கும் அழுந்த முத்தமிட்டு ,
“அது நான் உயிரோட இருக்கவரை இருக்கும்… சும்மா இப்படி லூசாட்டம் உளறக்கூடாது… நீ ரெஸ்ட் எடு நான் கீழப் போறேன்….” என்றவனின் கைப்பிடித்தவள்,

“ நானும் வரேன்…பசிக்குது…” என

“நான் சாப்பாட்டை எடுத்து வரேன் ..”

“ப்ச்… ரூமல இருந்தா ஒரு மாதிரி இருக்கும்…. நானும் வரேன்… இப்ப பரவாயில்ல..”

“உன்னை… இம்சை… படுத்துற நீ… பிடிவாதம் ஜாஸ்தி டி உனக்கு.. வா..” என அதட்டலாய் சொல்லி விட்டு அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றான் .

அங்கு சென்று பார்த்தால் பிறந்த நாள் என்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. சாப்பாட்டில் கூட எந்த விஷேசமும் இல்லை. எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக அனைவரும் உணவுண்ண, வைரம் தட்டைத் தூக்கிக் கொண்டு ராஜாவிடம் வந்து நிற்க,

“இருங்கம்மா… மது சாப்பிடட்டும்…. இப்ப தான் வாமிட் செஞ்சா… அவ சாப்பிட்டப் பின்னாடி சாப்பிடுறேன்…” எனச் சொன்னான்.
அவரும், “என்னடா மதும்மா… வாந்தியா… இதெல்லாம் சரியாப் போயிடும்.… நான் சூடா இட்லி தரேன் உனக்கு எடுத்துட்டு வந்து…” என்றவர் சுட சுட அப்போது சுட்ட இட்லிகளை எடுத்து வந்து மருமகளுக்குப் பரிமாறினார்.

ராஜாவின் முகமோ யோசனையில் சுருங்கிப் போனது. சாப்பிட வந்து அமர்ந்த ராஜ தீபனோ எப்பவும் போல் பழைய உடையில் இருக்க,

“அப்புறம் இன்னிக்கு என்ன ப்ரோகிராம்டா உனக்கு..?” என ராஜா கேட்க

தீபனோ, “இன்னிக்கு ஷர்மா சார் கூட லன்ச் இருக்கு.. ஆடிட்டரை பார்க்கனும்டா… வேற எதுவும் இல்லை..” எனச் சொன்னான்.

ராஜாவுக்கு எதுவும் புரியவில்லை. இவன் பிறந்த நாளுக்கு என்ன திட்டம் எனக் கேட்டால் இவனோ அலுவல்களைப் பற்றியல்லவா பேசுகிறான்..? அனைவரின் முகமும் சாதாரணமாகவே இருந்தது, மதுவோ மசக்கையிலும் அவள் மன்னவனின் அன்பிலும் மயங்கிப் போன காரணத்தால் இது எல்லாம் அவள் கருத்தில் பதியவில்லை. ஏனோ வெறுங்கையோடு வாழ்த்தவும் ராஜாவுக்கு மனமில்லை. அதனால் வாழ்த்தவும் இல்லை.


ராஜாவுக்கு ஒரு ரெகார்டிங் இருப்பதால் சாப்பிட்ட உடனே அவன் கிளம்பிச் சென்றான். அங்கே அவன் பாடி முடித்தப் பின் தனது அபார்ட்மெண்டுக்குச் செல்ல சொல்ல, ரகுவும் அவ்வாறே செய்தான்.

ராஜாவின் முகத்தில் அத்தனை தீவிரமான யோசனை இருக்க,
“என்னடா…என் முகத்தையே பார்க்கிற ரகு,..?”

“இல்லண்ணா….அது..அ…. நாம வாங்கின ஹோட்டல ஃபுட் ஃபெஸ்ட் வைக்கிறதைப் பத்தி ஜி.எம் பேசனும்னு சொன்னார்.. அதான்… உங்க கிட்ட சொல்லிட்டு…” எனத் திணறினான். பின்னே எதாவது பேசினால் எரிமலையாய் அவன் வெடிப்பானே..

“அப்ப பேசாம.. என்ன ஈர வெங்காயத்துக்கு என்னைப் பார்க்கிற… போ..
பேசு…. அதை உன் பொறுப்பில தானே விட்டிருக்கேன்… சும்மா….
ஏன் டா நிக்கிற. வந்தோமா செய்தியைச் சொன்னோமான்னு இருக்க வேண்டாமா…? போய் ஜிஎம்ட பேசி…எ ன்னவாச்சும் செய்… என்னைத் தனியா விடு..” எனக் கத்த

காரணம் தெரியாவிட்டாலும் ராஜா ஏதோ மனக்கலக்கத்தில் உள்ளான் என்பது இத்தனை ஆண்டுகள் உடனிருந்த ரகுவுக்குப் புரிந்து போனது.

‘இன்னிக்கு என்ன.. அண்ணாவுக்கு இப்படி கோவம் வருது….’ என யோசித்தவனின் மூளையில் அன்றைய நாள் என்ன நாள் என்பதில் நினைவில் வர,

“ஒஹ்.. அதான் அண்ணா.. இப்படி இருக்கிறாரா… வழக்கமா இருக்கறது தான்.. சாயங்காலம் சரியாகிடுவார்… இப்பத் தொந்தரவு செய்ய வேண்டாம்..” என்று மனதில் நினைத்தவன் கிளம்பி வேலையைப் பார்க்கச் சென்றான்.

ராஜாவுக்கு மனம் நிலைக்கொள்ளாமல் தவிக்க, உடனே கீர்த்திக்குப் போன் செய்தான்.

“கீதும்மா…”

“என்ன அண்ணா..?”

“ஏன் டா.. இன்னிக்கு யாரும் தீபனுக்கு விஷ் செய்யல…?”

“ஓஹ்.. இன்னிக்கு அவன் பர்த்டேல…. மறந்துட்டேன் ..” எனச் சொல்ல

“ப்ச்… அவன் அண்ணன் தானே.. எப்படி மறப்ப நீ..?” என அதட்ட

“இல்லண்ணா.. அவனே மறந்து போயிருப்பான்….”

“என்ன…??”

“ஆமாண்ணா….நீ அவன் பிறந்த நாள் அன்னிக்கு தானே போன… அதனால் அவன் கொண்டாடுறதே இல்லை.. அப்படியே சில வருஷம் ஆனதும் நாங்களும் மறந்துட்டோம்… நான் கூட என் பர்த்டேவை பெருசா கொண்டாடுறது இல்லண்ணா… அம்மாவுக்கு என் பிறந்த நாளோ இல்லை… தீபன் பிறந்த நாளோ ஞாபகத்துல இருக்காதுண்ணா.. அவங்க எப்பவும் உன் நினைவா தான் இருப்பாங்க… தீபனும் அவன் செஞ்சத் தப்பால தான் நீங்க வீட்டை விட்டுப் போகக் காரணமாயிட்டோம்னு ரொம்ப மாறிட்டான்.. முன்ன மாதிரி சிரிப்பே கிடையாது.. பிஸீனஸ் பிஸீனஸ்னு அப்படியே சின்சியர் சிகாமணி ஆகிட்டான்…” எனப் புலம்ப
 
கீ….து..ம்..மா…?” என்றவனுக்கு குரல் அப்படி கரகரத்துப் போனது. தொண்டைக்குழியை விட்டு வெளியேக் கொண்டு வர அவ்வளவு சிரமப்பட்டான். மனமெல்லாம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் போட்டிப் போட நிலைக்கொள்ளாமல் தவித்தான். அப்படியே பொத்தென சோஃபாவில் அமர்ந்தவனின் கண்கள் கண்ணீரைப் பொழிய

“அ.ண்ணா..இருக்கியா..?” எனக் கீர்த்தியின் குரலில் கலைந்தவன்

“ஹா….ன்….சொல்லுடா…..அது…ஏன் நீ எங்கிட்ட இதை சொல்லவே இல்ல இத்தனை வருஷமா..?”

“இல்லண்ணா… இதை சொல்லி உன்னைக் கார்னர் செய்ற மாதிரி இருக்கும் இல்ல.. அதுவும் நானே சின்னப்பொண்ணு அப்ப எனக்கு எதுவும் சொல்லத் தெரியல இல்ல…”

“இப்ப மட்டும் மேடம் பெருசாகிட்டியோ.. நீ எப்பவும் என்னோட சின்னப்பாப்பா தான் டா கீது… சரி விடு.. இன்னிக்கு நம்ம தீபன் பர்த்டேவை ஜமாய்க்கிறோம்.. உங்க அண்ணி கிட்ட சொல்லலாம் ஆனா
அவ பாவம் வாமிட் செஞ்சிட்டா காலையில.. நீ எங்க இருக்க… சொல்லு…?” என்றான் பாசக்கார அண்ணனாய்.

“நான் ப்ராஜக்ட் விஷயமா என் ப்ரண்டைப் பார்க்க வந்தேண்ணா.. இப்ப நான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்.”

“ஹே..! இல்ல.. நீ அப்படியே இறங்கி… நம்ம வீட்டுக்குப் பக்கம் உள்ள பேக்கரில வெயிட் பண்ணு. நான் வரேன்.. இரண்டு பேரும் கேக் ஆர்டர் செஞ்சிட்டு தீபனுக்குக் கிஃப்ட் வாங்கிடலாம்..” என உற்சாகமாய்த் திட்டம் தீட்ட,

“வாவ்………… என் பெரியண்ணா பெரியண்ணா தான்..ஐ லவ் யூஊஊஊஊஉண்ணா….சூப்பர்…………… ஆனா ஒன்னுண்ணா அண்ணி வாமிட் செய்யலன்னா மட்டும் நீ அவங்களை வேலை வாங்கிவியா…? நீங்க தான் அவங்களுக்குச் சமைச்சு ஊட்டி விடுவீங்களாமே..” எனக் கிண்டலடிக்க

‘அவளை… கீதுட்ட போய் உளறி வைச்சிருக்கா பாரு… பாவமே பொண்டாட்டின்னு செஞ்சா… என் மானத்தை வாங்குறா..’ என மனைவியை மனதில் வைதவன்

“என் மதுவுக்கு நான் செய்றேன்..அதுல என்ன இருக்கு… உனக்கும் எல்லா வேலையும் செஞ்சுத் தர ஆல் ரவுண்டர் மாப்பிள்ளையாப் பார்ப்போம்டா.. நீ இரு.. அண்ணா வந்து பிக்கப் செய்றேன்..” என்றபடிக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

போகும் வழியில் ரகுவுக்கு அழைத்தவன் ,

“ரகு.. இன்னிக்குத் தீபுக்குப் பர்த்டே டா… ஈவினிங் அவனுக்கு சர்ப்பரைஸ் செய்யலாம் முடிவு பண்ணிருக்கேன்… நீ கண்டிப்பா வரனும்.. இல்லனா ராஸ்கல்.. வந்து அடிப்பேன்.. எல்லா வேலையும் முடிச்சிட்டு… சீக்கிரம் வா எனக்கு நீ இல்லாம எதுவும் ஓடாது..” எனச் சொல்ல

“கண்டிப்பா அண்ணா… நான் இல்லாமையா..? எனக்கு உங்களைத் திரும்பி பழைய ராஜாண்ணாவா பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா..” எனக் கூறவும்

“நீ இல்லன்னா என்னிக்கோ நான் என்னவோ ஆகியிருப்பேன் டா….. அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் மாதிரி இந்த அண்ணனுக்கு நீ டா ரகு..” என உணர்ந்து சொல்ல

“இப்படியே டயலாக் அடிக்காம வேலையைப் பார்க்க விடுங்கண்ணா….”

“உன்னை.. வாடா… சீக்கிரம்..” என்றபடிப் போனை வைத்தான் ராஜ் நந்தன்.

போகும் வழியெல்லாம் பாதை மாறிப் போன வாழ்க்கையும், அது கற்றுத் தந்தப் பாடங்களும் நினைவில் வந்தன. இத்தனை வருடங்களாக எனக்காகப் பிறந்த நாள் கொண்டாடாத என் தம்பி. உயிரணு ஒன்றில்லையென்றாலும் உறவால் இணையாவிட்டாலும் உள்ளத்தால் அவன் என்னை எப்படி உயர்வாக நினைத்தால் இப்படி செய்திருப்பான். அம்மா அவர் எப்போதுமே அவன் நினைப்பில் தான் இருப்பார். முன்னரே அவன் மீது தான் அதிக அன்பு செலுத்துவார். ஆனால் தீபன் அவனுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை, அங்கீகாரம், பாசம் எல்லாத்தையும் தனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறான்.

வீட்டை விட்டுப் போனாலும் விலகல் இருந்தாலும் அவன் விலகவே இல்லை. ராஜா கோபமாகப் பேசினாலும் கூட அத்தனை பொறுமையாகத் தான் இத்தனை ஆண்டுகளில் தீபன் பதிலளித்திருக்கிறான். இன்று வரையில் ராஜா சன் ஆஃப் சுந்தர் ராஜனாகத் தான் அடையாளம் காணப்பட்டு இருக்கிறான். அதுவும் தலைமகனாக..!!
அது எல்லாம் தீபனின் உரிமை… அவனது அங்கீகாரம். ஆனால் அண்ணன் என்றப் பாசத்துக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்தத் தன் தம்பி மீது பாசம் என்பதை தாண்டி மரியாதையும் அவனது பெருந்தன்மைக் கண்டு பெருமையும் உண்டாயிற்று.

அது அவனது பழையக் கசடுகளை மறக்கச் செய்து, இப்போது தம்பியின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உந்துதலைத் தர கீர்த்தியுடன் சென்று கேக்கும் மற்ற பொருட்களும் வாங்கியவன், ஹம்மர் காரை ஒன்றைப் புக் செய்து விட்டு வீடு திரும்பினான்.

வீட்டுக்குள் நுழைந்தவுடனே தாயிடம்,
“ஏன் மா.. அறிவே இல்லையா உனக்கு.. தம்பி பர்த்டேவை ஏன் இத்தனை வருசமா கொண்டாடல…?” எனச் சத்தம் போட

வைரத்தின் முகம் கலங்கி விட, அதைக் கண்ட மதுரவசனி,

“என்ன ஆச்சுங்க… எதுக்கு சத்தம்.. அமைதியாப் பேசுங்க.. அத்தை பாவம்..” என வைரத்துக்கு ஆதரவாய்ப் பேச

“ம்ம். சொத்த பாவம்டி… அப்போ என் தம்பி பாவம் இல்ல… காலையில அவன் சாதா ட்ரஸ் போட்டிருக்கான்.. எல்லா பிள்ளைகளையும் ஒண்ணா நினைக்கனும்… அவன் பொறந்த நாள் ஒரு கேசரி கூடக் கிண்டல…” எனப் பொரிந்து தள்ள

“இவ்வளவு பேசுறீங்களே… நீங்க அவருக்கு விஷ் பண்ணீங்களா…?” என மதுரவசனி இவன் அலப்பரைத் தாங்காது கேட்க

“என் தம்பி பிறந்த நாளைக் கொண்டாடத் தான் நான் கேக் ஆர்டர் பண்ணிருக்கேன்.. நான் நைட் டின்னருக்கு ஆர்டர் பண்ணிட்டேன்மா… நீ சமைக்க வேண்டாம்… அப்புறம் கீதும்மா நீ உளறி வைக்காத…”

“ஹே…! மது வா.. நீ ஜூஸ் குடிச்சியா… அம்மா குடிச்சாளாம்மா…?”

“குடிச்சிட்டாப்பா… எனக்கு இப்ப எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா.. என் புள்ளை எனக்கு முழுசா கிடைச்சிட்டான்…” எனப் புன்னகைக்க,

“சரிம்மா.. மது.. வா வந்து தூங்கு…” எனக் கூப்பிட அவள் பாவமாய் மாமியாரைப் பார்க்க

“டேய்… ராஜா.. பாவம்டா.. சும்மா தூங்கச் சொல்லாத… குழந்தை மந்தமா போயிடும்… நல்லா வேலை செய்யனும்… நடக்க விடு.. அவளை..” என வைரம் மகனிடம் சொல்ல

“இல்லமா… சாயங்காலம் பார்ட்டி இருக்குல்ல… நைட் சாப்பிட்டு பேசுவோம்.. இவ தூங்க லேட்டாகிடும். இப்ப வெயில்ல நடக்க வேண்டாம்.. நாலு மணிக்கு எழுப்பி நடக்க விடுறேன்.. இப்ப தூங்கட்டும்… பாவம் காலையில வாந்தி..” எனச் சொல்ல

அதற்கு மேல் மகனிடம் பேச முடியாதே வைரத்தால். அவன் பிடிவாதம் அப்படிப்பட்டது ஆயிற்றே. ஆகையால் புன்னகையோடு நகர்ந்துவிட்டார்.

மாலையில் தீபன் களைத்துப் போய் ஏழு மணியளவில் வீடு திரும்பும் போது வீடே இருட்டாக இருக்க, இவன் உள்ளே நுழைந்த உடனே வீடு முழுக்க வெளிச்சமாக

“ஹேப்பி பர்த்டே தீபன்………” என அனைவரும் கோரசாகக் கத்த

தீபனுக்கு அதைக் கிரகிக்கவே சில நொடிகள் தேவைப்பட,

ராஜா அவன் தோளில் கைப்போட்டு,

“டேய்.. தம்பி.. வாடா.. கேக் வெட்டு..” எனக் கூப்பிட

அவனை அணைத்துக் கொண்ட தீபன், “அண்ணா…” என அழ

“டேய்… பர்த்டே அதுவுமா அழாதடா..” என ராஜா சமாதானம் செய்ய

“போடா… ஏன் டா.. நான் என்ன தப்பு செஞ்சேன்.. தெரியாம சரக்கடிச்சிட்டேன்.. இன்னிக்கு வர நான் அதைத் தொடுறது இல்ல தெரியுமா.. இவ கிட்ட பேசுவ இல்ல நீ.. நானும் உன் தம்பி தானேடா.. எங்கிட்ட ஏன் டா எப்ப பாரு முறைச்சிட்டே திரிஞ்ச… ஐ மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…யூடா அண்ணா….” எனச் சின்னப்பிள்ளையாய் அழ

“சாரி… சாரி… ரியலி சாரிடா.. தீபுக்கண்ணா…. அண்ணாவை மன்னிச்சிடுடா..” என ராஜாவும் விடாமல் அரற்ற,

மதுரவசனிக்கோ ‘துரை எங்கிட்ட கூட சாரி கேட்டதில்ல… தம்பிக்கிட்ட எப்படி கேட்கிறார்… இதுல முறைச்சிட்டுத் திரியிற மாதிரி சீன் போடுவார்… ஹும்கும்….’ என மனதினுள் நொடித்துக் கொண்டாள்.

சுந்தரம் தான், “டேய்.. என் பிள்ளைங்க வளர்ந்துட்டாங்கன்னு நினைச்சா… இன்னமும் பச்சப்புள்ள மாதிரி ரெண்டு தடிப்பசங்களும் அழறிங்க… இவன் என்னடான்னா வளர்ந்தவனுக்குக் கேக் வாங்கி வைச்சிருக்கான்… போ.. போய் வெட்டு டா சின்னவனே..” என அவர் சொல்ல

“விடுடா.. தீபு… என் தம்பி நான் செய்றேன்.. இவருக்குப் பொறாமை… நீ வா” என அழைத்துச் சென்று கேக் வெட்டினான். கீர்த்திக்குத் தன் அண்ணன் பழையபடி வந்தக் காரணத்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்தப் பின் இரவில் அண்ணனும் தம்பியும் பேசும்போது ,

“ஏன் டா… தீபு….இத்தனை வருஷம் பர்த்டே கூட நீ கொண்டாடாம எனக்காக இருந்திருக்கா.. ஆனா நான் என்னோட திமிரைப் பிடிச்சிட்டேத் தொங்கிட்டு இருந்தேன்… ஐ அம் சாரி…” என மனமுவந்து மன்னிப்புக் கோர

“அய்யோ.. விடுடாண்ணா… உன் மேல தப்பு ஒன்னுமில்ல.. நான் மட்டும் ஒழுங்கா வீடு வந்து சேர்ந்திருந்தா அன்னிக்கு எதுவுமே நடந்திருக்காது… அதான் என்னோட குற்றவுணர்ச்சியைத் தூண்டி விட்டுச்சு… நானும் உன்னோடவே வீட்டை விட்டு வந்திருப்பேன்.. ஆனா அன்னிக்கு நடந்த அதிர்ச்சி.. தாத்தாவோட ஹெல்த், அம்மாவும் ஹாஸ்பிட்டல் போக வேண்டியதாப் போச்சு… அதுக்கு அப்புறம் வீட்டோட நிலைமை சுத்தமா மாறிப்போச்சு.. எல்லாருக்குள்ளும் ஒரு இறுக்கம். .இப்ப எதுக்கு அதைப் பத்தி பேசிட்டு விடு…. ஆனா உன்னோட அறைனால இன்னிக்கு பிஸீனஸ் பார்ட்டில கூட நான் தண்ணியடிக்கிறது இல்ல.. ஆனா எனக்கே இன்னிக்கு பர்த்டேன்னு மறந்துச்சுப்போச்சு.. வழக்கம்போல நீ கலக்கிட்ட டா.. என் அண்ணான்னா அண்ணா தான்..” என அணைத்து விடுவித்தான்.

இரவில் மனைவியிடம் வந்த ராஜா,

“மதும்ம்மா…” எனக் குதூகலத்தோடு அழைக்க

“என்னங்க சார்…? ஒரே குஷி போல..?” என அவளும் துள்ளலோடு கேட்க

“பின்ன இருக்காதா… காலையில இந்த நாள் ஆரம்பிச்சது எப்படி…? இப்ப முடியும்போது எப்படி இருக்குப் பாரேன்.. காலையில விட்டா ஓன்னு அழுதிருப்பேன்.. அவ்வளவு மனசுக்குள்ள வேதனை.. இப்ப ஆனா லேசா இருக்குடி.. தீபன் மாதிரி தம்பி கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கனும்.. எனக்காக அவன் இத்தனை வருஷம் அவனோட பிறந்த நாள் கூட கொண்டாடல… இந்த கீது கூட என் பர்த்டேக்கு விஷ் பண்ணுவா.. இவன் பர்த்டேவ மறந்துட்டாளாம்.. எல்லாத்துக்கும் மேல எங்கம்மா…. கடவுள் எனக்கும் ஆசிர்வாதம் செய்றார் தான்… இதெல்லாம் blessing in disguise போல…. வாழ்க்கையில எது வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் நடக்கலாம் இல்ல.. அவனோட அந்த பிறந்த நாள் சந்தோஷத்தில ஆரம்பிச்சு துக்கத்துல முடிஞ்சது.. இது துக்கத்துல ஆரம்பிச்சு ஹாப்பியான எண்டிங்…. முதல்ல என் மது…. நெக்ஸ்ட் நம்ம குழந்தை… இப்ப நம்ம குடும்பம்…. உஸ்ஸ்ஸ்…. ரொம்ப ஹாப்பியா இருக்கேன் டி பொண்டாட்டி…. இன்னிக்கு நான் நிம்மதியா தூங்குவேன்..” என்றவன் அவள் தோளில் முகம் புதைத்து உறங்கினான்.

*********************************************************************
 
ஒரு மாதம் கடந்த பின்..

“who is he who is he?

Why he came..?
Laughing…..admiring for me and me…
What happened to me..?
I don’t know..
My breath ‘ s fever didn’t reduce

I am caught….!!”
என படிக்கட்டுகளில் துள்ளிக்குதித்த வண்ணம் பாட்டு பாடிக்கொண்டே குதித்தாள் கீர்த்தி.

அவள் செய்யும் சேட்டைகளைப் பார்த்த மதுரவசனி,
“என்ன பாட்டு இது கீர்த்தி… நீ இங்கிலிஷ் பாட்டு கூட கேட்பியா..?” என விசாரிக்க

“அய்யோ அண்ணி.. இது எங்க ப்ரண்ட்ஸ்லாம் சேர்ந்து தமிழ் பாட்டை இங்கிலிஷ்ல ட்ரான்ஸ்லேட் செஞ்சு விளையாடுவோம்..." என விளக்க

“அப்படின்னா.. ஹூ இஸ்..ஹி…?” என நாத்தானாரைக் கிண்டலடிக்க

“அய்யோ போங்கண்ணி. .யாருமில்ல” என வெட்கப்பட்டுக் கொண்டே சென்றவளைப் பார்த்த சுந்தரத்துக்கு மகளுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

ராஜ் நந்தனை அழைத்தவர் ,

“சாப்பிட்டியா ராஜா..?” எனக் கேட்டார்

“சாப்பிட்டேன்பா… என்ன விஷயம்.. தனியா கூப்பிட்டு இருக்கீங்க..?”

“அது நம்ம கீர்த்தி படிச்சி முடிச்சிட்டா இல்ல… ரிசல்ட் வரப்போ வரட்டும்… என்னோட ப்ரண்ட்.. வேதசுப்ரமணியம் இருக்கான் இல்ல.. அவன் பையன் சுரேந்தருக்கு நம்ம கீர்த்தியைக் கேட்டான்…. சுரேந்தர் நான் பார்த்து வளர்ந்த பையன்…. எம்பிஏ முடிச்சிட்டு அவங்க அப்பா பிஸீனஸ்ல இன்ட்ரெஸ்ட் இல்லாம தனியா பிஸீனஸ் செய்றான்.. ரொம்ப நல்ல பையன் டா.. அதான் இவளுக்குப் பார்க்கலாம்னு தோணுது.. எனக்கு அப்புறம் நீதான் இவங்க இரண்டு பேரையும் பார்க்கனும்.. சீக்கிரமே அவளுக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்டா.. நீ என்ன சொல்றா.. உனக்குத் தெரிஞ்ச நல்ல வரன் இருந்தாலும் சொல்லு…” என மகனிடமும் ஆலோசனைக் கேட்க
“என்னப்பா.. கீது குழந்தை இல்ல…?”

“என்ன ராஜா நீ… அவள் காலேஜ் முடிச்சிட்டா…”

“சரிப்பா.. உங்க இஷ்டம்.. நானும் சுரேந்தர் பத்தி விசாரிக்கிறேன்.. நம்ம கீது வாழ்க்கை.. அதனால் கொஞ்சம் யோசிச்சே செய்யலாம்பா.. வேற நல்ல வரன் இருந்தாலும் பார்ப்போம்..” எனச் சொல்ல

“இதுக்குத்தான் டா உன்னைக் கேட்கனும்… நல்லா யோசிச்சு செய்.. நீ கீதுக்கு என்னை விட நல்லா செய்வேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றவரின் பேச்சிலும் கண்களிலும் தெரிந்த நம்பிக்கையில் ராஜாவுக்கு கர்வமாய் இருந்தது.

“அப்புறம் ராஜா… அப்பாவுக்கு வயசாச்சுடா… தீபனே எல்லாத்தையும் பார்த்துக்கிறான்… என்னடா அப்பா இப்ப கூப்பிடுறார்.. முன்னாடி வராதேன்னு சொன்னவர் தானேன்னு நினைக்காதடா… நீயே சொல்லு.. நாளைக்கு உன் புள்ளை சொல்றானு அப்பாவை விடுவியா…? சீக்கிரமே கம்பெனிக்கு வந்து சார்ஜ் எடுத்துக்கோப்பா..” எனச் சொல்ல

“கொஞ்சம் டைம் கொடுங்கப்பா” என மென்மையாக அவன் சொல்ல, அவரும் சரி என்றார்.

அதன்பின் அன்று மதுவுக்கு செக்க அப் இருப்பதால் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான் ராஜா.

மருத்துவர் சோதனைகள் செய்தப்பின் குழந்தை நலமாக இருப்பதாக சொல்ல, மனைவியை வெளியே விட்டு விட்டு அவன் மருத்துவரிடம் அவளை எப்படி பார்த்துக் கொள்வது எனக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு வர, மதுவோ அங்குள்ள சோஃபாவில் தூங்கிக் கொண்டிருக்க,

“ஏய்.. மது.. என்னமா செய்யுது..?” என அவன் அக்கறையாகக் கேட்க

“உம்ம்.. வந்தாச்சா… தூக்கம் வந்துடுச்சு…” எனத் தூக்கக் கலக்கத்தோடு சொல்ல

“ப்ச்.. இதுக்குத் தான் நல்லா சாப்பிடச் சொல்றது… பாரு அதுக்குள்ள டய்ர்ட் ஆகி தூங்குற..” எனக் கணவன் கவலைக் கொள்ள

“உங்களை… உள்ளே போய் அரைமணி நேரமாச்சு.. பாவம் டாக்டர் காதுல ரத்தம் வந்திருக்கும்… சும்மா எல்லாரையும் நொச்சுப் பண்ணாதிங்க…” என அதட்ட

“ஹே! என்ன நான் ஃபீஸ் கட்டுறேன்… டவுட் கேட்கிறேன்….. என் பொண்டாட்டியும் பிள்ளையும் எப்படி ஜாக்கிரதையாப் பார்க்கிறதுன்னு கேட்டா என்ன தப்பு… அப்படியே தப்புன்னாலும் நான் கேட்பேன்…. சரியா… நீ.. வா…” என அவள் கைப்பிடித்து அழைத்துச் செல்ல, வழக்கம்போல் அவன் காதலில் கரைந்தே போனாள் காரிகையவள்.

அவனோடு காரில் செல்கையில் ராஜா கீர்த்திக்கு மாப்பிள்ளைப் பார்ப்பதை பற்றி சொன்னான்.

“வாவ்.. சூப்பர்ங்க….” என அவள் மகிழ
“ப்ச்… இல்ல நானும் வரதுக்கு முன்னாடி கீதுட்ட இது பத்தி பேசினேன்… ஆனா அவ சொன்னது தான் இடிக்குது…”

“என்ன..?”

“அவளுக்கு உங்கண்ணா சரணைப் பிடிச்சிருக்காம்…”

“ஓஹ்… பாருடா… ஒரே நாள்ல லவ்ஸாமா.. அதுல என்ன இடிக்குது உங்களுக்கு சரணுக்கு என்ன ஓட்டை…?”

“ஓட்டையும் இல்ல… ஒன்னுமில்ல.. ஆனா என் தங்கச்சிக்கு எப்படி உங்கண்ணா செட் ஆவான்.. அவன் அன்னிக்கே அப்படி கத்துறான்… அது மட்டுமில்லாம அவ சிட்டியில வளர்ந்த பொண்ணு… அதான்..” என்று சொல்லி முடிக்கவில்லை .. சீறி விட்டாள் மது.

“என்ன சிட்டி.. சிட்டினா…? நான் இங்க வந்து இல்ல… என்ன கத்துறான் அவன்….. அவளைக் காப்பாத்தத் தானே செஞ்சான்….” என அண்ணனுக்காக வாதாட

“மதும்மா.. ப்ராக்டிகலா யோசி… நீ ரொம்பப் பொறுமைசாலி நான் செய்றத பொறுத்துப்பா.. கீர்த்தி அப்படி இல்ல… ரொம்ப செல்லம்… அதான்.. உங்க வீட்ல எல்லாரும் வேலை செய்யனும்.. இவளுக்கு சமைக்கவே தெரியாது.. ஆனா அவ எங்கிட்ட கெஞ்சுறா… சரண் வேணும்னு..” எனப் பொறுமையாகவே மனைவியிடம் சொல்ல

“ஹ்ம்ம்ம்… முதல்ல சரணுக்கு இப்ப கல்யாணம் செய்வாங்களா…அதை யோசிங்க…” என மது சொல்ல

“செய்ய வைப்பேன் மது..” என்றவனின் முகத்தில் அதை செய்து காட்டும் தீவிரம் இருக்க, அதைக் கண்ட மதுவுக்கு இதனால் எந்த பிரச்சனையையும் இவன் இழுத்துக் கொள்ளக் கூடாதே என்ற கவலை மிகுதியாக இருந்தது.

ஆட்டம் தொடரும்…!!!

-----------------------------------------------------------


Heyyyyyyyyyyy friendsss.
Last update was one of my favorite one.....and அசோகர் கதை கூட it was true.நமக்கு தெரிஞ்சு அசோகர் ஒரு மாவீரர் அது தான் கதைகள்ல இருக்கும்...அதுக்கு பின்னாடி இருக்க இந்த சம்பவம் உண்மை..
வெறுக்கறவங்களை அழிக்க முடியும்..வெறுப்பை அழிக்க முடியாது உண்மைதானே?
then you ll find peace when you ll accept the apology you ve never got..

எனக்கு ரொம்ப பிடிச்ச லைன்ஸ்....


அப்படியே who is he எந்த தமிழ் பாட்டுன்னு கெஸ் செய்யுங்க பார்ப்போம்...எனோட ப்ரண்ட் அப்படிதான் பாடுவா....lets see who ll find
thanksssssssssssssssssssssssssss allll for ur wordsss...and the love for raja rani has never faded in these yearsss❤
 
Hi kaa.. vanthuten.. kandupidichiten.. ???

Ivan yaaro ivan yaaro vanthathu etharkaaga song.. ???

Akka sema ud.. dei romba overa pora.. enga mathuva paarthu enna vaarthai sollitta poruma saaliya.. ?? podaaa.. nee mattum konjittu irukuratha ninaippa neeyum kathittu thaana daa iruka mukkaalvaasi neram.. ?‍♀️?‍♀️?‍♀️ ellam en neram
 
Last edited:
Top