Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 1

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 1

டிங் டிங் டிங் என்று பள்ளி முடிந்ததை தெரிவிக்கும் மணி அடிக்க, கூட்டைக் கலைத்த தேனீக்களாய் சிதறி ஓடினார்கள் மாணவிகள்.
வெள்ளை சட்டையும், நீல பாவாடைகளும், சிகப்பு ரிப்பன்களுமாய் அவர்கள் ஓடுவதைப் பார்க்கவே ரம்யமாக இருந்தது. ஆளாளுக்கு கையில் அவர்கள் வசதிப்படி புத்தகப் பை வைத்திருந்தனர். வசதி குறைந்தோர் மஞ்சள் பையும், மற்றவர்கள் வயர் கூடை, வசதி படைத்தோர் ட்ரன்க் பெட்டி என்று கைகளை வீசியபடி ஓடியும் நடந்தும் சிரித்தும் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களைக் குறி வைத்து ஐஸ்பெட்டி காரன் நின்றிருந்தான். அவனையும் அவனது சைக்கிளை சுற்றியும் ஒரு கூட்டம். நெல்லிக்காயை அரிந்து உப்பு நீரில் போட்டு வைத்தும், மாங்காயை அரிந்து மிளகாய்ப் பொடி தூவியும், கல்கோனா, பால்கோவா, தேங்காய் மிட்டாய் என்று தனித்தனி ஹார்லிக்ஸ் டப்பாக்களில் போட்டு வைத்திருந்த பாட்டியைச் சுற்றி ஒரு தனிக் கூட்டம்.
'பாட்டி! ரெண்டு கல்கோனா!'
'பாட்டி! தேங்கா மிட்டாய் அஞ்சு!'
'பாட்டி! மாங்கா ஒண்ணு கொஞ்சமா மொளகாப் பொடி தடவி!'
'பாட்டி எனக்கு ஒரு டம்ளர் நெல்லிக்கா'
கலவையாய் குரல்கள் கேட்க நரைத்த முடியை கோடாலிக் கொண்டை போட்டு மெலிந்த விரல்களால் அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களை விசாரித்துக் கொண்டே கொடுத்து அவர்கள் தரும் காசை தன் பக்கத்தில் வைத்திருந்த ஒரு சுருக்குப் பையில் போட்டு பாதுகாத்துக் கொண்டிருந்தாள் அந்த முதியவள்.
'பாட்டி! நாளைக்கு அஞ்சு பைசா தரேன். இந்த அஞ்சு பைசாவ வச்சுகிட்டு பத்து பைசாவுக்கு நெல்லிக்கா தாயேன்.'
நிமிர்ந்தாள் பாட்டி.
'யாரு கல்யாணியா? அஞ்சு பைசா நெல்லிக்காவெ ஒனக்கு பத்துமே'
'இல்ல பாட்டி என் கூடப் படிக்கிற புள்ளைக்கும் சேத்து.'
பாட்டி புருவத்தை முடிச்சிட்டாள்.
'யாரு இது புதுசா இருக்கு? ஒன் கூட படிக்கிற புள்ளயா? நீ யார் கூடவும் சேர மாட்டியே! ஒத்தக் கொரங்கா தான வருவ? ஒன்ன ஒண்ணாம் க்ளாஸ்ல இருந்து பாக்கறெம்ல. இதென்ன மூணாங்கிளாஸ்ல ஒனக்கு கூட்டுக்காரி கெடச்சிட்டாளா?'
கல்யாணி தன் அரிசிப் பற்களை காட்டினாள்.
'ஆமாம் பாட்டி! போன வாரம் தான் ஸ்கூலுக்கு வந்தா. நம்ம ஊருக்கு புதுசா வந்துருக்கற மேரி டீச்சரோட பொண்ணு. நல்லா படிக்குறா. என் கூட ரொம்ப நல்லா பழகுறா.'
பாட்டி மற்ற குழந்தைகளை கவனித்துக் கொண்டே இவளிடம் பேச்சு கொடுத்தாள்.
'அது சரி! நீ தான் ஒருத்தர் கூடயும் சேர மாட்டியே! டீச்சர் அடிச்சத கூட என் கிட்ட வந்து தான சொல்லுவ. இப்ப இவ கூட எப்படி சேந்த?'
'அதுவா பாட்டி! அது ஒரு பெரிய கத. சொல்றேன்.' அவள் மூணாம் க்ளாஸ் மொழியில் சொன்ன ப்ளாஷ் பேக் இது தான்.
போன வாரம்...
'நான் தான் உங்களுக்கு புதுசா வந்துருக்கற க்ளாஸ் டீச்சர். என் பேரு மேரி.'
நைலக்ஸ் சேலையில் பெரிது பெரிதாய் பூ போட்டிருக்க டீச்சரின் நிறம் கருப்பாக இருந்தது. முகத்தில் பொட்டு இல்லை. தலையில் எண்ணெய் வைத்து வழித்து சீவி இருந்தார். ஆள் உயரமும் இல்லாத கட்டையும் இல்லாத நடுத்தரம். அவர் பக்கம் அவரை நகல் எடுத்தது போல் ஒரு சிறுமி நின்றிருந்தாள். அதுவும் அவ்வாறே தலையை எண்ணெய் வழிய சீவி இருந்தது. வெள்ளை சட்டையும், நீலப் பாவாடயும் அணிந்திருந்து தலையில் இரட்டை ஜடை பின்னி சிகப்பு ரிப்பன் வைத்திருந்தது. ஒரு வெள்ளை ரோஜா ஒரு பின்னலில் சொருகி இருந்தது. தரையோடு தரையாய் இருந்த பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த சிறுமிகளை சிறு மிரட்சியோடு பார்த்தது.
கல்யாணியின் பின்னால் உட்கார்ந்திருந்த விமலா அவள் பக்கத்தில் இருந்த சிறுமியிடம் சொல்வது கல்யாணியின் காதில் விழுந்தது.
'அங்க பாருடி! பொட்டி வச்சிருக்கறா. அழகா இருக்குல்ல.'
கல்யாணி அந்தச் சிறுமியின் கையைப் பார்த்தாள். ஆமாம். கையில் வெள்ளை நிற பெட்டி வைத்திருந்தாள். டீச்சர் தொடர்ந்தார்
'இவ பேரு நித்யா. என் பொண்ணு. இவளும் ஒங்க வயசு தான். நம்ம க்ளாஸ்ல தான் படிக்கப் போறா. உங்களுக்கு இவ பிரண்டு சரியா?'
எல்லா குழந்தைகளும் தலையாட்டின.
'நித்யா, தோ அந்த ரெண்டாவது பெஞ்சில போயி உட்காரு.'
அந்த நித்யா மெதுவாய் ரெண்டாவது பெஞ்சைப் பார்த்தது. அங்கு தான் கல்யாணி உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் மட்டும் தான் இடம் இருந்தது. ஒரு பெஞ்சில் இருவர் அமர்ந்திருந்தனர்.
நித்யா மெதுவாய் நகர்ந்து அந்த கல்யாணியை மிரட்சியுடன் பார்த்து விட்டு அந்த பெஞ்சின் மூலையில் சம்மணமிட்டு உட்கார்ந்தாள்.
பின்னால் இருந்த விமலா கிசுகிசுத்தாள்.
'போயும் போயும் இந்த குரங்கு கிட்ட உட்காரப் போறா?'
கல்யாணி சட் என்று திரும்பி அந்த விமலாவின் மண்டையில் ஒரு கொட்டு கொட்டினாள்.
'யாருடி குரங்கு? நீ குரங்கு. ஒங்க அம்மா குரங்கு. ஒங்க அப்பா குரங்கு. ஒன் குடும்பமே குரங்கு.'
அந்த விமலா அழுது கொண்டே எழுந்தாள்.
'டீச்சர். கல்யாணி கொட்டிட்டா.'
தலையை தடவிக்கொண்டே கண்ணீர் விட்டாள்.
மேரியின் முகத்தில் சட் என்று கோபம் வந்து குடியேறியது.
'ஒம் பேரென்ன கல்யாணியா? எழுந்திரு.'
கல்யாணி பயப்படாமல் எழுந்தாள்.
'எதுக்கு அவள கொட்டுன?'
விமலாவின் பக்கத்தில் இருந்த சிறுமி முன்வந்தாள்.
'எதுக்கு இவ பக்கத்துல ஒங்க பொண்ணு உட்காரான்னு. இவ மோசமான பொண்ணாச்சேன்னு என் கிட்ட சொன்னா டீச்சர். அது காதுல வுழுந்து அவள கொட்டிட்டா டீச்சர்.'
கல்யாணி ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள் மேரி அதட்டினாள்.
'அவ என்னமோ சொல்லட்டும்? அதுக்கு கொட்டுறதா?'
டீச்சர் கண்களை உருட்ட மௌனமானாள் கல்யாணி.
'இங்க வா!'
அவள் மெதுவாய் நகர்ந்து டீச்சர் இருந்த டேபிள் பக்கமாய் சென்றாள்.
'கைய நீட்டு.'
அவள் விறைப்பாய் நின்றாள்.
'தப்ப பண்ணிட்டு கைய நீட்டுன்னா நீட்ட மாட்டேங்கற?'
மேரி முறைத்தாள். கோபத்தில் எழுந்து கல்யாணியின் அருகில் குச்சியோடு வந்தாள்.
நித்யா டக் என்று பக்கத்தில் வந்தாள்.
'அம்மா! அவ மேல தப்பில்ல. அந்தப் பொண்ணு தான்(விமலாவைக் கை காட்டினாள்) இவள கொரங்குன்னு சொன்னா.'
மேரி நித்யாவை முறைத்தாள்.
'ஸ்கூல்ல என்ன அம்மான்னு கூப்டாதேன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்?'
'சாரிம்மா. சாரி சாரி டீச்சர். அந்தப் பொண்ணு தான் இவள கொரங்குன்னு சொன்னா. நான் கேட்டேன்.'
மேரி கல்யாணியிடம் திரும்பினாள்.
'அப்படியா?'
அவள் மெல்ல தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
'சொல்ல வேண்டியது தானே? ஏட்டி நீ இவள கொரங்குன்னு சொன்னியா?'
மேரி விமலாவிடம் திரும்ப, அவள் 'அது ... டீச்சர்..' என என்ன சொல்லலாம் என்று யோசிக்க, மேரிக்கு புரிந்து விட்டது.
'அவளும் ஒண்ண மாதிரி புள்ள தானே. அவ மனசு நோகற மாதிரி பேசலாமா? நீ கேட்டதுக்கும் அவ கொட்னதுக்கும் சரியாப் போச்சு. ஒக்காரு'
அவளும் அவளது பக்கத்தில் இருந்த சிறுமியும் கல்யாணி அடியில் இருந்து தப்பித்து விட்டாளே என்ற எரிச்சலுடன் நித்யாவை முறைத்தவாறு உட்கார்ந்தனர்.
மேரி கல்யாணியிடம் திரும்பினாள்.
'அவ அப்படி ஒன்ன சொன்னது தப்பு தான். ஆனா நீ அவள அடிக்க உரிம கிடயாது. நான் எதுக்கு இங்க இருக்கேன். டீச்சர் இவ என்ன இப்படி சொல்றானு சொல்ல வேண்டியது தான? இனி இப்படி நடந்துக்கக் கூடாது சரியா?'
கல்யாணி சரி என்பது போல் தலையாட்டி நித்யாவை நன்றியாய் பார்த்தாள்.
மேரி டீச்சர் எல்லாரையும் வாய்பாடு சொல்லச் சொல்ல ஒவ்வொருத்தராய் எழுந்து வாய்பாடு சொல்லினர். ஒழுங்காய் சொல்லாதவர்கள் கையில் ஒரு அடி கொடுத்தார். கல்யாணியும், நித்யாவும் மட்டுமே அடி வாங்காதவர்கள்.
மேரி டீச்சர் கல்யாணி படிக்கிற பெண் என்று புரிந்து கொண்டார்.
லஞ்ச் மணி அடித்தது. டீச்சர் வெளியேறியதும் அனைவரும் சத்துணவு அறைக்கு ஓடினர். கலைந்து கிடந்த தட்டுகளை எடுத்து பெரிய அண்டாவில் வைத்திருந்த தண்ணீரில் மக்கை எடுத்து கழுவி விட்டு வராண்டாவில் வரிசையாய் அமர்ந்தனர். நித்யா கல்யாணி அருகில் வந்து அமர்ந்தாள்.
சத்துணவு ஆயா சூடாய் சோறு போட்டு சாம்பார் ஊற்ற அதைப் பிசைந்து வாயில் போட்டுக் கொண்டார்கள் குழந்தைகள்.
அது பெண் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் எலிமெண்டரி ஸ்கூல். ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் மட்டுமே இருந்தன. ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் ரெண்டு பேர் அந்த வராண்டாவில் குழந்தைகள் சண்டை இல்லாமல் சாப்பிடுகின்றனரா என்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது ஆயாவுக்கு உதவியும் செய்தனர்.
நித்யா கையில் வைத்திருந்த பேப்பர் உருண்டையை நீக்கினாள். தேக்கு இலையில் வைக்கப்பட்டிருந்த நாரத்தை ஊறுகாய். மணம் தூக்கியது. அதில் இருந்து கொஞ்சம் எடுத்துப் பார்த்தாள். அது நசிய மறுத்தது. அதை எடுத்து பல்லால் கடித்து பாதியை கல்யாணியின் தட்டில் வைத்தாள்.
'இதத் தொட்டு சாப்புடு. நல்லா இருக்கும்'.
சிறிது தயக்கத்துடன் அதை எடுத்து சாம்பார் சாதத்துடன் தொட்டு சாப்பிட்டாள் கல்யாணி. நாக்கை சப்புக்கொட்டிக் கொண்டாள். இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு தட்டு கழுவச் சென்றனர். அந்த வரிசையில் கல்யாணி முன்னால் இருக்க அவளின் பின் நித்யா. நித்யாவின் பின் விமலா. விமலா 'ஸ்..ஸ்..' என்றாள்.
எச்சக் கையுடனும் தட்டுடனும் திரும்பிப் பார்த்தாள் நித்யா.
'நித்யா! அவ கூட சேராத. அவங்கம்மா இந்த ஊர்ல கெட்ட பொம்பள' என்றாள்.
(தொடரும்)

Nirmala vandhachu ???
Best wishes for your new story
 
Best wishes for this new story ? ? ?
உங்க கதையே எப்போதும் ஒரு வித்யாசமான கதைகளம் தான். சூப்பர்.
நித்யா கல்யாணி நட்பு ஆரம்பம் ஆகிடுச்சு. பழைய பள்ளி வாழ்க்கை அழகு
அருமையா்ன ஆரம்பம்(y)?:D
 
என்னடா இது
ஆரம்பமே ரொம்ப விவகாரமா
இருக்கு
 
Top