Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 14 full episode

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 14

நித்யா விழித்தாள்.
அம்மாவுக்கு ப்ராங்க்ளின் மேட்டர் தெரிஞ்சுருச்சோ!
தலை குனிந்தபடியே அவர்களைப் பின் தொடர்ந்தாள்.
மேரி டீச்சர் சொன்னார்.
'இந்த நெருப்புக்கோழி இருக்குல்ல. அத ஆளுக தொரத்திட்டு வந்தா வேகமா ஓடுமாம். தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்சது ஒரு குழி தோண்டி தன் தலைய அதுல வுட்டுக்குமாம். தான் யாருக்கும் தெரிய மாட்டோம்னு அதுக்கு ஒரு நம்பிக்க. ஆனா அதோட ஒடம்பு காட்டி குடுத்துடுமே. அந்த மாதிரி சிலருக்கு தான் நடந்துக்கறது மத்தவங்களுக்கு தெரியாதுன்னு நெனப்பு.'
ரவி தான் பேசினான்.
'ப்ராங்க்ளின் நித்யாவ தீவிரமா விரும்புறான் டீச்சர்.'
'தெரியும். என் பொண்ணு தூக்கத்துல ஒளர்றதும், சிரிக்கிறதும் ப்ராங்க்ளின பாத்ததும் பத்து தடவ கண்ணாடி முன்னால போயிட்டு வர்றதும் தெரியாமலா நான் இருக்கேன்? எட்டியே பாக்காத அவனும் எத்தன தடவ இங்க வந்துட்டு போயிட்டான்? ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு யாரும் சொல்லித் தரணுமா என்ன? சரி நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் மெடிக்கல், இஞ்சினியரிங் காலேஜ்ல சேருங்க. லீவுல ஊருக்கு போவலாம்.'
ரவி கிளம்பி ஊருக்குப் போக, மற்ற மூவரும் வீட்டிற்கு வந்தனர்.
நினைத்தபடியே கல்யாணியும், நித்யாவும் முறையே மெடிக்கல், இஞ்சினியரிங் காலேஜ்களில் சேர்ந்தனர். நித்யாவிற்கு பக்கத்தில் காலேஜ் இருந்ததால் தினமும் பஸ்ஸில் போய் வந்தாள். கல்யாணி டவுணில் ஹாஸ்டலில் சேர்ந்தாள். நித்யா தினமும் வந்து கல்யாணியின் அப்பாவை கவனித்துக் கொண்டாள். முத்தம்மாளுக்கு தன் மகள் டாக்டருக்குப் படிப்பது ஏக பெருமை. ஊரெல்லாம் தம்பட்டம் அடித்து மகிழ்ந்தாள். முதல் வருடம் முழுவதும் ரவியும், கல்யாணியும் காகிதங்களில் காதல் வளர்த்தனர். இடையில் சுஜாவின் கல்யாணத்தில் அனைவரும் சந்தித்தனர். தங்கள் கல்யாணமும் அவ்வாறே நடக்கும் என்று அதைப் பார்த்து மகிழ்ந்தனர்.
ப்ராங்க்ளின் இஞ்சினியரிங் முடித்து ஒரு கம்பெனியில் வேலையில் சேர்ந்தான். அது அவனை ஆறு மாத பயிற்சிக்கு மும்பை அனுப்பியது. நித்யாவுக்கும் ப்ராங்க்ளினுக்கும் கடித தொடர்பு மட்டுமே.
கல்யாணிக்கு கிடைக்காத சில புத்தகங்களை ரவிக்கு எழுதி விடுவாள். அவன் அவற்றை ப்ராங்க்ளினுக்கு எழுதி தருவிப்பான்.
அந்த லீவ் அவர்களது வாழ்வில் மறக்க முடியாததாய் அமைந்தது.
மேரி டீச்சரும் குளோரியும் தாம் சம்பந்தி ஆவப் போவதை நினைத்து இறுமாந்திருந்தனர். குளோரி மருமகளைத் தாங்கு தாங்கு என்று தாங்கினாள்.
'என்ன அண்ணி. இப்பவே மருமவள காக்கா பிடிக்கிறீங்க போல.'
'இல்ல மேரி. நான் வளத்த பொண்ணே எனக்கு மருமவளா வரப் போறாங்கறத நெனச்சா எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு.'
சொல்லியபடி நித்யாவை அணைத்து உச்சி முகர்வாள்.
நித்யாவும், கல்யாணியும் அந்தோணியார் கோவிலுக்குச் சென்றார்கள். அந்த முக்கை கண்டதும் பழைய நியாபகங்கள் நினைவுக்கு வர அவர்கள் சிரித்தார்கள்.
அந்தோணியாருக்கு நன்றி சொல்லி திருப்பலியில் கலந்து விட்டு பின்னர் குடும்பமே ரவி வீட்டிற்கு சென்றது. ரவியின் பெற்றோர் ரவியின் விருப்பமே தன் விருப்பம் என்றனர். ரவியின் அம்மா தான் மிகவும் மனம் உடைந்தார்.
'இந்தப் பொண்ண விரும்பற வர வேற ரவியா இருந்தான். எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. ஒவ்வோரு வீட்ல அம்மான்னா பசங்க ரொம்ப ஆசயா இருப்பாங்க. ஆனா இவன் என்னக் கண்டாலே வெறுத்தான். இந்தப் பொண்ணு கூட பழகின பின்னால இருந்து தான் என் கூட பாசம் காமிக்க ஆரம்பிச்சான். ஆளே மாறி பொறுக்கியா வலம் வந்தவன் ஜெண்டில்மேனா மாறிட்டான். நீங்க கவலயே பட வேண்டாம். கல்யாணிக்காக அவன் மட்டுமில்ல. நாங்களும் காத்திருக்கோம்.'
கல்யாணியின் ரூம்மேட் மனிஷா வட நாட்டுப் பெண். கல்யாணியின் புத்திசாலித்தனம் கண்டு மிகவும் மெச்சுவாள். பெர்சனலைப் பகிர்ந்து கொள்ளும் வேளையில் கல்யாணியின் காதலைக் கேட்டு வியப்பாள்.
'என்னது! நாலு வருசம் வெயிட் பண்ணாரா? இன்னும் நாலு வருசம் வெயிட் பண்ணுவாரா? இளமை எல்லாம் போயிரும். அப்புறம் கிழவன் கிழவியானதுக்கப்புறம் தான் கல்யாணமா? அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணி என்ன தான் பிரயோஜனம். ஏன் கல்யாணி! ஒனக்கு புடிச்சிருந்தா அவன் கூட எஞ்சாய் பண்ணிட்டு கழட்டி விட்டுற வேண்டியது தான.'
'என்ன சொல்ற மனிஷா? இது தமிழ்நாடு. ஒங்க மாநிலம் இல்ல. பழகினா துரோகம் பண்ண மாட்டோம்.'
'ஓ காட்! அப்போ இன்னும் அவன் கூட நீ பண்ணதே இல்லயா?'
'ஹேய் என்ன பேசற நீ? இங்கல்லாம் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்.'
'அப்போ நீ இன்னும் அப்படியே தான் இருக்கியா? ஓ மை காட். நான்லாம் எட்டாம் க்ளாஸ் படிக்கிறப்பவே கஸின் கூட அத பண்ணிட்டேன்.'
'ஏய்! பொய் சொல்ற?'
'உண்ம தான் கல்யாணி. அப்போ அது என்னான்னே தெரியல. ஏதோ ரெண்டு பேரும் பண்ணோம். நல்லா இருந்தது. அவ்ளோ தான். ஒரு படத்துல ஹ்ரித்திக்கும் கரீனாவும் பண்ணுவாங்களே பாத்திருக்கியா, அப்படித்தான். அப்புறம் அவன் வேற பொண்ண லவ் பண்ண போயிட்டான். நானும் ரெண்டு மூணு லவ் பண்ணிட்டேன். ஒருத்தன் கரும்புக் காட்டுக்கு கூட்டிட்டு போனான். இன்னும் ரெண்டு பேர் ஹோட்டல். இன்னொருத்தன் அவன் பிரண்டோட ரூமுக்கு அவன் இல்லாத நாள்ல கூட்டிட்டுப் போனான். இப்ப நம்ம கூட படிக்கிற ரஜத் கான் என்ன லவ் பண்றேன்னு சொல்லி இருக்கான். இன்னும் பச்சக் கொடி காட்டல. நீயும் என்ன மாதிரி ஒரு டாக்டரா பாத்து கல்யாணம் பண்ணிக்கொ. ஒரே ஃபீல்டா இருந்தா நல்லா இருக்கும்.'
கல்யாணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
'மனிஷா. அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு. ஒனக்கு அப்படி இருக்க புடிக்குது. அப்படியே இருந்துக்கோ. எனக்கு இப்படி இருக்க புடிக்குது. நான் ரவிக்காக காத்து இருந்துட்டு போறென். நீ பண்ணத தப்புன்னும் சொல்ல மாட்டேன். நான் பண்ணாம இருக்றத தப்புன்னும் சொல்ல மாட்டேன். ஆனா ஒண்ணு சொல்லட்டுமா. அந்த ரஜத் கான் என்னையும் லவ் பண்றதா சொன்னான். நான் தான் அந்த குண்டன் கிட்ட ரவிய பத்தி சொன்னென்.'
'ஓ அந்த மோட்டா ஒன் கிட்ட லவ் சொன்னானா. நான் கேக்கறேன்.'
மனிஷாவின் சிவந்த முகம் கோபத்தால் மேலும் சிவக்க சிரித்தாள் கல்யாணி.
அப்படி இப்படி என்று நாலு வருஷம் ஓட்டியாகி விட்டது. ரஜத்தும் மனிஷாவும் நெருங்கி விட்டார்கள். அவர்களுக்கும் ஹவுஸ் சர்ஜன் பீரியட் வந்தது.
ஒரு நாள்...
மாணவர்கள் தங்கள் ப்ராஜக்ட்டிற்காக ஒவ்வோரு பேஷண்டாக ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்க கல்யாணியும் மனிஷாவும் காரிடாரில் நடந்து கொண்டிருந்தார்கள்.
திடீரென்று ஒரு ரூமில் அவர்களது வகுப்பு மாணவர்கள் ஒரு பேஷண்டை சுற்றி நிற்பதுவும் சிரிப்பதுவுமாக இருக்கவே சத்தம் இல்லாமல் அங்கே நுழைந்தார்கள்.
ஐந்து மாணவர்கள் அங்கே நின்றிருக்க பேஷண்டின் பக்கம் யாரும் இல்லை. அந்த மாணவர்கள் இவர்கள் வந்ததை கவனிக்காமல் அந்த பேஷண்டையே பார்த்து கெக்கலித்துக் கொண்டிருக்க, இவர்கள் மெதுவாக அந்த பேஷண்டை பார்த்தார்கள்.
அவர் பிரபலமான ஒரு நடிகை. மயக்கத்தில் இருந்தார். சினிமாவில் காண்பதை விட பல மடங்கு நிறமாக இருந்தார். அவரது கவுனை உயர்த்தி சிரித்துக் கொண்டிருந்தது அந்த ஐவர் அணி.
கல்யாணி கத்தினாள்
'ஸ்டாப் இட்.'
அவளுக்கு கோபம் தலைக்கேறியது.
'நீங்கள்லாம் டாக்டர்ஸ் தானா? பேஷண்ட பேஷண்டா பாக்கத் தெரியாதா? சை என்ன கருமம் இது? நடிகைன்னாலும் அவளும் பொண்ணு தான? வயித்து வலின்னு அட்மிட் ஆயிருக்கற பொண்ண அவ மயக்கத்துல இருக்கறப்ப இப்படி பாக்குறீங்களே உங்களுக்கு வெக்கமா இல்ல. நீங்கள்லாம் டாக்டராயி..தூ..'
அவர்களில் ஒருவன் சுர் என்றான்.
'ஏய்! ஒன் வேலய பாத்திட்டு போ. நாங்க எங்களோட ஆராய்ச்சிக்கு பாத்துட்டு இருக்கோம். நீ ஏன் அத தப்பா பாக்குற?'
'ஆமாம். நீங்க எத ஆராய்ச்சி பண்ணீங்கன்னு பாத்தேன்னே. இருங்க ஹெட்டுட்ட சொல்றென்.'
'சொல்லுடி. ஒன்ன மாதிரி அன்னக் காவடின்னு நெனச்சியா எங்கள? இவன் எம்பி பையன். அவன் எம் எல் ஏ பையன். அதோ அவங்க ரெண்டு பேரும் நம்ம ப்ரொபஸர் பசங்க. நான் பெரிய பிசினஸ் மேன் பையன். எங்க கிட்ட வச்சுக்காத. அப்புறம் பின்னால வருத்தப் படுவ.'
'போடா பொறுக்கிங்களா. காசு இருந்தா வேற தொழிலுக்கு போவ வேண்டியது தான. ஏன் இந்த புனிதமான தொழிலுக்கு வந்தீங்க?' இரைந்து விட்டு 'இப்ப நீங்க இந்த ரூம விட்டு போவல நான் இங்கயே சத்தம் போடுவ.'
மூவரும் இவளை முறைத்துப் பார்த்து விட்டு அந்த ரூமை விட்டு அகன்றனர்.
இவள் 'சிஸ்டர்' என்று காரிடாரில் நின்று கூவ, ஒரு நர்ஸ் ஓடி வந்தாள்.
'செலிபிரிட்டி இருக்கறப்ப பக்கத்திலேயே இருக்கணும்னு தெரியாதா?'
'அவங்க தான் எக்ஷாமின் பண்ணனும்னு சொன்னாங்க டாக்டர்.' சிஸ்டர் மிரண்டபடி சொன்னாள்.
'இனி இப்படி விட்டுட்டு போவாதீங்க. நீங்களும் இருங்க.'
அவள் தலை ஆட்டவே, இன்னமும் ஆத்திரம் தீராமல் புஸ் புஸ் என்று வெளியே வந்தாள் கல்யாணி.
'ஒனக்கு ஏன் ப்ரச்ன கல்யாணி?' மனிஷா கேட்டாள்.
'இப்படி எல்லாரும் ஒதுங்கறதுனால தான் இவனுங்களூக்கு குளிர் விட்டுப் போவுது.'
கல்யாணி அந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்ததென்று நினைத்தாள். ஆனால் அது ஒரு நாள் பூதாகரமாக வெடித்தது.

(தொடரும்)

 
எல்லாம் நல்லா போயிட்டு இருக்கு. இப்ப இவனுங்களால கல்யாணிக்கு பிரச்சனை வருமா. அட பாவமே
 
Top