Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 15

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 15

மெடிக்கல் காலேஜில் டிகிரி முடிவதைக் கொண்டாடும் விதமாக அனைவரும் கோவா டூர் போனார்கள். கல்யாணி மேரி டீச்சர் மிகவும் அதிகமாக தன் படிப்புக்காக செலவு செய்கிறார்கள். இதில் டூர் என்று தேவை இல்லாத வீண் செலவு என்னத்துக்கு என்று ஊருக்குப் போக ஹாஸ்டல் வார்டனிடம் எழுதிக் கொடுத்து விட்டாள்.
மனிஷா தான் போன் மூலம் மேரி டீச்சரிடம் கூறி சம்மதம் வாங்கி விட்டாள்.
'நீ இன்னும் எத்தனயோ தடவ கூட கோவா போலாம் கல்யாணி. ஆனா உன் செட் நண்பர்கள் கூட போனது ஒரு தனி அனுபவமா அமையும். பத்திரமா போயிட்டு வா.'
'சரிங்க டீச்சர்' என்று கண்கள் கலங்க டூர் போக ஒத்துக் கொண்டாள் கல்யாணி.
ட்ரெயின் புக் பண்ணி விட்டார்கள். கேரளா வழி குகைக்குள் நுழைந்து நுழைந்து கடவுளின் தேசத்தின் அழகை எல்லாம் கண்களால் பருகி கோவாவின் தலை நகரான பனாஜியை அடைந்தார்கள். வெளியே வந்தால் ரெண்டல் பைக் காரர்கள் ஆட்டோக்காரர்கள் போல் வாடிக்கையாளர்களை கூவி கவர்ந்தார்கள்.
கல்யாணிக்கு ஆச்சர்யமாய் இருந்தது. பெண்கள் தைரியமாய் பைக்கில் ஏறி சென்றார்கள்.
இவர்கள் எல்லோரும் பணத்தை மிச்சம் செய்ய பைக்கில் பயணம் செய்ய ஒத்துக் கொண்டார்கள். ஹோட்டலில் மீன் குழம்போடு ரெண்டு சப்பாத்தியைத் தின்று விட்டு ஆளுக்கொரு பைக்கில் ஏறினார்கள். பைக் அவர்களை சுமந்து அவர்களது இருப்பிடம் நோக்கி சென்றது. கல்யாணியும் ஒரு பைக்கில் ஏறிக் கொண்டாள். பைக் ஓட்டுபவன் கொங்கணி போலும். நல்ல வெள்ளையாக இருந்தான். கன்னங்கள் ரோஸ் பவுடர் பூசியது போல் இருந்தன. கண்ணாடி அணிந்திருந்தான். ஹிந்தியும் ஆங்கிலமும் சரளமாய் பேசினான்.
பைக்கில் ஏறியதிலிருந்து கண்ணியமாய் நடந்து கொண்டான். கல்யாணி வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். வெள்ளைக்காரர்களை சர்வ சாதாரணமாய் காண முடிந்தது. ஜோடியாய், ஃபாமிலியாய், ஒற்றையாய் என்று தங்கள் நாடு போல் உலவிக் கொண்டு இருந்தார்கள். வெள்ளைக்கார பெண்கள் ஒன்று போர்வை சுற்றியிருந்தார்கள். இல்லை ஜட்டி என்று சொல்ல முடியாதபடி ஆனால் ஜட்டி போன்ற ட்ரவுசர்கள் அணிந்து வெடுக் வெடுக் என்று நடந்து சென்றார்கள்.
வெள்ளைக்கார குழந்தைகள் பார்க்க நடக்கும் பொம்மைகள் போலவே இருந்தார்கள். பழையகாலத்தை பிரதிபலிக்கும் கட்டடங்கள், விளக்குகள், சர்ச்கள் என்று கல்யாணி ரசித்துக் கொண்டே வந்தாள்.
'திஸ் இஸ் யுவர் ஹோட்டல் மேம்.'
நன்றாக இருட்டி இருந்தது. வேறு யாரையும் காண வில்லை. ஒரு வீட்டை லாட்ஜ் ஆக்கி வைத்திருந்தது நன்றாய் தெரிந்தது. காரிடாரில் சென்றாள். அங்கே அவளுடன் சண்டை போட்ட கும்பல் உட்கார்ந்திருந்தது. சரி. நம்ம கேங் தான். சரியான இடத்துக்கு தான் வந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டாள்.
அந்த கேங்கில் ஒருத்தன், 'கல்யாணி! மனிஷாவையா தேடுற? மேல செகண்ட் புளோர்ல ரெண்டாவது ரூம்ல இருக்கா.'
அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றாள்.
ரெண்டாம் மாடியில் ரெண்டாவது ரூமின் கதவைத் தட்டினாள். அது திறந்து கொண்டது.
'மனீஷா... மனீஷா...' கூப்பிட்டவாறே உள்ளே அவள் நுழைந்ததும் அவளின் பின்புறம் கதவு சாத்தப் பட்டது. சட் என்று திரும்பினாள்.
அன்று எம் பி மகன் என்று சொன்னவன் நின்றிருந்தான்.
'ஏய்! ஏன் கதவ சாத்தற?'
'மனீஷா இருப்பானு நெனச்சு தான வந்தா. அவ வேற ஹோட்டல்ல இருக்குறா. இந்த நேரம் ஒன்ன காணோம்னு தேடிகிட்டு இருப்பா. அன்னைக்கு அந்த நடிகையோடத பாத்தப்ப என்னமோ பெருசா கத்தின. இன்னைக்கு ஒன்ன பாக்கப் போறோமே, இதுக்கு என்ன பண்ணப் போற?'
ரூம் வாசல் தட்டப்பட மெதுவாய் திறந்தான். திமுதிமுவென்று அந்த நால்வரும் சட் என்று உள்ளே நுழைந்து கதவை இறுகத் தாழிட்டனர்.
'டேய் சீக்கிரம் அவள உரிடா.'
கல்யாணி ஷாக் ஆனாள்.
'டேய் வேண்டாம். அன்னைக்கு நடந்தத அன்னயோட நான் மறந்திட்டேன். நான் நெனச்சிருந்த ஒங்களப் பத்தி டீன் கிட்ட சொல்லி இருக்கலாம். நான் சொல்ல. என்ன விட்ருங்க. நான் மனீஷா தங்கி இருக்ற ஹோட்டலுக்குப் போணும்'
'ஒன்ன விடறதுக்கா இத்தன ப்ளான் போட்டு தூக்கினோம்?'
இரண்டு பேர் அவள் சேலையை களைந்து வீசிட அவள் கைகளால் மார்புகளை மறைத்துக் கொண்டாள்.
'டேய் வேண்டாம். நான் ஒன் க்ளாஸ்மேட்டுடா. என் கிட்ட இப்படி நடந்துக்க வெக்கமாயில்ல.'
'இதுக்கெல்லாம் வெக்கப்பட்டா என்ன பண்றது? நாங்க அஞ்சு பேர் தான். பேசாம தாங்கிகிட்டன்னா யாருக்கும் தெரியாம போயிடும். நீ என்ன கத்தினாலும் வெளிய யாருக்கும் கேட்காது. ஒழுங்கா ஒத்துழச்சா சேதாரம் இல்லாம போயிருவ.'
கல்யாணி மெதுவாய் பின்னால் நகர்ந்தாள். பின்னால் ஒரு ஃபோம் மெத்தை. அவள் தெரியாமல் பின்னால் நகர கால் தடுக்கி பெட்டில் விழுந்தாள்.
ரெண்டு பேர் குதித்து அவள் கைகளைப் பிடித்துக் கொள்ள, இன்னும் இருவர் கால்களைப் பிடித்துக் கொள்ள எம் பி பையன் அவள் அருகில் வந்து அவளது ப்ளவுஸின் ஹூக்கின் மேல் கை வைத்தான். அவள் வேண்டாம் வேண்டாம் என்று அரற்ற, காலிங் பெல் சத்தம் கேட்டது.
'யாருடா இந்த டைம்ல. டேய் நீ போய் பாரு.' என்று எம் எல் ஏ மகனை அனுப்பினான்.
அவன் பெட் ரூமை விட்டு வெளியே வந்து கதவைத் திறந்து 'யாரது?' என்று வெளியே நின்றிருந்தவனைப் பார்க்க ஒரு நச் என்ற குத்து மூக்கின் மீது விடையாகக் கிடைத்தது. அவன் வழிந்த ரத்தத்தோடு சரிய அவனைத் தாண்டி உள்ளே வந்தான் அவன். முதலில் இருந்த பெட் ரூமினுள் நுழைந்தான். அங்கே கல்யாணியின் ப்ளவுஸ் மெதுவாக உருவப் பட்டுக் கொண்டிருக்க அவர்கள் மேல் பாய்ந்தான். அவர்கள் அலற அங்கே கிடந்த கோல்ஃப் மட்டையை எடுத்தான். அந்த நால்வரையும் அதனால் சாத்து சாத்து என்று சாத்த அவர்கள் முதுகு, கால், கை என்று அடி விழுந்த இடங்களைப் பிடித்து கதறினார்கள்.
ரத்தம் வழிய வழிய ஓட்டம் எடுத்தார்கள். கல்யாணி அங்கிருந்த போர்வை ஒன்றை எடுத்து உடம்பின் மீது போர்த்திக் கொண்டு நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் நால்வரும் ஓடியதும் அந்த உருவம் கல்யாணியை நோக்கி வந்தது.
கல்யாணி அதன் முகத்தை கூர்ந்து பார்த்ததும் அதிர்ந்தாள்.
ப்ராங்க்ளின்!
அவளுக்கு சந்தோஷம் பிய்த்துத் தின்றது.
வாய் விட்டு கூவினாள்.
'ப்ராங்க்ளின்! நீங்க எங்க இங்க?'
ப்ராங்க்ளின் ஒரு வினாடி நின்றான். பின்னர் திரும்பி வாசலை நோக்கி நடந்தான். கல்யாணி போர்வையோடு எழுந்து நடந்து விழுந்து கிடந்த சேலையை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பாத் ரூமில் நுழைந்தாள். சேலையைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தவள் கண்ணில் போம் மெத்தையில் உட்கார்ந்திருந்த ப்ராங்க்ளின் பட்டான்.
'என்ன ப்ராங்க்ளின், ஒங்கள நான் இங்க எதிர்பார்க்கவே இல்ல. எப்படி இருக்கீங்க? நித்யா ஒங்கள ரொம்பவே மிஸ் பண்றா. எந்த நேரமும் ஒங்க பேச்சு தான். நீங்க எப்போ மும்பைல இருந்து வரப் போறீங்கன்னு துடியா துடிக்கிறா. நீங்க எப்படி கோவாவுல? பிரெண்ட்ஸோட டூர் வந்தீங்களா? நான் என் பிரெண்ட்ஸோட டூர் வந்தேன். அந்த பொறுக்கி கேங் என்ன திசை திருப்பி இங்க கூட்டிட்டு வந்துடுச்சி. நல்ல வேள நீங்க வந்தீங்க. தேங்க் காட்!'
அவள் பேசிக் கொண்டே இருக்க, அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். மெல்ல எழுந்தான். வாசற்பக்கம் சென்று கதவைத் தாழிட்டு வந்தான். அவள் அருகில் வந்தான். பாடி ஸ்பிரே வாசம் மூக்கை துளைத்தது. கல்யாணியின் சேலை மேல் கை வைத்தவன் அதை உருவி அவள் திகைக்க திகைக்க வீசியவன் அவளை அலேக்காக தூக்கி பெட்டில் போட்டான்.


(தொடரும்)
 
நல்லவேலை ப்ராக்ளின் வந்தான்னு பார்த்தா, ஐவரிடமிருந்து தப்பித்து இவன் ஒருத்தனிடம் மாட்டினாளே. Very interesting update
 
Top