Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 17

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 17

'என்ன கல்யாணி! ப்ராங்க்ளின அப்படி பாக்கற? நல்ல கலரா ஆயிட்டான் இல்ல. மும்பை தண்ணி அய்யாவ அப்படி ஆக்கிடிச்சி. இந்த சாரி நல்லா இருக்கா பாரு. அவன் வாங்கித் தந்தது தான். ஷிபான். அம்மாவுக்கு, அப்பாவுக்கு ஒனக்கு கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கான். வீட்டுக்கு வந்த ரெண்டு மணி நேரத்துல என்னத் தேடி வந்துட்டான். அப்புறம் ஒன்ன சாக்கு வச்சி நாங்க இன்னிக்கு வெளில வந்தோம்.' நித்யா சிரித்துக் கொண்டே பேச கல்யாணிக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. இப்படி ஒரு பொண்ணை லவ் பண்ணி விட்டு அப்படி ஒரு காரியம் செய்ய இந்த கயவனுக்கு எப்படி தான் மனசு வந்ததோ?
ரெயில்வே ஸ்டேஷன் என்றும் பாராமல் 'டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்' என்று ஓடி அவனை அப்படியே வந்து கொண்டிருக்கும் ட்ரெயின் மேல் தள்ளி அவன் கூழாவதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று மனம் விரும்பியது. ஆனால் மனம் நினைப்பதெல்லாம் நிஜத்தில் செய்ய முடிகிறதா என்ன!
அவளை நெருங்கி வந்த ப்ராங்க்ளின் அவளது கையில் இருந்த ஹோல்டாலை வாங்கிக் கொண்டான். 'குடு கல்யாணி'.
அவன் விரல்கள் லேசாய் அவளது விரல்களை உரச நடுங்கிப் போனாள் கல்யாணி. அவன் மிக இயல்பாய் அவளிடம் 'நல்லா இருக்கியா கல்யாணி? ரவிய பாத்தேன். ஆளே மாறிட்டான். எந்த நேரமும் ஒன் பேர தான் சொல்லிக்கிட்டு இருக்கான்.' என்றான்.
ரவியா? அவன் பேர சொல்ல ஒனக்கு யோக்கியத இருக்கா சண்டாளா? நடிக்கிறத பாரு. பசுத்தோல் போர்த்திய புலி. முகம் வெறுப்பில் சுளிக்க, அதைக் கண்ட ப்ராங்க்ளின் முதலில் அதிர்ந்தான். பின்னர் பயணக் களைப்பு என்று நினைத்துக் கொண்டான்.
'சரி வா போலாம்.'
அவன் ஹோல்டாலைத் தோளில் போட்டுக் கொண்டு முன்னால் நடக்க, நித்யா கல்யாணியின் கையைப் பிடித்துக் கொண்டு அவன் பின்னால் இழுத்துச் சென்றாள்.
'ஏதாவது சாப்டறியா கல்யாணி?'
'ஒண்ணும் வேண்டாம். பசிக்கல.'
'ஏன் என்னமோ போல இருக்க? ஒன் ஆளு வரல்லேன்னு வருத்தமா?'
ரவியை நினைத்ததும் அவளது கண்கள் மெதுவாய் கலங்க ஆரம்பித்தன. அதற்குள் பஸ் ஸ்டாண்ட் வந்திருந்தார்கள். அவர்கள் ஊருக்குச் செல்லும் பஸ்ஸில் பின் பக்க சீட் ஒன்றில் ப்ராங்க்ளின் அமர முன்பக்க சீட் ஒன்றில் இருவரும் அமர்ந்தார்கள். கல்யாணி வாய் திறவாமல் அமர்ந்திருந்தாள். நித்யாதான் அது இது என்று எதை எதையோ பேசிக் கொண்டே வந்தாள். நித்யாவின் மனதில் கோவாவில் நடந்த சம்பவம் தான் நியாபகத்திற்கு வந்தது.
என்ன காரியம் பண்ணி விட்டு இப்போ ஒன்றுமே தெரியாதவன் மாதிரி பேசுகிறானே! நான் மட்டும் தான் இவனது பலியா? இல்லை என்னைப் போல் ஏமாந்த பெண்கள் நிறைய இருக்கிறார்களா? இவனுக்குப் போயி நித்யாவை கொடுக்கலாமா? குலத்தை கெடுக்க வந்த கோடரிக்காம்பு என்பார்கள். அதுபோல் நல்ல மாணிக்கமாகிய குளோரி அத்தைக்கு போயி இந்த சனியன் பிறந்திருக்கிறான்.
அவர்கள் ஊர் வந்தது. மூவரும் நடந்தார்கள். ப்ராங்க்ளின் சொன்னான்.
'நான் வேணா இப்பவே கெளம்பட்டா? அடுத்த பஸ் பத்து நிமிசத்துல வந்துரும். இன்னொரு நாள் ரவியோட நாம நாலு பேரும் மீட் பண்ணலாம்.'
இதுவரை பேசாமல் இருந்த கல்யாணி வாய் திறந்தாள்.
'ப்ராங்க்ளின்! ஒரு நிமிஷம். ஒங்க கூட கொஞ்சம் பேசணும். அந்த பாழடஞ்ச கோயில் வர வரீங்களா?'
திடுக்கிட்ட ப்ராங்க்ளின் என்ன என்பது போல் நித்யாவைப் பார்த்தான். அவள் தெரியவில்லை என்று கைகளால் அபினயித்தாள்.
'சரி. அடுத்த பஸ்ஸ பிடிச்சுக்கிறேன். வாங்க போலாம்.'
அந்த பழய சிதிலமடைந்த கோயில் அப்படியே இருந்தது. மூவரும் உள்ளே நுழைந்தார்கள். உள்ளே போய் அவர்கள் வழக்கமாய் உட்காரும் கற்கள் பக்கம் செல்ல, ஆவேசம் வந்தவள் போல் ஹோல்டாலை கீழே போட்டு விட்டு ப்ராங்க்ளினின் சட்டை காலரைப் பிடித்து ஆவேசமாய் உலுக்கினாள் கல்யாணி.
'பாவி! நான் ஒனக்கு என்னடா பாவம் பண்ணினேன். என்ன இப்படி பண்ணிட்ட. என் கிட்ட அப்படி நடந்துக்க ஒனக்கு எப்படிடா மனசு வந்துச்சு? ஒன்ன என் அண்ணன் மாதிரி பாத்தேன். ரவி ஒன்ன எப்படி முழுசா நம்புனான்? எப்படிடா அவனுக்கு ஒன்னால துரோகம் பண்ண முடிஞ்சது? நித்யாவ கொஞ்சமாவது நெனச்சுப் பாத்தியா? மேரி டீச்சர நெனச்சுப் பாத்தியா? இதெல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியுமா? அண்ணன் தங்கச்சி உறவில விரிசல் வந்தாலும் வரட்டும்னு நெனக்கற அளவுக்கு ஒனக்கு என் ஒடம்பு மேல பித்தா?'
கண்ணீரும் கம்பலையுமாய் அழுது கொண்டே அவனது சட்டையைப் பிடித்து உலுக்கு உலுக்கு என்று உலுக்க, நித்யாவிற்கு ஒன்றுமே புரிய வில்லை. கல்யாணியின் பிடியில் இருந்து ப்ராங்கிளினை விடுவித்தாள்.
'விடு கல்யாணி அவன. ஒனக்கு என்ன ஆச்சு? என்னென்னமோ பேசற? கோவால பேய் பிசாசு ஏதாவது பிடிச்சிருச்சா?'
'இதோ இவனுக்குத் தான் பிடிச்சிடிச்சி. காமப் பேய்! காதலியோட தங்கன்னு தெரிஞ்சும் விழுந்து மேஞ்ச நாயி இது. நித்யா இவன் ஒனக்கு வேண்டாம். இன்னும் எத்தன பொண்ணுங்கள இப்படி பண்ணி இருக்கானோ! எவ்ளோ அப்பாவின்னு நெனச்சோம்! அடப்பாவின்னு சொல்ற மாதிரி நடந்திருக்கான்.'
'கல்யாணி! கொஞ்சம் வெளக்கமாத்தான் சொல்லேன்.'
'அத எப்படி சொல்வேன் நித்யா.'கதறினாள் கல்யாணி.'நான் இப்ப வெர்ஜின் இல்ல நித்யா. இந்த படுபாவி என்ன.. என்ன.. கோவால வச்சு.. வச்சு.. நாசம் பண்ணிட்டான் நித்யா. ஐயோ ரவி! நான் ஒன்ன எப்படி பாப்பேன்? எனக்காக காத்திருந்தியே. எச்சிலாயிட்டெனே.
கீழே விழுந்து கதறினாள் கல்யாணி. நித்யா அதிர்ச்சியாய் அவளைப் பார்த்தாள். அவள் அருகில் அமர்ந்தாள். ப்ராங்க்ளின் திகைத்துப் போய் நின்றிருந்தான். நித்யா அவளை அணைக்க, அவள் அழுது கொண்டே அவளது தோளில் சாய்ந்து கொண்டாள்.
'நான் என்ன பண்ணுவேன் நித்தி? ரவிக்கு என்ன பதில் சொல்லுவேன்? கோவால ஒரு அஞ்சு நாயிக என்ன அனுபவிக்க பாத்துதுங்க. இவன் வந்தான். நான் நம்பிக்கையோட ஓடி வந்தேன். இவன்... இவன்... என்னத் தூக்கி பெட்ல போட்டு என் வாழ்க்கையையே நாசமாக்கிட்டான். இதோ இந்த ஒதட்டப் பாரு. இன்னும் கன்னிப் போயிருக்கு. இவன நம்பாதே நித்தி. பொம்பள பொறுக்கி இவன்.'
நித்யா அவளை ஆசுவாசப்படுத்தினாள்.
தலையை கோதி விட்டாள். கல்யாணி அழு அழு என்று அழுது தீர்த்தாள். ப்ராங்க்ளின் முகம் மாறி இருந்தது. சிலை போல் நின்றான்.
கல்யாணி அழுது தீர்க்கட்டும் என்று சிறிது நேரம் காத்திருந்த நித்யா அவளது முகத்தை நிமிர்த்தினாள். கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள். நண்பி அழுததும் அவளது கண்களும் சிறிது கலங்கின.
கல்யாணி ஏங்கி ஏங்கி அழுதாள். சிறிது சிறிதாக மீண்டாள். சேலையை எடுத்து கண்களைத் துடைத்தாள். மூக்கை உறிஞ்சினாள். கண்கள் சிவந்து விட்டன. ப்ராங்க்ளின் மீது பார்வை பட்டதும் அழுகை மறைந்து கோபம் வந்தது.
'இன்னும் என்னடா இங்க நிக்குற? ஓடிப் போயிரு. என்ன கொலகாரி ஆக்கிடாதே! ஒங்க வீட்ல சாப்டதுக்கு நன்றிக்கடனா இதுவர பேசாம இருக்கறென். இனி இந்த ஊருக்கு வரதோ நித்யாவ பாக்கறதோ ஏன் மேரி டீச்சர பாக்கக் கூட வந்துராதே! மீறி வந்தே நாறிப் போயிருவ. மேரி டீச்சர் குடும்பத்துல நீ எப்படிடா வந்து பொறந்த மானம் கெட்ட பய.'
ப்ராங்க்ளினுக்கு கோபம் வந்தது.
'கல்யாணி! எதுக்குமே ஒரு எல்ல இருக்கு. போதும்'
'நீ தான் எல்லய தாண்டிட்டியே. இப்ப என்ன தத்துவம் பேசற?'
'கல்யாணி! நீ ஏன் எம் மேல இப்படி அபாண்டமா பழி சுமத்தற?'
கல்யாணி வெகுண்டாள்.
'என்னது! அபாண்டமா பழி சுமத்தறேனா?'
பளாரென அவன் கன்னத்தில் அறைந்தாள்.
'ராஸ்கல்! மூஞ்சி பக்கத்துல மூஞ்சி வச்சி க்ளோசப்ல பாத்த நான் பழி சுமத்துவேனா? கொன்னுடுவேன்.'
ப்ராங்க்ளின் மட்டும் இல்லை நித்யாவும் இதை எதிர்பார்க்க வில்லை.
'கல்யாணீ!' கத்தினாள் நித்யா.
'ப்ராங்க்ளின் கிட்ட சாரி கேளு.'
திடுக்கிட்டாள் கல்யாணி.
'நித்யா! என்ன சொல்ற நீ? என்ன சீரழிச்ச இவன நான் அடிக்காம கொஞ்சவா முடியும்?'
அழுகை மறுபடியும் உடைபட்டு வரத் தயாராக இருந்தது.
'கல்யாணி! சம்பவம் நடந்தது எப்ப?'
'மூணு நாளுக்கு முன்னால. கோவால. ஏன்?'
நித்யா சிரித்தாள்.
'ஒரு வாரமா ப்ராங்க்ளின் இங்க தான் இருக்கான்.'
'என்னது?' அதிர்ந்தாள் கல்யாணி.

(தொடரும்)
 
அச்சோ!! அப்ப கல்யாணிய கள வாடின து யாரு?
ப்ரான்க்ளின் ப்ரத ரா? ஐ மீன் இரட்டை பிறவி?
 
அச்சோ என்னதிது. அப்போ அது ப்ராங்கிளினின் twin brother ah
very interesting update
 
Top