Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 15

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 15

விஜியின் குரல் கேட்டதும் துரோகம் நியாபகம் வந்தும் எச்சிலை விழுங்கிக் கொண்டு மூச்சிரைக்க பேசினாள் ஸ்ரீலதா.
'சொல்லுங்க. சார் ரொம்ப பிஸி போல. பிடிக்கவே முடியல.'
ஒரு நிமிடம் நிசப்தமான மறுமுனை அடுத்து பேச ஆரம்பித்தது.
'மொதல்ல ஒன் கிட்ட சாரி கேட்டுக்கறேன் லதா. நான் எவ்ளோ சொன்னாலும் எங்க வீட்ல ஒத்துக்கல. இப்ப சுதீஸ் குடுத்த பேட்டிய எல்லார்ட்டயும் படிக்கச் சொல்லி மனச மாத்திருக்கேன். பொண்ணு தான பாத்துருக்கோம். நிச்சயம் அடுத்த வாரம் தானே. பொண்ணு வீட்ல சொல்லிக்கலாம். ஒன் இஷ்டப்படியே ஸ்ரீலதாவ பண்ணிக்கோன்னு சொல்லிட்டாங்க. அந்த சந்தோஷ விஷயத்த சொல்றதுக்குத்தான் கூப்டேன் லதா.'
ஸ்ரீலதா கட கட என்று சிரித்தாள்.
'இந்தா. இந்த சந்தோஷ தகவல என் மேல படுத்திருக்கிற சுதீஸ்ட்டயும் சொல்லிரு.'
அவன் 'ஙீ' என்று முழிப்பது இங்கிருந்தே யூகிக்க முடிந்தது.
'என்ன சொல்ற?' என்றான்.
'அந்த வீடியோல இருந்தது நானும் சுதீஸும் தான். ஒன் கிட்ட அத சொல்ல மறந்தது என் தப்புத்தான். ஆனா ஒன் கூட காதல் வந்ததுல இருந்து சினிமால மட்டும் தான் வேற ஒருத்தர் கூட காதல், கட்டிப்புடி, பெட் ரூம் சீன் எல்லாம். இப்ப என் லச்சியத்த அடையறதுக்காக செகண்ட் ரவுண்ட் தொடங்கி இருக்கேன். இந்தா சுதீஸ்ட்டயும் பேசிரு.'
இயங்கிக் கொண்டிருந்த சுதீஸிடம் ரிசீவரை நீட்டினாள்.
'என்னப்பா நல்ல நேரம் பாத்த போன் பண்ண? வைரக்கல்ல கடல்ல தூக்கி போட்டுட்ட. இப்ப எப்படி எடுக்கறது? அந்தப் பொண்ணயாவது ஏமாத்தாம கல்யாணம் பண்ணிக்க. வச்சிர்றென்.' போனை வைத்து விட்டு ஸ்ரீலதாவை ஏறிட்டான்.
'நான் என்ன தசாவதானியா. ஒரே நேரத்துல பத்து வேலய பாக்க.'
'சீ' என்றாள் ஸ்ரீலதா.
அடுத்த ஒரு வாரம் ஸ்ரீலதாவின் காதல் முறிந்ததும், விஜியின் கல்யாணக் காட்சிகளும் பத்திரிகைகளை அலங்கரித்தன. சொன்ன மாதிரியே ருக்மணி அம்மாளுடன் விஜி கல்யாணத்திற்குப் போயிருந்து கிப்ட் கொடுத்து வந்தாள். ருக்மணியம்மாள் 'ஒனக்கு மன தைரியம் ஜாஸ்தி. பொண்ணுங்க இப்படித்தான் இருக்கணும்' என்றாள்.
ஸ்ரீலதாவை இத்தன நாள் வேலியாய் காத்துக் கொண்டிருந்த விஜி விலகியதும், அவளுக்கு படுக்கை நெருக்கடிகள் வர ஆரம்பித்தன.
ஒரு நாள் ஒரு போன்.
'நான்- மினிஸ்டரோட பி.ஏ. பேசறேன். எங்க மினிஸ்டரோட பையன் ஒன்னோட தீவிர ஃபேனாம். ஒன்ன நாளைக்கு நைட் பாக்கணும்கறான். எங்க வரச் சொல்லட்டும்?'
'
ஸ்ரீலதா ஒரு கணம் யோசித்தாள். இதென்ன இரவு அழகி போல நம் வாழ்க்கை போகப் போகிறது என்று நினைத்தாள். பின்னர் சட் என்று முடிவு செய்து சொன்னாள்.
'ஹோட்டல் நர்மதாவுக்கு வந்துரச் சொல்லுங்க. அங்க தான் ஷூட்டிங். வரும்போது க்ரீவ் அப்பார்ட்மெண்ட்ல ஒரு 3 பெட் ரூம் ஃபிளாட் ஒண்ணு மொத்த விலையும் குடுத்து என் பேருக்கு புக் பண்ணி அந்த பத்திரத்தோட வரச் சொல்லுங்க.'
'ஏய் அது ரொம்ப காஸ்ட்லி. அதோட மினிஸ்டர பகைச்சிட்டா பொழப்பு காலியாயிரும். தெரியுமில்ல?'
'சரி. அட்லீஸ்ட் ஒரு 25 பவுன் தங்க நகை புது டிசைன்ல ஆரமா வாங்கிட்டு வரச் சொல்லுங்க. இதெல்லாம் ஃபிரீயா தரக் கூடாது.'
'அது சரி. ஆனா 25 பவுன்லாம் ஒவர். அவர் ஏதோ நகை கொண்டு வருவார். அவ்ளோ தான். குடுத்தத வாங்கிட்டு அவர சந்தோசப்படுத்து. இல்ல கைய கால ஒடச்சி போடுவேன். ஒன் சினிமா வாழ்க்க அவ்ளோதான்.'
'....'
'என்ன பதிலயே காணோம்?' குரல் கடுமையானது.
'சரி உங்க இஷ்டம். ரூம் நம்பர் 11.'
ஸ்ரீலதா திட்டம் போட்டாள். நாய் வேஷம் போட்டாச்சு. இனி கொரச்சுத் தான் ஆகணும்.
அடுத்த நாள் ஹோட்டல் நர்மதா. ரூம் நம்பர் 11.
கதவு தட்டப்பட்டது.
'கம் இன்'
உள்ளே நுழைந்தார்கள் அந்த மினிஸ்டரின் பி.ஏ. என்று அடையாளம் காணக்கூடிய கரை வேட்டி போட்ட குண்டனும், பேண்ட் சட்டை போட்ட 22 வயதே மதிக்கக்கூடிய மினிஸ்டரின் பையனும். அந்தப் பையனின் கண்கள் ஆச்சரியத்தில் இவள் மீது பதிந்திருந்து மீளவே இல்லை.
அந்த குண்டன் ஒரு நகைப் பெட்டியை அவள் கையில் குடுத்து விட்டு 'ஓவரா ஆசப்படாத' என்று விட்டு அந்தப் பையனிடம் கண் காட்டி விட்டு வெளியேறினான்.
கதவு மூடப்பட்டது.
அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு பிரபல நகைக் கடையில் இருந்து அம்பது பவுன் நகையோடு கடை மேனேஜர் அந்த ஹோட்டலின் வரவேற்பறையில் ஸ்ரீலதாவைப் பார்க்க காத்திருந்தார். இன்னும் சிறிது நேரம் கழித்து க்ரீவ் அபார்ட்மெண்ட் புரொமொட்டர் ஸ்ரீலதா பேருக்கு மாற்றப்பட்டிருந்த ஃபிளாட் பத்திரங்களோடு ஸ்ரீலதா கை எழுத்துக்காக நின்றிருந்தார்.
மினிஸ்டரின் பி.ஏ.வான குண்டன் மினிஸ்டர் பையன் சொன்னதின் பேரில் கை கால் உடைக்கப்பட்டு கூவம் நதிக்கரை ஓரமாக முனகிக் கொண்டிருந்தான்.
திருப்தியாய் எழுந்த மினிஸ்டர் பையனிடம் ஸ்ரீலதா 'நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம். என் பி.ஏ.ட்ட சொல்லிர்றென். நான் எங்க இருக்கேங்கறத நீங்க அவர்ட்ட தெரிஞ்சுக்கலாம். ஸ்.. இந்த ஒதட்டுல மட்டும் கடிக்காதீங்க. மறைக்க முடியாது. நடிக்கணும்ல. ஸ்ரீலதா ஒதட்டுல என்ன காயம்னு கிசுகிசு போட்ருவாங்க. எப்பா என்ன ஸ்பீடு?' என கண் அடித்தபடியே சொல்ல அவன் ஜென்ம சாபல்யம் அடைந்தான்.
பெண் பாராட்டினால் ஆண் வானத்தில் பறப்பான். இங்கு மினிஸ்டர் பையன் க்ளீன் போல்ட் ஆனான்.
அடுத்தடுத்து காய்களை நகர்த்தினாள் ஸ்ரீலதா. விஜிக்கு பட வாய்ப்புகளே இல்லாதவாறு பண்ணினாள். அவனுக்கு வாய்ப்பு கொடுக்கச் செல்லும் ப்ரொட்யூசர்களை பணம் கொடுத்து, செல்வாக்கை காட்டி, மினிஸ்டர் மகன் மூலம் மிரட்டி அப்படியும் முடியாதவர்களை படுக்கையில் சாய்த்து காரியத்தை சாதித்தாள்.
விஜி ஒரே வருடத்தில் ஃபீல்ட் அவுட் ஆயி அவனது ஊரில் போய் பிஸினஸ் பண்ணி குடும்பத்தை காப்பாற்ற ஆரம்பித்தான். இடையில் கணேஷின் தற்கொலை சினிமா உலகத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. ஸ்ரீலதா போய் மூன்று மணி நேரம் இருந்து குரு நாதருக்கு அஞ்சலி செய்தாள். மனது மகிழ்ச்சியால் துடித்தது. 'எத்தனை பெண்களை சீரழித்திருப்பாய்?பாத்தியா ஒன் முடிவை? ஒன் பொண்டாட்டி புள்ளங்க கூட பக்கத்துல இல்ல. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?' மனதின் மகிழ்ச்சி முகத்தில் வாராமல் பார்த்துக் கொண்டாள்.
ருக்மணியம்மா துணையோடு சில தெலுங்கு நடிகர்களை வளைத்துக் கொண்டாள். அவளது முன் அழகில் நடிகர்கள் மட்டும் இல்லை. தெலுங்கு தேசமே அவள் படத்திற்கு கட் அவுட் வைத்து கொண்டாடி திருவிழா ஆக்கியது. தெலுங்கு படத்தில் நடித்த போது ரெண்டு ஹீரோக்கள் படம் ஒன்றில் நடித்தாள். அதில் ஒரு ஹீரோ கன்னடத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர்.
அவனை கைக்குள் போட்டுக் கொண்டு மினிஸ்டர் பையனை புரொடியூசராக்கி ஒரு படம் நடித்தாள். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. 'சென்னாகிதி' என்று சாண்டல்வுட்டே சரண் அடைந்தது. அங்கும் வருடத்திற்கு மூன்று படங்கள் வருமாறு பார்த்துக் கொண்டாள்.
அப்படி ஒரு படத்தில் நடித்த போது ஒரு மலையாள நடிகையின் நட்பு கிடைத்தது.
'எந்தா மலயாள சினிமாவில் மட்டும் அபினயிக்கில்லா? நங்கட சேட்டன்மார் பாவம் அல்லே?'
ஆங்கிலம் தெரிந்தாலும் மலையாளத்தில் தான் பேசினாள் மிருணா நாயர். ஆனால் ஸ்ரீலதாவிற்கு நலம் விரும்பி.
'ஒனக்கு தெரிஞ்சு ஏதாவது ரோல் வந்தா சொல்லு' என்றாள்.
'பைசா அத்ரைக்கு தரில்லா.'
'அது எனக்கு பெரிசில்ல'
'ம்ம் நோக்காம்'
சொன்னபடி ஒரு கதை நாயகி படத்தை ஏற்பாடு செய்து தந்தாள். அந்தப் படம் முடியும் வரை கூடவே இருந்தாள். வெறும் ஜாக்கெட்டும், முண்டும் கட்டி நடிக்க கஷ்டமாகத்தான் இருந்தது ஸ்ரீலதாவிற்கு. ஆனால் குடும்பத்தின் பசி போக்க பாடுபடும் பெண்ணின் கதை என்பதாலும் அவளது பயாக்ரபி போல் இருந்ததாலும் அதில் இயல்பாகவே அவள் நடிப்பு வெளிப்பட்டது. அவார்ட் மழை பெய்யத் தொடங்கியது.
ஒரு அவார்ட் பங்க்ஷனில் தான் அனிலை சந்தித்தாள்.

(தொடரும்)
 
Top