Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் இறுதி அத்தியாயம் 21

Advertisement

rishiram

Well-known member
Member
இறுதி அத்தியாயம் 21

செண்பகம் மற்றும் ஷ்யாம்-செவ்வந்தி, குடும்பத்தினர் அனைவரும் அடையாளம் தெரியாத வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்த ஸ்ரீலதாவின் 'அது'வுக்கு ஈமச் சடங்குகள் செய்து எரியூட்டினர்.
தென்னிந்தியாவே ஆடிப் போயிருந்தது. நான்கு மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்த நட்சத்திரம் என்பதால் அனைத்து மொழி முன்னணி நடிகர்கள், நடிகைகள், திரையுலக பிரபலங்கள் என்று வீடு, தெரு கொள்ளாத அளவு கூட்டம். பத்திரிகைகள் முழுவதும் ஸ்ரீலதாவின் பயோ டேட்டாவை அலசோ அலசு என்று அலசி இருந்தனர். அவளது கடைசி பட இயக்குனர் பேட்டி அளித்திருந்தார்
'தனது பெர்ஷனல் விசயங்களையும் எனக்காகவே நிறுத்தி வைத்திருந்தார். படம் முடியும் வரை கல்யாணம் பண்ண மாட்டேன் என்று காதலனுடன் இந்த படம் முடிவடைவதற்காக காத்திருந்தார். சொன்ன மாதிரியே நடித்துக் கொடுத்தார். ஒரே ஒரு டான்ஸ் தேவைப்பட்டது. அது அவசியம் இல்லை. வேண்டும் என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றேன். இல்லை எடுத்து விடலாம் என்று தனி விமானம் ஏறியவர் இப்படி திரும்பி வராமலே போய்விட்டார். ஸ்ரீலதா என்றும் டைரக்டர்களின், ப்ரொடியூசர்களின் நட்சத்திரம். சாதனையாளர்கள் எல்லாம் சிறு வயதில் மரணம் அடைவது காலதேவனின் என்ன கணக்கோ?'
செண்பகமும், ராக்காயி குடும்பமும் கண்ணீர் விட்டனர்.
'இப்படி செத்துப் போகப் போவது மொதல்லேயே தெரிஞ்சுதான் சொத்த எல்லாம் இப்படி பிரிச்சு கொடுத்துட்டு போயிட்டாளோ என் பொண்ணு?'
ராக்காயிக்கு நாக்கு நுனி வரை அந்த ரகசியம் வரும். ஆனாலும் செத்துப் போனவளைப் பற்றி நல்ல விதமாகவே இந்த உலகம் பேசட்டும் என்று தன்னை மிகவும் அடக்கிக் கொண்டாள்.
போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டரை சென்று பார்த்தாள்.
'டாக்டர்! எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இது ரொம்ப அந்தரங்கமானது. நீங்க நான் இப்படி கேட்டேன்னு யார் கிட்டயும் சொல்லிராதீங்க. அது ஸ்ரீலதா பேருக்கு பங்கம் ஏற்படுத்திரும். அனிலும் ஸ்ரீலதாவும் ரொம்ப நெருங்கிப் பழகினாங்க. நாள் தள்ளிப் போயிரிச்சுங்கக்கான்னு என் கிட்ட சொல்லிச்சி லதா. அவங்க வயித்துல...' என்று இழுத்தாள்.
அந்த டாக்டர் நிமிர்ந்தார்.
'நோ நோ. அவங்க வயிறு க்ளீன் சிலேட். கரு எதுவும் பிடிக்கல. அப்படியே தள்ளிப் போயிருந்தாலும் மொதல்லெயெ க்ளீன் பண்ணி இருக்கலாம். '
ராக்காயி அதிர்ந்து போனாள்.
அதெப்படி எட்டு மாச கருவை கலைக்க முடியும்? போகும்போது கூட சொல்லி விட்டுத் தானே போனாள்? பையன் ஒதைக்கிறான் என்று? இது எப்படி சாத்தியம்? விபத்து உயிரை மட்டும் தானே எடுக்கும்? வயிற்றில் உள்ள சிசுவயுமா எடுக்கும்? ஒருவேளை வயிற்றில் இருந்து தெறித்து போயிருக்குமோ? அப்படி போயிருந்தால் டாக்டர்கள் கண்டுபிடித்து விட மாட்டார்களா? இதை சொல்லவும் முடியாது. சரி எல்லாம் அந்த மாரியம்மா பாத்துகிடட்டும்.
டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு அவள் குழப்பத்துடன் வெளியேற, அங்கே ஓசூரில் தோட்டத்து வீட்டில் சேகர் கன்னத்தில் சோகமாய் கை வைத்து கண்ணீஎர் உகுத்துக் கொண்டிருக்கும் அந்த உருவத்தின் அருகில் வந்தான். வேலைக்காரி வைத்து விட்டுப் போயிருந்த பால் ஆடை கட்டி ஆறிப் போயிருந்தது.
'ஆறு..' என்று அவன் கூப்பிடவே அந்த உருவம் திரும்பியது.
தென் இந்தியாவே கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணுன உருவமா அது? அழகிய முகம் பாதி எரிந்து கோரமாய் இருக்க ஒரு பாதியில் இருந்த கண்ணும் மச்சமும் தான் அது ஸ்ரீலதா என்பதை சோகமாக உறுதிப்படுத்தின. உதட்டின் ஒரு பாகம் கிழிந்து பாண்டேஜ் போடப்பட்டிருந்தது. கழுத்தில் இருந்து கால் வரை அர்த்தனாரீஸ்வரர் போல் பாதி உடல் வெந்திருந்தது. வயிறு மட்டும் மேடாய் இருந்தது.
'ஆறு.. எதுவும் சாப்பிடாம இருந்தா எப்படிம்மா? வயித்துல குழந்த வேற இருக்கு. அதுக்காகவாவது சாப்பிடும்மா.'
அவள் திரும்பினாள்.
ஆடை கட்டிப் போன பாலை எடுத்து மட மட என்று குடித்தாள்.
வயிற்றை மெதுவாகத் தடவினாள்.
'ஆமாண்ணே! இவனுக்காகத் தான் நான் உயிர் வாழறேன். அனில் என்ன ரொம்ப விரும்புனார்னே. என்ன அப்படி கவனிச்சுகிட்டார். நான் நடிகை நெறய பேர்ட்ட படுக்கையை பகிர்ந்து இருக்கென்னு தெரிஞ்சும் என்ன அப்படி நேசிச்சார். அவர் என் மனச தான் நேசிச்சார்னெ. இந்த ஒடம்ப இல்ல. விமானம் வெடிக்கப்போகுதுன்னு தெரிஞ்சதும் என்ன நொடியில கீழ தள்ளி விட்டுட்டார்னே. பொழைக்க வாய்ப்பு இருக்கோ இல்லயோ பொழச்சுகிட்டம்னு தள்ளி விட்டுட்டார்னே. டைரக்டர் கூட சொன்னார். இந்தப் பாடல் தேவை இல்லன்னு. நான் தான் எதுக்கும் போலாம்னு போனென். போகும்போது அவர்ட்ட கூட சொல்லாம என் டூப் சௌம்யாவ கூட்டிட்டு போனென். சௌம்யாட்ட எங்க போறென்னு யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னும் சொல்லி இருந்தேன். அவ வீட்ல பிரண்ட்ஸ் வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு வந்தா. இப்படி அநியாயமா செத்துப் போயிட்டா. ஒலகமும் நான் தான் செத்துட்டேன்னு நம்பிரிச்சி.'
அவள் வயிற்றைத் தடவிக் கொண்டாள்.
'ஒன் மருமகனுக்கு ஆயுசு கெட்டி. அவ்ளோ மேல இருந்து விழுந்தாலும் அவனுக்கு ஒண்ணும் ஆகல. ப்ளேன் தீல பட்டு என் ஒடம்பு தான் கொஞ்சம் கருகிடிச்சி. அனிலும், சௌம்யாவும் போன விஷயத்த தான் என்னால ஜீரணிக்கவே முடியல. சௌம்யா அந்த வீடியோல உண்மையா இருந்த என்னை தான் தான் அதுன்னு சொல்லி காப்பாத்துனா. இப்ப உண்மயா உயிரோட இருக்கற எனக்கு பதிலா அவ செத்து என்ன காப்பத்துனா.'
சேகர் ஆசுவாசப்படுத்தினான்.
'அந்தப் புண்ணியவதி குடும்பம் நல்லா இருக்கும்மா. ஆமாம் இன்னும் எத்தன நாள் இப்படியே இருக்கறதா உத்தேசம்? வெளி உலகுக்கு ஒன்ன காட்டித் தானே ஆகணும்? சௌம்யாவ காணோம்னு அவங்க வீட்ல கம்ப்ளெயிண்ட் பண்ணா போலீஸ் கண்டுபிடிச்சிர மாட்டாங்களா?'
ஸ்ரீலதா மெல்ல இதழ் விரித்தாள்.
'அண்ணே! அவ கேஸ் காணாமப் போன நூற்றுக்கணக்கான பொண்ணுங்களோட ஒண்ணாப் போயிரும். நான் இனி வெளி உலகுக்கு என்ன காட்டப் போறதில்ல. அந்த ஸ்ரீலதா சௌம்யாவா செத்துப் போயிட்டா. அவ மண்ணுல விழுந்த நட்சத்திரம். ஆனா நான் உன் தங்கச்சி. பழய ஆறு. இவனப் பெத்து அனிலோட நெனைவிலேயே இவனப் பாத்து, வளத்து இவன் வளர்ச்சிக்காக மட்டும் தான் வாழப் போறேன். ஸ்ரீலதாவோட அழகான மொகத்த இந்த அசிங்கமான மொகத்த காட்டி மக்கள் மனச கஷ்டப்படுத்த விரும்பல. அவங்க மனசுல அவ அந்த அழகான மொகத்தொடயே இருக்கட்டும்.
இந்த வாழ்க்க யாருக்குன்னே கிடைக்கும்? ஸ்ரீலதாவா இருக்கறப்போ தெருவுல இறங்க முடியுமா? எவ்ளொ கூட்டம்? ஆட்டோகிராப்? கை குலுக்கல்? நான் நடிச்ச கேரக்டர் பேரச் சொல்லி கத்தல்? ஒரு டீ கடைல டீ குடிக்க முடியுமான்னே? ஆனா இப்ப கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பு தந்திருக்கார். என் பையன சாதாரணமா வளக்க ஒரு வாய்ப்பு. ஒரு செலிபிரிட்டி பையனா வளந்தா அவன் பெர்சனல மிஸ் பண்ணுவான். இப்ப அது இல்ல. இந்த தோட்டத்துல இயற்கையோட இயற்கையா வளந்து அவனோட வாழ்க்கய அவன் பாத்துகிடட்டும். ஏண்ணே! நான் இங்க இருக்கறது ஒனக்கு ஏதாவது இடஞ்சலா?'
சேகர் பதறினான்.
'என்ன இப்படி கேட்டுட்ட ஆறு? எங்கெயோ பிச்ச எடுத்துகிட்டு இருந்த எனக்கு இப்படி வீடும் ஏக்கரா கணக்குல சொத்தும் தந்து என்ன மனுஷனா ஆக்குன ஒனக்கு நான் செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் பண்ண கடவுள் எனக்கு சான்ஸ் தந்திருக்காரு. ஒன்னயும் என் மருமவனையும் பாத்துக்கறது தான் என் ஒரே வேல. எனக்கும் வாழ்க்கைல ஒரு பிடிப்பு வேண்டாமா? என்ன வித விதமா சாப்ட்டு பழகி இருப்ப. நெறய ஊரு ஒலகம் சுத்தி இருப்ப. பாடின வாயும் ஆடுன காலும் சும்மா இருக்காதுன்னு சொல்வாங்க..'
ஆறுமுகம் உறுதியாய் சொன்னாள்.
'இல்லன்னே. இனி எனக்கு கஷ்டமே வந்தாலும் கூலி வேலைக்குப் போயாவது என் பையன காப்பாத்துவேனே ஒழிய சினிமா வேண்டாம். என் அழகான மொகத்து பக்கம் அவலட்சணமான இந்த போட்டோ பத்திரிகைல வரதயும் மக்கள் உச் கொட்றதயும் நான் பாக்க விரும்பல. சினிமா இடைல வந்துச்சு. இடைலயே போயிரிச்சி. இனி நான் ஒரு சாதாரண குடிமகள். சினிமா வாடையே இல்லாம என் பையன வளத்து ஆளாக்கணும். என்ன அம்மா, தம்பி தங்கச்சிகள பாக்க முடியாது. பரவால்ல. அவங்க எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். நல்ல வேள வெளி உலகத்துக்கு எனக்கு ஒரு அண்ணன் இருக்குன்னு தெரியும். அவன் எங்க இருக்கான்னு தெரியாது. இந்த சொத்து வெவகாரமும் அனிலுகும் எனக்கும் தான் தெரியும். அதுக்கும் மீறி ஏதாவது பிரச்சினை வந்தாலும் ஃபேஸ் பண்ணலாம். பதினாறு வயசுலேயே பிரச்சினைகள போல்டா சந்திச்ச நான் இந்த வயசுல சமாளிக்காமலா போயிடுவேன்?'
ஆறுமுகம் தன்னம்பிக்கையுடன் வயிற்றைத் தடவிக் கொண்டு சேகரைப் பார்த்து புன்னகைத்தாள்.
திரைஉலகில் அவள் இறுதியாய் நடித்த படம் வெளியாகி பட்டையை கெளப்பிக்கொண்டிருந்தது. அவளுக்குப் பதிலாக அவளை நோக்கி படை எடுத்த விருதுகளை கண்ணீருடன் பெற்றுக் கொண்டாள் செண்பகம்.
'நான் தாம்மா ஒன் சிறந்த விருது!' என்று பக்கத்தில் கையை காலை ஆட்டி சிரிக்கும் ஆண் மகவைப் பார்த்து தன் கவலையை மறந்திருந்தாள் ஆறுமுகம்.

(நிறைவுற்றது)

மீண்டும் அடுத்த நாவலில் சந்திப்போம்.
 
Nirmala vandhachu ???
Inime taan read panna poren
All the best
 
எதிர் பார்க்காத முடிவு. அருமையாக இருக்கு. ஆறு உண்மையில் நட்சத்திரம் தான்.
மேன்மேலும் நிறைய கதைகள் எழுதுங்கள் Thanks and congrats ? (y) :love::D
 
Last edited:
Top