Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 15

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 15

சௌம்யாவிற்கு அப்படி ஒரு துணிச்சல் எப்படி தான் வந்ததோ தெரியவில்லை. ரோஸி சிஸ்டர் மட்டுமில்லை அங்கு குழுமியிருந்த அனைத்து சிஸ்டர்களுக்கும் மூஞ்சியெ இல்லை.
கலெக்டர் டக் என்று எழுந்து கேடயத்தை வாங்கி சௌம்யாவிற்கு குடுத்து போட்டோவிற்கு போஸ் குடுத்தார்.
காலிங் பெல் அடிக்க, சௌம்யா போய் வாசல் கதவைத் திறந்தாள்.
சுமதி கையில் ஸ்வீட் பாக்கெட்டுடன் நின்றிருந்தாள்.
'வா சுமதி!' என்று சௌம்யா அழைக்க, அவள் 'எங்கே வாலு?'என்றாள்.
'யஜுஜூ..' என்று சௌம்யா கூப்பிட உள் அறையில் இருந்து வெளிப்பட்டவன் சுமதி பக்கத்தில் போய் நின்று கொண்டான்.
'ஆண்டி நியாபகம் இருக்கா?' என்று கேட்டவாறு கிருஷ்ணா ஸ்வீட்ஸை அவன் கையில் தரவே, அவன் 'தாங்க்ஸ் ஆண்டி' என்றவாறு ஸ்வீட்ஸ் பாக்கெட்டோடு மறுபடியும் சோட்டா பீமோடு ஐக்கியமானான்.
சுமதி ஹாலை நன்றாகப் பார்த்தாள்.
சுவரில் மாட்டி இருந்த சௌம்யாவின் குடும்ப போட்டோவையும், அரவிந்தின் தனி போட்டோக்களையும் கண்டு ஏதோ புரிந்து கொண்டு முகம் வாடினாள்.
சோபாவில் உட்கார்ந்தாள்.
சௌம்யா வாசலைத் தாழிட்டு விட்டு சுமதி அருகில் வந்து அமர்ந்தாள்.
'எப்படி இருக்க? ஒங்க வீட்ல என்ன பண்றாரு? எத்தன குழந்தைங்க?'
'அப்ப போலத்தான். இன்னும் உடம்பு கொறய மாட்டெங்குது. அவர் பாங்க்ல மேனஜரா இருக்கார். இப்ப தான் கோயம்புத்தூர் ட்ரான்ஸ்ஃபர் ஆச்சு. ஒரே பொண்ணு. கல்யாணமாகி பெங்களூருல இருக்கா. சாஃப்ட்வேர் இஞ்சினியர். மாப்ளயும் அப்படித்தான்.'
'என்னது அவ்ளோ பெரிய பொண்ணா?'
'ஆமாம். ப்ளஸ் டூ முடிச்சதும் கட்டிக் கொடுத்துட்டாங்க. வேற வேல. சீக்கிரமே குடும்ப கடமைகள முடிச்சுட்டோம். நான் இன்னொண்ணு வேணும்னு கேட்டேன். இவர் தான் வேண்டாம்னுட்டாரு. அப்பல்லாம் சம்பளமும் கம்மியா. அடுத்ததும் பொண்ணு பிறந்ததுன்னா வளத்து படிக்க வச்சு நகை போட்டு அதுவும் எங்க ஆட்கள்ல தான் கிலோ கணக்குல கேப்பாங்கல்ல.. சரி நமக்கு குடுத்து வச்சது அவ்ளோ தான்னு தேத்திகிட்டேன். இப்ப பொண்ணு கன்சீவா இருக்கறா.. பாக்கலாம். அவளையாவது ரெண்டு பெத்துக்க சொல்லணும்..'
என்று கூறிவிட்டு எப்படி கேட்பது எனத் தயங்க.. சௌம்யா வாய் திறக்கும் முன் சுமதியே தொடர்ந்தாள்.
'ஒன்ன கடைசியா நீ ரான்க் எடுத்த ஃபங்க்ஷன்ல பாத்தது. அப்ப கூட நீ கேடயத்த வாங்கிட்டு விறு விறுன்னு போயிட்ட.. அப்புறம் டிஸி வாங்க வந்தப்பொ நீ ஏற்கனவே வாங்கிட்டதாவும், காலேஜ் எங்கேயொ சேந்துட்டதாவும் கரோலின் சொன்னா. ஒனக்கு ஒண்ணு தெரியுமா? நம்ம சுதா இருக்காள்ல. அவளுக்கு லேசா மன நிலை பாதிப்பாம். இடையில எங்க நாத்தனாருக்கு கர்ப்பப்பை ஆபரேஷன் அப்ப பாளையங்கோட்டை ஆஸ்பிட்டல்ல வச்சு பாத்தேன். என்ன யாருன்னே தெரியல. மலங்க மலங்க முழிச்சா. அவங்கம்மா அழு அழுனு அழுதா. வாழ்க்க யார் யாருக்கு எப்படி எப்படிங்கறதுனு நம்ம கைல இல்ல போல...'
மறுபடியும் சுமதி சௌம்யாவைப் பார்க்க, சௌம்யா வாய் திறந்தாள்.
'ஆமாம் சுமதி! என் வாழ்க்கயும் எப்படி எப்படியோ போச்சு.'
சௌம்யாவின் கண் முன்னால் பழய பக்கங்கள் புரண்டன.
பிடிவாதமாய் நாகர்கோவிலில் ஒரு காலேஜில் பி.எஸ்ஸி. மேத்ஸ் சேர்ந்தாள் சௌம்யா.
அங்கே கோட்டாரில் ஒரு வீடெடுத்து சௌம்யாவும், அவள் அம்மாவும் தங்கினர். பக்கத்து வீட்டில் சந்துரு வந்து தங்கினான். அது ஒரு பத்துக்கு பதினாறு அறை. தனியாக இருந்தது. பாத்ரூம் வெளியே இருந்தது. சௌம்யாவின் வீட்டில் மூன்று அறைகளும், வீட்டினுள்ளேயே பாத்ரூமும் இருந்தது. முதல் கொஞ்ச நாட்கள் சந்துருவின் அம்மா நாத்தனாருக்கு ஒத்தாசையாய் இருந்தாள். பின்பு ஊரைப் பார்க்க போய் விட்டாள்.
ஹவுஸ் ஓனர் வீடு மேலே இருந்தது. சௌம்யா காலேஜுக்குப் போகும்போது அவள் அம்மா அங்கே போய் விடுவாள். அவர்கள் வீட்டில் டிவி இருந்ததால் பொழுது நன்றாய் போனது. ஹவுஸ் ஓனர் அம்மா விதவை. கணவர் ஹார்ட் அட்டாக்கில் தவறி இருந்தார். ஒரே மகள். 16 வயது. ஆனால் அப்படி தெரியாது. மூளை வளர்ச்சி குன்றி 5 வயது பெண் போலவெ இருப்பாள். எல்லாமே படுத்த படுக்கையில் தான்.
பேசத் தெரியாது. ஏதோ வேண்டும் என்றால் கத்துவாள். அதை உணர்ந்து ஹவுஸ் ஓனர் அம்மா தண்ணி தருவதோ, இல்லை சாப்பாடு தருவதோ இல்லை பீரியட்ஸ் துணி மாத்துவதோ செய்வாள்.
அங்கு வந்த முதல் வருடம் எந்த பிரச்சினையும் இல்லாமல் கழிந்தது. சந்துருவும் சௌம்யாவும் கன்னியாகுமரி, கோவளம், வட்டக்கோட்டை என்று காதல் செய்தனர்; ஆனால் கண்ணியமாயும் இருந்தனர்.
சந்துரு ட்ரைவிங் கற்று ஒரு ஆட்டோ ஓட்டுநராய் மாறிவிட்டான். இரவு தான் வருவான். காலையும், இரவும், சௌம்யா வீட்டில் சாப்பாடு.
ஒரு நாள்...
அவன் இரவுச் சாப்பாட்டிற்கு அத்தை வீட்டிற்கு வர வாசலில் நின்ற போது உள்ளே அத்தை உரக்கக் கத்துவது தெரிந்தது.
'வெளியே போற ஆம்பள அங்கேயெ சாப்பிட மாட்டானா? எப்ப இவன் வருவான்னு காத்திட்டு இருக்க வேண்டி இருக்கு. நம்ம தூங்க வேண்டாமா? சை.'
'அம்மா! மாமா வர்ற நேரமாச்சு. சும்மா இருக்க மாட்ட.'
'ஏன் கேட்டாதான் என்னடி?'
'என்னம்மா இப்படி பேசுற?
'சரி சரி. அழுவாத. ஏதோ ஒனக்காக பாக்கறேன். இந்த வாரம் அவன் அம்மா வருவாள்ல. அப்ப பேசிக்கறேன்.'
சந்துரு அத்தைக்கு என்ன ஆச்சு என்று நினைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு வராமலெயே தன் ரூமில் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான்.
இரண்டு நாட்களாக அத்தை வீட்டில் சாப்பிட வில்லை. அத்தையும் ஏன் வரவில்லை என்று கேட்க வில்லை.
சனிக்கிழமை. சௌம்யாவைப் பார்க்கலாம் என்றால் சௌம்யா காலையிலேயெ அம்மாவுடன் சுசீந்திரம் போய் விட்டாள் என்று வீட்டுக்கார அம்மா சொல்ல சிறிது குழப்பத்துடன் ஆட்டோ எடுத்துக் கொண்டு போய் விட்டான் சந்துரு.
மறுநாள் காலை.
சந்துருவின் அம்மா வந்தாள்.
நேரே சௌம்யா வீட்டில் நுழைந்தாள் வழக்கம் போலே.
சிறிது நேரம் கழித்து சௌம்யா சந்துரு இருக்கும் ரூமிற்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு சந்துருவின் தோளில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள்.
'மாமா! அம்மாக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. கொஞ்ச நாளாவே சரி இல்ல. நம்மள பிரிச்சிருவா போல இருக்கு.' என்று அழுதுகொண்டே கூறியவள் சட் என்று தன் தாவணியை கழற்றி வீசினாள்.

சந்துரு அதிர்ந்தான்.
 
Nice epi.
Oor oorai poi kathal payira valarthu irruku rathu seri ,athu work out aagumanu konjam mandaya pavicha irrukalam.
 
Author ji, logic seriya illaye, Sumathi 12 class kazhinjathum kalyanam, Sowmiya college pidikum pol kalyanam so almost difference 2 to 3 years than. Aana randu per ,pullarukku yen ivalavu age difference. Conversation la randu ennamum kalyanam katti adutha varsham pullaru irruku sollum pol logic idikkuthey.
Eppudi ??? nangalu magnifying glass vachu alla katha vasikkum.
 
sumathi rendaam thaaramaa vaazhkkaippattuttaa Eswaran kitta. Eswaranukku muthal thaaram muulamaa oru ponnu. sumathiku kolantha porakkalla. novella athe mention panni irukkanum. maranthutten. idhu sariyaana samaalippaa
 
:love: :love: :love:
அம்மாவிடம் ஏன் இந்த மாற்றம். சுமதி பெண்ணையும் படிக்கிற மாதிரியே சொல்லியிருக்கலாம். பரவாயில்லை
 
sumathi rendaam thaaramaa vaazhkkaippattuttaa Eswaran kitta. Eswaranukku muthal thaaram muulamaa oru ponnu. sumathiku kolantha porakkalla. novella athe mention panni irukkanum. maranthutten. idhu sariyaana samaalippaa
Eppudi ponalum thapichu odireengale. Seri vidungo neenga nalla writer than Somalika padichu, allo .potte, potte.
 
Top