Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 16

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 16

சந்துரு கத்தினான்.
'ஒனக்கு பைத்தியம் கிய்த்தியம் புடிச்சிடிச்சா சௌம்யா?'
'இனி பிடிச்சிரக் கூடாதென்னு தான் இப்டி பண்றேன் மாமா. சீக்கிரம் மாமா. என்ன எடுத்துக்க. அதுக்கப்புறம் என்ன உங்க கிட்ட இருந்து பிரிக்க முடியாது.'
சந்துரு கீழே கிடந்த தாவணிய எடுத்து அவள் மேல் போர்த்தினான்.
'இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி பண்றே? அத்தைக்கு வயசாச்சுல்ல. ஏதோ முடியல. உங்க வீட்ல நான் சாப்டலன்னா என்ன? எவ்ளொ பாத்துகிட்ட அத்த ஏதோ சொன்னா நான் கொறஞ்சு போயிடுவேனா?'
தாவணியை இடுப்பில் சரியாய் சொருகியவாறு அலறினாள் சௌம்யா.
'இல்ல மாமா. எனக்கு என்னமோ ஏதோ தப்பா படுது. அம்மா இப்டி நடந்துக்கறவளில்ல. வேணுக்குன்னே நாம சந்திக்காம பாத்துக்கறா. நாம பேசாத மாதிரி பாத்துக்கறா. அவளுக்கு என்னமோ ஆச்சு. நானும் ஒரு பொண்ணு தான. ஒரு பொண்ணு மனசு ஒரு பொண்ணுக்கு தெரியாதா?'
'சரி அம்மா வந்திருக்காங்கல்ல. எல்லாம் சரியாயிரும்.'
'ரெண்டு பேரும் ஏதோ குசு குசுன்னு பேசுனாங்க. இப்ப ஹவுஸ் ஓனர பாக்க மாடிக்கு போயிருக்காங்க. அந்த கேப்ல நான் இங்க வந்திட்டேன்.'
'நீ நினைக்கற மாதிரி இருக்காது. பொறுத்திருந்து பாப்போம் சௌம்யா'
அவன் பேசும்போது வாசற்கதவு தட்டப்பட்டது.
அவன் ஏதோ சொல்வதற்குள் சௌம்யா கதவைத் திறந்தாள்.
வாசலில் பத்ரகாளி போல் அவள் அம்மா நின்றிருந்தாள்.
பின்னால் சந்துருவின் அம்மா.
சௌம்யாவின் அம்மா கத்தினாள்.
'சௌம்யா. வீட்டுக்குப் போ.'
சௌம்யா அவளை முறைத்து விட்டு அத்தையின் பின்னால் போய் நின்று கொண்டாள்.
சந்துருவின் அம்மா அவள் தலையைத் தடவி விட்டு, 'நீ வீட்டுக்கு போ ராசாத்தி. நான் அம்மாட்ட பேசிக்கிறேன்' என சௌம்யா வீட்டினுள் நுழைந்தாள்.
சௌம்யாவின் அம்மா கத்தினாள்.
'பாத்தீங்களா! இவன் இங்க இருக்ற ஒவ்வொரு செகண்டும் எனக்கு தீ மேல நிக்கற மாதிரி இருக்கு.இதுக்கு மேலயும் என்னால பொறுக்க முடியாது. உங்க அண்ணன் குடும்பம் உங்களுக்கு வாழ்நாள் முழுதும் வேணும்னா நான் சொல்றத நீங்க செய்யத்தான் வேணும்.' என்று பட பட என்று கூறி விட்டு தன் வீட்டில் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.
சந்துருவின் அம்மா அவனிடம் வந்தாள்.
அவள் கண்கள் கலங்கி இருந்தன.
'சந்துரு! நீ அம்மா சொல்றத கேப்பேல்ல.'
'கேப்பேம்மா. இப்ப என்ன நடந்து போச்சுன்னு நீ அழற? நானே சமச்சு பழகிக்கிறென்மா. இன்னும் ஒரு வருஷம். டிகிரி முடிஞ்சதும் ஏதோ அரசாங்க வேலைக்கு சௌம்யா போயிருவா. அப்புறம் அவளே சமச்சு தரப் போறா.'
இவனிடம் எப்படி சொல்வது என்று புரியாமல் அவன் அம்மா கண்ணீர் விட்டாள்.
பின்பு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அவன் அருகில் வந்தாள்.
'சந்துரு. என்ன வீட்ல கொண்டு போய் விட்றியாப்பா. ஒரு மாதிரி பட படன்னு வருது.'
சந்துரு பதறிப் போனான்.
'என்னம்மா பண்ணுது? டாக்டர்ட்ட போலாமா?'
'இல்லப்பா. ஊருக்குப் போனா எல்லாம் சரி ஆயிரும். என்ன ஊர்ல கொண்டு போய் விட்ருப்பா.'
'இரும்மா. அத்தய கூட்டிட்டு வர்றென்.'
கிளம்ப முயன்ற அவனைத் தடுத்தாள்.
'வேண்டாம்ப்பா. நாம போலாம்.'
'சௌமி திட்டும்மா'
'பரவால்ல. சொன்னா புரிஞ்சுப்பா.'
மனசில்லாமல் அம்மாவோடு ஊருக்கு பஸ் ஏறினான் சந்துரு.
பஸ்ஸில் கூட்டம் அதிகம் இல்லை.
அம்மா வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வந்தாள்.
சிட்டியைத் தாண்டியதும் சந்துரு அடக்க மாட்டாமல் கேட்டான்.
'மனசுக்குள்ள வச்சுக்காம எது இருந்தாலும் என்கிட்ட சொல்லிரும்மா.'
அம்மா திரும்பினாள்.
பஸ்ஸின் ஜன்னலோரம் அமர்ந்திருந்ததால் காற்றில் அவளது பொன் நிற கேசம் படபடத்தது.
'எனக்கு ஒரு சத்தியம் பண்ணு சந்துரு.'
'சொல்லும்மா. என்ன பண்ணனும்.'
'சௌம்யாவ மறந்துட்டு வேற கல்யாணம் சீக்கிரம் பண்ணிக்குவேன்னு சத்தியம் பண்ணு சந்துரு'

வேறு ஏதாவது இருக்கும் என்று நினைத்து கையை உயர்த்திய சந்துரு அதிர்ச்சியால் கையைத் தாழ்த்தினான்.
 
Nice epi.
Sowmi seyum karyam avalai oru padatha idiot nu kaatuthu.( Last epi,last line)
Ithuku Ivanga seriya prayathile yen mudivu pananum??? pullarukku sollanum??? freedom kodukanu???. Nambikai koduthu ippol vendam engil athu romba painful.
 
Top