Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 17

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 17

பேயறைந்தவன் போல் இருந்தான் சந்துரு.
வாழ்றது எல்லாமே சௌம்யாவிற்குத் தான்.
அவ இல்லாம ஒரு வாழ்க்கய நெனச்சுக்கூட பாக்க முடியலியே.
அவன் அதிர்ந்து போவதை-சுக்கு நூறாக உடைந்து போவதைக் கண்டு தாய் மனம் கலங்கியது.
டப் டப் என்று பஸ் என்றும் பாராமல் முகத்தில் அடித்துக் கொண்டாள் சந்துருவின் அம்மா.
'என் புள்ள மனச இப்படி காயப்படுத்ற மாதிரி பண்ணிட்டயெ சுடல மாடா? ஒனக்கு ஈவு இரக்கமே இல்லயாப்பா? கொட தவறாம ஒனக்கு பொங்க வைப்பெனே! இப்படி என் பையன் வாழ்க்கயில வெளயாண்டிட்டியே! சின்ன வயசுல இருந்து நீங்க ரெண்டு பேரும் தான் புருஷன் பொண்டாட்டின்னு சொல்லிப்புட்டு-ஆசய வளத்து நிக்கற சமயம் பாத்து அத கருக வச்சிட்டயெ! அப்பா இல்லாத பையன இப்படி அம்போன்னு நிக்க வச்சிட்டீகளே! ஒரெ பயனோட ஆசய நிறைவேத்தி வைக்க முடியலன்னா நான் என்ன அம்மா?' என்று ஒப்பாரி வைக்க, கண்டக்டர் முதற்கொண்டு இருந்த ஓரிரு பயணிகளும் என்ன என்பது போல் பார்த்தனர்.
'அம்மா. புலம்பாதே. என்ன நடந்ததுன்னு சொல்லு.'
'மொதல்ல சத்தியம் பண்ணு ராசா. இல்லன்னா நீ கல்யாணம் பண்ணிக்க மாட்ட. என் குடும்பம் வெளங்கணும். நீ சத்தியம் பண்ணு. சொல்றேன்.'
'நீ என்னங்கறத சொல்லு. அத நாம சரி பண்ண முடிஞ்சிச்சின்னா அப்புறம் சத்தியம் எதுக்கு?'
'இல்லப்பா! அது சரிப்படுத்தவெ முடியாது. சௌம்யா நம்ம வீட்டுக்கு மருமகளா வரதுங்கறது நடக்காது. நீ சத்தியம் பண்ணாட்டாலும், நான் செத்துப் போயிட்டா நீ கல்யாணம் பண்ணாம- குழந்தை குட்டி பெத்துக்காம என் கட்ட வேகாது.'
'ஏம்மா இப்படி பேசுற? என்ன நடந்திச்சு சொல்லு' என்றான் சந்துரு.
'காலைல வந்ததும் உங்க அத்த என் கிட்ட தனியா இதத்தான் சொன்னா. நான் கத்த ஆரம்பிச்சேன். சௌம்யா என்னன்னு பக்கத்துல வந்தா. ஒடனே ஒங்க அத்த அவங்க ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டா. அங்க அவங்களோட பொண் குழந்தய காமிச்சா. அது பீரியட்ஸ் ஆகுறது கூட தெரியாம மலங்க மலங்க விழிக்கற மன நிலை சரி இல்லாத பொண்ணு. 16 வயசுன்னு சொல்ல முடியாது. சின்ன குழந்தை மாதிரி படுத்த படுக்கயாவே இருக்கா'
'அதுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்மா இருக்கு?'
'இருக்குப்பா. அந்த ஹவுஸ் ஓனரும் அவங்க வீட்டுக்காரரும் ஒங்கள மாதிரி தானாம். சொந்த மொறப் பையன கட்டிகிச்சாமாம் அந்த அம்மா. சொந்தத்துல கல்யாணம் பண்ணிகிட்டா இந்த மாதிரி கொற வற சான்ஸ் அதிகமாம். அவங்களோட மாமனார், மாமியாரும் சொந்தத்துல பண்ணிகிட்டதால தான் அவங்க வீட்டுக்காரருக்கு ஹார்ட் ப்ராப்ளமாம். சின்ன வயசுலெயே வீட்டுக்காரரும் போயி, ஒரே புள்ளயயும் இப்படி வச்சிட்டிருக்கற அந்த அம்மாவோட கண்ணீரப் பாத்ததும் உங்க அத்த மனசு மாறிப் போச்சு. தன் ஒரே பொண்ணோட வாழ்க்கைய நானெ சீரழிக்க மாட்டென்னு சொல்லி சௌம்யாவ ஒனக்குத் தர மாட்டென்னு உறுதியா சொல்லிட்டா. எனக்கு அவளப் பத்தி தெரியும். அவ சொன்னதுன்னா சொன்னது தான். வேண்டாம் ராஜா. சௌம்யாவ மறந்துருப்பா.'
இதே கணத்தில் நாகர்கோவிலில் விஷயம் கேள்விப்பட்டு அம்மாவை எதிர்த்து கத்தினாள் சௌம்யா.
'என்னம்மா இப்படி சொல்றெ? இதென்ன சேலயா? தாவணியா? போனா போதும்னு மாத்திக்க. மனசும்மா. நீயும் ஒரு பொம்பள தான. மாமாவயே நெனச்சிட்டு இருக்ற நான் எப்டிம்மா....'
'அதெல்லாம் மொதல்ல அப்படித்தான் இருக்கும். போகப் போக சரி ஆயிரும்.எல்லா பொம்பளைங்களுக்கும், ஏன் ஆம்பளைங்களுக்கும் கூட அவங்க நெனச்ச வாழ்க்க கெடச்சிருதா என்ன? ஒங்க அப்பா கூட யாரோ ஒருத்திய லவ் பண்ணாராம். ஒங்க தாத்தா மாட்டேன்னுட்டாராம். என்ன சட் புட்னு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. நீ பொறக்கலயா இல்ல உங்கப்பா தான் என் மேல பிரியமா இல்லயா?'
சௌம்யாவிற்கு அழுகை கரை புரண்டு வந்தது.
காலம் அம்மாவை மாற்றும் என்று மனசைத் தேற்றிக் கொண்டு நாகராஜாவை வேண்டிக் கொண்டு தினமும் நடைபிணமாய் கல்லூரி போய் வந்தாள்.
அடுத்த மாதம்...
அவள் வீட்டிற்கு போஸ்ட்டில் அந்த அணுகுண்டு வந்தது.

சந்துருவின் கல்யாணப் பத்திரிகை.
 
Nice epi.
Ivalavu scientists moolaya Sowmiya voda amma paathukapa fridge la vachu irrunthala ithara naala? Ippo than manda kula vachu vela seyuthu nu check pannutha antha pasam meegum thai.
 
பிள்ளைகள் மனதில் ஆசையை வளர்த்து விட்டுட்டு கடைசியா மறுத்தா பாவம் தானே
:love: :love: :love:
 
Top