Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி அத்தியாயம் 22

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 22

தெருவில் சென்று கொண்டிருந்த ஜனங்களும் தங்கள் பிஸி டைம்மிலும் இங்கு என்ன நடக்குது என்று சௌம்யாவை ஒரு கணம் பார்க்க தவற வில்லை. தன் கால்களில் விழுந்து கதறும் பெண்ணைப் பார்த்து தொட்டு தூக்கி நிறுத்தினாள் ரோஸி சிஸ்டர்.
'கெட் அப் மை சைல்ட். எல்லாரும் பாக்றாங்க பாரு.'
அவள் எழுந்ததும் 'ஏய் நீ சௌம்யா தான? எப்படிம்மா இருக்ற?'
கனிவோடு பேசும் சிஸ்டரைக் கண்ணீர் வழியும் முகத்தோடு பார்த்தாள் சௌம்யா.
'நல்லா இருக்றென் சிஸ்டர்.'
'இது உன் குழந்தையா? வாடா ராஜா.' என்று யஜுவை இழுக்கவே அவன் சட் என்று ஒட்டிக் கொண்டான்.
'சாப்பிடத்தான போற? நான் டோக்கன் வாங்கிட்டேன். நீ வாங்கிட்டு வா.'
சுமதி டக் என்று ரெண்டு டோக்கன் வாங்கவே இருவரும் சிஸ்டரோடு மாடிக்குச் சென்றார்கள்.
சிஸ்டர் யஜுவோடு பேசினார்.
'நீங்க என்ன சாப்பிடப் போறீங்க?'
'சப்பாத்தி' என்றான் யஜு.
ஓரமாய் இருந்த டேபிள் நோக்கிப் போனார்கள்.
சிஸ்டர் ஒரு சைடும் சிஸ்டரின் அருகில் யஜுவும் எதிரே சுமதியும், சௌம்யாவும் அமர்ந்தார்கள்.
'அப்புறம்? டோண்ட் க்ரை மை சைல்ட்.' என்றவாறே சுமதியைப் பார்த்தார்.
பின்பு ஒரு கணம் யோசித்து விட்டு 'நீ இவ ரூம் மேட்டா இருந்தவ தானே?' என்றார்.
'ஆமாம் சிஸ்டர். பேரு சுமதி.'
சிஸ்டருக்கு வயதாகி இருந்ததால் தலை நரைத்து முக்காடிற்கு வெளியே தெரிந்தது. முகத்தில் லேசாக சுருக்கங்கள் அரும்பி இருந்தன. நெஞ்சில் சிலுவைக் குறியோடு ஜீசஸ் தெரிந்தார்.
பணியாளர்கள் இலை போடவே மூவரும் தண்ணீர் தெளித்தனர்.
'தம்பிக்கு சப்பாத்தி' என்று ஆர்டர் செய்தாள் சௌம்யா.
கூட்டு, அப்பளம் இத்யாதிகளை இலைகளில் பரப்பி விட்டு பணியாளர்கள் நகர்ந்ததும், 'சாப்பிடு சௌம்யா' என்றார் சிஸ்டர்.
'இல்ல சிஸ்டர். நீங்க மன்னிச்சிட்டேன்னு சொன்னாத் தான் சாப்பிடுவேன்' என்றாள் சௌம்யா.
'என்னம்மா இது சின்ன குழந்தையாட்டம். ஒனக்கு இப்ப ஒரு சின்ன குழந்தை இருக்கு தெரியுமில்ல.'
'என்ன இருந்தாலும் நான் பண்ணது தப்பு சிஸ்டர். அந்த வயசுல தெரியல. ஆனா அப்புறம் அத நெனச்சு நெனச்சு நெறய நாள் மனசு கஷ்டப்பட்டிருக்கிறேன். ஸ்கூலுக்கு கூட ஒரு வாட்டி வந்தேன். நீங்க ட்ரான்ஸ்பர் ஆயிட்டதா சொன்னாங்க. பேஸ்புக்ல தேடிப் பாத்தேன். கிடைக்கல.'
'நான் அது எல்லாம் யூஸ் பண்றதில்ல. ஒன்லி வாட்ஸ் அப் தான். அதுவும் ஸ்கூல் பர்ப்பஸ்க்கு தான். நான் திருநெல்வேலியில இருந்து திருச்சி போயிட்டு அங்க இருந்து சென்னை அப்புறம் இப்ப தான் கோயம்புத்தூர் வந்தேன். இன்னும் மூணு வருஷம் சர்வீஸ் இருக்கு. ஒன்ன மன்னிக்க நான் யாரு சௌம்யா. மன்னிப்ப ஜீசஸ் கிட்ட கேளு. நானும் தான் ஓவரா ரிஆக்ட் பண்ணிட்டேன். என்னோட தங்கச்சி அந்த வயசுல தடம் மாறினது மாதிரி என் ஸ்டூடண்ட்ஸ் ஆயிரக் கூடாதேங்கற அக்கறையில கொஞ்சம் ஓவர்டோஸாயிடிச்சி. அது ஒனக்கு எவ்ளோ காயப்படுத்தி இருக்குன்னு மேடையில நீ நடந்து கிட்டத வச்சி தெரிஞ்சிகிட்டேன். அது எனக்கு ஒரு பாடமா இருந்தது. அதுல இருந்து கண்டிப்போட கொஞ்சம் கருணையையும் கலக்க கத்துகிட்டேன். சொல்லப் போனா நான் ஒனக்கு தாங்க்ஸ் தான் சொல்லணும். நான் வந்தாலே நடுங்கின கேர்ள்ஸ் என் பக்கத்துல வந்து அவங்க ப்ரச்சினைய சொல்ற அளவுக்கு நான் மாறிட்டேன். சாப்பிடும்மா.' எனவே சௌம்யா இலையில் கை வைத்தாள்.

'நேற்று தான் இவள பாத்தேன் சிஸ்டர். இன்னைக்கு நீங்க.'
'ஓ. சரி. உங்க மாமா எப்படி இருக்கார்?'
'நல்லா இருக்கார் சிஸ்டர்.'
'ஒங்கிட்ட பிரியமா இருக்காரா? ஏன் இருக்க மாட்டார்? அப்பவே ஒன்ன கூட்டிட்டுப் போக ஒத்தக் கால்ல நின்னாரே!'
சௌம்யாவின் முகம் மாற, சுமதி அவள் கதையை சுருக்கமாகச் சொன்னாள்.
'ஓ மை காட்!'என்றவாறே பக்கத்தில் சப்பாத்தியை பிட்டு உள்ளே தள்ளிக் கொண்ட யஜுவை ஒரு நிமிடம் தலை கோதி விட்டார்.
'ஐம் சாரி சௌம்யா.' என்று இரக்கத்தோடு சௌம்யாவைப் பார்த்தார்.
'பரவால்ல சிஸ்டர்.'
'என்னம்மா படிச்சிருக்க?'
'எம்.எஸ்ஸி. பிஎட் மேத்ஸ் சிஸ்டர்.'
'வேலைக்கு போகல்லியா'
'இவன பாக்கணும்ல சிஸ்டர்'
'ஆமாம்ல.கர்த்தர் என்ன நினைக்கிறார்னு யார்க்கும் தெரியாதும்மா. நான் ஒனக்காக ப்ரேயர் பண்ணிக்கிறேன்மா.'
நால்வரும் எழுந்து கை கழுவி விட்டு வந்தனர்.
'சரிம்மா. எனக்கு டைம் ஆச்சு. போகணும். வரட்டுமா. காட் ப்ளஸ் யூ.'
என்று சிஸ்டர் விடை பெற, மனதில் ஒரு வித ஆயாசத்துடன் யஜுவை அழைத்துக் கொண்டு வாசலில் நின்ற கால் டாக்ஸியில் ஏறினர்.
'மனசு இப்ப தான் நிம்மதியா இருக்கு சுமதி.' என்று சொன்ன சௌம்யா பக்கத்தில் ஜன்னல் வழியாக தெரிந்த குருசடியைப் பார்த்ததும் 'பிதா, சுதன்..' என்று தொழுதாள் காரில் இருந்தவாறே.
அவள் தொழுது முடிக்கவும், செல் ஃபோன் அடித்தது.
எடுத்துப் பேசவும் செல் கைகளில் இருந்து நழுவி காலின் கீழ் விழுந்தது.
சௌம்யா ஸ்தம்பித்துப் போய் இருந்தாள்.
'என்னடி ஆச்சு?' என்று சுமதி அவளை உலுக்க, அவளால் பதில் கூற இயலாமல் போனைக் காட்டினாள்.
சுமதி போனை கீழே குனிந்து எடுத்தாள்.
லாஸ்ட் காலை பார்த்தாள்.
யாசர் ஆபிஸ் என்றிருந்தது.
திரும்பவும் கூப்பிட்டாள்.
உடனே லைன் கிடைத்தது.
'நான் சௌம்யா ப்ரெண்ட் பேசறேன். நீங்க போன் பண்ண உடனே அவ ஷாக் ஆயிட்டா. என்ன ஆச்சு.'
'மேடம் நான் அர்விந்த் சாரோட வர்க் பண்றேன்.'அழுகையோடே பேசினார் அவர். 'சாரும், நாங்கள்லாம் பால்கனியில நின்னு டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருக்கறப்ப, சார் பாலன்ஸ் தவறி கீழ விழுந்து ஒரு பாறைல தலை மோதி ஸ்பாட்லெயெ...'மேலெ கூறாமல் விசும்பினார் அவர்.

சுமதி அதிர்ச்சியாய் சௌம்யாவைப் பார்க்க, அவள் யஜுவயே வெறித்தபடி இருந்தாள்.
 
அட கொடுமையே .விதியின் பெயரால் ஆத்தர் என்னென்ன சதியெல்லாமோ செய்றார்.
 
Nice epi.
Veegam ezhunthu epi kodutha author ku jay podungo sukarthukale.
Ippadi tappu, tappu nu ellavarayum pottu thallureengale. Ithukku than katha per appadi vachingala??
 
Top