Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் விதி இறுதி அத்தியாயம் 24

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 24

'ஏம்ப்பா! என் வீட்டுக்காரர் தூக்கி குடுத்து பத்து நாள் தான் ஆயிருக்கு. அதுக்குள்ள இதப் பத்தி பேச உங்களுக்கு எப்படிப்பா மனசு வந்தது?' சௌம்யா கண்ணீரோடு அலற, சந்துருவும், கிச்சனில் இருந்த சுமதியும் ஓடி வந்தார்கள்.
'ஏன்னா எனக்கு இன்னும் எத்தன நாள் இருக்குன்னு தெரியலியேம்மா. என் பொண்ணு இந்த காலத்துல இப்படி ஒரு பையன வச்சிகிட்டு கஷ்டப்படுறத நெனச்சாலே எனக்கு தூக்கமே வர மாட்டெங்குதும்மா.' என கிழவர் தழுதழுக்க சௌம்யா ஒன்றும் கூறாமல் இருந்தாள்.
சந்துருவைப் பார்த்ததும், சௌம்யாவின் அப்பா சந்துருவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
'சந்துரு. மாமா ஒண்ணு கேப்பேன் செய்வியா? என் பொண்ணுக்கு ஒரு வாழ்க்க குடுப்பா. ஒங்கள பிரிச்சி வச்ச பாவமோ என்னமோ எங்க குடும்பத்த பாடாபடுத்துது. என் பொண்ண ஏத்துக்கறென்னு சொல்லுப்பா. நான் ஒன்கிட்ட சின்னம்மா போன உடனேயே குழந்தய பாத்துக்கறதுக்காவது ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கோன்னு பல தடவ சொல்லி இருக்கேன். நீ மாட்டென்னு மறுத்திட்ட. விதி நீ யார விரும்புனியோ அவளயே ரெண்டாம் கல்யாணம் பண்ணத்தான் இப்படி விட்ருச்சோ என்னவோ.'
சந்துரு என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கினான். சௌம்யாவைப் பார்த்தான்.
அவள் 'அப்பா! எனக்கு கொஞ்சம் டைம் வேணும். இந்த கவர்ன்மெண்ட் வேல பரீச்ச எழுதி ரிசல்ட் வந்த பின்னாடி தான் என்னால எதுவும் சொல்ல முடியும்.' என தீர்க்கமாகச் சொல்ல, 'அப்போ, அதுவர நானும் சந்துருவும் இங்க தான் இருப்போம். சந்துரு அப்படி அதுக்குள்ள எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீ தாம்பா என் பொண்ணுக்கு வாழ்க்க குடுக்கணும்.' என்றார் அவள் அப்பா.
'மாமா! கல்யாணம் பண்ணிக்கிறது மட்டும் தான் தீர்வா? நான் அவளுக்கு ஆதரவா எப்பவும் இருப்பேன் மாமா.'
'அது எனக்குத் தெரியும். ஆனா கல்யாணம்கறது நம்ம சமூகம் போட்டுருக்கற அழகான வேலி. அது எப்பவும் ஒரு பொண்ணுக்கும் ஏன் ஆணுக்கும் கூட ஒரு பாதுகாப்பு தான். ஒரு பொண்ணுக்கும் ஆணுக்கும் நாப்பது வயசுக்கு மேலதான்பா கண்டிப்பா ஒரு தொண வேணும். உங்க ரெண்டு பேரயும் பிரிச்சிட்டத நெனச்சி நெனச்சி உங்க அத்த படுத்த படுக்கையா அழுதிட்டே இருக்கா. உங்க கல்யாணம் அவளுக்கு ஒரு ஆறுதலாவாவது இருக்கும். போறப்ப மனசுல வேதன இல்லாம போவா.'
ஒரு நிமிடம் யோசித்த சந்துரு 'சௌம்யாவுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்' என்றான்.
சௌம்யா குனிந்த தலை நிமிர வில்லை. சுமதி ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.
ஆறு மாதங்கள் ஓடின.
சௌம்யா பரீச்சையில் தேறி கோயம்புத்தூரிலேயே வேலை வாங்கி விட்டாள்.
சூலூர் பக்கம் ஒரு கிராமத்தில் அமைந்திருந்தது அந்தப் பள்ளிக்கூடம்.
யஜுவை சந்துருவும் அப்பாவும் பார்த்துக் கொள்ள நிம்மதியாய் பாடம் எடுத்து விட்டு வந்தாள்.
அப்பா 'அதான் நீ நெனச்ச மாதிரி ஆயிருச்செ. இனி என்ன' என, சௌம்யா 'இருந்தாலும் அவர் படத்து முன்னால சீட்டு குலுக்கிப் போட்டு பாக்கலாம்பா. வேல எனக்கு தன்னம்பிக்கை தந்திருக்கு. இப்படியே இருந்தாலும் யஜுவ நல்லா பாத்துக்க முடியும்னு தெம்பு வந்திருக்கு...' என இழுக்க, அன்று வீட்டிற்கு வந்திருந்த சுமதி, 'இப்ப என்ன ஒனக்கு சீட்டு குலுக்கிப் பாக்கணும் அப்படித்தானே.' என்று விட்டு உள்ளே போய் இரண்டு சுருட்டப்பட்ட காகிதங்களை எடுத்து வந்தாள்.
அர்விந்தின் போட்டோ முன்பாய் அவற்றை பரப்பினாள்.
'யஜு கண்ணா! இங்க வா. இந்த ரெண்டு சீட்ல ஒண்ண எடுத்து எங்கிட்ட குடு செல்லம்.' எனவே அது ஓடி வந்து ஒன்றை எடுத்து 'இந்தாங்க ஆண்டி' என்றது. உடனே அவள் அந்த காகிதத்தை சிவாவின் கையில் கொடுத்து படிக்கச் சொன்னாள்.
சந்துரு, சௌம்யாவின் அப்பா இரண்டு பேரும் பதற்றத்தோடு இருக்க, சௌம்யா சிரித்தபடி நின்றாள்.
சிவா'த.ப்..பி..ல்.லை..தப்பில்லை' என்று வாசித்தான்.
சந்துருவின் முகமும், சௌம்யாவின் அப்பாவின் முகமும் பிரகாசமாக, 'மாப்ளயே உத்தரவு குடுத்துட்டாரு. இனி என்ன' என்று சௌம்யாவின் அப்பா கேட்க, 'இருப்பா. அந்த சீட்டுல என்ன இருக்குதுன்னு பாக்கலாம்.' என சுமதியை பார்த்துக் கொண்டே சௌம்யா சிரிக்க, சுமதி அந்த சீட்டை எடுத்து சிவாவிடம் குடுத்தாள். 'இதயும் நீயே படி ராஜா. நான் ஒண்ணும் ரெண்டுலயும் ஒரே விஷயத்தயே எழுதல.' என்றாள்.
சிவா அதை வாங்கி விரித்து. 'ச..ரி.. சரி' என்று விட்டு 'ஆமாம். ரெண்டுலயும் வேற வேற தான எழுதிருக்கு' என்று சொன்னான்.
அனைவரும் சிரிக்கவே, சௌம்யா செல்லமாய் சுமதியை கிள்ளினாள்.
அடுத்த மாதம் கல்யாணம் முடிந்து, அவர்கள் சௌம்யாவின் தாய் படுத்திருக்கும் கட்டிலுக்கு வந்தனர். ஆசீர்வாதம் வாங்கினர். இத்தனை நாள் கண்களில் வழியும் கண்ணீராவே இருந்த அந்த தாயின் முகத்தில் முதன் முதலாய் ஒரு புன்னகை அரும்பியது.
முதல் இரவு... சாரி. இரண்டாம் இரவு இருவருக்குமே.
யஜுவும், சிவாவும் சுமதியோடு படுத்துக் கொள்ள, ஷேவ் செய்யப்பட்ட முகத்தோடு சங்கடமாய் புது வேட்டி சட்டையோடு நின்றிருந்த மாமாவைப் பார்த்தாள் சௌம்யா.
இருபது வருடங்களுக்கு முன் நடக்க வேண்டிய இந்த நிகழ்வு இரு உயிர்களை இவர்களொடு உறவாட வைத்து இரு உயிர்களைத் தர வைத்து.. இப்போது இவர்களை மறுபடியும் இணைத்து விளையாடுகிறது.
சந்துரு சொன்னான்.
'ஒரு பொண்ணுக்கு இது எவ்ளொ சங்கடமா இருக்கும்னு எனக்குப் புரிஞ்சுக்க முடியுது சௌம்யா. சும்மா இவங்களுக்காக இந்த ரூம்ல தூங்கி எந்திரிச்சு போயிரலாம். கோயம்புத்தூர் போன பிறகு தனித்தனி படுக்கைல படுத்துக்கலாம். இனி நமக்கு ரெண்டு குழந்தைங்க. அதோட வாழ்க்கய்க்காக நாம வாழலாம். நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாத. ஒனக்குத்தான் வாழ்க்கைல எவ்ளொ கஷ்டம். இனியாவது நீ சந்தோஷமா இரு.'
என்ற சந்துருவைப் பார்த்து சிரித்தாள் சௌம்யா.
'ம். அப்புறம்?' என்றாள்.
'இந்த நக்கல் தான வேண்டாங்கறது. நான் என்ன கதயா சொல்லிட்டு இருக்கேன், சௌமி?'
'அப்பா. இப்ப தான் சௌமின்னு கூப்டுற பழய மாமா. எவ்ளோ நாளாச்சு இந்த மாமாவ பாத்து. நீ மட்டும் கஷ்டப்படவே இல்லயா. என்ன மறக்க முடியாம பொண்டாட்டி பக்கம் போகாம இருந்ததான நீ? மாமா, இவ்ளோ பழகியிருந்தும் என் கேரக்டர் தெரியல தான ஒனக்கு.' நெருங்கி வந்து அவன் அருகில் அமர்ந்தாள். பனியனது ஊடே தெரிந்த அவனது மார்பு ரோமங்களை அளைந்தாள்.
முதன் முறையாய் அவளது ஸ்பரிசம் பட்டதும் சிலிர்த்தான் சந்துரு.
'இப்ப நான் ஒனக்கு தாலி கட்டின பொண்டாட்டி. ஒரு பொண்டாட்டியோட கடமையை நான் செய்ய வேண்டாமா? இப்ப இருக்கற லவ்வர்ஸ பாத்துட்டு அப்பப்ப நான் நெனக்கறதுண்டு. மாமா சுண்டு விரல் கூட என் மேல தப்பா பட்டதில்லயேன்னு. அப்படிப்பட்ட ஆளுக்கு உரிமை இருக்கறப்ப என்ன குடுக்கறதில்ல என்ன தப்பு? என்ன இருபது வயசு கொமரி நாப்பது வயசு பொண்ணாயிட்டேன். பரவால்ல. இன்னும் இளம எண்ட்ட மிச்சம் இருக்கு. டாக்டர்ட்டயும் விசாரிச்சுட்டேன். ரெண்டு வருஷத்துக்குள்ள இன்னொண்ணு பெத்துக்கோ.இல்லன்னா கஷ்டம்ன்னு சொன்னாங்க. அதனால வேதாந்தம் பேசாம வாங்க மாமா' என்று அவனை நெஞ்சோடு இழுத்து அணைத்தாள் சௌம்யா.
அந்த காட்சியை காண வெட்கப்பட்டு விதி 'இவர்களது வாழ்க்கையில் விளையாடியது போதும். இனி வேறு எங்காவது போவோம்' என்று விலக, லைட் போட்டிருப்பது கூடத் தெரியாமல் இப்படி இருக்கிறார்களே என்று மின்சாரம் தானே தடைபட்டது. ஊரே இருளில் மூழ்க, சௌம்யாவின் வாழ்வில் ஒளி ஏற்றினான் சந்துரு.

முற்றும்
 
உங்கள் எழுத்து நடை, அமைப்பு நல்லா இருக்கு....??
தொடர்ந்து நிறைய எழுதுங்கள் (y) (y) (y)
வாழ்த்துக்கள் (y)(y)??
 
விதி இவர்கள் வாழ்க்கையில் விளையாடிட்டு போயிடுச்சா....
அருமையான கதை. அழகாக எழுதியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.(y)(y)??
மேலும் நிறைய கதை எழுதுங்கள். ? ? ?
குட்டி குட்டியா டக்கு டக்குனு எபி கொடுத்து அசத்திட்டீங்க:love::love::love:
 
Nice epi.
Enna author ji vithikke take diversion ah??? Hmmm...
Eppadiyo hero heroin serunthu.vidu rightu.
 
Dear author ji,
Intha thalathil unngada first story ku,best wishes.
Logic ellam vidungo,nangalu nalla enjoy seythu.
Konjam serious kathaya irrunthalum yetharthama,suvarasiyam kurayuthu koduthu irrukingo. Frequent epi pottu romba, romba kushi paduthu reengo.
Ellame super, super. Veegam varennae puthiya katha kondu.
we are eager to read your new presentation.
 
விதி இவர்கள் வாழ்க்கையில் விளையாடிட்டு போயிடுச்சா....
அருமையான கதை. அழகாக எழுதியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.(y)(y)??
மேலும் நிறைய கதை எழுதுங்கள். ? ? ?
குட்டி குட்டியா டக்கு டக்குனு எபி கொடுத்து அசத்திட்டீங்க:love::love::love:
nantri
 
விதி இவர்கள் வாழ்க்கையில் விளையாடிட்டு போயிடுச்சா....
அருமையான கதை. அழகாக எழுதியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.(y)(y)??
மேலும் நிறைய கதை எழுதுங்கள். ? ? ?
குட்டி குட்டியா டக்கு டக்குனு எபி கொடுத்து அசத்திட்டீங்க:love::love::love:
nantri
 
Top