Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வசந்தகால நதிகளிலே.....6

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 6.

எப்படி வீடு வந்தோம்? இரவு உணவு என்ன சாப்பிட்டோம் என கேட்டால் ஜெயாவால் பதில் சொல்ல முடியாது. அது மாதிரியான மனநிலையில் இருந்தாள் அவள். பரவசம், குழப்பம், பயம் என எல்லாம் கலந்து உணர்வு. தனக்கும் குடும்பம், குழந்தை என உருவாகும் என்ற பரவசம். இந்த வயதில் நாம் செய்வது சரிதானா? என்ற குழப்பம், அம்மாவும் தம்பியும் என்ன சொல்வார்களோ என்ற பயம் என தத்தளித்தாள் ஜெயா. மறு நாள் விடுமுறை ஆனதால் தம்பியும் வீட்டில் இருப்பான். அவன் எதிரிலேயே அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லி விடலாம் எனத் திட்டமிட்டாள். அதே போல விடிந்தது. குளித்து விட்டு தலை நிறயப் பூவையும் வைத்துக்கொண்டு சாமி கும்பிடும் போதே காலிங் பெல் ஒலித்தது. பந்தாக பயமும் பரவசமும் கலந்து உணர்வு எழ ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள். ஆனால் ஏமாற்றம். வந்தது கவிதா.

"என்னக்கா? என்னைப் பார்த்ததும் முகம் சுருங்குது? எங்கியாவது போகப்போறியா? மேக்கப் எல்லாம் பிரமாதமா இருக்கு?" என்றபடியே குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.

சமாளித்துக்கொண்டு வரவேற்றாள் ஜெயா.

"இல்ல கவி! காலங்கார்த்தால தனியா வந்து நிக்கிறியேன்னு தான் யோசிச்சேன். உள்ள வா! " என்றாள். ஜெயா சொல்லு முன்பே குழந்தையை ஜெயாவின் கட்டிலில் கிடத்தி விட்டு கிச்சனை நோக்கிப் போனாள் கவிதா.

"ஐ! கவிக்குட்டியா? வா வா! என்ன காலங்கார்த்தால அதிசயமா இருக்கு?" என்று வரவேற்றாள் அம்மா. அம்மாவின் உண்மையான மகிழ்ச்சி, கவிக்குட்டி என்ற அழைப்பு எல்லாமே ஜெயாவை சுட்டன. ஒரு நாள் கூட தன்னை இப்படி வரவேற்றதுமில்லை கொஞ்சியதும் இல்லையே? என எண்ணிக் கொண்டாள்.

"முதல்ல காப்பி குடி! வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?"

கிளாசை சீப்பிக்கொண்டே உதட்டைப் பிதுக்கினாள் கவிதா.

"என்ன சௌக்கியம்? எப்பப் பாரு என் மாமியார் என்னை பிடுங்கி எடுக்கறாங்க. அவங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு இவரும் ஆடுறாரு. எல்லாம் என் தலையெழுத்து! நேத்து ராத்திரி ஒரே சண்டை. அதான் காலையிலயே வந்துட்டேன்." என்றாள்.

ஜெயாவுக்கு பகீரென்றது. இன்றைக்குத்தானே அத்தையும் ராமகிருஷ்ணனும் வருகிறேன் பெண் கேட்க என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அதைப் பற்றி அம்மாவிடமும் தம்பியிடமும் இன்னமும் பேசவேயில்லையே? இதற்குள் கவிதா சண்டை என்று வந்து விட்டால் அம்மாவுக்கு வேறு சிந்தனை எதுவுமே இருக்காதே? எனக் கவலைப் பட்டாள். ஃபோன் ஒலிக்க எடுத்துப் பார்த்தாள் ஜெயா. ராம கிருஷ்ணன் தான். தன் அறைக்குப் போய் பேசினாள். குழந்தை எழுந்து விடாமல் மெல்லப் பேசினாள்.

"ராம் சார்! நான் தான். சொல்லுங்க" என்றாள் மெல்ல.

"இன்னமும் நன சார் தானா ஜெயா?" என்றார் அவர்.

உடலெங்கும் ஆனந்தம் ஓடியது.

"வந்து...இல்ல...உங்களை எப்படிக் கூப்பிடுறதுன்னு...." தயங்கினாள்.

"ராமுன்னு கூப்பிடு! பிடிக்கலையா ராம்னு கூப்பிடு." என்றார் சிரித்தபடியே.

"இல்ல! நான் உங்களை கிருஷ்னு தான் கூப்பிடப் போறேன். எனக்கு அந்தப் பேர் ரொம்பப் பிடிக்கும்." என்று சொல்லி விட்டுக் கூசிப் போய் விட்டாள். தானா இப்படிப் பேசினோம் என்று அவளுக்கே ஆச்சரியமாகப் போய் விட்டது.

"வாவ்! கிருஷ் நல்லா இருக்கே? அப்படியே கூப்பிடு. நீ பேசுறதைப் பார்த்தா உங்க வீட்டுல சரின்னு சொல்லிட்டாங்க போல தெரிய்து?" என்றார்.

மறந்திருந்த கவலை மீண்டும் கூடு கட்டியது மனதுள்.

"இல்லைங்க! நான் இன்னமும் சொல்லவே இல்ல. நீங்க எப்ப வரப் போறீங்க?"

"சாயங்காலம் 5 மணிக்கு நேரம் நல்லா இருக்குன்னு அம்மா சொல்லிக்கிட்டு இருந்தாங்க."

"சரி! அதுக்குள்ள நான் சொல்லிடறேன்."

"ஏன் ஜெயாம்மா? ஏதாவது பிரச்சனையா?" அவரது அன்புக்குரலில் கரைந்தாள் ஜெயா.

"பெருசா ஒண்ணுமில்ல! நான் சமாளிச்சுக்கறேன்."

பேசி முடித்து விட்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்.

"எங்கே போயிட்ட நீ? உங்கிட்டத்தான் பேசணும்னு வந்திருக்கா கவிதா." என்றபடியே அம்மா கையில் டிஃபன் தட்டுடன் வந்தாள்.

"நான் கிச்சன்ல வந்தே சாப்பிடுவனே? ஏன்மா கஷ்டப்படுற?" என்றாள் ஜெயா.

"உனக்கில்ல! தீபனுக்கு. கவிதா சாப்பிட்டாச்சு. உனக்கு தட்டுல எடுத்து வெச்சிருக்கேன். சாப்பிடு" என்றபடி தீபனை அழைத்தாள். மனதில் மேலும் ஒரு சுருக் ஜெயாவுக்கு.

"அம்மா! நான் ரொம்ப முக்கியமான வ்ஷயம் பேசணும்மா.. தீபன் நீயும் வாயேன். உங்க எல்லார் கிட்டயும் தான் பேசணும்" என்று அழைத்தாள். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"என்னக்கா? என்ன விஷயம்? அப்பா வேற ஏதாவது எங்களுக்குத் தெரியாம பணம் வெச்சுட்டுப் போயிருக்காரா என்ன?" என்றாள் கவிதா.

"இல்ல! இது வேற"

"அதுக்கு முன்னாடி கவிதா என்னவோ சொல்ல வந்தா! அதைக் கேளு. பாவம் புகுந்த வீட்டுல வாழற பொண்ணு. அவ பிரச்சனை தான் முதல்ல. அப்புறமா நீ சொல்ல வந்ததைச் சொல்லு." என்றாள் அம்மா.

முகம் கறுத்துப் போனது ஜெயாவுக்கு. பேசாமல் நின்றாள்.

"எப்பவும் அக்காவுக்குத்த ன்னோட விஷயம் தான். என்னடா ஒருத்தி இப்படி வந்து நிக்கறாளே? அவ பிரச்சனை என்னன்னு கூடக் கேக்க மாட்டாங்கேங்குறா பாரும்மா" என்றாள் கவிதா.

"அக்கா! அனாவசியாமப் பேசாதே! ஜெயாக்கா பேசாம தானே இருக்காங்க. உன் பிரச்சனை என்ன அதைச் சொல்லு" என்றான் தீபன்.

தம்பியின் பெரியமனிதத்தனமான பேச்சு ஜெயாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

"சம்பாதிக்குற ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துக்கிட்டீங்களா? ஹூம்" எனக் கண்ணைக் கசக்கினாள்.

"அக்கா! விஷயத்தைச் சொல்றதானா சொல்லு. இல்லை நான் கிரிக்கெட் ஆடப் போயிருவேன்." என்றான் தீபன். தம்பியின் துணிச்சலும் தன்ன்னம்பிக்கையும் ஜெயாவுக்குப் புதிதாக இருந்தது.

"தீபன்! அன்னைக்கு நீ எங்க வீட்டுக்கு வந்தே இல்ல? அப்ப இருந்து ஒரே பிரச்சனை தான்."

"நான் என்னக்கா செஞ்சேன்?"

"நீ ஒண்ணும் செய்யல்ல! ஆனா வேலைக்குப் போன ரெண்டே மாசத்துல பைக் வாங்கிட்டேன்னு சொன்னியா? அவருக்கு ஒரு மாதிரி ஆயிரிச்சு. என் வீட்டுக்காரரு பழைய டிவிஎஸ் ல தான் போறாரு. அதான் பிரச்சனை." என்றாள் கவிதா. புரிந்து போனது ஜெயாவுக்கு. அவள் கணவனோ மாமியரோ தூம்ண்டி விட்டார்களோ இல்லையோ இவளுக்கு பைக் வேண்டும் எனத் தோன்றி விட்டது. அதனால் மற்றவர்கள் மேல் பழி போட்டுப் பேசுகிறாள்.

"எனக்கு சம்பளம் அதிகம். லோன் போட்டு வாங்கினேன். அதனால யாருக்கு என்னக்கா?" என்றான் தீபன். அவன் குரலில் எரிச்சல்.

"ஆமா தம்பி! நீ ரொம்ப கெட்டிக்காரன்னு எங்க வீட்டுக்காரர் கூட சொல்லிகிட்டே இருப்பாரு."

"இருக்கட்டும் நீ விஷயத்துக்கு வா"

"இப்ப எங்க குடும்பமும் பெரிசாயிடிச்சு. குழந்தையை வெச்சுக்கிட்டு பைக்குல ஸ்கூட்டர்ல போக முடியாது இல்லியா? அதனால யூஸ்ட் கார் ஒண்ணு பார்த்திருக்காரு உங்க அத்தான். அதை வாங்கலாம்னு..."

"ஓ! தாராளமா வாங்கேன். யாராவது மெக்கானிக்கை விட்டு நல்லாப் பார்க்கச் சொல்லு."

"தம்பின்னா தம்பி தான். என்னைக்குக் குடுக்கப் போற?"

"நான் என்ன குடுக்கணும்?"

"ரூவாடா! நீ ரூவா குடுத்தாத்தானே நாங்க கார் வாங்க முடியும்?" என்றாள் கவிதா. அவளை நேராகப் பார்த்தான் தீபன்

"இதைப் பாருக்கா! உனக்கு நிறைய செலவு பண்ணி கல்யாணம் செஞ்சாச்சு. அதோட பிரசவம் பார்த்து, குழந்தைக்குத் தொட்டில் போடுறது வரை எல்லாமே எங்க செலவுல செஞ்சிட்டோம். இனிமே உன் வாழ்க்கையை நீ தான் பார்க்கணும். அத்தானுக்குக் கார் வேணும்னா அவர் காசுல தான் வாங்கணும். எங்க கிட்டக் கேக்கக் கூடாது. புரியுதா?" என்றான்.

இமைக்கவும் மறந்து அப்படியே நின்றாள் ஜெயா. அறியாக் குழந்தை என நினைத்த தீபனா இந்தப் போடு போடுகிறான்?

"தீபன்! என்னடா இப்படிச் சொல்ற? நம்மை விட்டா இவளுக்கு வேற யாரு? அவங்க வீட்டுல கவிதாவை அடிச்சுக் கொடுமைப்படுத்தி பணம் கொண்டு வான்னு சொன்னா என்ன செய்வா பாவம்?" என்றாள் அம்மா.

இதை எப்படி சமாளிக்கப் போகிறான் என பார்த்தாள்.

"அப்படி ஒரு கொடுமைக்கார புருஷன் கூட எதுக்கு தன் மானத்தை விட்டு வாழணும்?" என்றான் அமைதியாக.

தங்கையின் கோபம் இப்போது ஜெயாவின் மேல் பாய்ந்தது.

"எல்லாம் இவ பண்ற வேலைம்மா! இவ தான் தம்பியை நல்லா உசுப்பேத்தி விட்டிருக்கா. என்னைப் பார்த்து பொறாமைன்னு நீ சரியாத்தான் சொன்னே. இன்னைக்கு என்னைச் சொல்ற தம்பி, நாளைக்கு உன்னைச் சொல்லுவான். நானாவது பரவாயில்ல. உனக்கு வேற நாதி இல்ல. அப்பத்தான் தெரியும் உனக்கு." என்று கத்தினாள் கவிதா.

மனம் புண்பட்டுப் போனது ஜெயாவுக்கு. அவள் சொன்ன மற்றவைகளைக் காட்டிலும் அம்மாவே தனக்குக் கவிதாவின் மேல் பொறாமை எனச் சொன்னாள் என்ற வார்த்தை அவளை வாட்டியது.

"எனக்காம்மா பொறாமை? என்னைப் பார்த்தா பொறாமைன்னு சொன்ன?" என்றாள் ஜெயா சற்றே உயர்ந்த குரலில்.

"என்னடி மிரட்டுற? உன்னைத்தான் சொன்னேன். ஏன் இல்லையா? உன் தங்கச்சி பூவும் பிஞ்சுமா நிக்கும் போதே நீ பட்ட மரமா நிக்குறியே? பொறாமை இல்லாம இருக்குமா?" என்றாள் அம்மா. அம்மாவின் அந்த வார்த்தைகள் இது வரையில் கட்டிக்காத்து வந்த கோபம், எரிச்சல் எல்லாவற்ரையும் வெடிக்க வைத்தது.

"நான் பட்ட மரமா? சரி அப்படியே வெச்சுப்போம். என்னை இப்படி ஆக்குனது யாரு? கவிதா டிகிரி முடிச்ச உடனே பார்த்து கட்டிக்குடுத்த! ஆனா நான் டிகிரி முடிச்சதும் ஏன் அதைச் செய்யல்ல? ஏன்னா அப்ப உனக்கு என் சம்பளம் தேவைப்பட்டது. இல்லியா?"

"ஆமா! பெரிய சம்பளம். பொல்லாத சம்பளம். உன் சம்பளம் இல்லைன்னா நாங்க என்ன பட்டினியா கெடந்திருப்போம்?" என்றாள் கவிதா ஆத்திரமாக.

"இல்லை தான். ஆனா எப்பவுமே அம்மா உன்னையும், தீபனையும் நடத்தினா மாதிரி என்னை நடத்தியிருக்காங்களா? ஏம்மா? அப்படி?" என்றாள். அவள் கண்களில் கண்ணீர் கட்டி நின்றது.

அம்மா பதிலே பேசாமல் நின்றாள். தீபன் தர்ம சங்கடமாக நெளிந்தான்.

"அம்மா! எனக்குப் புரிஞ்சு போச்சு. ஜெயாக்காவுக்கு நாங்க நல்லா இருக்குறது பிடிக்கல்ல. அதுக்குத்தான் இத்தனை நாடகமும்." என்றாள் கவிதா மீண்டும்.

"உண்மையா ஜெயா?" என்றாள் அம்மா.

"எப்பவும் உனக்கு அவ தானே முக்கியம்? இப்ப மட்டும் எதுக்கு என்னைக் கேக்கற? நான் முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்றேன். ஆனா அதை விட இவளோட பிரச்சனை தான் முதல்ல தீர்க்கணும்னு சொன்ன அம்மா தானே நீ? யாரும் எப்படியோ போங்க" என்றாள் விரக்தியாக ஜெயா.

"இந்தாடி ஜெயா. எல்லாத்துக்கும் என் மேல பழி போடாதே! நீ பாக்குறதுக்கு மட்டுமில்ல, குணத்துலயும் அந்த ராட்சசி எங்க மாமியார் மாதிரி இருக்கே. செய்யுறதெல்லாம் ஊமைக்கோட்டான் மாதீர் செஞ்சுட்டு அந்தக் கிழம் என் மேல பழி போடும். அதே மாதிரி தான் நீயும் செய்யற. என்ன விஷயம் சொல்லித்தொலை. கேட்டுக்கறோம்." என்றாள் அம்மா.

"இது தான் காரணமாம்மா? நான் பாக்குறதுக்கு உன் மாமியார் மாதிரி இருக்கேன்னு தான் என்னை வித்தியாசமா நடத்துனியா? ஆனா நானும் நீ பெத்த பொண்ணுன்னு மறந்துட்டியேம்மா" என்றாள் ஜெயா அழாத குறையாக.

"சும்மா பேசாதே! நான் என்ன உனக்கு சாப்பாடு போடலியா? இல்லை அன்பாக் கவனிச்சுக்கலியா? உன் ஜாதக ராசியோ என்னவோ? உனக்குக் கல்யாணம் கூடி வரல்ல. அதுக்கு நான் என்ன செய்ய?"

சற்று நேரம் மௌனமாகக் கழிந்தது. குழந்தை வீறிட்டு அழை அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் கவிதா. போகும் போதே "நைசா கண்டதையும் பேசி எனக்குக் காசு குடுக்காம அனுப்பலாம்னு மட்டும் பார்க்காதீங்க. அப்புறம் நான் நிரந்தரமா இங்கேயே வந்துருவேன்." என பயமுறுத்தி விட்டுப் போனாள்.

தனது அறையில் கூடப் போய்ப் படுக்க முடியாதபடி கவிதா இருக்க பாத்ரூமுக்குள் போய்த் தீவிரமாக யோசித்தாள் ஜெயா.
 
ஏது!! மாமியார் மாதிரி இருக்குற காரணமாக வா ஜெயாவை கண்டுக்காம இருக்காங்க....இதுலாம் ரொம்ப ஓவர்ர்ர்....

ஏன்மா...கவிதா...உனக்கு கார் வாங்கனும்னா உங்க பணத்தில் வாங்குங்க....இது அநியாயம்னு கூடவா தெரில..

ஜெயா திருமணத்திற்கு எப்படியும் யாரும் சம்மதிக்க போவதில்லை...so, கிருஷ்ணன் ஏதாட்டி முடிவு எடுங்க....
 
Evanga evalavu pesina apparam kooda en jaya evangalukku yosikara puriyalai. Ava kalyanam panna evanga kitta permission ketkave vendam ennna avanga yaarum yes solla pordhillai.
உண்மை தான் மேடம். ஆனாலும் நமது சமூகச் சூழலில் வளர்ந்த பல பெண்களுக்கு இன்னமும் தான் எடுக்கும் முடிவு சரியானதா? இல்லை ஒருவேளை தவறாகப் போய் பிறந்த வீட்டினரின் ஆதரவை முற்றிலும் இழந்து விடுவோமோ? என்ற பயம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த பலவீனத்திலிருந்து வெளியேறும் வழி தன்னம்பிக்கையும், நெஞ்சுரமும் தான்.
 
ஏது!! மாமியார் மாதிரி இருக்குற காரணமாக வா ஜெயாவை கண்டுக்காம இருக்காங்க....இதுலாம் ரொம்ப ஓவர்ர்ர்....

ஏன்மா...கவிதா...உனக்கு கார் வாங்கனும்னா உங்க பணத்தில் வாங்குங்க....இது அநியாயம்னு கூடவா தெரில..

ஜெயா திருமணத்திற்கு எப்படியும் யாரும் சம்மதிக்க போவதில்லை...so, கிருஷ்ணன் ஏதாட்டி முடிவு எடுங்க....
மாமியார் போலப் பேசுவதால் தன் மகளை வெறுக்க மாட்டார்கள். ஆனால் அதே நேரம் மற்ற குழந்தைகளைப் பார்க்கும் பார்வைக்கும் இவர்களைப் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் இவானா.

அடுத்து கவிதாவைப் போல சில பெண்கள் பிறந்த வீட்டார் தனக்கு உதவி செய்வதற்கென்றே பிறந்தவர்கள் என்ற மனோபாவத்தை வளர்த்துக்கொண்டு விடுகிறார்களே? இதற்கு புகுந்த வீட்டாரும் தூபம் போடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு காரியம் ஆகிறதே?
 
Top